தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 01
பாழாக்குகிற அருவருப்பு தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ இருதயத்தில் நின்று கொண்டிருக்கிறது. மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது.
பொருளடக்கம் ஏழு
7-0 தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிற பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை தேவனுடைய ஜனங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கக் காணும்போது, மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது
நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
தேவனுடைய ஜனங்கள் பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கக் காணும்போது, அந்நாட்களிலே; முன்மாரி மழையாகிய பரிசுத்த ஆவியின் பிரமாணங்களும், பின்மாரி மழையாகிய அபிஷேக ஆவியின் பிரமாணங்களும், ஓய்வுநாளின் பிரமாணங்களும்/ தேவனுடைய ராஜ்யத்தினுடைய பிரமாணங்களும் நடைமுறைக்கு வருகிறது; ஆகையால் ஒருவனும் தன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் (யாத்திராகமம் 16:22-29. லூக்கா 21:8,)
அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். (மத்தேயு 24:23-26,)