தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 17


ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் - தேவனுடைய ஆவியில் பிழைத்திருக்கிறவர்களுக்காக தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு உபத்திரவ காலத்திற்கு நடைமுறைக்கு வருகிறது.

பொருளடக்கம் 13-0
 
ஆதாம், ஏவாள்,சர்ப்பம்,காயின் ஆகிய இவர்களின் மீறுதலினாலே வருகிற சாபங்கள்; உபத்திரவகாலத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆபேலின் இரத்தப்பலி விசாரிக்கப்படுகிறது.

1-0 ஆதாமின் மீறுதலினாலே வருகிற சாபங்கள்:- 

1-1 ஆதாம்/ முதலாம் ஆதாமின் மீறுதலினாலே வந்த பாவம் மற்றும் பாவத்தினால் வருகிற மரணம் ஆகிய இவைகளின் சாபங்கள்:- 

1-2 ஆதாமை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்:- 

1-3 ஆதாம் ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்:- 

2-0 நயவஞ்சகமுள்ள தந்திரத்தினாலே ஸ்திரீ வஞ்சிக்கப்படுவதற்கு காரணமாயிருந்த சர்ப்பத்திற்கும், ஸ்திரீ சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டதற்கும் வருகிற சாபங்கள்:- 

2-1 நயவஞ்சகமுள்ள தந்திரத்தினாலே ஸ்திரீ வஞ்சிக்கப்படுவதற்கு காரணமாயிருந்த சர்ப்பத்திற்கு வருகிற சாபங்கள்:- 

2-2 ஸ்திரீ சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டதற்கு வருகிற சாபங்கள்:- 

2-3 சர்ப்பத்திற்கும் ஸ்திரீக்கும், பகை உண்டாக்குவேன்:- 

2-4 சர்ப்பத்தின் வித்துக்கும் ஸ்திரீயின் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்:- 

2-5 ஸ்திரீயும் ஸ்திரீயின் வித்துக்களும் சேர்ந்து சர்ப்பத்தையும் சர்ப்பத்தின் வித்துக்களின் தலைகளை நசுக்குவார்கள்:- 

2-6 சர்ப்பமும் சர்ப்பத்தின் வித்துக்களும் சேர்ந்து ஸ்திரீயையும் ஸ்திரீயின் வித்துக்களின் குதிங்கால்கலை / சரீரங்களை நசுக்குவார்கள்:- 

2-7 ஸ்திரீயின் வித்தாகிய நீதிமானாகிய ஆபேல் மற்றும் சர்ப்பத்தின் வித்தாகிய பொல்லாத கிரியைகளுடைய காயீன் ஆகிய இவர்கள் முதல் தேவனுடைய சாபங்கள் நிறைவேறத் தொடங்கிறது. 

2-8 கிறிஸ்துவின் மணவாட்டி சபையும் பாபிலோன் மணவாட்டி சபையும் தங்களுடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்க போராடுகிறார்கள் 



1-0 ஆதாமின் மீறுதலினாலே வருகிற சாபங்கள்:- 

ஆதாம்/ முதலாம் ஆதாமின் மீறுதலினாலே வருகிற பாவம் மற்றும் பாவத்தினால் வருகிற மரணம் ஆகிய இவைகளின் சாபங்கள் இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினாலே நிக்கப்படுகிறது:- 

1-1 ஆதாம்/ முதலாம் ஆதாமின் மீறுதலினாலே வருகிற பாவம் மற்றும் பாவத்தினால் வருகிற மரணம் ஆகிய இவைகளின் சாபங்கள் கிறிஸ்துவினால் நிக்கப்படுகிறது 

1-2 ஆதாமை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். ஆனால் இவைகள் கிறிஸ்துவின் மூலம் மீண்டும் ஏதேன் தோட்டத்திற்கு போகும் வழிகளை உருவாக்கினார் 

1-3 ஆதாம் ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார் ஆனால் இவைகள் கிறிஸ்துவின் மூலம் மீண்டும் ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழிகளை உருவாக்கினார் 

1-1 ஆதாம்/ முதலாம் ஆதாமின் மீறுதலினாலே வருகிற பாவம் மற்றும் பாவத்தினால் வருகிற மரணம் ஆகிய இவைகளின் சாபங்கள் கிறிஸ்துவினால் நிக்கப்படுகிறது 

Heb 2:13 நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். 

Heb 2:14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், 

Heb 2:15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். 

1Jn 3:7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். 

1Jn 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். 

Heb 2:16 ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். 

Rom 5:6 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். 

Rom 5:7 நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். 

Rom 5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். 

Rom 5:9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. 

Rom 5:10 நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. 

Rom 5:11 அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம். 

Rom 5:12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. 

Rom 5:13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. 

Rom 5:14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன். 

Rom 5:15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. 

Rom 5:16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. 

Rom 5:17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. 

Rom 5:18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. 

Rom 5:19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். 

1Co 15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். 

1Co 15:21 மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. 

1Co 15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 

1Co 15:23 அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 

1Co 15:45 அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். 

1Co 15:46 ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. 

1Co 15:47 முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். 

1Co 15:48 மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. 

1Co 15:49 மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம். 

1Co 15:50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. 

1Co 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். 

1Co 15:52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 

1Co 15:53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். 

1Co 15:54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். 

1Co 15:55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? 

1Co 15:56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். 

1Co 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 

1Co 15:58 ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக. 

1-2 ஆதாமை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். ஆனால் இவைகள் கிறிஸ்துவின் மூலம் மீண்டும் ஏதேன் தோட்டத்திற்கு போகும் வழிகளை உருவாக்கினார் 

Rev 2:1 எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது; 

Rev 2:2 உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; 

Rev 2:3 நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். 

Rev 2:4 ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. 

Rev 2:5 ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். 

Rev 2:6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. 

Rev 2:7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது. 

1-3 ஆதாம் ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார் ஆனால் இவைகள் கிறிஸ்துவின் மூலம் மீண்டும் ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழிகளை உருவாக்கினார் 

Rev 22:10 பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது. 

Rev 22:11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். 

Rev 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. 

Rev 22:13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். 

Rev 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். 

Rev 22:15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். 

Rev 22:16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். 

Rev 22:17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். 

Rev 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். 

Rev 22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 

Rev 22:20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். 

Rev 22:21 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். 

2-0 நயவஞ்சகமுள்ள தந்திரத்தினாலே ஸ்திரீ வஞ்சிக்கப்படுவதற்கு காரணமாயிருந்த சர்ப்பத்திற்கும், ஸ்திரீ சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டதற்கும் வருகிற சாபங்கள்:- 

2-1 நயவஞ்சகமுள்ள தந்திரத்தினாலே ஸ்திரீ வஞ்சிக்கப்படுவதற்கு காரணமாயிருந்த சர்ப்பத்திற்கு வருகிற சாபங்கள்:- 

2-2 ஸ்திரீ சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டதற்கு வருகிற சாபங்கள்:- 

2-3 சர்ப்பத்திற்கும் ஸ்திரீக்கும், பகை உண்டாக்குவேன்:- 

2-4 சர்ப்பத்தின் வித்துக்கும் ஸ்திரீயின் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்:- 

2-5 ஸ்திரீயும் ஸ்திரீயின் வித்துக்களும் சேர்ந்து சர்ப்பத்தையும் சர்ப்பத்தின் வித்துக்களின் தலைகளை நசுக்குவார்கள்:- 

2-6 சர்ப்பமும் சர்ப்பத்தின் வித்துக்களும் சேர்ந்து ஸ்திரீயையும் ஸ்திரீயின் வித்துக்களின் குதிங்கால்கலை / சரீரங்களை நசுக்குவார்கள்:- 

2-7 ஸ்திரீயின் வித்தாகிய நீதிமானாகிய ஆபேல், மற்றும் சர்ப்பத்தின் வித்தாகிய பொல்லாத கிரியைகளுடைய காயீன், ஆகிய இவர்களின் சாபங்கள் உபத்திரவ காலத்தில் நிறைவேறுகிறது:- 

2-8 ஸ்திரீயின் வித்தாகிய நீதிமானாகிய ஆபேல் மற்றும் சர்ப்பத்தின் வித்தாகிய பொல்லாத கிரியைகளுடைய காயீன் ஆகிய இவர்கள் முதல் தேவனுடைய சாபங்கள் நிறைவேறத் தொடங்குகிறது. 

2-1 நயவஞ்சகமுல்ல தந்திரத்தினாலே ஸ்திரீ வஞ்சிக்கப்படுவதற்கு காரணமாயிருந்த சர்ப்பத்திற்கும் சர்ப்ப சந்த்திகளுக்கும் வருகிற சாபங்கள்:- 

Gen 3:14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 

Mat 3:7 பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? 

Mat 3:8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். 

Mat 12:34 விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். 

Mat 12:35 நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். 

Mat 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 

Mat 12:37 ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். 

Mat 23:33 சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்? 

Mat 23:34 ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; 

Mat 23:35 நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள். 

Mat 23:36 இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 

Rom 16:17 அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன். 

Rom 16:18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். 

Rom 16:19 உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். 

Rom 16:20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். 

Php 3:18 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். 

Php 3:19 அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். 

Php 3:20 நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். 

Php 3:21 அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். 

2-2 ஸ்திரீயும் ஸ்திரீயின் சந்த்திகளும் சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டதற்கு வருகிற சாபங்கள்:- 

Gen 3:16 அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். 

1Ti 2:11 ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். 

1Ti 2:12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும். 

1Ti 2:13 என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். 

1Ti 2:14 மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். 

1Ti 2:15 அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள். 

2Co 11:3 ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். 

Gal 4:19 என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்; 

Rev 12:1 அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. 

Rev 12:2 அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். 

Luk 21:19 உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். 

Luk 21:20 எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். 

Luk 21:21 அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள். 

Luk 21:22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே. 

Luk 21:23 அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும். 

Luk 21:24 பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். 

2-3 சர்ப்பத்திற்கும் ஸ்திரீக்கும், பகை உண்டாக்குவேன்:- 

Rev 12:3 அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது. 

Rev 12:4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது. 

Rev 12:5 சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

Rev 12:6 ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காகத் தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது. 

Rev 12:13 வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது. 

Rev 12:14 ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. 

Rev 12:15 அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது. 

Rev 12:16 பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது. 

2-4 சர்ப்பத்தின் வித்துக்கும் ஸ்திரீயின் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்:- 

Rev 12:17 அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று. 

2-5 ஸ்திரீயும் ஸ்திரீயின் வித்துக்களும் சேர்ந்து சர்ப்பத்தையும் சர்ப்பத்தின் வித்துக்களின் தலைகளை நசுக்குவார்கள்:- 

Rev 12:7 வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. 

Rev 12:8 வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. 

Rev 12:9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். 

Rev 12:10 அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். 

Rev 12:11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். 

Rev 12:12 ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன். 

Rev 16:12 ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று. 

Rev 16:13 அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன். 

Rev 16:14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது. 

Rev 16:15 இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். 

Rev 16:16 அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான். 

Rev 16:17 ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது. 

Rev 16:18 சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை. 

Rev 16:19 அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்குத் தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது. 

Rev 16:20 தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின. 

Rev 16:21 தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடிதாயிருந்தது. 

2-6 சர்ப்பமும் சர்ப்பத்தின் வித்துக்களும் சேர்ந்து ஸ்திரீயையும் ஸ்திரீயின் வித்துக்களின் குதிங்கால்கலை / சரீரங்களை நசுக்குவார்கள்:- 

Rev 11:3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். 

Rev 11:4 பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே. 

Rev 11:5 ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும். 

Rev 11:6 அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு. 

Rev 11:7 அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். 

Rev 11:8 அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். 

Rev 11:9 ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள்வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். 

Rev 11:10 அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். 

Rev 11:11 மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று. 

Rev 11:12 இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள். 

Rev 11:13 அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். 

2-7 ஸ்திரீயின் வித்தாகிய நீதிமானாகிய ஆபேல் மற்றும் சர்ப்பத்தின் வித்தாகிய பொல்லாத கிரியைகளுடைய காயீன் ஆகிய இவர்கள் முதல் தேவனுடைய சாபங்கள் நிறைவேறத் தொடங்குகிறது. 

1Jn 3:8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். 

1Jn 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். 

1Jn 3:10 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. 

1Jn 3:11 நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. 

1Jn 3:12 பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே. 

1Jn 3:13 என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள். 

1Jn 3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். 

1Jn 3:15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். 

1Jn 3:16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 

Mat 23:33 சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்? 

Mat 23:34 ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; 

Mat 23:35 நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள். 

Mat 23:36 இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 

Rev 6:9 அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன். 

Rev 6:10 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். 

Rev 6:11 அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. 

Rev 12:9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். 

Rev 12:10 அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். 

Rev 12:11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். 

Rev 12:12 ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன். 



3-0 ஆபேலின் சந்ததிகளின் இரத்தப்பழியெல்லாம் உபத்திரவ காலத்தில், விசாரிக்கப்பட்டு முடிவடைகிறது:- 

ஸ்திரீயின் வித்தாகிய நீதிமானாகிய ஆபேல், மற்றும் சர்ப்பத்தின் வித்தாகிய பொல்லாத கிரியைகளுடைய காயீன்; ஆகிய இவர்கள் முதல் தேவனுடைய சாபங்கள் நிறைவேறத் தொடங்கி, ஆபேலின் சந்ததிகளின் தேவனுடைய பலிபீட இரத்தப்பழியெல்லாம் தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின்: முதல் ஏழு வருடங்களை கொண்ட உபத்திரவ காலத்தில், விசாரிக்கப்பட்டு முடிவடைகிறது. 

3-1 ஆபேல் முதல் 6,000 ஆயிரம் வருடங்களை கடந்து, மற்றும் சுமார் 100 தலைமுறைகளை கடந்து, திரளான ஆபேலின் சந்ததிகள் உபத்திரவ காலத்தில், தேவனுடைய பலிபீட ஊழியத்திற்கு ஆயத்தமாகிறார்கள்:- 

தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின் முதல் ஏழு வருடங்களில் நடைபெறுகிற உபத்திரவ காலத்தில்; ஆபேலின் சந்ததிகள் தேவனால் தேவனுடைய முத்திரை அடையாளங்களை தங்களுடைய நெற்றிகளிள் தரித்துக்கொண்டும், காயீனின் சந்ததிகளின் அடையாளங்களை பகுத்தறிந்து உணர்ந்துகொண்டும், தேவனுடைய பலிபீட ஊழியத்திற்கு ஆயத்தமாகிறார்கள்:- 

இப்படி திரளான ஆபேல்களாகிய மணவாட்டி சபையும், அவர்களுடைய ஆலோசனைகளுக்கு உதவி செய்கிறவர்களும், தங்களுடைய எஜமான்களாகிய தேவனுடைய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, தீர்க்கதரிசனத்தின் ஆவி, ஆகிய மூன்று ஆவிகளின் பெலத்தோடு தேவனுடைய இராஜ்யத்தை நிறுவுவதற்காக போராடுகிறார்கள்; 

மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும், தங்கள் ஜீவனையும் பாராமல், சாத்தான்,அந்தக்கிறிஸ்து, கள்ளத்தீர்க்கதரிசி ஆகிய மூவருடனும் அவர்களுடைய ஆவிகளுடனும், அவர்களுடனும் இருப்பவர்களையும் ஜெயங்கொண்டார்கள் 

3-2 காயீன் முதல் 6,000 ஆயிரம் வருடங்களை கடந்து, மற்றும் சுமார் 100 தலைமுறைகளை கடந்து, திரளான காயீனின் சந்ததிகளிள் உபத்திரவ காலத்தில், சாத்தானுடைய பலிபீட ஊழியத்திற்கு ஆயத்தமாகிறார்கள்:- 

தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின் முதல் ஏழு வருடங்களில் நடைபெறுகிற உபத்திரவ காலத்தில்; காயீனின் சந்ததிகள் சாத்தானால் மிருகத்தின் முத்திரை அடையாளங்களை தங்களுடைய நெற்றிகளிலும்,வலது கையிலும் தரித்துக்கொள்ளுகிறார்கள். 

திரளான காயீன்களும், அவர்களுடைய ஆலோசனைகளுக்கு உதவி செய்கிறவர்களும், தங்களுடைய எஜமான்களாகிய சாத்தான்,அந்தக்கிறிஸ்து கள்ளத்தீர்க்கதரிசி ஆகிய முவருடைய வாயிலுமிருந்து புறப்பட்டு வருகிற, தவளைகளுக்கு ஒப்பான மூன்று பிசாசுகளின் அசுத்த ஆவிகளின் அற்புதங்களை பின்தொடர்ந்து; சாத்தானுடைய இராஜ்யத்தை நிறுவுவதற்காக போராடுகிறார்கள்; 

மற்றும் திரளான ஆபேல்களாகிய மணவாட்டி சபையையும், அவர்களுடைய ஆலோசனைகளுக்கு உதவி செய்கிறவர்களையும், வஞ்சிக்க முயற்சி செய்து நேரடியாக அக்கினி நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். 

4-0 ஆபேல் முதல், 1,44,000 வரிசையில் தொடர்ந்து வருகிற கிறிஸ்துவின் மணவாட்டி சபை: தேவனுடைய ஆலோசனைகளையும் வல்லமைகளையும் பெற்றுக்கொண்டு, உபத்திரவ காலத்தில், தேவனுடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்க போராடுகிறார்கள்:- 

4-1 தேவனுடைய கிருபையினாலே, இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டவர்கள்: இயேசு கிறிஸ்து ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தினால்; நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றினது போல, தங்களுடைய பாவ சரீரத்தை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறபோது: கல்லான இருதயம்,மாம்சமான இருதயமாக மறுரூபமடைந்து நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றுகிறதினால் இவர்களுடைய ஆவி,ஆத்துமா,சரீரம் புதிதாகிறதினாலே மறுரூபமடைந்து, தேவனுக்கு முன்பாக நீதிமானாக மாறுகிறார்கள்; 

இவர்களுடைய கல்லான இருதயம்,மாம்சமான இருதயமாக மறுரூபமடைந்தபடியால், இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிந்து: தங்களுக்கு தேவன் பகிர்ந்து கொடுத்த, ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறார்கள். 

4-2 கிறிஸ்துவின் மணவாட்டி சபை: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார். அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; என்று ஆராதணை செய்துகொண்டிருக்கிறார்கள். 

4-3 தேவனுடைய முன் தீர்மானத்தினால் அழைக்கப்பட்டவர்களிள் ஒரு சிலர், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் வரிசையில் முன்னேறுவதற்காக: சபையாகிய பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு /தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில், பங்கடைகிறார்கள்,இந்த கிறிஸ்துவின் மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தை புசித்து முன்மாரி,பின்மாரி மழையில் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த, ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணத்தை பெற்றுக்கொள்ளுகிறார்கள். 

4-4 தேவனுடைய முன் தீர்மானத்தினால் அழைக்கப்பட்டு, கிறிஸ்துவின் இரகசிய வருகையில் தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டி சபையில் ஒரு சிலர்: தேவனால் உண்மையுள்ளவர்களின் வரிசையில் முன்னேறுவதற்காக, ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தை புசித்து, சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து; தேவனுக்கு விருந்து கொடுப்பதற்காக, 

தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் மூலம், தேவனுடைய ராஜ்யத்தின் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல, பூமியிலேயும் செய்யப்படுவதற்காக, போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

4-5 கிறிஸ்துவின் மணவாட்டி சபை: தேவனுடைய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, தீர்க்கதரிசனத்தின் ஆவி, ஆகிய மூன்று ஆவிகளின் ஆலோசனைகளின் வல்லமைகளை தரித்துக்கொண்டு; தேவனுடைய ராஜ்யத்தின் சித்தம், பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதற்காக, போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

4-6 கிறிஸ்துவின் மணவாட்டி சபையும், அவர்களை பின்பற்றுகிறவர்களும், தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட, தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை, தங்களுடைய நெற்றிகளில் தரித்துக்கொண்டு: தேவனுடைய கற்பனைகளின் படி தேவனுடைய ராஜ்யத்தின் சித்தம், பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல, பூமியிலேயும் செய்யப்படுவதற்காக, போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

4-7 கிறிஸ்துவின் மணவாட்டி சபை: தேவனுடைய கற்பனைகள், இயேசு கிறிஸ்துவைக் குறித்த சாட்சி ஆகியவைகளிள் உள்ள, தேவனுடைய சத்தியமான வார்த்தைகளிள் கலப்படம் இல்லாமல், சுத்தமான பாஷையை பேசி, ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொண்டு, ஆவி,ஆத்துமா,சரீரத்தில் ஒருமனப்பட்டு தேவனை ஆராதனை செய்யும்படிக்கு, ஆயத்தப்படுத்துகிறார்கள். 

4-8 கிறிஸ்துவின் மணவாட்டி சபை: தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களாகவும் , இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களாகவும் இருந்து, இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தின் அதிகாரத்துடனும், வல்லமையுடனும், ஜனங்களை தேவனை ஆராதனை செய்யும்படிக்கு, ஆயத்தப்படுத்துகிறபோது; மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும், சாத்தானுக்கு தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், சாத்தானை ஜெயங்கொள்ளுகிறார்கள். 

4-9 கிறிஸ்துவின் மணவாட்டி சபை: தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களாகவும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களாகவும் இருந்து, பொறுமையுடனும் விசுவாசத்துடனும், ஜனங்களை தேவனை ஆராதனை செய்யும்படிக்கு, ஆயத்தப்படுத்துகிறபோது ; எலியா,ஏனோக்கைப்போல நேரடியாக மரணத்தை காணமல் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். 

4-10 கிறிஸ்துவின் மணவாட்டி சபை: தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றிகளில் பெற்றுக்கொண்டு, தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறபோது; நேரடியாகவோ / மறைமுகமாகவோ பல உதவிகளை செய்து மரணம் அடைகிற புறஜாதிகள்/ இரத்த சாட்சியாக மரணம் அடைகிறவர்கள், 

வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். 

4-11 கிறிஸ்துவின் மணவாட்டி சபை: தேவனுடைய இராஜ்யத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிறபோது, நேரடியாகவோ / மறைமுகமாகவோ பல உதவிகளை செய்து ஆவி,ஆத்துமா,சரீரத்தில் மரணம் அடையாமல் இருக்கிறவர்கள்/புறஜாதிகள்/கைவிடப்பட்டவர்கள்; நேரடியாக இந்த பூமியில் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுகிறார்கள். 

4-12 கிறிஸ்துவின் மணவாட்டி சபை: தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு, தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும், ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி; கண்ணாடிக் கடலிலே முழுகி, முதலாம் உயிர்த்தெழுதலின் மகிமையை பெற்றுக்கொண்டு, தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடுகிறார்கள். 

5-0 காயீன் முதல் தொடர்ந்து வருகிற பாபிலோன் மணவாட்டி சபை: சாத்தானுடைய ஆலோசனைகளையும் வல்லமைகளையும் பெற்றுக்கொண்டு; உபத்திரவ காலத்தில், சாத்தானுடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்க போராடுகிறார்கள்:- 

5-1 தேவனுடைய கிருபையினாலே இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டவர்கள்: இயேசு கிறிஸ்து ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தினால், நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றினது போல; தங்களுடைய பாவ சரீரத்தை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்காதவர்கள், மனிதனுக்கு முன்பாக நீதிமானாக மாறுகிறார்கள்; 

இவர்களுடைய கல்லான இருதயம்,மாம்சமான இருதயமாக மறுரூபமடையாமல், மரணத்தினாலே நிலைகொண்டிருக்கிறபடியால், இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரித்து, மனிதனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிந்து, தங்களுக்கு மனிதன் பகிர்ந்து கொடுத்த ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறார்கள். 

5-2 பாபிலோன் குமாரத்திகளின் மணவாட்டி சபை/ அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை: சரித்திர புருஷனாகிய மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்து, பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் அல்லேலூயா, சரித்திர புருஷனாகிய இயேசு கிறிஸ்து ராஜ்யபாரம்பண்ணுகிறார், அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக்கே உரியது; என்று ஆராதணை செய்துகொண்டிருக்கிறார்கள். 

5-3 தேவனுடைய முன் தீர்மானத்தினால் அழைக்கப்பட்டவர்களிள் ஒரு சிலர், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் வரிசையில் முன்னேற முடியாமல்; சபையாகிய பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில், நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு /தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு அடிமைப்பட்டிருந்து: கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்படுகிற மணவாட்டி சபையாகிய பாபிலோன் குமாரத்திகள்: சுய நீதியின் வஸ்திரம் / மறுதேசத்து ராஜகுமாரரின் வஸ்திரம் தரித்து விருந்து கொண்டாடுகிறார்கள், தங்களுக்கு மனிதன் பகிர்ந்து கொடுத்த ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணத்தை பெற்றுக்கொள்ளுகிறார்கள். 

5-4 தேவனுடைய முன் தீர்மானத்தினால் அழைக்கப்பட்டதை அசட்டைசெய்து, அந்திக் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டி சபையில் ஒரு சிலர், சாத்தானால் உண்மையுள்ளவர்களின் வரிசையில் முன்னேறுவதற்காக; அந்திக் கிறிஸ்துவின் கலியாண விருந்தை புசித்து சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து,சாத்தானுக்கு விருந்து கொடுப்பதற்காக, 

சாத்தான் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் மூலம், சாத்தானுடைய ராஜ்யத்தின் சித்தம் வானமண்டலங்களிலே செய்யப்பட்டது போல, பூமியிலேயும் செய்யப்படுவதற்காக, போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

5-5 பாபிலோன் குமாரத்திகளின் மணவாட்டி சபை/ அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை: சாத்தானுடைய ஆவி, அந்திக்கிறிஸ்துவின் ஆவி, கள்ளதீர்க்கதரிசியின்ஆவி, ஆகிய மூன்று பிசாசுகளின் அசுத்த ஆவிகளின் அற்புதங்களைச் செய்துகொண்டு; சாத்தானுடைய ராஜ்யத்தின் சித்தம் வானமண்டலங்களிலே செய்யப்பட்டது போல, பூமியிலேயும் செய்யப்படுவதற்காக, போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

5-6 பாபிலோன் குமாரத்திகளின் மணவாட்டி சபை/ அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை, பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பத்திற்கும், அதை பின்பற்றுகிறவர்களுக்கும் மத்தியில், அடையாளமாக கொடுக்கப்பட்ட சாத்தானுடைய முத்திரை அடையாளங்களை; தங்களுடைய நெற்றிகளிலும் வலது கையிலும் தரித்து வெறிகொண்டிருந்து: சாத்தானுடைய ராஜ்யத்தின் சித்தம், வானமண்டலங்களிலே செய்யப்பட்டது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதற்காக, போராடிக்கொண்டிருக்கிறார்கள். 

5-7 பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபை / அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டி சபை, பிரிவினைகள்,மார்க்க பேதங்களுடன் மனிதனுடைய கற்பனைகளை பின் தொடர்ந்து, கலப்படமான அந்நியபாஷைகளை /அசுத்தமான பாஷைகளைப் பேசி; சாத்தானையும், அந்திக்கிறிஸ்துவையும், கள்ளத்தீர்க்கதரிசியையும் தொழுதுகொண்டு, ஆவி,ஆத்துமா,சரீரத்தில் ஒருமனப்பட்டு தேவனைத் தூஷிக்கும்படி தங்கள் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தார்கள். 

5-8 பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபை: பிரிவினைகள்,மார்க்கபேதங்களுடன் மனிதனுடைய கற்பனைகளை பின் தொடர்ந்து, கலப்படமான அந்நியபாஷைகளை /அசுத்தமான பாஷைகளைப் பேசி சாத்தான் அந்திக்கிறிஸ்துக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகள் வாயிலிருந்து புறப்பட்டு வருகிற, தவளைகளுக்கு ஒப்பான மூன்று பிசாசுகளின் அசுத்த ஆவிகளின் அற்புதங்கள்/அடையாளங்களினால்: 

திரளான ஆபேல்களாகிய மணவாட்டி சபையையும், அவர்களுடைய ஆலோசனைகளுக்கு உதவி செய்கிறவர்களும், தங்களை நேரடியாக ஆராதணை செய்வதற்காக வஞ்சிக்க முயற்சி செய்கிறபோது; மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றப்பட்ட, தேவனுடைய ஏழு கோபகலசங்களின் ஏழு வாதைகளினால், தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடிதாயிருந்தது. 

5-9 பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபையும்,அவர்களை பின்பற்றுகிறவர்களும், சாத்தான் அந்திக்கிறிஸ்துக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகள் வாயிலிருந்து புறப்பட்டு வருகிற மூன்று பிசாசுகளின் அசுத்த ஆவிகளின் அற்புதங்கள்/அடையாளங்களினால்: ஜனங்களை சாத்தானுக்கு ஆராதனை செய்யும்படிக்கு, ஆயத்தப்படுத்துகிறபோது ; நேரடியாக, அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்படுகிறார்கள். 

5-10 பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபை: மிருகத்தின் முத்திரை அடையாளங்களை, தங்களுடைய நெற்றிகளிலும்,வலது கையிலும் பெற்றுக்கொண்டு; சாத்தானுடைய இராஜ்யத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிறபோது, நேரடியாகவோ / மறைமுகமாகவோ பல உதவிகளை செய்து மரணம் அடைகிறவர்கள், மகா சத்தமிட்டு: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் சாத்தானுக்கு மகிமை உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். 

5-11 பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபை: சாத்தானுடைய இராஜ்யத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிறபோது, நேரடியாகவோ / மறைமுகமாகவோ பல உதவிகளை செய்து சரீரத்தில் மரணம் அடையாமல் இருக்கிறவர்கள்/புறஜாதிகள்/கைவிடப்பட்டவர்கள்/ தேவனால் சபிக்கப்பட்டவர்கள், பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே சுதந்தரித்துக்கொள்ளுகிறார்கள். 

5-12 பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபையும் அவர்களை பின்பற்றுகிறவர்களும் தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பாமலும் தேவனுடைய நாமத்தைத் மகிமைப்படுத்தாமலும் இருந்தபடியால்; தேவனுடைய ஏழு வாதைகளுடைய வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு,பரலோகத்தின் தேவனைத் தூஷித்து மரணமடைந்தவர்கள், 

இரண்டாம் உயிர்த்தெழுதலின் மகிமையை பெற்றுக்கொள்ளும் வரை சாத்தானுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார்; நாங்கள் பாதாளத்திலே அரசாளுவோம் என்று பழைய பாட்டைப் பாடுகிறார்கள். 

6-0 தேவனுடைய இராஜ்யத்தின் ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிறவர்கள் ஆயிரம் ஆண்டு ஆடசியின் பதவிகளை எடுத்துக்கொள்ளக்கூடாது:- 

தேவனுடைய இராஜ்யத்தின் ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிறவர்கள் ஆயிரம் ஆண்டு ஆட்சியில் ஜெயங்கொண்டவர்களுக்கு தேவன் பிரதிபலனாக கொடுக்கும் பதவிகளை காலத்திற்கு முன்பாக தாங்களே சுயமாக இந்த பூமியில் எடுத்துக்கொள்ளுகிறபோது அவர்களுடைய இரட்சிப்பு மரணமடைகிறது. 

7-0 தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை விருந்தாக புசிக்கிறவர்கள் ஆயிரம் ஆண்டு ஆடசியில் 1,44,000 வரிசையில் வருகிற பதவிகளுக்கு போட்டியிடலாம்:- 

தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை தேவனுடைய சத்தியமான வசனங்களின் விருந்தாக புசித்து அதன் சுவைகளை உணர்ந்து கொண்டவர்கள்; தேவனுக்கு விருந்து கொடுப்பதற்காக தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிறவர்கள், ஆயிரம் ஆண்டு ஆடசியில் 1,44,000 வரிசையில் வருகிற பதவிகளுக்கு போட்டியிடலாம். 

8-0 ஸ்திரீயாகிய சபையின் மூலம் தேவனுடைய வார்த்தைகளை விருந்தாக புசிக்கிறவர்கள் ஆயிரம் ஆண்டு ஆடசியில் 1,44,000 வரிசையில் வருகிற பதவிகளுக்கு போட்டியிட முடியாது. 

9-0 தேவனுடைய ராஜ்யத்தில் 1,44,000 வரிசையில் வருகிற பதவிகளுக்கு தகுதியும்,திறமையும் உள்ள ஆட்கள் தேவை:- 

2Ch 16:9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; இந்த பதவிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆட்கள் தேவை ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான். 

10-0 அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். 

Mat 9:36 அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, 

Mat 9:37 தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; 

Mat 9:38 ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார். 

Joh 4:34 இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. 

Joh 4:35 அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 

Joh 4:36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். 

Joh 4:37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது. 

Joh 4:38 நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார். 

11-0 தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின்: முதல் ஏழு வருடங்களை கொண்ட உபத்திரவ காலத்தில், தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் எண்ணிப்பார்க்கிறார்கள்:- 

தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின்: முதல் ஏழு வருடங்களை கொண்ட உபத்திரவ காலத்தில், தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் கைக்கோலுக்கு ஒப்பான/நீதிக்கிரியைகளுக்கேற்றபடியுள்ள ஒரு அளவுகோல் மூலம் தேவதூதர்கள் அளந்துபார்க்கிறார்கள் /எண்ணிப்பார்க்கிறார்கள். தேவனுடைய ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள். 

Rev_11:1-2,Mat_23:33-35, Luk_11:50-51, Rev_6:9-11, Rev_20:4-6,Rev_7:9-15,Rev_8:1-6, 

11-1 தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின்: முதல் ஏழு வருடங்களை கொண்ட உபத்திரவ காலத்தில், தேவனுடைய பலிபீடத்தை, தொழுதுகொள்ளுகிறவர்களையும் எண்ணிப்பார்க்கிறார்கள்:- 

தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின்: முதல் ஏழு வருடங்களை கொண்ட உபத்திரவ காலத்தின் முடிவில், முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து, பாக்கியவான்களும் பரிசுத்தவானுமாயிருந்து ; பரலோகத்தின் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்திலே அவரைச் சேவிக்கிறவர்களின் எண்ணிக்கை, இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள், இவர்கள் கைக்கோலுக்கு ஒப்பான/நீதிக்கிரியைகளுக்கேற்றபடியுள்ள ஒரு அளவுகோல் மூலம் தேவதூதர்களால் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். 

பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள்: பரலோகத்தின் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலருகே நிற்றுகொண்டிருந்து; தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு, தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். Rev_11:1-2,Mat_23:33-35, Luk_11:50-51, Rev_6:9-11, Rev_20:4-6,Rev_7:9-15,Rev_8:1-6, Rev_14:1-5, Rev_15:2-5,Rev_4:5-6,Rev_5:7-10,Rev_20:4, 

11-2 தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின்: முதல் ஏழு வருடங்களை கொண்ட உபத்திரவ காலத்தில், தேவனுடைய ஆலயத்திலே, தொழுதுகொள்ளுகிறவர்களையும் எண்ணிப்பார்க்கிறார்கள்:- 

தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின்: முதல் ஏழு வருடங்களை கொண்ட உபத்திரவ காலத்தின் முடிவில், முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து, பாக்கியவான்களும் பரிசுத்தவானுமாயிருக்கிறவர்கள்; பரலோகத்தின் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறவர்களின் எண்ணிக்கை, ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், கைக்கோலுக்கு ஒப்பான/நீதிக்கிரியைகளுக்கேற்றபடியுள்ள ஒரு அளவுகோல் மூலம் தேவதூதர்களால் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். 

11-3 தேவனுடைய ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்:- 

தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின்: முதல் ஏழு வருடங்களை கொண்ட உபத்திரவ காலத்தில், இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்கள் வரிசையில் வருகிற பரிசுத்தவான்களுக்கு, நேரடியாகவோ / மறைமுகமாகவோ பல உதவிகளை செய்து ஆவி,ஆத்துமா,சரீரத்தில், மரணம் அடையாமல் இருக்கிறவர்கள்/புறஜாதிகள்/கைவிடப்பட்டவர்கள்; நேரடியாக இந்த பூமியில் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுகிறார்கள். 

தேவனுடைய ராஜ்யத்தில் நேரடியாக பங்கடைகிறவர்கள், பாக்கியவான்களும் பரிசுத்தவானுமாயிருக்கிறவர்கள்; பூமியில் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறவர்களின் எண்ணிக்கை, ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், கைக்கோலுக்கு ஒப்பான/நீதிக்கிரியைகளுக்கேற்றபடியுள்ள ஒரு அளவுகோல் மூலம் தேவதூதர்களால் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். 

12-0 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்:- 

Rev 22:10 பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரை போடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது. 

Rev 22:11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். 

Rev 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. 

Rev 22:13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். 

Rev 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். 

Rev 22:15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். 

Rev 22:16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். 

Rev 22:17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். 

Rev 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். 

Rev 22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 

Rev 22:20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். 

Rev 22:21 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Previous
Home Next

Social Media
Location