ஆவி,ஆத்துமா, சரீரத்தில் மனந்திரும்பி, பாதாளம் மரணம் ஆகியவைகளுடைய திறப்பின் வாசலின் வல்லமைகளை ஜெயங்கொண்டவர்கள்; தேவனுக்கு பயப்படும் பயத்தோடே இருந்து, தேவனுடைய நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி ஜாக்கிரதையாயிருந்து; தேவனுடைய கடிந்துகொள்ளுதலுக்கு மனந்திரும்பி, நீதியின் கிரியைகளூக்கு முன்னேறுகிறவர்கள் மட்டும்; தேவனுடைய உடன்படிக்கையில் ஜீவனும் சமாதானமுமாக தொடர்ந்து நிலைத்திருக்க முடியும்
இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார். அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். Isa 42:1-3
அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும். வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது: Isa 42:4-5
நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். Isa 42:6-7
ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது: இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. Mat 12:17-19
அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே. அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார். Mat 12:20-22
ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். Luk 11:33-34
ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறது போல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார். Luk 11:35-36
இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆவிக்குரியதாயிருக்கிற ஆசரிப்பு முறைகள் , ஆராதனை முறைகள் மூலம்: ஆவிக்குரிய நிலையில் தேவனுடைய வார்த்தைகளினால் அன்றாடபலியை / எண்ணையாகிய கடிந்துகொள்ளுதலின் உபதேசத்தைக்கொண்டு; மூப்பர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே எண்ணெய்பூசி / அவர்களுடைய பாவங்களை கண்டித்து உணர்த்துகிறபோது;
அலட்சியப்படுத்தாமல், அவைகளை ஏற்றுக்கொண்டு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணி, எப்பொழுதும் ஆவி, ஆத்துமா,சரீரத்தில் மனந்திரும்பி, நற்கிரியைகளுக்கு முன்னேறுகிறதன் மூலம் சொஸ்தமடைகிறவர்கள் தேவனுடைய நாமம் மகிமைக்காக சாட்சியாக வாழவேண்டும். அன்றாடபலி நிறுத்தப்படும்போது, இரட்சிப்பின் உடன்படிக்கையில் இடறிவிழுந்து, அறியாமையாகிய இருளை சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். Psa 141:5; Mat 25:1-13
Mat_12:16-20; Isa_42:1-7, Luk_11:33-35; Rev_6:5-6; Mat_6:16-18,Psa_141:5, Mat_5:14-17;
Luk_10:30-36; Luk_11:33-36, 2Ti_2:20-21; 2Ti_3:15-17; Mat_25:3-10;Isa_65:8-9 , Psa_23:1-6, Hos_4:11, Hos_9:2, Hag_1:10-11 , Zec_9:17; ( Psa_37:1;) Psa_37:1-5; Psa_37:6-10; Mat_6:22-23,
Previousதேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)