தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 16


 கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

பொருளடக்கம் 3-0
ஒருவன் தன்னுடைய வாயினாலே கர்த்தராகிய இயேசுவை அறிக்கையிடுகிறபோது; நியாயப்பிரமாணத்திலிருந்து தேவனுடைய கிருபையினாலே உண்டாகிற இரட்சிப்பு ஆரம்பமாகிறது:- 

கர்த்தராகிய இயேசுவை ஒருவன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று அவன் இருதயத்திலே விசுவாசிக்கிறபோது; நியாயப்பிரமாணத்திலிருந்து தேவனுடைய கிருபையினாலே உண்டாகிற இரட்சிப்பு ஆரம்பமாகிறது. 

Rom 10:5 மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான். 

Rom 10:6 விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்? 

Rom 10:7 அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி; 

Rom 10:8 இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே. 

Rom 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 

Rom 10:10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 

Rom 10:11 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. 

Rom 10:12 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். 

Rom 10:13 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். 

Rom_10:5-13, Deu_30:11-15,Mat_10:32-33; Luk_12:8; Rom_14:8-11; 1Jo_2:4,

Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries