தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 24


தேவன் மனிதனுக்கு கொடுத்த சாபங்கள்; பலிபீட ஊழியத்தில் தொடங்கி, பலிபீட ஊழியத்தில் முடிவடைகிறது.

பொருளடக்கம் 2-0

2-0 காயீனும்,  காயினின் வழிகளில் நடக்கிற அவனுடைய சந்ததிகளும்,   தேவன் அங்கிகரிக்காத .காணிக்கைகளை பலிபீடத்திற்கு கொண்டுவருகிறபோது:  தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட சாபங்களின் மூலம்  அடையாளம்  கண்டுபிடிக்கிறவர்கள்  யாரும் அவர்களை கொல்லாதபடிக்கு; தேவனுடைய முத்திரை அடையாளத்தை போட்டார்:-

ஆபேலின் வழிகளில் நடக்கிற அவனுடைய சந்ததிகளான நீதிமான்கள், தங்களுடைய காணிக்கையை கர்த்தருக்கு பலிசெலுத்த வருகிறபோது: காயினின் வழிகளில் நடக்கிற அவனுடைய சந்ததிகளான துன்மார்க்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுவதற்காகவும், காயின் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட சாபங்களின் மூலம் காயினை அடையாளம்  கண்டு கொள்ளுகிறவர்கள்  யாரும் காயினைக் கொல்லாதபடிக்கும்;

தேவனே காயின் மேலும் காயினின் வழிகளில் நடக்கிற அவனுடைய சந்ததிகளின்  மேலும் பழிவாங்குவதற்கும்  பலன் அளிப்பதற்கும் தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களில் முதலாவது தேவனுடைய முத்திரை அடையாளத்தை தேவனே நேரடியாக காயினுக்கும் அவன் சந்ததியாருக்கும் போடுகிறார்.

2-1  காயினின் அடையாளத்தை காட்டிக்கொடுக்கும் தேவனுடைய சாபங்கள்:-

  1. காயின் தன் சகோதரனாகிய ஆபேலை கொலை செய்ததும் அல்லாமல், காயின் தன்னுடைய ஆத்துமாவையும் கொலை செய்தபடியால், ஏற்கனவே ஆதாமினால் ஒரு முறை தேவனால் சபிக்கப்பட்ட பூமி மீண்டும் காயினின் பாவத்தினால் இரண்டாவது முறையாக சபிக்கப்படுகிறது, இதனால் காயினும் அவன் சந்ததியாரும் சபிக்கப்பட்டிருப்பார்கள். Gen_4:11,
  2. காயின் நிலத்தை பயிரிடும்போது / தன் இருதயத்தில் தேவ வார்த்தைகளை விதைக்கும்போது அது தன் பலனை இனி காயினுக்கு கொடுக்காது. Gen_4:12,
  3. காயின் தேவனுடைய சமுகத்தை விட்டு, விலகி மறைந்து, பூமியில் தன் கைகளின் கிரியைகளில் நிலையற்று அலைகிறவனாக இருப்பான். Gen_4:13-14, Jer_4:1-4,

கீழே குறிப்பிட்ட வேத வசனங்களின்படி காயினின் வழிகளில் நடக்கிற அவனுடைய சந்ததிகள், மார்க்கம் தப்பி நடக்கிற நட்சத்திரங்களாக இருந்து, ஆபேலைப் போல உள்ள நீதிமான்களின்  இரத்தப்பழிக்கு ஆளாக மாறுகிறார்கள். Jud_1:10-13, Mat_23:35-36, Mat_23:13-15, Lev_21:18, Deu_27:18, Isa_42:18-19, Mat_15:14, Rom_2:19, Rev_3:17-18, Jer_2:20-25, Jer_14:10-12, Jer_14:13-15,

காயினின் சந்ததியார், ஆதாமிற்கும், காயினுக்கும் தேவன் கொடுத்த சாபங்களையே மீண்டும் தேவனுக்கு காணிக்கையாக பலிபீடத்திற்கு கொண்டு வருகிறபோது, பலி பீடத்தின் தூதனால் நியாயத் தீர்க்கப்படுவார்கள். Exo_29:37, Exo_30:29, Lev_10:1-3,   Rev_8:1-6, Rev_19:1-4,

விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினது போல, ஆவிக்குரிய ஆபேலின் சந்ததிகளும்  தேவன் நல்லது என்று குறிப்பிட்டவைகளை தங்களுடைய  விசுவாசத்தில் கண்டறிந்து,

 அவைகளை  கர்த்தருக்கு  பலி செலுத்தாமல் இருக்கும்போது, சாபம் / பாவம் உன் இருதய வாசற்படியில் பலி மிருகமாக கட்டப்பட்டு படுத்திருக்கிறது, நீ அவைகளை உன் இருதயத்தில் பலி செலுத்தினால் சாபம் / பாவத்தின் ஆசை உன்னை பற்றி இருக்காது, மேலும் நீ பாவத்தை / சாபத்தை ஜெயங்கொண்டு, அவைகளை உனக்கு கீழ்படுத்தி நீ அவைகளை ஆண்டு கொள்ளுவாய், இதனால் உன்னையும் உன் பலியையும் கர்த்தர் அங்கிகரிப்பார்.

உன் சாபத்தை / தீமைகளை பாவத்தை உன் இருதயத்தில் பலி செலுத்தி, அவைகளை உனக்கு நன்மையாக மாற்றிக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருந்தும், அவைகளை உன் இருதயததில் பலி செலுத்தாமல் இருக்கும்போது; உன் இருதய வாசற்படியில் பலி மிருகமாக கட்டப்பட்டிருந்த சாபம் / பாவம் / தீமை கட்டவிழ்க்கப்பட்டு உன் இருயத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறது. அப்பொழுது சாபம் / தீமை  / பாவம் /ஆசை, உன்னை பற்றியிருக்கும், நீ அவைகளுக்கு அடிமையாக இருப்பாய், அவைகள் உன்னை ஆட்சி செய்யும்.

  1. காயினே உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது ? Gen_4:6,

காயினுடைய இருதய வாசற்படியிலே பலி மிருகமாக கட்டப்பட்டிருந்த  சாபம் / பாவம் கட்ட விழ்க்கப்பட்டு காயினுடைய இருதயத்திற்குள்ளே, பிரவேசித்த படியால் காயினுக்கு எரிச்சல் உண்டானது.

  1. காயினே உன்முக நாடி ஏன் வேறுபட்டது ? Gen_4:6, ,

 காயினுடைய இருதயத்திற்குள்ளே பிரவேசித்த பாவம் / சாபம் காயினுடைய ஆத்துமாவை அடிமைப்படுத்தி, காயினை ஆட்சி செய்கிறபடியால் காயினுடைய முக நாடி வேறுபட்டது.

காயின் நிலத்தின் கனிகளை, கர்த்தருக்கு காணிக்கையாக கொண்டு வந்தபோது காயினையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரிக்க வில்லை, ஏனென்றால் ஆதாமின் பாவத்தினால் ஏற்கனவே பூமி சபிக்கப்பட்டிருக்கிறது Gen_1:29-31,Gen_3:17-19,

சபிக்கப்பட்ட பூமியில் விளைந்த நிலத்தின் கனிகளை கர்த்தருக்கு, காயின் காணிக்கையாக கொண்டு வந்திருக்கும்போது அவைகள் நிச்சயமாக முள்ளும், குருக்கும் உள்ளவைகளாக இருந்து சபிக்கப்பட்டவைகளாகத்தான் இருக்க முடியும்.

ஆதாமின் பாவத்தினால் ஏற்கனவே சபிக்கப்பட்ட பூமியில் விளைந்த சாபங்களை / ஜென்ம கரும பாவங்களை காயின் தன்னுடைய இருதயத்தில் பலி செலுத்தி தீமைகளை நன்மையாக ஜெயங் கொள்ளவேண்டும்,  ஆனால் காயினோ தேவன் ஆதாமிற்கு கொடுத்த சாபங்களையே மீண்டும் தேவனுக்கு காணிக்கையாக கொண்டு வருகிறான், இதனால் காயினையும் அவன் காணிக்கை யையும் கர்த்தர் அங்கிகரிக்க வில்லை. . Gen_3:17-18,

  1. நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ?

காயினுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி அவன் முக நாடி வேறுபட்டபோது, கர்த்தர் காயினுக்கு மறுமொழியாக, நீ நன்மை செய்தால் உனக்கு மேன்மை இல்லையோ?   Gen_4:7,

தேவன் நல்லது என்று குறிப்பிட்டவைகளை தேர்ந்தெடுத்து, அவைகளில் மேலும் நல்லவைகளை நீயும் உன்னுடைய விசுவாசத் தால் பரிசோதித்து, அவைகளை கர்த்தருக்கு காணிக்கையாக கொண்டு வந்திருந்தால் உனக்கு மேன்மை இல்லையோ! உன்னையும், உன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரியாமல் இருப்பாரோ!

7 நீ நன்மை செய்யாதிருந்தால் :-

நீ நன்மை செய்யாதிருந்தால், ஆதாமின் பாவத்தினால் சபிக்கப்பட்ட பூமியில் விளைந்த சாபங்களை / தீமைகளை உன் இருதயத்தில்  பலி செலுத்தி அவைகளை நன்மையாக மாற்ற ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது. Gen_4:7,

8 பலிபீடத்தின் சட்டதிட்ட பிரமாணங்களை பின்பற்றாமலிருக்கும்போது;   தேவனுடைய நியாயத்தீர்பினால், அந்த இடத்திலேயே சங்கரிக்கப்படாதபடிக்கு பலிபீடத்தின் பிரமாணங்களைபின் பற்றி நடக்க வேண்டும்.

தேவனுடைய பலீபீடத்தை தொடுகிறதெல்லாம் பரிசுத்த மாக்கப்படுவது, தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் அடையாள முத்திரையாக கொடுக்கப்பட்டுள்ளது. Exo_29:37, Exo_30:28-29, Lev_10:3,

  1. பலிபீட ஊழியத்திற்கு அந்நியர்கள் வரக்கூடாது :-

அந்நியர்கள் தேவனுடைய பலிபீட ஊழியத்தின் பொறுப்பை ஏற்க முன்வரக்கூடாது  Num_3:10, Num_30:33, Num_16:1,Chapter 2Ch_26:16-21,

  1. தேவனுடைய பலிபீடத்திற்கு செல்லுவதற்கு முன் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், எனென்றால் பலிபீடத்தின் சட்டதிட்ட பிரமாணங்களை பின்பற்றாமலிருக்கும் போது தேவனு டைய நியாயத்தீர்பினால் அந்த இடத்திலேயே சங்கரிக்கப்படுவீர்கள் Lev_10:1-11, Exo_29:1
  2. காயின் தேவனுக்கு பலி செலுத்துவதற்காக கொண்டு வந்த காணிக்கைகளை நீங்கள் தேவனுக்கு பலி செலுத்துவதற்காக கொண்டு வர வேண்டாம் Heb_11:4, 1Jo_3:9-12 Gen_4:3-4,

தேவன் உங்களுக்கு கிருபையாக கொடுத்த ஊழியத்தின் மூலம் மற்றவர்கள் தேவனுடைய நாமத்தை ஏற்றுக்கொள்ளுபடி கிருபையாக தேவன் செய்த  அற்புதங்கள் அடையாளங்கள்; இவைகளைக் கொண்டு வந்து உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கு காணிக்கையாக பலிபிடத்திற்கு  கொண்டு வரவேண்டாம்.

  1. பலிபிடத்திற்கு வரும் முன் உன் ஆத்துமாவாகிய சகோதர னிடத்தில் நல்மனம் பொருந்து; பின்பு உன் காணிக்கையை / பலிகளை கர்த்தருக்கு செலுத்துவாயாக Mat_5:23-26, Ecc_5:1-6, 1Sa_15:22,
  2. தேவனுடைய சமூகத்தில் அங்கிகரிக்கப்படும் சில காணிக்கைகளும் பலிகளும் Psa_4:5, Psa_27:6, Psa_40:6, Psa_50:5, Heb_10:6, Psa_50:23, Psa_51:16-17, Psa_116:17, Psa_107:22, Pro_21:3, Hos_6:6, Mat_9:13, Mat_12:7,Mar_12:33, Rom_12:1, Phi_2:17, 1Co_10:18, Heb_13:9-16,

6 தேவனுடைய உக்கிர கோபாக்கினைக்கு உங்கள் ஆத்துமாவை தப்புவித்துக் கொள்ளுங்கள்

Rev_7:1-3 , Rev_9:4-11, Pro_6:1-5, Rev_18:4-6, Isa_48:20 ,Isa_52:11-12, Jer_50:8-9, Jer_51:45-50,Zec_2:7-8, Psa_137:1,Chapter Ezr_1:1-6, Zec_8:15-23, Zec_7:8-14 Zec_8:1-3, Zec_8:8-23, Zec_7:8-14,Isa_2:1-5, Mic_4:1-3

7 பலிபீடத்தின் வாசல் நடையிலே எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகம் நிற்கிறது / இருதயத்தின் வாசல் நடையிலே தேவனுக்கு எரிச்சலை மூட்டும் பொருளாசையாகிய விக்கிரகம் நிற்கிறது. Eze_8:5, Eze_11:2-3, Eze_14:4, Eph_5:5,Col_3:5, 1Co_5:11, 1Co_10:7, Eze_9:1-11,Eze_11:1-15,

8 தேவனுடைய ஆலயத்திலே அருவருப்புகள் நிறைந்திருக் கிறது / மனிதனுடைய இருதயத்திலே அருவருப்புகள் நிறைந்திருக் கிறது Eze_8:10-18, Psa_81:12, Pro_11:20, Pro_6:16-19, Mat_23:27-28, Isa_28:8,

2-2 பரலோகத்திலுள்ள  தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமின்;   தேவனுடைய ஆலயம், பலிபீடம், பிரகாரம், ஆகிய இடங்களில் உள்ளவைகளுக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளை சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்கள் அல்லது   தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள்: தேவனுடைய ஆறு முத்திரை அடையாளங்களை, பரிசுத்த ஸ்தலமாகிய தேவனுடைய ஆலயத்தில் வெளிப்படுத்துகிறார்கள்:-

தேவனுடைய ஆறு முத்திரை அடையாளங்களை, இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு, தொடர்புடைய ஆவிக்குரியதாயிருக்கிற ஆசரிப்பு முறைகள் , ஆராதனை முறைகள் மூலம்; பரலோகத்திலுள்ள  தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமின்;   தேவனுடைய ஆலயம், பலிபீடம், பிரகாரம், ஆகிய இடங்களில் உள்ளவைகளுக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளை சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்கள் அல்லது   தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள்:

பரிசுத்த ஸ்தலமாகிய தேவனுடைய ஆலயத்தில் அல்லது இருதயத்தில்  நிற்றுகொண்டிருக்கிற  பாழாக்குகிற அருவருப்பைக்குறித்தும், நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக் கிரியைகளைக் கண்டு, கேட்டு நீதியுள்ள தங்களுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்டு, அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும், பெருமூச்சுவிட்டழுகிறவர்கள்:

கிழே குறிப்பிட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை, ஆவியின்படி தங்ளுடைய நெற்றிகளில் / அறிவில் ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.

1  புறஜாதிகளின்  எந்த முறைகளையும் பின்பற்றக்கூடாது.

2  பலிபீடத்தின்  பிரமாணங்களை பின் பற்றி நடக்க வேண்டும்.

3  கர்த்தருடைய  பஸ்கா விருத்தை புசிக்க வேண்டும்.    

4  ஓய்வு நாளை பரிசுத்தமாக  ஆசரிக்க வேண்டும்

5  மனச்சாட்சியின்  பிரமாணத்திற்கு கீழ்படிய வேண்டும்

6  இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றி நடக்க வேண்டும்

7  பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

 

தேவனுடைய வீட்டிலே நியாயத்தீர்ப்பு துவங்கினபடியால், பாதாளத்தின் வாசல்கள்  திறக்கப்பட்டு; பெருஞ்சூளையின் புகையைப்போல கர்த்தருடைய சங்கார தூதனுடைய  பட்டயமாகிய கொள்ளை நோய், எழுத்தின்படியும் ஆவியின்படியும், மனுஷரை சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு வெளிப்பட்டபோது  Rev 9:1-11; 1Pe 4:17-18; 

பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. Rev 9:4   

கிழே குறிப்பிட்ட நாண்கு வகையான ஜனங்கள், கர்த்தருடைய சங்கார தூதனுடைய  பட்டயத்திற்கு எழுத்தின்படியும் ஆவியின்படியும், தப்புவிக்கப்படுகிறார்கள்

1 பூமியின் புல் - பசுமையான புல்லைப்போல நற்கிரியைகளை உடையவர்கள்.                 2 பசுமையான  பூண்டு -  இருதயத்தின் நல்ல ஆலோசனைகளை உடையவர்கள்.

3 பூமியின் மரம் -  நல்ல கனிகளை உடையவர்கள்.                                           4 ஏழு முத்திரை அடையாளங்களை, நெற்றிகளில் ஏற்றுக்கொண்டவர்கள்.

தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்ளுடைய நெற்றிகளில் / அறிவில் ஏற்றுக்கொண்டு மனந்திரும்பாமல், அவைகளுக்கு விரோதமாகவோ,  இனையாகவோ, சிந்தித்து செயல்பட முயற்சி செய்கிறபோது: ஆவியின்படி அந்திக் கிறிஸ்துவின் முத்திரை அடையாளங்களை, தங்ளுடைய நெற்றியிலும், வலது கையிலும், /   அறிவிலும் கிரியைகளிலும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்;

இவர்கள் வலுசர்ப்பத்தின் வாயிலும், மிருகத்தின் வாயிலும், கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து; புறப்படுகிற   தவளைகளுக்கு ஒப்பான மூன்று பிசாசுகளின் அசுத்த ஆவிகளூக்கு அடிமைப்பட்டு,   கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும், வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.Rev 16:13-15

இவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணி,  பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே பங்கடைவார்கள்


Social Media
Location

The Scripture Feast Ministries