ஊழியங்கள்


தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம். இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும் மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். ( ஏசாயா: 64: 4-5, 1 கொரிந்தியர் 2: 6-7)


சீயோனின் வெளிப்பாடுகள்

சீயோன்               = தேவனுடைய பிரமாணங்கள்

எருசலேம்          = கர்த்தருடைய வார்த்தைகள்

 

சீயோனுக்கு / எருசலேமிற்கு பிரவேசிக்க கீழே குறிப்பிட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் / அறிவில் பெற்றுக் கொள்ள வேண்டும்; இவைகளை ஏற்றுக் கொள்ளாத கிறிஸ்தவர்களுடைய இரட்சிப்பு மரணமடைகிறது.


 தேவனுடைய ஏழு முத்திரையின் அடையாளங்கள்:-

  1. ஜாதிகளின் எந்த ஒரு முறையையும் பின்பற்றக் கூடாது.
  2. கர்த்தருடைய பஸ்காவை புசிக்க வேண்டும்.
  3. ஓய்வு நாள் பிரமாணத்தை பின்பற்ற வேண்டும்.
  4. மனச்சாட்சிப் பிரமாணத்தை பின்பற்ற வேண்டும்.
  5. இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்ற வேண்டும்.
  6. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்
  7. பலிபீடத்தின் சட்ட திட்ட பிரமாணங்களை பின்பற்ற வேண்டும்.
  8. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து ஊழியத்தில் பங்குபெற வேண்டும். 

 

வடக்கு திசையில் உள்ள சீயோனின் ஊழியங்கள்:-

  1. தேவனால் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் சத்திய ஆவி, அபிஷேக ஆவி, தீர்க்கதரிசன ஆவி, ஆகிய மூன்று ஆவிகளை பின்பற்றி தேவனுக்கு ஊழியம் செய்வார்கள்.
  2. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பின்பற்றி தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி தேவனால் வரும் பிரதி பலனை பெற்றுக்கொள்ளுவார்கள்.
  3. ஆவிக்குரிய யூதர்கள் வரிசையில் தேவனுடைய இரட்சிப்பை அறிவித்து  தேவனுடைய சித்தத்தை  நிறைவேற்றுவார்கள்.
  4. ஞானர்த்தமாக சீயோன்/ எருசலேம்/ யூதேயா பட்டணங்களாக அழைக்கப்படுகிறது.
  5. தேவனுடைய பிரமாணங்கள்/ ஆசரிப்பு முறைகளை பின்பற்றி தேவனால் வரும் மகிமையை தேடுவார்கள்.
  6. 1,44,000 நபர்கள் வரிசையில் இரத்த சாட்சிகளாக மரிக்கிறவர்கள் ஆபேலின் சந்ததியாக, பரலோக பலீபிடத்தின் கீழ் வந்து சேருவார்கள்.
  7. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் /அறிவில் தரித்தவர்கள் வெள்ளை வஸ்திரம் தரித்து மணவாட்டி சபையாக மாறுகிறார்கள்.
  8. தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம் என்று சொல்லிக்கொண்டு  பத்து புறஜாதிகள்/கிறிஸ்தவர்கள் ஒரு ஆவிக்குரிய யூத னுடைய வஸ்திரத்தை / நற்கிரியைகளை   பின்தொடர்ந்து  சீயோன்/ எருசலேமிற்கு  வந்து சேருவார்கள்.

 

 பூமியின் மத்தியில் வாசம்செய்யும் தேவ ஜனங்கள்:-

  1. தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தேவனுடைய ஆவிகளை  பகுத்தறிகிற படியால் தீமையிலிருந்து விலகி நன்மையை கண்டடைவார்கள்.
  2. தேவனுடைய ஊழியத்திற்காக தங்களை சமர்ப்பித்துக் கொண்டவர்கள், ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணங்களை பின்பற்றுகிற உபத்திரவகால ஊழியர்களுக்கு உதவிகளை செய்கிற படியால் அக்கினி நரகத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய இராஜ்ஜியத்தை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.
  3. ஆவிக்குரிய இஸ்ரவேல் ஜனங்கள் பத்து கோத்திரங்கள் வரிசையில் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொண்டு விசுவாசிகளாக ஊழியத்தில் பங்கு பெறுவார்கள்.
  4. ஞானர்த்தமாக, சமாரியா, எப்பிராயீம், கொமாரா பட்டணங்களாக அழைக்கப்படுகிறது.
  5. மனிதனுடைய கற்பனைகள், ஜாதிகளின் கலப்பட ஆசரிப்பு முறைகளை பின்பற்றி தங்களுக்கு சுய மகிமையை தேடுவார்கள்.
  6. உபத்திரவகால பரிசுத்தவான்களுக்கு உதவி செய்கிறதினால், திரளான ஜனங்கள் இரத்த சாட்சிகளாக  மரித்து  தேவனுடைய  ஆலயத்தில் வந்து  சேருவார்கள்.
  7. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில்/ அறிவில் ஏற்றுக் கொள்ளாமல் தங்களுடைய சொந்த வஸ்திரம் தரித்திருக்கிற ஏழு ஸ்திரிகளுடைய இரட்சிப்பு மரணமடைகிறது.
  8. தேவனுடைய நாமத்தை தரித்திருக்கிறோம் என்று அநேகர் பெயர் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள்.

 

தெற்க்கு திசையில் உள்ள  வனாந்திரத்தின்  ஊழியங்கள்:-

  1. மனிதனால் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் சாத்தானின் ஆவி, அந்திக்கிறிஸ்துவின் ஆவி, கள்ளத்தீர்க்கதரிசியின் ஆவிகளை பின்பற்றி தங்களுடைய சுயமான ஊழியத்தை நிறைவேற்றுவார்கள்.
  2. ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணங்கள் இல்லாமல் தங்களுடைய சுயமான ஊழிய அழைப்பை நிறைவேற்றி தாங்களாகவே பிரதி பலனை தேடுவார்கள்.
  3. ஜனங்களில் ஈனமானவர்கள் அநேகர் ஆவிக்குரிய லேவியர்கள் வரிசையில் தங்களுடைய சுயமான ஊழியத்தை நிறைவேற்றுவார்கள்.
  4. ஞானர்த்தமாக, பாபிலோன், எகிப்து, சோதோம், பட்டணங்களாக அழைக்கப்படுகிறது.
  5. அந்திக் கிறிஸ்துவையும், கள்ளத் தீர்க்க தரிசிகளையும் வணங்கி, மூன்று அசுத்த ஆவிகளின் அற்புத அடையாளங்களின் மூலம் மனிதனால் வரும் மகிமையை  தேடுவார்கள்.
  6. 1,44,000, மற்றும் திரளான  இரத்த சாட்சிகளை கொலை செய்து, காயின் சந்ததியாக மாறி நேரடியாக அக்கினி நரகத்தில் பங்கடைவார்கள்.
  7. மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் தரித்தவர்கள், வேசியின்  வஸ்திரம்  தரித்து  அன்னிய  சபையாக  மாறுகிறார்கள்.
  8. தேவன் எங்களோடே இருக்கிறார் என்று அநேகர் அறிக்கை செய்து தற்பெறுமை அடைவார்கள்.

சீயோனுக்கு / எருசலேமிற்கு வருகிறவர்கள்/ வராமலிருக்கிறவர்கள்:-

  1. சீயோனுக்கு / எருசலேமிற்கு கடந்து வந்து தேவனை ஆராதனை செய்யாதவர்களுக்கு எகிப்தின் பத்து வாதைகளும், வனாந்தரப் பாதையின் பத்து வாதைகளும் தொடரும்.
  2. ஆவிக்குரிய யூதர்கள் சீயோன்/எருசலேமில் வாசம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
  3. கிறிஸ்தவ மதத்தின் சிறையிருப்பிலிருந்து விடுதலையாக்கப்பட்ட ஆவிக்குரிய யூதர்கள் சீயோனுக்கு/எருசலேமிற்கு திரும்பி வருகிறார்கள்.
  4. கிறிஸ்துவின் நாமத்தை ஏற்றுக்கொண்ட பத்து புறஜாதிகள் சீயோனுக்கு/ எருசலேமிற்கு வந்து சேருகிறார்கள்.
  5. ஆவிக்குரிய லேவியர்கள் / கிறிஸ்தவ மதப் போதகர்கள், சீயோனுக்கு/ எருசலேமிற்கு வராமல் முரட்டாட்டம் பண்ணுகிறார்கள்
  6. நியாயப் பிரமாணத்தினால் தேவ நீதியின் பிரமாணத்தை தேடுகிறவர்கள் சீயோனில் உள்ள மூலைக்கல்லில் இடறிவிழுகிறார்கள்
  7. இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளான அந்திக் கிறிஸ்தும் கள்ள தீர்க்க தரிசியும் சீயோனை/ எருசலேமை பிடிக்க யுத்தம் செய்து தோல்வியடைகிறார்கள்.

தேவனுடைய  சத்தியமான வார்த்தைகளின்  விருந்து  ஊழியங்கள்:-

  1. பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையிலானவைகள்
  2. பல ஆங்கில பதிப்பு வேதாகமத்துடன் ஓப்பிடக்கூடியவைகள்
  3. தேவ நாமத்துடன் பல தேவ தரிசனங்கள் ஒருங்கிணைக்கப் பட்டவைகள்.
  4. பெரிய மதங்களையும் அதன் உட்பிரிவுகளையும் உள்ளடக் கியவைகள்.
  5. வேதத்தின் அடிப்படை உபதேசங்களை அஸ்திபாரமாகக் கொண்டவைகள்
  6. மெய்யான தேவ ஞானத்தை எளிமையாக கற்றுக் கொள்ளும் வழி முறைகள்.
  7. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களுக்கு ஜெயங்கொள்ளு வதற்காக தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.
  8. வேதாகம மையக்கருத்துக்கள் அதன் இணையான தேவ வார்த்தைகளுடன் இரண்டறக் கலப்பவைகள்.

 

Social Media
Location

The Scripture Feast Ministries