மனிதன் மாம்ச சரீரத்தில் வாழ்வதற்கு அவனுக்கு காற்று, தண்ணீர், போஜனம், வஸ்திரம், குடியிருப்பு எப்படி ஒவ்வொருவருக்கும் அடிப்படை முக்கியமான தேவைகளோ; அது போலவே ஆவிக் குரிய மனிதன் வாழ்வதற்கு இந்த ஐந்து அடிப்படை தேவைகள் ஆவிக்குரிய நிலையில் தேவனுடைய வார்த்தைகளின் மூலம் மிக முக்கியமானது. இவைகளை உள்ளான ஆவிக்குரிய மனிதனின் ஐந்து ஆவிக்குரிய அடிப்படை தேவைகளை; புறம்பான மனிதனின் ஐந்து அடிப்படை தேவைகளோடு ஒப்பிட்டு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஜீவ சுவாசம் 1 பரிசுத்த ஆவி
தண்ணீர் 2 நித்திய ஜீவத்தண்ணீர்
போஜனம் 3 நித்திய ஜீவ வார்த்தைகளின் போஜனம்
வஸ்திரம் 4 நீதியின் வஸ்திரம்
குடியிருப்பு 5 பரலோக வாசஸ்தலம்
இவைகளை உட்கொள்ளும் அளவு அவரவர் தன்மைக் கேற்றபடி மாறுபடுகிறது. இந்த ஐந்து தேவைகள் குறையும்போதோ, அல்லது தேவைப்படும் போதோ, சரீரமானது இவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்து போராடுகிறது. எப்படி மாம்ச சரீரம் தன்னு டைய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்து போராடுகிறதோ, அது போலவே ஆவிக்குரிய சரீரமும் இவைகளை ஆவிக்குரிய நிலை யில் அவரவர் தன்மைக்கேற்றபடி பூர்த்தி செய்ய முயற்சி செய்து போராடுகிறது.
மனச்சாட்சியை தேவன் மனிதனுக்கு கொடுத்து அதன் மூலம் எப்பொழுது வேண்டுமானாலும் அவன் தேவனுடன் ஆவியில் தொடர்பு கொண்டு தன்னுடைய ஆத்துமாவின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம், மேலும் இவைகளுக்காக மனச்சாட்சியில் அறிவு, புத்தி, ஞானம் இவைகளை தேவன் மனிதனுக்கு அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். ஒருவன் தன் ஆத்துமாவின் தேவைகளை சந்திக்கும்படி நீண்ட தூரம் பயணம் செய்யவோ அல்லது மிக கடினமாக வேலை செய்யவோ தேவையில்லை.
ஆத்துமாக்களின் பிதாவாகிய தேவன் மனிதனுக்கு மிக அருகிலும் மிக எளிமையாகவும் தன் ஆத்துமாவின் தேவைகளை சந் திக்கும்படி தேவ வார்த்தைகளை தேவன் நமது இருதயத்திற்கும் வாய்க்கும் சமீபமாக வைத்திருக்கிறார்.
மனச்சாட்சியில் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள் வது பொதுவான இரட்சிப்பு, மேலும் இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளுடன் உடன்படிக்கை செய்து இரட்சிப்பை ஏற்றுக் கொள்வது விசேஷ இரட்சிப்பு
பொதுவான இரட்சிப்பும் மற்றும் விசேஷ இரட்சிப்பின் வளர்ச்சிப் படிகளும் மிக எளிமையான முறையில் தேவனுடைய சத்தியமான வசனங்களைக் கொண்டு புரிந்து கொள்ளும் அளவிற்கு விவரிக்கப்பட்டுள்ளது. தேவனுடைய கிருபையினால் இந்த தேவனுடைய சத்தியமான வசனங்களின் விருந்தை பல ஆங்கில மொழிப் பதிப்பு வேதாகமங்களுடனும் மற்றும் அவரவர் சொந்த தாய்மொழி வேதாகமங்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்து உணர்ந்து கொள்ளும் அளவிற்கு விவரிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்க்க தரிசன வசனங்களின்படி ஜலத்தினால் சமுத்திரம் நிறைந்திருப்பது போல பூமி கர்த்தரைக் குறித்து அறிகிற அறிவால் நிறைந்திருக்கும் என கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன்.
இந்த தீர்க்க தரிசன வசனத்தின் படி இந்த வசனங்களை வாசிக்கிறவன், கேட்கிறவன் இதில் எழுதியுள்ளவற்றை கைக்கொள்கிறவன் பாக்கியவான். இந்த தீர்க்க தரிசன வசனத்தின்படி ஏற்கனவே உங் களுக்கு அறிவிக்கப்பட்ட தேவனுடைய சத்தியமான வசனங்களைக் கொண்டே மீண்டும் இவைகள் இப்பொழுது; பத்து தேவனுடைய வார்த்தைகளின் தலைப்புக்களின் மூலம் விவரிக்கப்பட்டு, உங்களுக்கு அறிவிக் கப்பட்டு வருகிறது.
இந்த தீர்க்கதரிசன வசனத்தின்படி பொதுவான இரட்சிப்பைக் குறித்து கருத்தாய் எழுதும்போது, பரிசுத்தவான்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்தைக்குறித்து எழுதுவது நலமாக கண்டது இந்த தீர்க்க தரிசன வசனத்தின்படி தங்களது பெயர் பூமியில் எழுதப்படாமலும், ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்ட பெயர் அழிக்கப்படாமலும், ஞாபக புஸ்தகத்தில் பெயர் எழுதப்படும் படியாகவும் இவைகளை மீண்டும் ஞாபகப் படுத்திக்கொள்வோம் ஆமென்.
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)