தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 22


தேவ ஆட்டுக்குட்டியானவர் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட சர்வசங்கமாகிய சபை

பொருளடக்கம் 3-0

3-0 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். 

3-1 உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்திற்கு, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்:-

Mat 22:1  இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: 

Mat 22:2  பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. 

Mat 22:3  அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள். 

Mat 22:4  அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான். 

Mat 22:5  அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள். 

Mat_22:1-5; Mat_22:6-10, Mat_22:11-14

3-2 உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியானவர்  கலியாண விழாவின் மூலம் / இராஜாவாக முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாவின் மூலம் தம்முடைய மகிமையையும் பிதாவின் மகிமையையும் சுதந்தரித்துக்கொள்ளுதல்:-   

  

உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியானவர்  மரணத்தையும்  பாதாளத்தையும் ஜெயங்கொண்டபடியால் கலியாண விழாவின் மூலம் / இராஜாவாக முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாவின் மூலம் தம்முடைய மகிமையையும் பிதாவின் மகிமையையும் சுதந்தரித்துக்கொள்ளுதல்   

  

Php 2:5  கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; 

Php 2:6  அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், 

Php 2:7  தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். 

Php 2:8  அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். Php 2:9  ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, 

Php 2:10  இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 

Php 2:11  பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

 Phi_2:5-11;   Eph_1:19-23; Col_1:14-18; Heb_1:1-4; 1Pe_3:18-22; Rev_1:12-18,Rev_3:21,Rev_19:7-10,Rev_19:1-6, Rev_21:1-6, Rev_21:7-10, Mat_16:27, Mat_19:28, Mat_26:64;  Mar_8:37-38, Mar_14:62; Luk_9:26;   2Th_1:7-8; Jud_1:14-15;   Heb_1:1-6, Heb_1:7-14, Heb_2:1-5;Heb_2:6-10, Heb_2:11-16,Dan_7:13-18, Dan_10:5-10;Dan_10:11-15;Dan_10:16-19; Rev_1:12-18,Rev_1:1-6,Rev_1:7-11, Rev_2:1-7,1st church  Rev_2:8-11,2nd church  Rev_2:12-17, 3rd church Rev_2:18-23, Rev_2:24-29, 4th church  Rev_3:1-6,5th church  Rev_3:7-10, Rev_3:11-13;6th church,Rev_3:14-18, Rev_3:19-22, 7th church

3-3 உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்திற்கு, தெரிந்துகொள்ளப் பட்டவர்களிளும்  ஒரு சிலர், தேவனுடைய சத்தியமான வசனங்களை விருந்தாக ஆவி,ஆத்துமாவில் புசிக்கிறதற்கேற்றபடி; சரீரத்தில் கலியாண வஸ்திரமாகிய நீதியின் கிரியைகள் இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்:-

உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்திற்கு, தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் , தேவனுடைய சத்தியமான வசனங்களை விருந்தாக ஆவி,ஆத்துமாவில் புசிக்கிறதற்கேற்றபடி; சரீரத்தில் கலியாண வஸ்திரமாகிய நீதியின் கிரியைகள் உள்ளவனெவனோ அவனுக்குக் அதிகமாக கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்;

உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்திற்கு, அழைக்கப்பட்டவர்கள் ஒரு சிலர், இயேசு கிறிஸ்து இராஜாவாக முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, கிறிஸ்து, தங்கள்மேல் ராஜாவாகிறதற்கு முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து கெம்பீர சத்தத்தோடு; அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; என்று மகிமை படுத்தினார்கள் 

Mat 22:8  அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள். 

Mat 22:9  ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான். 

Mat 22:10  அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது. 

Mat 22:11  விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: 

Mat 22:12  சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். 

Mat 22:13  அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். 

Mat 22:14  அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். 

3-4 இயேசு கிறிஸ்துவின்  நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்தவர்கள், கற்புள்ள கன்னிகையாக/ மணவாட்டியாக  கிறிஸ்து என்னும் ஒரே புரண புருஷனுக்கு/ மணவாளனுக்கு நியமிக்கப்பட்டவர்கள், உடன்படிக்கையில்  நிலைத்திருக்கும்போது மட்டும் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தில் பங்கடைந்து, . அவரவர் உட்கொள்ளும் அளவுக்கேற்றபடி/தன்மைக்கேற்றபடி புசிப்பார்கள்:-

இயேசு கிறிஸ்துவின்  நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்தவர்கள், கற்புள்ள கன்னிகையாக/ மணவாட்டியாக  கிறிஸ்து என்னும் ஒரே புரண புருஷனுக்கு/ மணவாளனுக்கு நியமிக்கப்பட்டபடியால்: தங்கள் உடன்படிக்கையில் ஜீவனும் சமாதானமுமாகவும்,கர்த்தருக்கு  பயப்படும் பயத்தோடிருந்து,  தங்கள் ஆவியில் துரோகம்பண்ணாமல் தங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கிறவர்கள் மட்டும், 

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தில் பங்கடைந்து . அவரவர் உட்கொள்ளும் அளவுக்கேற்றபடி/தன்மைக்கேற்றபடி புசிப்பார்கள், குடிப்பார்கள், சந்தோஷப்படுவார்கள், மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், விருந்தின் சுவைகளை உணர்ந்து கொண்டவர்கள்,ஆவி,ஆத்துமாவில், மறுரூபமடைந்து: தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதின் மூலம் கிறிஸ்துவின் இராஜ்யத்தில் ஆட்சி அதிகாரங்களை பிரதிபலனாக பெற்றுக்கொள்ளுகிறார்கள். 

Rev 19:7  நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். 

Rev 19:8  சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. 

Rev 19:9  பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். 

Rev 19:10  அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான். 

Rev_19:7-10,Mat_22:1-5; Mat_22:6-10, Mat_22:11-14, Luk_12:34-40, Luk_14:7-11,Mat_25:1-10; Rev_3:14-18, Rev_3:19-22,Isa_65:13-15, Isa_65:8-9,

3-5 இயேசு கிறிஸ்துவின்  நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்தவர்கள், கற்புள்ள கன்னிகையாக/ மணவாட்டியாக  கிறிஸ்து என்னும் ஒரே புரண புருஷனுக்கு/ மணவாளனுக்கு நியமிக்கப்பட்டவர்கள், உடன்படிக்கையில் இடறிவிழுந்தாலும்; கடைசியாக மீண்டும் மனந்திரும்பி உண்மையாய் கர்த்தரை அறிந்துகொள்ளுகிறவர்களை; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய், நித்திய விவாகத்துக்கென்று தேவன் அவர்களை  நியமித்துக்கொள்ளுகிறார்:- 

Jer 3:1  ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப் போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார். 

Jer 3:2  நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய். 

Jer 3:3  அதினிமித்தம் மழை வருஷியாமலும், பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய். 

Jer 3:4  நீ இதுமுதல் என்னை நோக்கி: என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதியென்று சொல்லி, 

Jer 3:5  சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மிஞ்சிப்போகிறாய் என்கிறார். 

Hos_2:19-20;Hos_2:14-15;Jos_7:22-26;Jer_3:1-5;Jer_3:6-10; Jer_3:11-15;Jer_3:16-20; Jer_3:21-25; 2Co_11:1-3; Jer_2:1-4, Joh_3:26-29;Rom_7:1-4;Isa_62:1-5;Mal_1:1-5; Mal_1:6-9; Mal_1:10-14; Mal_2:1-5; Mal_2:6-10; Mal_2:11-15;Mal_2:16-17;  Mal_3:13-18, Isa_65:13-15,     Isa_65:8-9

3-6 ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்திற்கு, தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் , தேவனுடைய சத்தியமான வசனங்களை விருந்தாக ஆவி,ஆத்துமாவில் புசிக்கிறதற்கேற்றபடி; சரீரத்தில் கலியாண வஸ்திரமாகிய நீதியின் கிரியைகள் உள்ளவர்கள்: கர்த்தருடைய வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து சாரோனாகிய  ஆட்டுத்தொழுவத்திற்கு வருகிறவர்கள்    நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்:- 

உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்திற்கு, தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் , தேவனுடைய சத்தியமான வசனங்களை விருந்தாக ஆவி,ஆத்துமாவில் புசிக்கிறதற்கேற்றபடி; சரீரத்தில் கலியாண வஸ்திரமாகிய நீதியின் கிரியைகள் உள்ளவர்கள் கர்த்தருடைய வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று தேடிப்பார்த்து, அதிலே நடக்கிறபோது தங்களூடைய  ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கிறது  

Jer 6:16  வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள். 

Jer 6:17  நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள். 

Jer 6:18  ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள். 

Jer 6:19  பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன். 

Isa 35:1  வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். 

Isa 35:2  அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள். 

Isa 35:3  தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். 

Isa 35:4  மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். 

Isa 35:5  அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். 

Isa 35:6  அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். 

Isa 35:7  வெட்டாந்தரை தண்ணீர்த் தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்; வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும். 

Isa 35:8  அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. 

Isa 35:9  அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். 

Isa 35:10  கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். 

Mal_1:1-5; Mal_1:6-9; Mal_1:10-14; Mal_2:1-5; Mal_2:6-10; Mal_2:11-15;Mal_2:16-17;  Mal_3:13-18,Isa_65:1-5, Isa_65:6-10,Isa_65:11-15, Jer_6:1-7, Jer_6:8-12;Jer_6:13-19;

Son_2:1-5, Isa_35:1-5, Isa_35:6-10,Jos_7:22-26;Isa_32:1-5, Isa_32:6-10, Isa_32:11-15, Isa_32:16-20,Isa_30:7-12, Isa_30:13-18, Isa_30:19-24

 3-7 ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்திற்கு, தெரிந்துகொள்ளப் பட்டவர்கள் , தேவனுடைய சத்தியமான வசனங்களை விருந்தாக ஆவி,ஆத்துமாவில் புசிக்கிறதற்கேற்றபடி; சரீரத்தில் கலியாண வஸ்திரமாகிய நீதியின் கிரியைகள் உள்ளவர்கள்: கர்த்தருடைய வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரிக்காமல் தேடுகிறபோது  நம்பிக்கையின் வாசலாகிய  ஆகோரின் பள்ளத்தாக்கு திரளாக வந்தடைந்து தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவார்கள்:-  

Isa 65:1  என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன். 

Isa 65:2  நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன். 

Isa 65:3   அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி, 

Isa 65:4  பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து: 

Isa 65:5  நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள். 

Isa 65:6  இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன். 

Isa 65:7  உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களுக்கும் தக்கதாக அவர்கள் மடியிலே சரிக்கட்டுவேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே அளப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார். 

Isa 65:8  கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன். 

Isa 65:9  யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சுதந்தரிப்பவரையும் எழும்பப்பண்ணுவேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொண்டு, என் ஊழியக்காரர் அங்கே வாசம்பண்ணுவார்கள். 

Isa 65:10  என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடையாகவும் இருக்கும். 

Isa 65:11  ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து, காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறைய வார்க்கிறவர்களே, 

Isa 65:12  உங்களை நான் பட்டயத்துக்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறுஉத்தரவு கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள். 

Isa 65:13  ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள். 

Isa 65:14  இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள். 

Isa 65:15  நான் தெரிந்து கொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார். 

Isa 65:16  அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன் பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோயின. 

Mal_1:1-5; Mal_1:6-9; Mal_1:10-14; Mal_2:1-5; Mal_2:6-10; Mal_2:11-15;Mal_2:16-17;  Mal_3:13-18,Isa_65:1-5, Isa_65:6-10,Isa_65:11-16, Jer_6:1-7, Jer_6:8-12;Jer_6:13-19;

Son_2:1-5, Isa_35:1-5, Isa_35:6-10,Jos_7:22-26;Isa_32:1-5, Isa_32:6-10, Isa_32:11-15, Isa_32:16-20,Isa_30:7-12, Isa_30:13-18, Isa_30:19-24

 3-8 இயேசு கிறிஸ்துவின்  நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்தவர்கள், கற்புள்ள கன்னிகையாக/ மணவாட்டியாக  கிறிஸ்து என்னும் ஒரே புரண புருஷனுக்கு/ மணவாளனுக்கு நியமிக்கப்பட்டவர்கள், உடன்படிக்கையில் இடறிவிழுந்தாலும்; கடைசியாக மீண்டும் மனந்திரும்பி உண்மையாய் கர்த்தரை அறிந்துகொள்ளாதவர்களை; அவர்களுடைய நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கிலே வந்து, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவார்கள்:-  

இயேசு கிறிஸ்துவின்  நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்தவர்கள், கற்புள்ள கன்னிகையாக/ மணவாட்டியாக  கிறிஸ்து என்னும் ஒரே புரண புருஷனுக்கு/ மணவாளனுக்கு நியமிக்கப்பட்டவர்கள், உடன்படிக்கையில் இடறிவிழுந்தாலும்; கடைசியாக மீண்டும் மனந்திரும்பி உண்மையாய் கர்த்தரை அறிந்துகொள்ளாதவர்களுக்கு ; அவர்களுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் தேவன் கொடுப்பார் ; அப்பொழுது, அங்கே,   தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவார்கள்.   

மனிதர்களால் போதிக்கப்பட்ட கற்பனைகளை விருந்தாக புசித்து அதன் சுவைகளை உணர்ந்து கொண்டவர்கள், தங்க்கள் ஆவி,ஆத்துமாவில், மறுரூபமடைந்து: மனிதர்கள்  தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த மனிதனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதின் மூலம் சாத்தானின்  இராஜ்யத்தில் ஆட்சி அதிகாரங்களை பிரதிபலனாக பெற்றுக்கொள்ளுகிறார்கள்.மேலும்  தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை அசட்டைபண்னினவர்கள் , மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே தங்கள் சத்துருக்களை நோக்கி  நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்று புவார்கள், 

Hos 2:11  அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்புகளையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிற அவளுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியப்பண்ணுவேன். 

Hos 2:12  என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும். 

Hos 2:13  அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

Hos 2:14  ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவளோடே பட்சமாய்ப் பேசி, 

Hos 2:15  அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள். 

Hos 2:16  அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். 

Hos_2:19-20;Hos_2:10-15;Jos_7:22-26;Hos_2:1-6; Hos_2:7-11;Hos_2:12-16;Hos_2:17-23;Luk_19:12-18,Luk_19:19-24,Luk_19:25-27,

3-9 இயேசு கிறிஸ்துவின்  நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்தவர்கள், கற்புள்ள கன்னிகையாக/ மணவாட்டியாக  கிறிஸ்து என்னும் ஒரே புரண புருஷனுக்கு/ மணவாளனுக்கு நியமிக்கப்பட்டவர்கள், உடன்படிக்கையில் பல முறை இடறிவிழுந்து,  தேவனுடைய நாமத்தை பரிசுத்தக் குலைச்சலாக்கிக் கொண்டிருக்கிறபடியால் தள்ளுதலின் சீட்டை எழுதி, தேவன் நீயாத்தீர்ப்பிற்கு நியமிக்கிறார்:- 

இயேசு கிறிஸ்துவின்  நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்தவர்கள், கற்புள்ள கன்னிகையாக/ மணவாட்டியாக  கிறிஸ்து என்னும் ஒரே புரண புருஷனுக்கு/ மணவாளனுக்கு நியமிக்கப்பட்டவர்கள், உடன்படிக்கையில் பல முறை இடறிவிழுந்த பிறகு ; மீண்டும் கிருபையாகவும், கடைசியாகவும் கிடைத்த மனந்திரும்புதலை அசட்டை செய்து,தொடர்ந்து இலச்சையான காரியங்களை செய்து தேவனுடைய நாமத்தை பரிசுத்தக் குலைச்சலாக்கிக் கொண்டிருக்கிறபடியால் தள்ளுதலின் சீட்டை எழுதி, தேவன் நீயாத்தீர்ப்பிற்கு நியமிக்கிறார். 

Jer 2:4  யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 

Jer 2:5  கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல், 

Jer 2:6  என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்? 

Jer 2:7  செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள். 

Jer 2:8  கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள். 

Jer 2:9  ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

Jer 2:10  நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும் கடந்துபோய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும், 

Jer 2:11  எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள். 

Jer 2:12  வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

Hos_2:1-6; Hos_2:7-11;Hos_2:12-16;Hos_2:17-23; Jer_2:5-9,Jer_2:10-16,Jer_2:17-20,Jer_2:21-25,Jer_2:26-30,Jer_2:31-34,Jer_2:35-37,     Jer_3:1-5;Jer_3:6-10; Jer_3:11-15;Jer_3:16-20; Jer_3:21-25; Deu_24:1-4; Isa_50:1; Mat_5:31-32, Mat_19:3-9; Mar_10:2-12; Luk_16:18


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries