முடிவுரை


மனச் சாட்சியின் மூலம் தேவனை அறிந்தவர்கள் அவருக்கு துதி, கனம், மகிமை ஆகியவைகளை செலுத்தி ஆவியில் பிழைப்பார்கள். மனச்சாட்சி மூலம் தேவனோடு தொடர்பு கொள்ளும் வழி முறைகளிலிருந்து திசை மாறி, தேவனுக்கு துதி, கனம், மகிமை செலுத்தாதவர்களுக்கு நியாயப்பிரமாணத்தில் சொல்லப்படட் எல்லா சாபங்களும் வந்து அவர்களுக்கு பலிக்கும்.


தேவனுடைய  கற்பனைகளை  கைக்கொள்ளாதவர்கள்  மற்றும் தேவனுடைய  சித்தத்தை  விட்டு வழிவிலகுகிறவர்கள்  வஞ்சிக்கிற  ஆவிகளுக்கும்  பிசாசின்  உபதேசங்களுக்கும் அடிமைப்பட்டு  தேவ  ஆசீர்வாதங்களை  இழக்கிறார்கள்.


வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.


நான் உங்கள் மேல் காவலாளரையும்  வைத்து, எக்காள சத்தத்துக்குச் செவி கொடுங்கள்    என்றும் சொன்னேன்; அவர்களோ, நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள். ஆகையால் ஜாதிகளே கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள்  நடக்கிறதை  அறிந்து கொள். பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்திற்கு செவிகெடாமல் அதை வெறுத்து விடுகிறார்கள்; அவர்கள் மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய  தீங்கை  வரப்பண்ணுவேன்  


இயேசு கிறிஸ்துவின்  விசுவாச வார்த்தைகளின்   மூலம்  தேவனுடன்  உடன்படிக்கை   செய்து  இரட்சிப்பை பெற்றவர்களின்   மூன்று நிலைகள்.

1. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்

2. தேடுகிறவர்கள்

3. மற்றவர்கள்


1. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் :-

தேவனால்  தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்  தேவ நீதியை அடைந்திருக்கிறார்கள்.


2 தேடுகிறவர்கள்:-

தேவ நீதியை தேடுகிறவர்களின் ஆவிக்குரிய இடறுதல்களில் விழுந்துகொண்டிருக்கிறார்கள்.

  1. தேவ நீதியைத்  தேடாமல்  தங்கள்  சுய நீதியை  நிலை நிறுத்த முயற்சி செய்தல்.
  2. நியாயப்பிரமாண  நீதியின்  கிரியைகளின்  மூலம்  நீதிப்பிரமாணத்தை தேடுவது.
  3. முதலாவது தேவனுடைய  இராஜ்ஜியத்தையும்  அவருடைய  நீதியையும்  தேடாமல், பரலோகத்தில்  வாசல்  கதவுகளை   தொடர்ந்து   தட்டிக்கொண்டிருப்பது. 
  4. தேவனுடைய சித்தத்தை  செய்யாமல்  தங்களது  தேவைகள்  சந்திக்கப்பட  தேவனிடம் கேட்பது.
  5. முதலாவது தேவனுடைய நீதியைத்தேடாமல்  தங்கள்  சுய விருப்பங்களை  தேடி அவைகளை அடையும்படி தேவனை  நோக்கி  கேட்பது.
  6. மூலைக்கல்லில் இடறுவதற்கு அறியாமைதான் மூலக்கார ணம் ஏனென்றால்  அவர்கள் தேவ அறிவை வெறுத்தார்கள்.
  7. ஆவிக்குரிய வாழ்க்கையில் நற்கிரியைகள்  இல்லாத பொழுது  அறியாமையின்  ஆழத்திற்கு செல்லுவது.
  8. இயேசு  கிறிஸ்துவின்  விசுவாச  வார்த்தைகளின்  உடன் படிக்கையின்  மூலம் நற்கிரியைகள்  செய்யும் போது  அவைகள்  எந்த  ஒரு  மனிதனையும்  எந்த சூழ்நிலையிலும் தேவ  நிதியை  அடைய  வழி  நடத்தும்.

3. மற்றவர்கள்:-

சூதும்  வங்சகமுகமான  தந்திரமுள்ள  போதகமாகிய  பல  விதமான காற்றுகளைப் பின்பற்றாமல், அன்புடன்  சத்தியத்தைக் கைக்கொண்டு,  தலையாகிய கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு,  தேவன்  ஒவ்வொரு  அவயவங்களுக்கும்  பகிர்ந்து  கொடுத்த விசுவாச அளவுப்பிரமாணத்தில்  நிலைத்திருந்து, முழு  சரீர  வளர்ச்சியை  ஏற்படுத்தி தேவ சித்தத்தை நிறைவேற்றுவதினால் தேவ ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ள முடியும் இரு மனமாகிய சந்தேக காற்றை பின்பற்றாமல் ஒரு மனமாகயிருந்து முழு விசுவாசத்துடன் நற்கிரியைகள்  செய்து  தேவ  ஞானத்தை  சுதந்தரித்துக்கொள்ள  முடியும்.


இந்த  நாள் வரைக்கும் காட்டுக் கழுதைகள் போல தங்கள் மதவெறியின் போதகத்தை  பின்பற்றி தன் இச்சையாக திரிந்து கொண்டிருப்பவர்கள் தங்களுடைய ஆவி, ஆத்துமாவில், அறிவு, புத்தி, ஞானம், இவைகளைக் கொடுத்து, தங்களை வழி நடத்துகிற உன்னதமான தேவனுடைய  வார்த்தைகளுக்கு  கீழ்படிந்து  அன்புடன்  சத்தியத்தை  ஏற்றுக் கொள்ளுங்கள்


இந்நாள் வரைக்கும் இவர்கள் தேவ நீதிக்கு கீழ்ப்படியாமல் தங்கள் மனதை கடினப்படுத்தியிருக்கிறார்கள், இவர்கள் நியாத் தீர்ப்புக்கு தப்புவதில்லை இவர்கள் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்படிந்து எப்பொழுதும் தீமை செய்வதிலிருந்து மனந்திரும்புகிறார்களோ அப்பொழுது  அவர்கள்  மீண்டும்  இரட்சிப்பை  பெற்றுக் கொள்ள  முடியும்


தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து சமைக்கப்பட்டு இந்த புஸ்தகத்தில்             புசிக்க ஏற்றபடி / அவரவர் உட்கொள்ளும் அளவுக்கேற்றபடி /  தன்மைக்கேற்றபடி பரிமாறப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகர் இந்த விருந்தை புசிக்க அபாத்திராக போனார்கள். ஆனால் தேவனால்             முன் குறிக்கப்பட்டவர்கள் ஒரு சிலர் இயேசு கிறிஸ்து ராஜாவாக முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாவில் கலந்து கொண்டு இந்த தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை பல ருசியுள்ள தேவ வார்த்தைகளின் தலைப்புகளாக புசித்து, அதன் சுவைகளை உணர்ந்து கொண்டபடியால், ஆவி, ஆத்துமாவில் மறுரூபமடைந்து, தங்களுக்கு கொடுத்த தேவ சித்தத்தை நிறைவேற்றுவதின் மூலம் ஜெயங்கொள்ளுகிறவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறார்கள்.


அவர்கள் தங்களுக்கு வைக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொண்டு பரலோக இராஜ்ஜியத்தின் ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்கும் மணவாளனாகிய கிறிஸ்துவுடன் தேவனுடைய இராஜ்ஜியத்தில் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுகிறார்கள். . ஆமென். 

Social Media
Location

The Scripture Feast Ministries