தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 22


தேவ ஆட்டுக்குட்டியானவர் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட சர்வசங்கமாகிய சபை

பொருளடக்கம் 11-0

11-0-0 இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், கர்த்தருடைய பிரமாணங்களையும் பின்பற்றுகிறவர்களூடைய அடையாளங்கள்  மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை போல வருகிற நித்திய ஜீவ வார்த்தைகளின் உபதேசத்தையும் விசுவாசித்து தேவனுடைய சமூகத்தில் வருகிற இடத்தில் நான்காவது  சிதறடிக்கப்படுகிறது:- 

11-1-1 தேவனாகிய கர்த்தர், ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவினிடத்தில் ஒரு அடையாளத்தை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னபோது; யூதாவின் ராஜாவாகிய ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான்,.அப்பொழுது  ஆண்டவர் தாமே தேவன் தங்களோடே இருக்கிறார். என்பதற்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார்:-  

யூதாவின்  கோத்திரத்தார் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருந்து, கர்த்தருக்கு பயந்து, தங்களை ஆளுகை செய்வதற்காக : நியமித்துக்கொண்ட  தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை போல வருகிற நித்திய ஜீவ வார்த்தைகளின் உபதேசத்தையும் விசுவாசித்து தேவனுடைய சமூகத்தில் வருகிறபோது, தேவனுடைய சாயலாகவும் ரூபத்தின்படியேயும் ஆவி,ஆத்துமாவில் மறுரூபமடைகிறார்கள்  

நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன் என்கிறவர்கள்,  மேலான எருசலேமாகிய  சுயாதீனமுள்ள கர்த்தரின் வசனங்களின் மூலம் ஆவியின்படி பிறந்தவர்கள், வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரவாளியாயிருப்பதற்கு: தேவனுடைய சித்தத்தினால் பிறந்தவர்கள் 

மேலான எருசலேமாகிய  சுயாதீனமுள்ள கர்த்தரின் வசனங்களின் மூலம் ஆவியின்படி பிறந்தவர்கள்: தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களாகிய திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருந்து, பூரணமாக குடிக்கிறபோது;  வெண்ணெயையும் தேனையும்  சாப்பிடுகிறபடியால்  தீமையை வெறுத்து, நன்மையைத் தெரிந்துகொள்ளுகிற  பகுத்தறிவில் பூரண வயதை அடைகிறார்கள்.  

நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கு  பலமான ஆகாரமாகிய  நீதியின் வசனத்தை  நிதானமாய்ப் பகுத்துப் அறிந்து உணர்ந்து கொள்ளுவதில்  பழக்கமுல்லவர்களாக /தேறினவர்களாக மாறுகிறார்கள். 

பலமான ஆகாரமாகிய  நீதியின் வசனத்தை  நிதானமாய்ப் பகுத்துப் அறிந்து உணர்ந்து கொள்ளுவதில்  பழக்கமுல்லவர்களாக /தேறினவர்களாக மாறினவர்கள், தேவனுடைய வார்த்தைகளைக் கண்டு,கேட்டு, உணர்ந்துகொண்டபடியால்; பரலோக இராஜ்யத்தினுடைய உவமைகளில் உள்ள   இரகசியங்களின் நன்மை தீமைகளை பகுத்தறிவதின் மூலம் ஆவி,ஆத்துமாவில் மறுரூபமடைகிறார்கள். 

இவர்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, தங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடைந்து: தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த நீதியின் கிரியைகளை நிறைவேற்றுகிறதின் மூலம்,  சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரத்தை  தரித்துக்கொண்டு, தங்களை மணவாட்டியைபோல  ஆயத்தம் பண்ணுகிறார்கள்,  

மற்றும் தங்கள் விளக்குகள் / நீதியின் கிரியைகள்  எப்பொழுதும் எரிந்து கொண்டிருப்பதற்கு தினந்தோறும் எண்ணை ஊற்றுகிறதுபோல, கடிந்து கொள்ளுதலின் உபதேசத்தை தினந்தோறும் ஏற்றுக்கொண்டு தங்களை சீர்திருந்தி மனந்திரும்புறவர்கள்; தங்கள் எஜமானாகிய கிறிஸ்து   கலியாணத்திலிருந்து வந்து தங்கள் இருதய   வாசற்படியிலே நின்று தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிறார்கள்  

தங்கள் எஜமானாகிய கிறிஸ்து   கலியாணத்திலிருந்து வந்து அவனுக்கு மட்டும் தெரியும்படி அவனுடைய  இருதய   வாசற்படியிலே நின்று இரகசியமாக தட்டும்போது, அவன் எஜமானாகிய கிறிஸ்துவின்    சத்தத்தைக் கேட்டு, தன்னுடைய இருதயதின் கதவைத் திறந்தால், அவனிடத்தில் எஜமானாகிய கிறிஸ்து இருதயத்தில்  பிரவேசித்து, தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை  அவரவர்,புசிக்க ஏற்றபடி/ அவரவர் உட்கொள்ளும் அளவுக்கேற்றபடி/தன்மைக்கேற்றபடி போஜனம்பண்ணும்படி பகிர்ந்தளிக்கிறார் .

இயேசு கிறிஸ்துவின்   நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகர் இந்த விருந்தை  புசிக்க அபாத்திராக போனார்கள். ஆனால் தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களிள் ஒரு சிலர், இயேசு கிறிஸ்து இராஜாவாக முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாவில்/ ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண விருந்தில் கலந்து கொண்டு; இந்த தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை விருந்தாக புசிக்கிறார்கள்.

அதன் சுவைகளை உணர்ந்து கொண்டவர்கள்,ஆவி,ஆத்துமாவில், மறுரூபமடைந்து: தேவனுக்கு பிரியமான போஜனமாகிய  தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதின் மூலம் கிறிஸ்துவின் இராஜ்யத்தில் ஆட்சி அதிகாரங்களை பிரதிபலனாக பெற்றுக்கொள்ளுகிறார்கள். 

Rom_9:6-9; Gen_13:15-16,   Gen_15:4-6,Heb_11:11-12;Joh_1:12-14,Gal_4:20-25, Gal_4:26-31;Gen_21:8-12, Isa_28:8-12;Isa_7:21-25;Isa_7:15; 1Pe_2:1-5;Heb_6:1-2;Heb_5:12-14;2Ti_2:15-19; Rom_10:6-12;1Co_3:1-5,  1Co_2:4-10; 1Co_2:11-16,  Rom_12:1-3, 1Co_2:6-7, 1Co_14:20 Phi_3:14-15, Col_1:28, Col_4:12,   Jam_1:25, 1Ti_1:11, 2Ti_1:13, 2Ti_4:3-4, Tit_1:9, Tit_1:13-14, Tit_2:1-2,1Ti_6:3-5;Rev_19:7-10,Mat_22:1-5; Mat_22:6-10, Mat_22:11-14, Luk_12:34-40, Luk_14:7-11,Mat_25:1-10; Rev_3:14-18, Rev_3:19-22,Isa_65:13-15, Isa_65:8-9,

 

11-1-2 கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள் மூலம் களங்கமில்லாத ஞானப்பாலை பூரணமாக குடித்தவர்களுக்கு  பலமான ஆகாரமாகிய நீதியின் வசனங்களுக்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணம்:-

ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி,    மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் வளர்ச்சியடைய, கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள்/ களங்கமில்லாத ஞானப்பாலை பூரணமாக குடித்தவர்கள்; மீண்டும் ஆவியினால் மறுபடியும் பிறக்கிறபோது, தங்களுடைய ஆவிக்குரிய மனிதன் வளர்ச்சியடைய  பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோல்கள் மூலம் பரலோக இராஜ்ஜியத்தை திறக்கிறவர்கள் பலமான ஆகாரமாகிய நீதியின் வசனங்களை புசிக்கிறார்கள். 

பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை  காண்பதற்கு முதலாவது திறவுகோல்;  ஒருவன் ஜலத்தினால்/ தேவனுடைய வார்த்தைகளினால்  மறுபடியும் பிறப்பது

ஜலமாகிய தேவனுடைய வார்த்தைகளினால்  ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்/ தேவனுடைய ஆலோசனைகளை தங்கள் ஆத்துமாவில் ஏற்றுக் கொண்டு தங்கள் மனிதனுடைய ஆலோசனைகளை  மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து மனந்திரும்புகிறவர்களுக்கு பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை  காண்பதற்கு ஆவிக்குரிய கண் பார்வை கிடைக்கிறது; 

தேவனுடைய இராஜ்ஜியம் இதோ இங்கே இருக்கிறது, அதோ அங்கே இருக்கிறது என்று , யாரையும் பின்பற்ற வேண்டாம் அல்லது எந்த இடத்திற்கும் ஓட வேண்டாம், நீங்கள் இருக்கிற இடத்திலிருந்தே தேவனுடைய இராஜ்ஜியத்தை உங்கள் ஆவிக்குரிய கண்களால் பார்க்க முடியும். Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12, Mar_9:1, Luk_9:24-27 ,Joh_3:3, Luk_17:20-23,Tit_3:5, 1Pe_1:23,1Pe_3:21,

11-1-3 ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி     மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் வளர்ச்சியடைய கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள்/ களங்கமில்லாத ஞானப்பால்:-. 1Pe_2:2-3,  Heb_6:1-2, Heb_5:12-14

1-0 செத்த கிரியைகளிலிருந்து நீங்கலாகும் மனந்திரும்புதல் /

ஆவி, ஆத்துமாவில் மரணத்தை உண்டாக்கும் கிரியைகளிலிருந்து மனந்திரும்புதல்

2-0 தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்/ இயேசு, கிறிஸ்துவினுடைய விசுவாசத்தின் சுவிசேஷம்

3-0 ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம்/ ஞானஸ்தானங்களுடைய உபதேசம்

4-0 கைகளை வைக்குதல்/ ஊழியர் அழைப்பின்  அளவுப் பிரமாணம்

5-0 மரித்தோரின் உயிர்த்தெழுதல் தெழுதல்/ இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை 

6-0 தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு

7-0 தேவனுடைய  நீதியின் வார்த்தைகள்/ தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்  

8-0 தேவனுடைய  நீதியின் வார்த்தைகளின் ஊழியத்தில் பங்கு பெறுதல் 

11-1-4 பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை  கண்டவர்கள் பரலோக இராஜ்ஜியத்திற்குள்ளே பிரவேசித்து பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை புசிப்பதற்கு இரண்டாவது திறவுகோல்; ஒருவன் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறப்பது :-

ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி     மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களினால் தீமையை வெறுத்து, நன்மையை அறிந்து கொள்ளும் அறிவில் பூரண வளர்ச்சியடைந்து  தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசித்து பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை புசித்து   பிழைக்கிறது. 

ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி     மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களினால் தீமையை வெறுத்து, நன்மையை அறிந்து கொள்ளும் அறிவில் பூரண வளர்ச்சியடைகிறது. 

இந்த நிலையில் ஒருவன் தன்னுடைய மனிதனின்  ஆவியை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து பரிசுத்த ஆவியுடன் உடன்படிக்கை செய்து பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்போது; அவன் பரிசுத்த ஆவியினால்  மறுபடியும் பிறந்து தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறான், அல்லது அவனுக்குள்ளே தேவனுடைய இராஜ்ஜியம் இருக்கிறது.  Joh_3:3-5, Heb_5:12-14, Mat_16:24-28, Joh_3:5, Mat_12:28, Luk_11:20, Jam_1:17-18, Tit_3:5

தேவனுடைய  வார்த்தைகளை பரிசுத்த ஆவியினால் சித்தித்து, தியானிக்கும்போது; தங்களுடைய ஆவி, ஆத்துமா தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசித்து பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை புசித்து  பிழைக்கிறது. கிறிஸ்துவை பற்றின மூல உபதேச வசனங்களின் அறிவை ஒருவர் தொடர்ந்த பயிற்சியினால் அடைந்து, நீதியின் வசனத்திற்கு வந்துசேரும்போது கிறிஸ்துவின் பூரண அறிவை பெற்றுக்கொள்ள முடியும்.

11-1-5 கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள் மூலம் களங்கமில்லாத ஞானப்பாலை பூரணமாக குடித்தவர்கள்;  மீண்டும் ஆவியினால் மறுபடியும் பிறக்கிறபோது, தங்களுடைய ஆவிக்குரிய மனிதன் கிறிஸ்துவின் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து, வளர்ச்சியடைய;  கிறிஸ்துவின் பலமான ஆகாரமான  தேவ நீதியின் வசனத்தை புசித்து முன்னேறி செல்லுவதற்கு  தேவனால் மூன்று படிகளின் அடையாளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது:-

இந்த மூன்று படிகளின் அடையாளங்களிள் கொடுக்கப்பட்டுள்ள தீமையை வெறுத்து, நன்மையை அறிந்து உணர்ந்து கொண்டு, தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிய முடியாமல் இடறி விழுகிறவர்கள் எல்லாரையும்; வேதம் ஏகமாய் பொய்யின் கீழ் அடைக்கலமாக்கி மாயையின் மறைவிடத்தின் கீழ், காவலில் வைத்திருக்கிறது. . Rom_8:19-23, 2Co_5:1-10, Isa_28:14-15, Isa_5:18-25, Isa_8:5-15,  Isa_7:1-9, Isa_30:27-28,

1-0. இம்மானுவேல் / தேவன் எங்களுடன் இருக்கிறார்

2-0. எகிப்திலிருந்து ஈக்களும் அசீரியாவிலிருந்து தேனீக்களும்

3-0. மெதுவாக ஓடுகிற சீலோவாவின் தண்ணீரும் வேகமாக ஓடுகிற ஆற்று நீரைப்போல  அசிரீயாவின் தண்ணீரும்.

இயேசு கிறிஸ்துவின் மூல உபதேசமாகிய களங்கமில்லாத ஞானப்பாலை பூரணமாக குடிப்பதின் மூலம் தீமையை வெறுத்து, நன்மையை தெரிந்து கொள்ளும் பகுத்தறிவை ஒருவன் பெற்றுக் கொள்கிறான். இவைகளை தொடர்ந்த பயிற்சியின் மூலம் தன்னுடைய அன்றாட வாழ்க்கையின் காரண காரியங்களுக்கேற்றபடி நடை முறைப்படுத்தும்போது; பகுத்தறிவின் பூரண வயதை பெற்றுக் கொண்டு இயேசு கிறிஸ்துவின் பலமான ஆகாரமாகிய நீதியின் வசனத்தை புசிக்க முன்னேறுகிறான்.

1-0 இம்மானுவேல்  - தேவன் எங்களுடன் இருக்கிறார். Amo_5:14, Isa_7:10-16, Isa_7:21-22, Isa_8:8, Hag_1:13, Hag_2:4-5, Joe_2:27, Zec_2:10-11, Zec_8:23, Zec_10:3-5, Isa_45:14, Zep_3:14-17, Rev_21:3,

1-1 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல நன்மையைத் தேடுங்கள் அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார் Amo_5:14

1-2 பாலகன் தீமையை வெறுத்து நன்மையை தெரிந்து கொள்ள அறியும் நாள் வரைக்கும் வெண்ணையையும் தேனையும் பரிபூரணமாக சாப்பிடுவான்:-

கிறிஸ்துவுக்குள் புதிதாக பிறந்த குழந்தை வளரும்படி தீமையை வெறுத்து நன்மையை தெரிந்து கொள்ள அறியும் நாள் வரைக்கும் களங்கமில்லாத ஞானப்பாலிலிருந்து கிடைக்கும் நித் திய ஜீவ வார்த்தைகளை நல்ல உணவாக பரிபூரணமாக சாப்பிடு வான்.

1-3 ஒரு பசு இரண்டு ஆடுகள் லேவி ஆசாரியத்துவத்தின் முறை :-

ஒருவன் ஒரு இளம் பசுவையும் இரண்டு ஆட்டுக்குட்டி களையும் வளர்த்தால் அவனுக்கு களங்கமில்லாத ஞானப்பால் பரிபூரணமாக கிடைக்கும். «. Isa_7:21-22, Exo_29:1, Rom_12:1-2, Rom_8:3-4,

1-4 ஒருவன் தன்னுடைய சரீரம், ஆவி, ஆத்துமா, இவை களை தேவனுடைய வார்த்தைகளின்படி ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்து வளர்க்கும்போது, அவனுக்கு களங்கமில்லாத ஞானப்பால் தன்னுடைய அறிவு, புத்தி, ஞானம் இவைகளில் நித்திய ஜீவ வார்த் தைகளாக சுரந்து ஆவிக்குரிய நல்ல உணவு பரிபூரணமாக கிடைக் கிறது. . 1Pe_3:18,

1-5 இயேசு கிறிஸ்துவின் மாதிரி வாழ்க்கையை நான் பின்பற்றி என்னுடைய பாவ சரீத்திரத்திலே என் பாவத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கும்போது என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரம், உயிர்ப்பிக்கப்பட்டு களங்கமில்லாத ஞானப்பாலின் அறிவு, புத்தி ஞானம் இவைகளை பூரணமாக குடித்து, தீமையை வெறுத்து நன்மையை தெரிந்துகொள்ளும் பகுத்தறிவில் பூரண வயதை பெற் றுக்கொள்ளுகிறது. Heb_9:8-16, Heb_13:9-15,

1-6 ஒரு பசு, ஏழு ஆடுகள், ஜாதிகளுடைய ஆசாரியத்துவத்தின் பிரதிஷ்டை முறை :-

இயேசு கிறிஸ்து என்னுடைய பாவங்களுக்காக மரித்தார், நான் சபையினுடைய ஏழு உபதேசங்களை விசுவாசித்து அவைகளை ஏற்றுக்கொண்டு என் வாழ்க்கையில் பின்பற்றுகிறேன். 2Ch_13:9, 2Ki_16:9-11, 2Ki_16:15-16, 2Ki_17:27-28, 2Ki_17:32,

2-0 ஈக்களின்  / மாயையின் வெளிப்பாடுகளும் தேனீக் களின் காரண காரியத்திற்கேற்ற கருத்துக் கோட்பாடுகளின் வெளிப் பாடுகளும் 

2-1 எகிப்திலிருந்து ஈக்களைப்போல   / மாயையின் தத்துவ சாஸ்திரங்களிலிருந்து அர்த்தமில்லாத வார்த்தைகள் வெளிப் படுகிறது. அவைகளை ஒன்று திரட்டும்போது நல்ல சுவையான வார்த்தைகளின் கோர்வையான கருத்துக்களாக   மாறுவதில்லை / உருவாக்க முடிவதில்லை. Isa_7:17-19,

2-2 அசீரியாவிலிருந்து தேனீக்களைப்போல காரண காரி யத்திற்கு ஏற்ற அர்த்தமுள்ள சுவையான வார்த்தைகளின் கோட் பாடுகள் வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட தேனீக்களைப்போல பல அர்த்தமுள்ள சுவையான வார்த்தைகளை பல இடங்களிலிருந்து ஒன்று திரட்டும்போது அவைகள் நல்ல சுவையான தேன் கூட்டி லிருந்து ஒழுகும் தெளிந்த தேன் போல சுவையான வார்த்தைகளின் கோர்வையான கருத்துக்களாக இணைக்கப்படுகிறது / உருவாக் கப்படுகிறது.

2-3 தெளிந்த தேன் போன்ற சுவையான அர்த்தமுள்ள வார்த்தைகளை நன்மைகளாக தெரிந்து கொண்டு சுவையில்லாத, அர்த்தமில்லாத வார்த்தைகளை தீமைகளாக வெறுத்து தள்ளிவிட வேண்டும்.

2-4 நல்ல தெளிந்த சுவையான வார்த்தைகளையுடைய நன்மைகளுடன், அர்த்தமில்லாத வார்த்தைகளையுடைய தீமைகளை யும், நம்முடைய அறிவில் கலந்து வைத்திருக்கும்போது நாம் ஏற்கனவே தேனீக்களைப்போல கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருக்கிற தெளிந்த சுவையுள்ள நன்மையான வார்த்தைகளின் முழுக் கட்டமைப்பையும், அர்த்தமில்லாத தீமையான வார்த்தைகளாக மாற்றி வெறுமையாக்கி விழுங்கி விடும் ;

அல்லது மாயா / மாயையின் வெளிப்பாடுகள் நல்ல சுவையான தெளிந்த கருத்துக்களை உட்கொண்டு அவைகளை ஒழுங்கின்னையும் வெறுமையுமாக மாற்றி விடும். உதாரணமாக நம்முடைய நற்கிரியைகளுடன் சிறிதளவு தீமையான கிரியைகள் கலந்திருக்கும்போது அந்த முழு நற்கிரியைகளின் பயனையும் தீமையான செயலாகவே வெளிப்படுத்திக் காட்டுகிறது.

தீமையை வெறுத்து நம்மையை தெரிந்து கொள்ளும்படி கீழ்க்கண்ட தலைப்புகளில் சுவையில்லாத அர்த்தமில்லாத வார்த்தைகளும் சுவையுள்ள அர்த்தமுள்ள வார்த்தைகளும் கலந்து தேவனால் வெளிப்படுத்தப்படுகிறது.

2-5 வனாந்தரங்களின் பள்ளத்தாக்கு :- Isa_7:19

தேவ வார்த்கைளிலிருந்து இதுவரை வெளிப்படாத இரகசியங்கள்.

2-6 கன்மலைகளின் வெடிப்புகள் :- Isa_7:19,

வேத வார்த்தைகளிலிருந்து இயேசு கிறிஸ்துவரைப் பற்றிய புதிய வெளிப் பாடுகள்.

2-7 முட்காடுகள் :- :- Isa_7:19, தேவ வார்த்தைகளிலிருந்து ஜென்ம கரும பாவங்களின் பிரமாணங்கள்         

2-8 மேய்ச்சலுள்ள இடங்கள் :- Isa_7:19  

தேவ வார்த் தைகளிலிருந்து ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்களை மீண்டும் பசுமையாக தோன்றும் படி வெளிப்படுத்தப்பட்ட புதிய வெளிப்பாடுகள்.

3-0  இஸ்ரவேலர் அசட்டை பண்ணுகிற மெதுவாக ஓடுகிற சீலோவாவின் ஊற்றுத்தண்ணீரும், அவர்கள் சந்தோஷித்து களி கூருகிற வல்லமையுள்ள திரளான / வேகமான அசீரியாவின் ஆற்றுத் தண்ணீரும்.

3-1 இஸ்ரவேல் ஜனங்கள் மெதுவாக ஓடுகிற சீலோவாவின் ஊற்றுத் தண்ணீரை அசட்டை பண்ணினார்கள் :-

இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொரு நாளும் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து தேவ வசனத்தை படித்து அவைகளை சிந்தித்து தியானித்து அதன் மூலம் தேவனுடைய மிருதுவான ஆலோசனையை கேட்டு, தங்கள் ஆவிக்குரிய காரியங்களில் ஜீவனோடிருந்து வளர்வதை வெறுத்து அசட்டை பன்னினார்கள். Jos_18:1, Jos_18:8-10, Jos_19:51,  Jos_22:12,  1Sa_1:3,  1Sa_1:24, 1Sa_3:21,    1Ki_2:27,  Psa_78:60, Jer_7:12, Jer_7:14, Jer_26:6, Jer_26:9, Jer_41:5,   Neh_3:15

3-2 இஸ்ரவேல் ஜனங்கள் வல்லமையுள்ள திரளான ஆற்றுத்தண்ணீரைக் குறித்து  சந்தோஷித்து களிகூருகிறார்கள் :-

இஸ்ரவேல் ஜனங்கள் புற ஜாதிகளின் இராஜாக்களுடைய இராஜரீகத்தையும் அதன் சகல ஆடம்பரங்களையும் குறித்து சந்தோஷித்து களிகூருகிறார்கள். எனவே தேவன் அவர்கள் விருப்பத்திற் கேற்றபடி அவர்கள் தீமையை வெறுத்து நன்மையை தெரிந்து கொள்ளும்படி கீழே குறிப்பிட்ட தலைப்புகளில் புற ஜாதிகளின் அரசாட்சி முறைகளும் அதன் பதவிகளின் ஆடம்பரத் தையும் அவர்களின் தரிசன வெளிப்பாடுகளாக தேவன் இஸ்ரவேல் ஜனத்திற்கு கொடுக்கிறார்.

3-3 ஓடைகளெல்லாம் வல்லமையுள்ள ஆற்றுத்தண்ணீர் :- Isa_8:7,

புறஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளும் பலவிதமான தேவ வார்த்தைகளின் தலைப்புகளில் தேவன் வெளிப் படுத்துகிறார்.

3-4 தண்ணீர் செல்லும் எல்லா வாய்க்காலின் கரைகளின் மேலும் ஆற்றுத்தண்ணீர் புரண்டு செல்லுதல்:-

புற ஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளும் ஏற்கனவே பலவிதமான தேவ வார்த்தைகளின் தலைப்புகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் எல்லைகளை கடந்து, தேவன் தங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட வெளிபாடுகள், மற்ற வற்றை விட மிக புதியதும் மேலானதுமானவைகளாக வெளிப் படுத்தப்பட்டிருக்கிறது.

3-5 ஆற்றுத் தண்ணீர் யூதேயா தேசத்திற்குள்ளே புகுந்து  பிரவாகித்து கடந்து செல்லுதல் :- Isa_8:8,

புற ஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளின் வெளிப்பாடுகளும் யூதருடைய முறைகளுடன் கலந்து வெளிப் படும்போது மிக வல்லமையுள்ளதாகவும் மிக திரளான வெளிப் பாடகவும் காணப்படுகிறது.

3-6 வல்லமையுள்ள ஆற்றுத் தண்ணீர் இஸ்ரவேலரின் கழுத்து மட்டும் பொங்கி திரளாக வெளிப்படுதல் :-

யூதருடைய முறைகளுடன் கலந்த புறஜாதிகளின் ஆட்சி முறைகளும் அதன் பதவிகளின் வெளிப்பாடுகளும், தங்களுக்கு போதும் என்கிற அளவிற்கு மிக திரளாகவும் நல்ல திருப்தியாகவும் தங்கள் அறிவுக்கேற்றபடி தேவனால் வெளிப்படுத்தப்படுகிறது. இஸ்ரவேல் தாங்கள் விரும்பினபடியே வல்லமையுள்ள ஆற்றுத்தண்ணீரைப் போல ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையும் குறித்த வெளிப் பாடுகளை மிக திரளாக பெற்றபடியால், தேவன் எங்களோடிருக்கிறார் என்று தாங்கள் சொல்லிக்கொண்டு; மற்றவர்களையும் தங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி கீழ்க்கண்ட வார்த்தைகளை கொண்டு அழைக்கிறார்கள்.

3-7 ஜனங்களே நீங்கள் கூட்டங்கூடுங்கள் முறியடிக் கப்படுவீர்கள் :- .Isa_8:9,

ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையைக் குறித்த வெளிப்பாடுகள் இல்லாமல் நீங்கள் உங்களுடைய விசுவாசத்தின் படி கூடி வரும்போது மற்றவர்கள் உங்களை மேற்கொண்டு சிதறடிப்பார்கள்.

3-8 தூரத்தேசத்தராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள் :- :- Isa_8:9

தேவனை விட்டு பின்வாங்குகிற நீங்கள் எல்லாரும் எங்கள் மூலம் தேவன் வெளிப்படுத்தின ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையையும் ஏற்றுக்கொண்டு அவைகளை சுதந்தரித்து தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

3-9 இடைகட்டிக் கொள்ளுங்கள் முறிந்தோடுவீர்கள்:- Isa_8:9,

உங்களுடைய விசுவாசங்களையும் அதன் வெளிப்பாடு களையும் கொண்டு நீங்கள் உங்களுடைய கட்டமைப்பை பெலப் படுத்திக்கொள்ளுங்கள், ஆனாலும் எங்கள் மூலம் தேவன் வெளிப்படுத்தின ஜாதிகளின் இராஜரீகமும் அதன் மகிமையைக் குறித்த வெளிப்பாட்டிற்கு முன்பாக நீங்கள் எதிர்த்து நிற்க முடியாமல் முறித்தோடுவீர்கள் ஏனென்றால் தேவன் எங்களுடன் இருக்கிறார்.

3-10 ஆலோசனை செய்யுங்கள் அது அபத்தமாகும்:- - Isa_8:10,

தேவன் எங்களுக்கு கொடுத்த இராஜரீகமும் அதன் மகிமையையும் குறித்த வெளிப்பாடுகளுக்கு விரோதமாக நீங்கள் ஆலோசனை செய்யுங்கள் அவைகள் பொய்யாக மாறும்

3-11 வார்த்தையை வசனியுங்கள் அது நிற்காது தேவன் எங்களுடன் இருக்கிறார் :-

தேவன் எங்களுக்கு கொடுத்த இராஜரீகமும் அதன் மகிமையையும் குறித்த வெளிப்பாடுகளுக்கு இணையாகவோ அல்லது எதிராகவோ நீங்கள் வார்த்தையை பேசுங்கள் அது நிலை நிற்காது காரணம் தேவன் எங்களோடிருக்கிறார். நாங்கள் மட்டும் இந்த வெளிப்பாடுகளை பெற்றிருக்கிறோம், ஆகவே எங்களால் மட்டும் இதன் வார்த்தைகளை தெளிவாக பேசமுடியும்.

Isa_7:1-5, Isa_7:6-10,Isa_7:11-15, Isa_7:16-20,Isa_7:21-25, Isa_8:1-5, Isa_8:6-10,Isa_8:11-15, Isa_8:16-20,Isa_8:21-22, Isa_28:1-5,Isa_28:6-10, Isa_28:11-15,Isa_28:16-21, Isa_29:1-5,Isa_29:6-10,Isa_29:11-15,Isa_29:16-20,Isa_29:21-24,Isa_30:1-5,Isa_30:6-10,Isa_30:11-15,Isa_30:16-20, Isa_30:21-25,Isa_30:26-30,Isa_30:31-33, Jer_2:13, Neh_3:15

11-2-0 தேவனுடைய ஜனங்களை ஆளுகை செய்வதற்கு: தங்கள்  முழு இருதயத்தின் சந்தோஷத்தோடும், கர்வமான மனதோடும், தங்களுக்குச் சுதந்தரமாக நியமித்துக்கொண்ட அதிகாரங்களின் பதவிகளின் மூலம்; தேவனுடைய சமூகத்தில் வருகிறபோது,  இடறி விழுந்து, இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய அந்திக்கிறிஸ்துக்களாகவும்  மற்றும் கள்ளதீர்க்க தரிசிகளாகவும்  ஆவி,ஆத்துமாவில் மறுரூபமடைகிறார்கள்:-  

11-2-1 நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறவர்கள்; பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள்:-  

Isa 65:2  நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன். 

Isa 65:3  அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி, 

Isa 65:4  பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து: 

Isa 65:5  நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள். 

Amo 6:3  தீங்குநாள் தூரமென்றெண்ணிக் கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து, 

Amo 6:4  தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று, 

Amo 6:5  தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, 

Amo 6:6  பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள். 

Amo 6:7  ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள்; இப்படியே செல்வமாய்ச் சயனித்தவர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும். 

Amo 6:8  நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரமனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். 

Amo 6:9  ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாயிருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள். 

Amo 6:10  அவர்களுடைய இனத்தானாவது, பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான். 

Amo 6:11  இதோ, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை வெடிப்புகள் உண்டாகவும் அடிப்பார். 

Amo 6:12  கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை நஞ்சாகவும், நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள். 

Amo 6:13  நாங்கள் எங்கள் பலத்தினாலே எங்களுக்குக் கொம்புகளை உண்டாக்கிக்கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள். 

Amo 6:14  இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, நான் ஒரு ஜாதியை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் பிரவேசிக்கிற வழி தொடங்கிச் சமனான நாட்டின் ஆறுமட்டாக உங்களை ஒடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். 

Isa_65:1-5, Amo_6:1-5, Amo_6:6-10; Amo_6:11-14

11-2-2 இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை போல வருகிற நித்திய ஜீவ வார்த்தைகளின் உபதேசத்தையும் தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும்  அசட்டைபண்ணி புறஜாதிகளோடு கலந்திருக்கிற திரளான தேவனுடைய ஜனங்களையும் அவர்களின் தலைவர்களையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால், இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவாகிய லுசிபருடைய  /சாத்தானுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்:-

Isa 8:5  பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: 

Isa 8:6  இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால், 

Isa 8:7  இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு, 

Isa 8:8  யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும். 

Isa 8:9  ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள், 

Isa 8:10  ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார். 

Isa 8:11  கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது: 

Isa 8:12  இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும், 

Isa 8:13  சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக. 

Isa 8:14  அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார். 

Isa 8:15  அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள். Isa_8:1-5, Isa_8:6-10,Isa_8:11-15

11-2-3 என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு/ லுசிபருக்கு /சாத்தானுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம். அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்:- 

Isa 10:1  ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும், 

Isa 10:2  அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ! 

Isa 10:3  விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்துவிடுவீர்கள்? 

Isa 10:4  கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. 

Isa 10:5  என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம். 

Isa 10:6  அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன். 

Isa 10:7  அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான். 

Isa 10:8  அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ? 

Isa 10:9  கல்னோபட்டணம் கர்கேமிசைப்போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ? 

Isa 10:10  எருசலேமையும் சமாரியாவையும்பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க, 

Isa 10:11  நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான். 

Isa 10:12  ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார். 

Isa_10:1-5,Isa_10:6-10,Isa_10:11-15,Isa_10:16-20,Isa_10:21-25,Isa_10:26-27,

11-2-4 பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்:- 

Isa 28:7  ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழி தப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். 

Isa 28:8  போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. 

Isa 28:9  அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே. 

Isa 28:10  கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். 

Isa 28:11  பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். 

Isa 28:12  இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். 

Isa 28:13  ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும். 

Isa_28:1-5,Isa_28:6-10, Isa_28:11-15,Isa_28:16-21,  

11-2-5 சீயோனிலேயிருக்கிற  மூலைக்கல்லானது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், அதில் விசுவாசிக்கிறவன் பதறான்;ஆனால் விசுவாசத்தில் இடறிவிழுகிறவர்கள்  பொய்களை தங்களூக்கு  அடைக்கலமாக்கிக்கொண்டு மாயையின் மறைவிடத்தை தங்களூக்கு சொந்தமாக்கிக்கொள்ளூகிறார்கள்:- 

Isa 28:14  ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 

Isa 28:15  நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. 

Isa 28:16  ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். 

Isa 28:17  நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும். 

Isa 28:18  நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள். 

Isa 28:19  அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும். 

Isa 28:20  கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது. 

Isa 28:21  கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார். 

Isa 28:22  இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன். 

Isa_28:1-5,Isa_28:6-10, Isa_28:11-15,Isa_28:16-21,  

11-2-6 பொய்களை அடைக்கலமாக்கி மாயையின் மறைவிடத்தில் வந்தடைந்த ஜாதிகளை: நாசம் என்னும் சல்லடையிலே அரிக்கும்படிக்கு, கர்த்தருடைய, நியாயத்தீர்ப்பு  ஜனங்களுடைய கழுத்து மட்டும் ஜலப்பிரவாகம் போல வருகிறபோது;  கர்த்தருடைய  வார்த்தைகள் ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போல இருக்கும்:-

பொய்களை அடைக்கலமாக்கி மாயையின் மறைவிடத்தில் வந்தடைந்த ஜாதிகளை நாசம் என்னும் சல்லடையிலே அரிக்கும்படிக்கு: கர்த்தருடைய நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைக்கிறபடியால், அவருடைய உதடுகளின்  சினத்தால் நிறைந்து: அவர் ஊதும் சுவாசம் ஜனங்களுடைய கழுத்து மட்டும் எட்டுகிற வல்லமையுள்ள திரளான ஆற்றுவெள்ளத்தைப்போல,

அசீரியாவின் ராஜாவாகிய லுசிபரையும் / சாத்தானையும்  அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அப்பொழுது கர்த்தருடைய  வார்த்தைகள் ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போல இருக்கும்.

Isa 30:26  கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும். 

Isa 30:27  இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும். 

Isa 30:28  நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும். 

Isa 30:29  பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்து வருகிறபோது மகிழுகிறதுபோல மகிழுவீர்கள். 

Isa 30:30  கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார். 

Isa 30:31  அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினாலே நொறுங்குண்டு போவான். 

Isa 30:32  கர்த்தர் அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார். 

Isa 30:33  தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கெந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும். 

Isa_30:1-5,Isa_30:6-10,Isa_30:11-15,Isa_30:16-20,Isa_30:21-25,Isa_30:26-30,Isa_30:31-33, Jer_2:13, Neh_3:15

11-2-7 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

Isa 29:9  தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறித்திருக்கிறார்கள், திராட்சரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல. 

Isa 29:10  கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார். 

Isa 29:11  ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான். 

Isa 29:12  அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான். 

Isa 29:13  இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. 

Isa 29:14  ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார். 

Isa 29:15  தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ! 

Isa 29:16  ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ? 

Isa 29:17  இன்னும் கொஞ்சக்காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும். 

Isa 29:18  அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும். 

Isa 29:19  சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள். 

Isa 29:20  கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான். 

Isa 29:21  ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள். 

Isa 29:22  ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை. 

Isa 29:23  அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள். 

Isa 29:24  வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள். 

Isa_29:1-5,Isa_29:6-10,Isa_29:11-15,Isa_29:16-20,Isa_29:21-24,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries