மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் இராஜாவாக வெளிப் படப்போகிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு எங்களின் அன்பின் வாழ்த்துக்கள்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேல் உள்ள விசுவாசத்தில் தங்களுடைய முழு நம்பிக்கையையும் வைத்து, அவருடன் விசுவாச உடன்படிக்கை செய்து, அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களையும் இரட்சகராகிய இயேசுகிறிஸ்து அவர் இராஜாவாக முடிசூட்டப்படும் தன்னுடைய பட்டாபிஷேக விழாவிற்கு அழைத்து அவர்களுக்கு தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை விருந்தாகக் கொடுத்து, அவர்களின் கிரியை களின்படி பிரதிபலனை பரிசாக அளிக்கிறார்.
இந்த நற்செய்தியை தேவனுடைய தரிசனமாகவும், அழைப் பிதழாகவும் எழுதி அனுப்பி இதன் பயனாக தேவனால் முன் குறிக் கப்பட்ட பரிசுத்தவான்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு உத்தமமான ஜனத்தை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும் ஊழியத்தை செய்கிறவர்களாக, இந்த தலைமுறையில் எழும்பும்படி நாங்கள் தரிசனம் நிறைவேற ஜெபத்துடன் ஊழியம் செய்து கொண்டு வருகிறோம்.
தேவ வார்த்தைகளை கண்டு, கேட்டு, உணர்ந்து கொண்டபடியால்; தேவன் எனக்கு பகிர்ந்த விசுவாச அளவின்படி தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக மனம் புதிதாகிறதினாலே ஆவியில் மறுரூபம் அடைந்து தேவ தரிசனத்தைப் பெற்றேன்.
தரிசனத்தை மிக சுருக்கமாகவும், வெளிப்படையாகவும், வேதத்தில் உள்ளபடி அவரவர் கேட்டறியும் அளவிற்கேற்றபடி எழுதி, அவைகளை எழுத்தின்படி, ஆவியின் படி, ஞான அர்த்தத்தின்படி ஆகிய மூன்று வழிகளிலும் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தில் பங்கடையும்படி அழைப் பிதழ்களை அனுப்பும் இந்த ஊழியத்திற்காக தேவைகள் அநேகம் உண்டு.
இப்படிப்பட்ட பல கிருபை வரங்கள், ஊழியதரிசனங்கள் மற்றும் பல ஆசீர்வாதங்கள், தேவனுடைய சித்தத்தின்படி கிறிஸ்து வின் அவயவங்களான நமக்கு தேவ ஆவியானவர் பகிர்ந்து கொடுத் திருக்கிறார்.
கிறிஸ்துவாகிய தலையைப் பற்றிக்கொண்டு கிறிஸ்துவின் அவயவமான எங்கள் ஊழியம் அதன் முழு பெலத்துடன் பொரு ளாதார ஆசீர்வாதங்களை பெற்று செயல்பட முயற்சி செய்து பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. மற்ற கிறிஸ்துவின் அவயவங்களான நீங்களும் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்து கொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர் போல எங்களுக்கு உதவி செய்யும்படி வேண்டிக் கொள்கிறோம்.
தேவன் பகிர்ந்து கொடுத்த சித்தத்தை நிறைவேற்றும்படி கிறிஸ்துவின் அவயங்களை இசைவாகக்கூட்டி இணைக்கப்பட்டு ஒவ்வொரு அவயவமும் தன் தன் அளவிற்குத்தக்கதாக கிரியைகளை செய்யும் போது; அது அன்பினாலே தனக்கு பக்தி விருத்தி உண்டாகு வதற்கேதுவான முழு சரீர வளர்ச்சியை உண்டாக்குகிறது. இப்படி ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறை வேற்றி தேவ ஆசீர்வாதங்களை சுதந்தரிப்போம். அல்லேலூயா, ஆமென்.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)