தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 13


தேவனுடைய நாமத்தை பின்தொடர்கிற நான்கு வகையான ஜனங்கள்

பொருளடக்கம் 1

1-0 தேவனுடைய நாமத்தை விசாரித்து தேடாத புறஜாதியார்/ இஸ்ரவேலர்/ கிறிஸ்தவர்கள் தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
இவர்களுடைய வாய் கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தூரமாக விலகியிருந்தாலும்,அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்துக்கொண்டிருந்து புசிக்கிறபடியால்; விசாரித்து தேடாத தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
1-1 தேவனுடைய நாமத்தை விசாரித்து தேடாத புறஜாதியார்/ இஸ்ரவேலர்/ கிறிஸ்தவர்கள் தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
Isa 65:1 என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன். 
 
Rom 10:20 என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன்.
 
Rom 9:30-31. தேவனுடைய நீதியைத் தேடாத புறஜாதியார்/ இஸ்ரவேலர்/ கிறிஸ்தவர்கள் தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்தார்கள்.
 
Rom 4:10 தேவனுடைய நாமத்தை விசாரித்து தேடாதவர்கள், விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோது கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிறார்கள்:-
 
Joh 9:31 பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். 
 
Rom 4:5 ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். 
 
Rom 4:6 அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு:
 
Rom 4:7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். Rom 4:8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான். 
 
Rom 4:9 இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே.
 
Rom 4:10 அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதோ, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதோ? விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதல்ல, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதே. 
 
Rom 4:11 மேலும், விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்,
 
Rom 4:12 விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான். 
 
Rom 4:13 அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. 
 
Rom 9:29 அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம். 
 
Rom 9:30 இப்படியிருக்க நாம் என்ன சொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே. Rom 9:31 நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. 
 
Rom 9:32 என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள். 
 
Rom 9:33 இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. 
 
1-2 தேவனுடைய நாமத்தை விசாரித்து தேடாத புறஜாதியார்/ இஸ்ரவேலர்/ கிறிஸ்தவர்கள் தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
Isa 1:8 சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும், வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும், முற்றிக்கை போடப்பட்ட ஒரு பட்டணம்போலவும் மீந்திருக்கிறாள். 
 
Isa 1:9 சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம். 
 
Isa 1:10 சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள். 
 
Isa 1:8-10 வசனங்களின் பொருளடக்கம் 
 
Jer 23:14 எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள். 
 
Jer 23:15 ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார். 
 
Jer 23:16 உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 
 
Jer 23:17 அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள். 
 
Rom 11:1 இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன். 
 
Rom 11:2 தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி: 
 
Rom 11:3 கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது, 
 
Rom 11:4 அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
 
Rom 11:5 அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது. 
 
Rom 11:6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே. 
 
Rom 9:10 இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, Rom 9:11 பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, 
 
Rom 9:12 மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது. Rom 9:13 அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
 
Rom 9:14 ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே. 
 
Rom 9:15 அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார். 
 
Rom 9:16 ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். 
 
Rom 9:17 மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. 
 
Rom 9:18 ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். 
 
இவர்களுடைய வாய் கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தூரமாக விலகியிருந்தாலும்,அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்துக்கொண்டிருந்து புசிக்கிறபடியால் தேடாத தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள். 
 
1-3 தேவனுடைய நாமத்தை விசாரித்து தேடாத புறஜாதியார்/ இஸ்ரவேலர்/ கிறிஸ்தவர்கள் தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடைந்திருக்கிறார்கள்.
 
கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருந்தாலும், அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள். 
 
2-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருந்தாலும், அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் / ஏற்றுக் கொள்ளுகிறவர்களுடைய ஆத்துமா மனுஷ நீதியில் / சுய நீதியில் பிழைக்கிறது. இவர்கள்பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள்.
 
2-1 தேவன் மோசேயின் மூலம் பாவிகளுக்கு கொடுத்த நியாயப்பிரமாணத்தின் அப்பங்களை தங்களுடைய வாய்க்கு தூரமாக விலகியிருந்தாலும், அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக ஏற்றுக் கொண்டு நன்மை தீமைகளை பகுத்தறிந்து நீதியின் கிரியைகளை நிறைவேற்றுகிறபோது, அவைகளினால் தங்களுடைய ஆத்துமா மனுஷ நீதியினால் பிழைக்கிறது / சுய நீதியில் பிழைக்கிறது. Rom_3:20-21, Gal_3:10-12, Deu_32:45-47, Isa_51:7, Rom_10:5
 
2-2 தேவன் மோசேயின் மூலம் பாவிகளுக்கு கொடுத்த நியாயப் பிரமாணத்தின் நன்மை தீமைகள் புற ஜாதிகளுடைய மனசாட்சியின் மூலம் அவர்களுடைய இருதயத்திற்கு சமீபமாகயிருந்து, சாட்சியிடுகிறபடியால், அவைகளில் வெளிப்படுகிற சுய நீதியின் கிரியைகளை நிறைவேற்றுகிறபோது, அவர்களுடைய ஆத்துமா மனுஷ நீதியினால் பிழைக்கிறது / சுய நீதியில் பிழைக்கிறது Rom_2:14-16, Rom_2:27-29, Rom_7:22-25, Rom_1:19-23, Rom_10:20, Isa_65:1, Joh_9:31-41
 
2-3 தேவன் மோசேயின் மூலம் பாவிகளுக்கு கொடுத்த நியாயப் பிரமாணத்தின் வார்த்தைகளை நேரடியாகவோ, மனசாட்சியின் மூலமாகவோ பெற்றுக் கொண்டவர்களுடைய இருதயத்தில், நன்மை தீமைகள் சாட்சியிட்டு வெளிப்படுகிறபடியால் தேவனுடைய வார்த்தைகளுக்கு பஞ்சம் பெருகி வருகிற காலத்தில்; இவர்கள் பயப்படாமலும் கலங்காமலும், பல இடங்களுக்கு அலைந்து திரியாமலும் இருந்து, தங்களுடைய ஆத்துமாவில் சுய நீதியில் பிழைத்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் இவர்கள் உலகத்தில் தோன்றின எந்த ஒரு மதத்தின் அடையாளத்தையோ அல்லது சுயமான அடை யாளத்தையோ தரித்துக் கொள்ள மாட்டார்கள்.
 
2-4 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருக்கிற, புற ஜாதிகள் தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாயிருக்கிற கர்த்தருடைய வசனங்களையும் வேத பிரமாணங்களையும் பெற்றுக் கொள்ளுவதற்காக, ஒரு யூதனுடைய நீதியின் கிரியைகளை தானும் செய்து, பத்து புற ஜாதிகள் தேவனுடைய சமூகத்திற்கு வந்து சேருவார்கள். Isa_2:1-4, Zec_8:20-23, Mic_4:1-3, Mic_4:4-7, Jer_50:4-8
 
2-5 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருந்தாலும் அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்திருப்பவர்கள்; தங்களுடைய இருதயத்தை பாவத்திலிருந்து மனந்திரும்பி சமர்ப்பண ஊழிய அழைப்புடன் தேவானல் முன் குறிக்கப்பட்டவர்களுடன் இணைந்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்கள். Isa_2:1-4, Zec_8:20-23, Mic_4:1-3, Mic_4:4-7 
 
2-6 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் தூரமாக விலகியிருந்தாலும் அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்திருந்து புசிக்கிறவர்கள், தேவனை விசாரித்து கேளாதவர்களாக இருந்தாலும், தேவன் அவர்களுக்கு வெளிப்படுகிறார். Mat_19:12, Isa_56:3-8, Isa_56:9-12, Isa_65:1, Rom_10:20, Isa_19:19-21 
 
2-7 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்தாலும் அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக வைத்திருப்பவர்கள் ; சமர்ப்பண ஊழிய அழைப்புடன் தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்து, இரத்த சாட்சியாகவும் மரிப்பார்கள். Mat_25:31-34, Mat_25:35-40, Mat_25:41-46, Joh_10:15-16, Rev_11:1-2, Rev_7:9-12, Rev_7:13-14, Rev_7:15-17
 
2-8 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் சமீபமாகயிருந்து கொண்டு அவைகளை தங்களுடைய இருதயத்திற்கு தூரமாக வைத்திருக்கிறவர்கள்; ஒரு யூதனுடைய நீதியின் கிரியைகளை தானும் செய்து, தேவனுடைய வார்த்தைகளிடத்திற்கும், வேதத்தின் பிரமாணங்களுக்கும், வந்து சேராமல், முரட்டாட்டம் பண்ணி, தேவனுடைய சமூகத்தை விட்டு விலகியிருப்பார்கள். Rom_10:21, Pro_1:23-33, Jer_18:15-17, Zec_7:12-13, Isa_2:1-4, Isa_2:5-9, Isa_65:2-7, Isa_65:10-15, Hos_2:13-16, Jos_7:22-26, Jos_6:18-19


Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries