தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 17


ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் - தேவனுடைய ஆவியில் பிழைத்திருக்கிறவர்களுக்காக தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு உபத்திரவ காலத்திற்கு நடைமுறைக்கு வருகிறது.

பொருளடக்கம் 3-0

3-0 கிறிஸ்துவின் முதலாம் வருகை முதல், கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை; தேவதூதர்கள் தேவனால்அனுப்பப்படும் பணிவிடை ஆவிகள்:- 

3-1 தேவதூதர்கள் எல்லாரும் தேவனால்அனுப்பப்படும் பணிவிடை ஆவிகள்:- 

3-2 தேவனுடைய சித்தத்தின்படி பகிர்ந்து கொடுத்த ஊழியத்தை பற்றி கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்:- 

3-3 நீதியின்பிரமாணம் தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தனாகிய கிறிஸ்துவின் கையிலே கட்டளையிடப்பட்டது:- 

3-4 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை அறிவிக்க தேவதூதன் அனுப்பப்படுகிறார்:- 

3-5 உபத்திரவகாலத்தில்/ நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளையில் நித்திய சுவிசேஷத்தின் நற்செய்தியை அறிவிக்க தேவதூதன் அனுப்பப்படுகிறார்:- 

3-6 உபத்திரவகாலத்தில் தேவனுடைய இரட்சிப்பு ஆவிக்குரிய யூதர்கள் வழியாய் வருகிறது:- 

3-7 தேவனுடைய இரட்சிப்பு ஆவிக்குரிய யூதர்கள் வழியாக முன்மாரி மழை பின்மாரி மழையின் வல்லமையுடன் வெளிப்படுகிறது:- 

3-8 தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் சத்தியஆவியினால் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் மூலம் தேவனுடைய நியாயத்தீர்ப்பை பிரசங்கித்து இரத்த சாட்சியாக மரிப்பார்கள்:- 

3-1 தேவதூதர்கள் எல்லாரும் தேவனால்அனுப்பப்படும் பணிவிடை ஆவிகள்:- 

Dan 12:1 உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். 

Dan 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். 

Dan 12:3 ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். 

Dan 12:4 தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான். 

1Th 4:15 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. 

1Th 4:16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 

1Th 4:17 பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 

1Th 4:18 ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள். 

3-2 தேவனுடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த ஊழியத்தை பற்றி கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்:- 

Heb 2:2 ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, 

Heb 2:3 முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், 

Heb 2:4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். 

3-3 நீதியின்பிரமாணம் தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தனாகிய , கிறிஸ்துவின் கையிலே கட்டளையிடப்பட்டது:- 

தேவனுடைய வார்த்தைகளூக்குள் கிறிஸ்துவின் நீதியின்பிரமாணம் மத்தியஸ்தனாகிய கட்டளையிடப்பட்டது. 

Rom 8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். 

Rom 8:17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். 

Rom 8:18 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். 

Rom 8:19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. 

Rom 8:20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, 

Rom 8:21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 

Rom 8:22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. 

Rom 8:23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். 

Rom 8:24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? 

Rom 8:25 நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். 

Rom 8:26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். 

Rom 8:27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். 

தேவனுடைய வார்த்தைகளூக்குள் கிறிஸ்துவின் நீதியின்பிரமாணம் மத்தியஸ்தனாகிய கட்டளையிடப்பட்டது. 

கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாயும், இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள் / ஏற்றுக்கொள்ளுகிறவர்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. இவர்கள் பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள், மேலும் இவர்கள் தேவனால் முன்குறிக்கப்பட்ட 1,44,000 பரிசுத்தவான்களின் வரிசையில் வந்து சேர்ந்து, தேவர்கள் என்ற பெயரையும் பெற்றுக் கொள்ளுவார்கள் 

1-1 புளிப்பிள்ளாத ஜீவ அப்பமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் கிறிஸ்துவின் நீதியின்பிரமாணம் மத்தியஸ்தனாகிய கட்டளையிடப்பட்டது. 

புளிப்பிள்ளாத ஜீவ அப்பமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொண்டு, நீதியின் கிரியைகளை நிறைவேற்றுகிறவர்கள்; அவைகளுக்காக சந்தோஷமாக துன்பத்தை அனுபவிக்கிறபோது, தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Deu_16:1-3, Isa_30:19-21, 1Co_5:6-8, 1Pe_4:16, 1Pe_3:17-18, 1Pe_2:20-21 

1-2 புளிப்பிள்ளாத ஜீவ அப்பமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் கிறிஸ்துவின் நீதியின்பிரமாணம் மத்தியஸ்தனாகிய கட்டளையிடப்பட்டது. 

புளிப்பிள்ளாத ஜீவ அப்பமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்திலும் வாயிலும் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுவதற்காக தங்களுடைய ஆத்துமாவில் பசிதாகம் உள்ளவர்களாக இருக்கும்போது, தேவனுடைய வார்த்தைகளுக்காக துன்பம் அனுபவிப்பார்கள். . Mat_12:1-4, Mar_2:24-26, Luk_6:1-4, 1Sa_21:6 

1-3 புளிப்பிள்ளாத ஜீவ அப்பமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் கிறிஸ்துவின் நீதியின்பிரமாணம் மத்தியஸ்தனாகிய கட்டளையிடப்பட்டது. 

தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட புளிப்பில்லாத ஜீவ அப்பமாகிய நித்திய ஜீவ வார்த்தைகளின் நன்மை தீமைகள்; தங்களுடைய இருதயத்திற்கும் வாய்க்கும் சமீபமாக இருக்கும்போது வெளிப்படுகிற தேவ நீதியின் வசனங்களினால், தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. . Deu_8:3, Mat_4:3-4, Luk_4:4, Mat_8:5-8, Jer_9:20, Exo_23:25-27, Isa_33:14-17, Psa_132:13-16, Psa_37:25, Job_22:22, Job_23:12, Pro_2:6-7 

1-4 புளிப்பிள்ளாத அப்பங்களை ஓய்வு நாள் தோறும் தேவனுக்கு பலி செலுத்துவது. Lev_24:5-9 

1-5 புளிப்புள்ளவைகளை தேவனுக்கு பலி செலுத்த வேண்டாம். Exo_23:18, Exo_34:25, Lev_2:11, Lev_6:17 

1-6 புளிப்புள்ளவைகளை நீங்கள் புசிக்க வேண்டாம். 

Amo_4:5, Exo_12:15-20, Exo_13:3, Exo_13:7, Hos_7:3-4 

1-7 புளிப்பிள்ளாத ஜீவ அப்பமாகிய தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளாதவர்கள் புசிக்கும் சில துன்பத்தின் அப்பங்கள். Psa_80:4-6, Psa_102:9-10, Psa_127:1-2, Pro_4:14-17, Pro_31:26-27, Eze_12:18-20, Hos_7:3-9 

2-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட மூல உபதேசங்களுடைய நன்மை தீமைகள், தங்களுடைய இருதயத்திற்கு வாய்க்கும் சமீபமாயிருக்கும்போது வெளிப்படுகிற தேவ நீதியின் பிரமாணத்தினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. 

விசுவாசத்தினால் வருகிற தேவநீதியின் பிரமாணங்கள் / 

இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள் 

Rom_1:16, Rom_12:6, Hab_2:1-4 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்த்தையை தங்கள் வாயினால் அறிக்கை செய்து, இருதயத்தில் தேவனுடன் உடன்படிக்கை செய்து கொண்ட யாவருக்கும் இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள். Mat_24:14, Mar_13:10, Joh_1:12, Gal_3:26, Exo_19:5, Joh_10:1-13, Rom_4:5, Joh_9:31 

1 நான் என் காவலிலே தரித்து :- என் இருதயத்தில் எல்லா காவலுடன் நான் இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக்காத்துக் கொண்டு. Pro_4:23, 1Co_16:13, Col_1:22-23 

2 அரணிலே நிலை கொண்டிருந்து :- தேவன் எனக்கு பகிர்ந்த விசுவாச அளவுப் பிரமாணத்தில் நிலை கொண்டிருந்து….2Co_10:14; Mat_25:15; Rom_12:3-6, Rom_15:20; 1Co_12:11-12; Eph_4:7-13; 1Pe_4:10-11, 1Co_4:6-7, 1Co_12:4-11, 1Co_12:28-31, Hab_2:1-4 

3 அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும்:- தேவன் தம்முடைய அழைப்பின் எந்த சித்தத்தை செய்ய சொல்லுவா ரென்றும் கவனித்துப் பார்ப்போன். Rom_12:2-6, Eph_1:10, Eph_5:17, Col_4:12, Act_9:6, Phi_2:13 

4 தேவன் என்னை கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும், கவனித்துப் பார்ப்பேன்;- 

தேவன் என்னை கண்டிக்கும் போது நான் கடிந்து கொள்ளுதலை அலட்சியம் செய்யமாட்டேன்,என்னை சீர்திருத்தும்படி கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுவேன். Psa_141:5, Pro_13:8, Pro_15:5, Pro_15:31-32, Pro_21:20, Pro_29:15, Tit_1:14, 2Ti_3:15-17 

5 தரிசனத்தை எழுதி :- தேவனுடைய கற்பனைகளை என் இருதயத்தில் எழுதி. Hab_2:2, Deu_6:4-9, Psa_37:31, Pro_3:1-9, Rom_2:14-15, Rom_2:27 

6 குறித்த காலத்திற்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டி ருக்கிறது:- கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் தொடர்புடைய கடைசி காலத்திற்குத் தரிசனம் வைக்கப்பட்டிருக்கிறது. Dan_7:21, Dan_8:17, Dan_12:9, Rev_1:3, Rev_10:6, Rev_11:18, Job_24:1, Mat_16:3, Luk_12:56, Ecc_8:5-6 

7 முடிவிலே அது விளங்கும் அது பொய் சொல்லாது:- தீர்க்கத்தரிசன நிறைவேறுதல்களில் அது விளங்கும். 1Co_3:13, 2Co_11:15, Mat_24:13 

8 அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு:- அது நிச்சயமாகவே வரும் அது தாமதிப்பதில்லை. Pro_23:18, Gen_49:18, Isa_40:18, Isa_49:18, Isa_49:23, Isa_64:4, Psa_42:11, Psa_43:5 

3 விசுவாசத்தினால் வருகிற தேவ நீதியின் கிரியைகள் / இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் கிரியைகள் 

1 இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் ஆரம்பம் :- அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் கிறிஸ்து இயேசுவின் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு. 

Joh_1:12, Gal_3:26, Rom_4:1-10, Joh_9:31, Joh_10:1-13, Rom_3:24-28,Tit_3:5, Eph_5:26, Eph_2:8-9, Gal_3:2-7, Gal_5:4-6, Rom_11:6 

2 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தால் நீதிமான் ஆவியின் கிரியைகளில் பிழைப்பான் :- 

கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தினால் மாம்சத்தின் கிரியைகளை அழித்தால் விசுவாசத்தில் ஆவியின் கிரியைகளில் பிழைப்பான். Rom_1:17, Rom_8:1-4, Rom_8:5-11, Heb_10:36-39 

3 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் ஆவியில் பின்வாங்கி போகுதல் :- 

கிறிஸ்து இயேசுவின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு, மாம்ச இச்சையின் கிரியைகளை ஆவியில் ஜெயங்கொள்ள முடியாதவர்கள், மாம்ச இச்சைக்கு மீண்டும் அடிமைப்பட்டவர்கள். 

Rom_8:5-6, Rom_8:13, Pro_14:14, Luk_8:13, 1Ti_6:9-12, Joh_6:51-66 

4 இயேசு கிறிஸ்துவின் மூலம் பரிசுத்த ஆவியின் கிரியைகளின் வகைகள்:- தேவன் தமது சித்தப்படி ஊழியர் அழைப்பைத் தீர்மானிக்கிறார். 

Rom_9:2, Rom_12:2-6, 1Co_12:12 1Co_12:13-27, 1Co_15:38, 1Ti_2:20-21, Eph_4:1-13, Eph_4:13-25, Eph_2:17-22, Col_2:18-22, Phi_2:13, Act_9:6, 1Pe_4:10 

5 ஊழியர் அழைப்பின் அளவுப் பிரமாணம் 

2Co_10:12-18, Rom_12:2-6, Eph_4:7, Eph_4:13, Eph_4:16, 

6 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தில் எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணுதல்:- 

Hab_2:4-6,Eze_36:5, Mal_3:13-18, Mal_4:1-6, 2Ti_2:9, Isa_65:5, Isa_66:17, Psa_83:12, Deu_19:14, Deu_27:17, Amo_6:6-7, Amo_6:13, Hos_8:4, Luk_14:7-11 

7 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தினால் ஆவியின் கிரியைகள் இல்லாதவர்கள்:- 

கர்த்தராகிய இயேசுவை அறிக்கை செய்து விசுவாசத்தை ஏற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்துவின் ஆவியின் கிரியைகள் இல்லாதபடியால் ஆவியில் செத்தவர்கள். 

Jam_2:14-16, Jam_3:17-18, Mar_16:16, Joh_3:18, Joh_3:36, Joh_6:64, Jud_1:5, Tit_3:8, 1Jo_2:3-6, 1Jo_5:10, Rev_20:12 

8-0 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு 

இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு கிருபையினால் வெளிப்படாமல் கிரியைகளின் மூலம் வெளிப் படுத்தப்படுகிறது. 

Heb_12:2, Exo_19:5, 2Th_2:3-8, 2Ti_2:12, Rev_1:8, Rev_21:6, Rev_22:13 

8-1 கீழே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களால் இயேசு கிறிஸ்துவின் விசுவாச துரோகிகளின் மேல் தேவன் நியாயத்தீர்ப்பை அனுப்புகிறார். 

Zec_11:5, Zec_11:8-10,2Ti_2:12, Mal_2:1-10, Pro_2:16-17, 

8-2 கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை தங்கள் வாழ்க்கையின் முடிவு வரை காத்திருந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளாமல் பாதியிலே உடன்படிக்கையை முறித்தபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு. 

Mat_10:22 Mat_24:13, Mar_13:13, Rev_2:26, 

8-3 சத்தியத்தின் மேல் உள்ள அன்பை அங்கீகரித்து தங்களுடைய விசுவாச உடன்படிக்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் காத்துக்கொள்ளாமல் போனபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு . 2Th_2:9-10, Dan_8:11-12 

8-4 அக்கிரமத்தின் மிகுதியினால் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகருடைய அன்பு தணிந்து விசுவாசத்தை இழந்து போனபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு Mat_24:12 

8-5 இயேசு கிறிஸ்துவின் மூலம் விசுவாச உடன்படிக்கை செய்த நாளில் மரணமடைந்த கேட்டின் மகனாகிய பாவ மனிதன்; மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு பாவ கிரியைகளின் மூலம் வெளிப்படும்போது அவனுடைய விசுவாச உடன்படிக்கை அவனால் முறிக்கப்படுகிறது. Rom_6:2-11, Rom_8:9-14, Col_2:11-12, 2Th_2:3, Eph_4:22-24 

8-6 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை நிலை நிறுத்துகிற பரிசுத்த ஆவி தேவனால் நீக்கப்படும்போது; தேவன் அந்த ஜனங்களுடன் செய்த உடன்படிக்கையை முறித்துப் போடுகிறார். Zec_11:5, Zec_11:8-10, 2Ti_2:12 

8-7 தேவனுடைய வசனத்தின் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு இரட்சிப்படைய விரும்பாதபடியால் பொய்யை விசுவாசிக்கும்படி பரிசுத்த ஆவிக்கு பதிலாக வஞ்சக ஆவியை தேவன் அவர்களுக்குள்ளே நியாயத்தீர்ப்பாக அனுப்புகிறார். 2Th_2:11-12, 1Sa_16:14, 1Sa_16:16, 1Sa_16:23 

8-8 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை முறித்த விசுவாச துரோகிகள், கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர்கள், அந்திக்கிறிஸ்துக்கள் ஆகியவர்களிடம் வெளிப்படுகிற வஞ்சிக்கிற ஆவிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள். 

உங்களது ஆவிக்குரிய மனிதன் உங்கள் மூலம் வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையாயிருங்கள் Psa_49:20 , Pro_19:2-3, Hos_4:6, Isa_5:13, Isa_55:1-2, 1Co_3:18, Gal_6:3-4, Col_2:4, Col_2:18-19, 1Th_4:4-8, Heb_3:12-14, Eph_4:14-16, Pro_23:29-33, Eze_33:13 

4 கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாயும், இருதயமும் சமீபமாயிருக்கிறது. Rom_10:6-11, Deu_30:11-14, Job_28:12-14, Job_28:20-22, Gen_1:1-2, 1Co_13:1-2 

4-1 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது சரீரமும், ஆவியும் உயிர்ப்பிக்கபடுகிறது. Joh_3:3-8; Joh_12:24; Eze_14:1-8, Rom_8:10, 1Pe_3:17-18, 1Pe_2:20-21, 1Co_15:35-38 

4-2 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது தேவனுடைய வார்த்தைகளின் சரீரமும், ஆவியும், தேவனுடைய சித்தத்திற்கேற்றபடி உள்ள மேனியுடன் உருமாற்றம் அடைகிறது. Job_26:1-5, Job_14:4, Rom_4:17, Heb_11:3, 1Co_15:39-46, 1Co_2:11-16, 1Co_2:6-10 

4-3 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது உருமாற்றம் அடைந்து, உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியுடன் தேவ நீதியின் வார்த்தைகள் வெளிப்படுகிறது. Mal_2:1-9, Gen_6:8-9, Jer_23:21-22, Jdg_5:9-11, Isa_41:21-24, Pro_3:9-10 , Mal_3:7-12 

4-4 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது உருமாற்றம் அடைந்து, உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியுடன் ஆரோக்கியமான உபதேசங்கள் வெளிப்படுகிறது. Tit_1:9, 1Ti_1:7-11, 1Ti_6:3-5, 2Ti_2:15-19, 2Ti_1:13, 2Ti_4:3, Tit_1:13-16, Tit_2:1-2, Heb_5:12-14 

4-5 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது தேவ நீதியின் பிரமாணத்தினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. . Deu_29:1, Deu_5:1-4, Rom_9:4, Rom_3:1-2, Lev_18:1-5, Eze_18:24, Eze_20:11, Eze_20:13, Eze_20:21, Psa_19:1-6, Psa_19:7-14, Psa_119:1-8 

4-6 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியுடன் கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்கள் வெளிப்படுகிறது. Heb_6:1-2, Heb_5:12-14, Isa_4:1-6, Isa_2:1-6, Isa_3:12-15, Isa_5:13-14 

4-7 பழைய ஏற்பாட்டில் யேகோவா என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள்:- 

1. புத்திர சுவீகாரம் 2. மகிமை 3. உடன்படிக்கைகள் 4.நியாயப்பிரமாணம் 5. தேவாரதனை 6. வாக்குத்தத்தங்கள் 

7. தேவனுடைய வாக்கியங்கள் 8. தேவனுடைய வாக்கியங்களின் ஊழியத்தில் பங்கு பெறுதல் Rom_9:4, Rom_3:1-2 

4-8 புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள்:- 

1. செத்த கிரியைகளிலிருந்து நீங்கலாகும் மனந்திரும்புதல் 

2. தேவன் பேரில் வைக்கும் விசுவாசம் 

3. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம் 

4. கைகளை வைக்குதல் 

5. மரித்தோரின் உயிர்த்தெழுதல் 

6. நித்திய நியாயத்தீர்ப்பு 

7. நீதியின் வசனம் / பிரமாணம் 

8. நீதியின் வசனத்தின் ஊழியத்தில் பங்கு பெறுதல் 

Heb_5:12-14, Heb_6:1-2 

5-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட நியாயப்பிரமாணமும், தீர்க்க தரிசனங்களும் தங்களுடைய இருதயத்திற்கும் வாய்க்கும் சமீபமாயிருக்கும்போது வெளிப்படுகிற மூன்று காலங்களின் தொடர்புடைய தேவ நீதியின் வசனங்களினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Rom_3:20-22, Mat_5:17, Mat_7:12, Mat_22:36-40, Luk_16:16-17, Mat_11:13-15, Luk_1:17, Mal_4:6, Isa_3:4-5, Hos_6:1-3, Luk_12:2-3, Luk_8:17-18, Luk_9:16-17 

6-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட உவமைகளும் சுரமண்டலத்தின் ஏழு சுரங்களைப் போல வெளிப்படுகிற (1. தேவனுடைய வேதம். 2. தேவனுடைய வழிகள் 3. நீதி நியாயங்கள். 4. சாட்சிகள். 5. கட்டளைகள் 6. கற்பனைகள் 7. பிரமாணங்கள்) ஆகிய ஏழு தேவனுடைய வார்த்தைகளையும் தங்களுடைய வாய்க்கும் இருதயத்திற்கும் சமீபமாயிருக்கும் போது வெளிப்படுகிற பரலோக இராஜ்ஜியத்தின் தொடர்புடைய தேவ நீதியின் வசனங்களினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Psa_92:2-3, Psa_71:22, Job_30:31, Rev_5:8-10, Rev_15:2-4, Psa_49:4, Psa_78:2, Eze_20:49, Eze_17:2, Mar_4:10-12, Luk_8:10, Mat_13:10-15, Mat_13:34-35, Isa_6:8-10 

7-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட வேதமும் கிறிஸ்துவின் சாட்சி ஆகமமும் தங்களுடைய வாய்க்கும் இருதயத்திற்கும் சமீபமாயிருக்கும்போது வெளிப்படுகிற, நிகழ்காலத்தின் தொடர்புடைய தேவ நீதியின் புதிய வசனங்களினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Isa_8:16-20, 2Pe_1:16-21, Isa_50:10-11, Isa_41:21-24, Joh_10:35, Rev_1:2, Rev_1:9, Rev_6:9, Rev_12:11, Rev_12:17, Rev_14:12, Rev_19:9-10 , Rev_20:4 

8-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட முத்திரை அடையாளங்களின் மூலம் மனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியில் அiடாயளமாக கொடுக்கப்பட்ட தேவ வார்த்தைகளை, தங்களுடைய வாய்க்கும் இருதயத்திற்கும் சமீபமாக வைத்திருக்கிறபோது வெளிப்படுகிற தேவ நீதியின் வசனங்களினால்; தேவனுடைய வீட்டிலே நடைபெறும் நியாயத்தீர்ப்பிலிருந்து தங்களுடைய ஆத்துமா விடுதலையாக்கப்பட்டு தேவ நீதியினால் பிழைக்கிறது. 

தேவனுடைய வீட்டிலே தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பு / இருதயமாகிய தேவனுடைய வீட்டிலே, தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பு துவங்குகிறது. . 1Co_3:16-17, 2Co_6:16, 1Pe_4:17-18, Jer_25:29, Isa_66:6, Luk_19:41-46 , Jer_7:11-12, Amo_9:1 

தேவனுடைய வீட்டிலே நடைபெறும் தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆண்பிள்ளைகள் தங்களுடைய நெற்றியில் பெற்றுக்கொள்ளும் தேவ முத்திரையின் ஏழு அடையாளங்கள் 

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளினால் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொண்ட ஜென்ம பாவ மனிதனுடைய நெற்றியில் / அறிவில் தேவனுடைய ஏழு முத்திரையின் அடையாளங் களை பெற்றுக் கொள்ளாமலிருக்கும்போது; அவன் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட தேவனுடைய இரட்சிப்பு அவனுக்குள் மரணமடைகிறது. இதற்கு இணையாக அவனுடைய ஆவிக்குரிய மனிதனும் அவனுக்குள் மரணமடைகிறான் இப்பொழுது இரட்சிப்பின் சந்தோஷம் இல்லாமல் அந்தகாரத்தின் வல்லமைக்கு அடிமைப்படுகிறான். 

தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஏற்பாட்டில் 1,44,000 பரிசுத்தவான்களை பிரித்தெடுப்பதற்காக தேவ வார்த்தை என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள் / தேவனுடைய இராஜ்ஜியத்தின் மூல உபதேசங்கள்:- 



1. ஜாதிகளின் எந்த ஒரு முறையையும் பின்பற்றக் கூடாது. 
Lev_18:1-5, Eze_11:12-13 

2. கர்த்தருடைய பஸ்காவை புசிக்க வேண்டும். Gen_17:9-14, Exo_12:48. 

3. ஓய்வு நாள் பிரமாணத்தை பின்பற்ற வேண்டும். 
Exo_16:4-5, Exo_16:11-19, Exo_20:8-11 

4. மனச்சாட்சிப் பிரமாணத்தை பின்பற்ற வேண்டும். 
Rom_2:23-29, 1Jo_3:20-33 

5. இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்ற வேண்டும். 
Joh_3:31-36, Rev_6:9 

6. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் 
Eph_1:13, Eph_4:30 

7. பலிபீடத்தின் சட்ட திட்ட பிரமாணங்களை பின்பற்ற வேண்டும். 
Exo_29:37, Exo_30:28-29 

8. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து ஊழியத்தில் பங்குபெற வேண்டும். 
Isa_65:8-9, Isa_65:12-16, Isa_33:15-17 

9-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாயும் இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள்; தேவனைத் தேடாமல் இருந்தாலும் தேவன் அவர்களுக்கு வெளிப்படுகிறார், இவர்கள் தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் வரிசையில், தேவனிடத்தில் வந்து சேர்ந்து, தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை புசித்து, தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற தேவ சித்தத்தை நிறை வேற்றுகிறபடியால், தங்களுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள். Isa_65:1,Rom_10:20, Rom_4:5-8, Psa_32:1-2, Rom_8:27-33, Rom_9:10-16, Rom_9:30-33, Isa_65:8-9, Rom_11:1-5, Isa_65:13-15, Mal_3:13-18 ,Joh_3:27, Jer_10:23, Pro 16:9, Amo_4:13, Isa_40:14, Joh_6:39-40, Joh_6:44-45, Joh_6:53-57, Joh_6:65 

10-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளுக்கு தங்களுடைய வாயும் இருதயமும் சமீபமாக இருந்த போதிலும், தங்களுடைய இருதயம் தேவனுடைய ஆலோசனைகளை உணர்ந்து கொள்ளாமலும், அவைகளை தங்களுடைய வாயினால் தெளிவாக பேச முடியாமலும் இருப்பதற்கு தங்களுடைய ஆத்துமாவில் தடையாக வருகிற சில விசேஷமான காரணங்கள். 

தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டவர்கள் தெளிவாக பேசுவதற்கு தடையாக வருகிற சில விசேஷமான காரணங்கள் 

1. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் குருட்டுத்தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும்போது தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Mat_9:27-28 , Mat_11:5, Mat_12:22 , Mat_15:14 , Mat_15:30-31 , Mat_20:30, Mat_21:14, Mat_23:16-17 , Mat_23:19, Mat_23:24, Mat_23:26, Mar_8:22-23 , Mar_10:46, Mar_10:49, Mar_10:51, Luk_4:18, Luk_6:39, Rom_2:19, 2Pe_1:9, Rev_3:17 

2. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் செவிட்டுத் தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும்போது தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Mat_9:32-33 , Mat_12:22 , Mat_15:30-31, Luk_11:14Mat_11:5, Mar_7:32, Mar_7:37, Mar_9:25, Luk_7:22 

3. ஊழியஅழைப்பின் அளவுப் பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு தேவதரிசனங்கள் வெளிப்படுத்தப் படும்போது அவைகளை விசுவாசியாமற் போனால், தரிசனம் நிறை வேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவ தரிசனத்தை எழுதுவதினால் நாவின் கட்டு அவிழ்க்கப்பட்டு தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Luk_1:11-20, Luk_1:57-64, Luk_1:65-70, Luk_1:71-79 

4. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக்கொண்டவர்கள் தேவ அறிவை அடைந்த பிறகு தங்கள் இருதயத்தில் அர்த்தமில்லாத வார்த்தைகளை பிரித்தெடுப்பதால் தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Heb_5:12-14, Pro_25:4, Pro_10:20, Jer_15:16-21 

5. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவ தரிசனத்தை அடைந்த பிறகு, நான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன் என்று தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தும்போது அவன் உதடுகள் அக்கினியால் பரிசுத்தமாக்கப் பட்டு தேவ வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Isa_6:5-10 

6. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் தேவ சித்தத்தை அறிந்த பிறகு, நான் சிறுபிள்ளை எனக்கு பேசத் தெரியாது என்று தன்னை; தேவ சமுகத்தில் தாழ்த்தும்போது தேவனே அவர்கள் உதடுகளை தொடுவதினால் அவர்கள் தெளிவாக பேச முடியும். Jer_1:4-9 

7. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவனுடைய வார்த்தைகளை புசித்து, கலக வீட்டாருக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பை கூறின பின்பு அவைகள் நிறைவேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவனுடைய நியாயத்தீப்பை தெளிவாக பேச முடியும். Eze_3:24-27, Eze_4:25-27 

8. தேவனுடைய ஞானத்தை பெற்றுக் கொள்ளுவதற்காக ஆவியில் எளிமையுள்ளவனாக இருந்து தன்னை தேவனுக்கு முன்பாக தாழ்த்துகிறபோது தேவனுடைய சத்தியாமான வார்த்தை களின் ஞானத்தை தெளிவாக பேச முடியும். Dan_10:14-19 

3-4 இரண்டு சாட்சிகளின் ஊழிய அழைப்பை அறிவிக்க தேவதூதன் அனுப்பப்படுகிறார்:- 

இரண்டு சாட்சிகள் உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவர்கள் எலியாவின் ஆவியும் பலமும் உடையவர்களாக கிறிஸ்துவின் இரண்டாம்வருகைக்கு முன்னே நடப்பார்கள் என்கிற நற்செய்தியை அறிவிக்க தேவதூதன் அனுப்பப்படுகிறார்:- 

Rev 11:4 பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே. 

Rev 11:5 ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும். 

Rev 11:6 அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு. 

Rev 11:7 அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். 

Rev 11:8 அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். 

Rev 11:9 ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள்வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். 

Rev 11:10 அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். 

Rev 11:11 மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று. 

Rev 11:12 இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள். 

Rev 11:13 அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். 

3-5 உபத்திரவகாலத்தில்/ நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளையில் நித்திய சுவிசேஷத்தின் நற்செய்தியை அறிவிக்க தேவதூதன் அனுப்பப்படுகிறார்:- 

Rev 14:6 பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, 

Rev 14:7 மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான். 

1Pe 4:13 கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். 

1Pe 4:14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். 

1Pe 4:15 ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. 

1Pe 4:16 ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். 

1Pe 4:17 நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? 

1Pe 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? 

1Pe 4:19 ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 

1Pe 1:4 அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். 

1Pe 1:5 கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 

1Pe 1:6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். 

1Pe 1:7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். 

1Pe 1:8 அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, 

1Pe 1:9 உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள். 

1Pe 1:10 உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக் குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்; 

1Pe 1:11 தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். 

1Pe 1:12 தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்கத் தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள். 

1Pe 1:13 ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள். 

3-6 உபத்திரவகாலத்தில் தேவனுடைய இரட்சிப்பு ஆவிக்குரிய யூதர்கள் வழியாய் வருகிறது:- 

1 தேவனுடைய வீடாகிய சபையிலே நியாயத்தீர்ப்பு துவங்குகிறது:- 

1Pe 4:17 நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? 

1Pe 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? 

Eze 9:4 கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். 

Jer 25:29 இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

2 தேவனுடைய வீடாகிய சபையிலே அக்கிரமக்காரருக்கு நியாயத்தீர்ப்பு துவங்குகிறது:- 

2Pe 2:6 சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து; 

2Pe 2:7 அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; 

2Pe 2:8 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; 

2Pe 2:9 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். 

3 என் ஜனங்களே, நீங்கள் மகா பாபிலோனாகிய தாறுமாறுகளின் ஆவிகளை விட்டு வெளியே வாருங்கள். 

Rev 18:2 அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று. 

Rev 18:3 அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான். 

Rev 18:4 பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். 

Rev 18:5 அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார். 

4 காட்டொலிவமரமாகிய கிறிஸ்தவர்களை, இஸ்ரவேலர்கள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, சுபாவ ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருக்கிறார்கள் 

Rom 11:13 புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்க வேண்டுமென்று, 

Rom 11:14 என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். 

Rom 11:15 அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போலிருக்குமல்லவோ? 

Rom 11:16 மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும். 

Rom 11:17 சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், 

Rom 11:18 நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள். 

5 சுபாவக்கிளைகளாகிய இஸ்ரவேலரை தேவன் தப்பவிடாதிருக்க, காட்டொலிவமரமாகிய கிறிஸ்தவர்களையும் தேவன் தப்பவிடமாட்டார் 

Rom 11:19 நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே. 

Rom 11:20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு. 

Rom 11:21 சுபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு. 

Rom 11:22 ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய். 

Rom 11:23 அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே. 

Rom 11:24 சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? 

6 புறஜாதிகளுடைய முறைமைகளை பின்பற்றுகிற கிறிஸ்தவர்களுடைய இரட்சிப்பு மரணமடைகிறது 

Eze 11:12 என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார். 

Eze 11:13 நான் இப்படித் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன். 

7 மணவாட்டி சபைக்கு தேவனுடைய சத்தியமான வசனங்களின் விருந்து:- 

Rev 19:7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். 

Rev 19:8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. 

Rev 19:9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். 

Rev 3:20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். 

8 ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள். 

Luk 14:15 அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான். 

Luk 14:16 அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். 

Luk 14:17 விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான். 

Luk 14:18 அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 

Luk 14:19 வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 

Luk 14:20 வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான். 

9 ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் 

Luk 14:21 அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான். 

Luk 14:22 ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான். 

Luk 14:23 அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா; 

Luk 14:24 அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார். 

Isa 65:13 ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள். 

Isa 65:14 இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள். 

Isa 65:15 நான் தெரிந்து கொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார். 

10 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; 

Isa 5:11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ! 

Isa 5:12 அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை. 

Isa 5:13 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டு போகிறார்கள். 

Isa 5:14 அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள் கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள். 

11 பிரசங்க பீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது 

Isa 28:7 ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழி தப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். 

Isa 28:8 போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. 

Isa 28:9 அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே. 

12 ஏழு ஸ்திரீகள் ஒரு பூரண புருஷனாகிய கிறிஸ்துவின் நாமத்தில்: தங்கள் சொந்த வஸ்திரத்தை தரித்துக்கொண்டு விருந்துகொண்டாடுகிறார்கள்; 

Isa 4:1 அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள். 

Isa 4:2 இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும். 

Isa 4:3 அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது, 

Isa 4:4 சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான். 

Isa 4:5 அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும். 

Isa 4:6 பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும். 

3-7 தேவனுடைய இரட்சிப்பு ஆவிக்குரிய யூதர்கள் வழியாக முன்மாரி மழை பின்மாரி மழையின் வல்லமையுடன் வெளிப்படுகிறது:- 

Joh 14:12 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். 

Joh 14:13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். 

Joh 14:14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன். 

Joh 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். 

Joh 14:16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 

Joh 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். 

Joh 14:18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். 

Zec 10:1 பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார். 

Zec 10:2 சுரூபங்கள் அபத்தமானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யைத் தரித்தார்கள்; சொப்பனக்காரர் வீணானதைச் சொல்லி, வியர்த்தமாகத் தேற்றரவுபண்ணினார்கள்; ஆகையால் ஜனங்கள் ஆடுகளைப்போலச் சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள். 

Zec 10:3 மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது; கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார். 

Zec 10:4 அவர்களிலிருந்து கோடிக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற யாவரும் ஏகமாய்ப் புறப்படுவார்கள். 

Zec 10:5 அவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள். 

Zec 10:6 நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல் இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன். 

3-8 தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் சத்திய ஆவியினால் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் மூலம் தேவனுடைய நியாயத்தீர்ப்பை பிரசங்கித்து இரத்த சாட்சியாக மரிப்பார்கள்:- 

Joh 17:6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். 

Joh 17:7 நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். 

Joh 17:8 நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். 

Joh 17:9 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. 

Joh 17:10 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். 

Joh 17:11 நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். 

Joh 17:12 நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. 

Joh 17:13 இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன். 

Joh 17:14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. 

Joh 17:15 நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 

Joh 17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. 

Joh 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். 

Joh 17:18 நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். 

Joh 17:19 அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன். 

Joh 17:20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். 

Joh 17:21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். 

Joh 17:22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். 

Joh 17:23 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 

2Th 2:1 அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், 

2Th 2:2 ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். 

2Th 2:3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 

2Th 2:4 அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 

2Th 2:5 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? 

2Th 2:6 அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. 

2Th 2:7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. 

2Th 2:8 நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். 

2Th 2:9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், 

2Th 2:10 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். 

2Th 2:11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 

2Th 2:12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். 

2Th 2:13 கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 

2Th 2:14 நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார். 

2Th 2:15 ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள். 

2Th 2:16 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், 

2Th 2:17 உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.

Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries