தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 25


தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 1-0

1-0 தேவனாகிய கர்த்தர், கிழே குறிப்பிட்ட சில மூல காரணங்களினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு; வெளிப்படுத்தப்படுகிறது.

1-1 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் தமக்கு சொந்தமான ஜனங்களை பிரித்தெடுப்பதற்கான வழிமுறைகளை, தேவன் ஜனங்களுக்குவெளிப்படுத்தவில்லை:-

1-2 யேகோவா என்னும் என் நாமத்தினால் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களை பிரித்தெடுப்பதற்காக வழிமுறைகள் ஜனங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது:-

1-3 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றுகிறவர்களின், விக்கிரக ஆராதனை குற்றமாகவோ, பாவமாகவோ, தேவனால் அறிவிக்கப்படவில்லை:-

1-4 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றி, தேவனை பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தேவன் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணுகிறார்:-

1-5 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றி, தேவனை பற்றி உத்தம இருதயத்தோடு இல்லாதவர்கள், மனிதர்களால் உருவாக்கப்பட்ட தேவர்களையும் ஆராதனை செய்துகொண்டிருக்கிறார்கள்:-

1-6 தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி கிறிஸ்து வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது:-

1-7 ஆபிரகாமின்சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களைசுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாகபிரித்தெடுக்கிறார்:-

1-8 தேவனாகிய கர்த்தர், தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: கட்டளையிட்டவைகளையும்,  கட்டளையிடாதவைகளையும்கலந்து பின்பற்றுகிறவர்களை தேவன் புறஜாதிகளாக பிரித்தெடுக்கிறார்:-

1-1 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் தமக்கு சொந்தமான ஜனங்களை பிரித்தெடுப்பதற்கான வழிமுறைகளை, தேவன் ஜனங்களுக்குவெளிப்படுத்தவில்லை:-

ஆதாம் முதல் மோசே வரைக்கும்;உள்ள சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்கள் வரையுள்ள காலத்தில் சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் முற்பிதாக்களுக்கு வெளிப்பட்ட நாட்களில்; தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும், கட்டளையிட்டு, அவைகளினால் தமக்கு சொந்தமான ஜனங்களை பிரித்தெடுப்பதற்கான வழிமுறைகளை, தேவன் ஜனங்களுக்குவெளிப்படுத்தவில்லை.

1-2 யேகோவா என்னும் என் நாமத்தினால் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களை பிரித்தெடுப்பதற்காக வழிமுறைகள் ஜனங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது:-

தேவனாகிய கர்த்தர், தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், யேகோவா என்னும் என் நாமத்தினால் வெளிப்பட்டு முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும், கட்டளையிட்டு அவைகளினால் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களை பிரித்தெடுப்பதற்காக வழிமுறைகள் ஜனங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.

1-3 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றுகிறவர்களின், விக்கிரக ஆராதனை குற்றமாகவோ, பாவமாகவோ, தேவனால் அறிவிக்கப்படவில்லை:-

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நம்முடைய முற்பிதாக்களுக்கு அறியப்பட்ட நாட்களில்,தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும், தேவனால்மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்படாத காலத்தில்:

மனிதனுடைய மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றி, தங்களுடைய விசுவாசத்தினால் உருவாக்கப்பட்ட ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும் கலந்து; ஜனங்கள் தங்கள் விருப்பத்திற் கேற்றபடி ஒரு மனிதனாகவோ / ஒரு குடும்பமாகவோ /

ஒரு வம்சமாகவோ / ஒரு குலமாகவோ / ஒரு கோத்திரமாகவோதேவனைஆராதனை செய்து கொண்டிருந்தார்கள். இப்படி மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றுகிற இந்த நாட்களில், விக்கிரக ஆராதனை குற்றமாகவோ, பாவமாகவோ, தேவனால் அறிவிக்கப்படவில்லை.

1-4 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றி, தேவனை பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தேவன் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணுகிறார்:-

தேவனை பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியுல்லவர்களாக இருக்கிறவர்கள்;

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றுகிற இந்த நாட்களில், நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் பரலோகத்தில் உள்ளவைகளுக்குவரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்குமாறக்கூடிய ஒரு சில ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும் தன்னுடைய விசுவாசத்தினால் தேர்ந்தெடுத்து அவைகளை நிதானித்து, பகுத்தறிந்து கொண்டு,

நேரடியாகவும், நிழலாட்டமாகவும் தேவனுக்கு ஆராதனையாக செலுத்தினபடியால் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: ஆபிரகாமின் மூலமாக ஆபிரகாமின் சந்ததிகளுக்கு வாக்குத்தத்தத்தையும் உடன்படிக்கையையும் ஏற்படுத்துகிறார்.Heb_6:13, Heb_6:16-18; Gen_14:18-20,Gen_22:15-18; Heb_7:1-5, Heb_7:6-10 , Heb_11:8,

1-5 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றி, தேவனை பற்றி உத்தம இருதயத்தோடு இல்லாதவர்கள், மனிதர்களால் உருவாக்கப்பட்ட தேவர்களையும் ஆராதனை செய்துகொண்டிருக்கிறார்கள்:-

தேவனை பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவர்களாக இருக்கிறவர்கள்;

மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றுகிற இந்த நாட்களில், மனிதனுடைய விசுவாசத்தினால் உருவாக்கப்பட்ட ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும் பின்பற்றுகிறவர்கள்:

அவைகளின் நிழலாட்டமானவைகளிலிருந்து பரலோகத்தில் உள்ளவைகளுக்குவரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்குமாறக்கூடாதவைகளை நிதானித்து, பகுத்தறிந்து கொள்ளாமல்ஆராதனையாக செலுத்துகிறவர்கள் மனிதர்களையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தேவர்களையும் ஆராதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.

1-6 தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி கிறிஸ்து வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது:-

Gal 3:19 அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.

Gal 3:20 மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.

Gal 3:21 அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

Gal 3:22 அப்படியிராதபடியால், இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. Gal_3:15-20; Gal_3:21-24; Rom_5:12-14;

1-7 ஆபிரகாமின்சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களைசுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாகபிரித்தெடுக்கிறார்:-

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நம்முடைய முற்பிதாக்களுக்கு அறியப்பட்ட நாட்களில், ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் நானூற்று முப்பது வருஷத்திற்குப் பின்பு வருகிறபோது;

தேவனாகிய கர்த்தர், யேகோவா என்னும் நாமத்தினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: ஆபிரகாமின் சந்ததிகளுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தையும் உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்காக,

பரலோகத்தில் உள்ளவைகளுகு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்குமாறக்கூடியவைகளாக இருக்கிற நிழலாட்டமான தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும், கட்டளைகளாக வெளிப்படுத்தப்படுகிறதின் மூலம்ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரித்து கொள்ளுவதற்காக ஜீவப்பிரமாணங்களை கொடுத்தார்.

இவைகளுடன் ஆதாமின் மீறுதலினால், ஆதாம் முதல் மோசே வரைக்கும்; பாவஞ்செய்யாதவர்களையும் மரணமானது ஆண்டுகொண்டிருந்த படியால், முதலாம் உடண்படிக்கையின் மூலம் பாவிகளுக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டு: அவைகளின் நன்மை தீமைகள் மூலம், பாவம் செய்கிறவர்களுக்கு மரணத்தைஆளுகை செய்யும் வல்லமைகள்கணக்கிடப்பட்டு, நியத்தீர்ப்புகள்கொடுக்கப்பட்டது.

ஆகையால் இதுமுதற்கொண்டு இவைகளை பின்பற்றி நிதானித்து, பகுத்தறிந்து கொண்டு இவைகளின் மூலம் தேவனுக்கு ஆராதனையை செலுத்துகிறவர்களை தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாகபிரித்தெடுக்கிறார்Act_7:17,Eze_20:23-25,1Ti_1:9-11; Act_7:38,Deu_33:2;Deu_4:13-14; Deu_5:28-33; Deu_6:1-2; Rom_9:30-33;

1-8 தேவனாகிய கர்த்தர், தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: கட்டளையிட்டவைகளையும்,  கட்டளையிடாதவைகளையும்கலந்து பின்பற்றுகிறவர்களை தேவன் புறஜாதிகளாக பிரித்தெடுக்கிறார்:-

தேவனாகிய கர்த்தர், தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: தேவன் கட்டளையிடாதஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும், பின்பற்றுகிறவர்கள் அவைகளின் நிழலாட்டமானவைகளிலிருந்து பரலோகத்தில் உள்ளவைகளுக்குவரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்குமாறக்கூடாதவைகளை நிதானித்து,

பகுத்தறிந்து கொள்ளாமல் ஆராதனை செய்கிறவர்கள் மனிதர்களையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தேவர்களையும் ஆராதனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆகையால் இதுமுதற்கொண்டு இவர்களை தேவன் புறஜாதிகளாக பிரித்தெடுக்கிறார்.

2-0 நியாயப்பிரமாணத்தின் மூலம் வருகிற தேவனுடைய இரட்சிப்பின் பிரமாணங்கள்

2-1 நியாயப்பிரமாணத்தின் மூலம் வருகிற தேவனுடைய இரட்சிப்பின் பிரமாணம்

2-2 நியாயப்பிரமாண இரட்சிப்பின் பிரமாணம்

2-3 நியாப்பிரமாணத்தில் சாட்சியிருக்கிற மூலக்காரணிகள்

2-4 நியாயப்பிரமாணம் இருதயத்தில் சாட்யிருக்கிற படியால் வெளிப்பட்ட நன்மைகளின் கிரியைகள்

2-5 நியாயப்பிரமாணம் வாயினால் சாட்சியிடுகிற படியால் வெளிப்பட்ட தீமைகளின் கிரியைகள்

2-6 நியாயப்பிரமாணத்தின் சாபத்தை ஜெயங்கொள்ளும் வழி முறைகள்

2-7 நியாயப்பிரமாணத்தின் சாபத்தை ஜெயங்கொண்டவர் களின் பிரதிபலன்கள்

2-8 நியாயப்பிரமாணத்தின் சாபத்தை ஜெயங்கொள்ளாத வர்களின் பிரதிபலன்கள்

2-1 நியாயப்பிரமாணத்தின் மூலம் வருகிற தேவ னுடைய இரட்சிப்பு :-

பொதுவான இரட்சிப்பு / ஜாதிகளின் இரட்சிப்பு ஆவி, ஆத்துமா மட்டும் அக்கினி நரகத்திலிருந்து இரட்சிப்பை பெற்றுக் கொண்டு; சரீரம் பாதாளத்தின் வல்லமையினால், தேவனுடைய ரூப மும், சாயலையும் பெற்றுக் கொள்ளாமல் மரணமடைகிறது.

Jud_1:3, 1Co_3:11-15, 1Co_5:1-5, 1Co_15:35-38, 1Co_15:39-46, Psa_49:14, Job_18:14 , Job_14:7,

2-2 நியாயப்பிரமாண இரட்சிப்பின் பிரமாணம் :-

நியாயப்பிரமாணம் / மனசாட்சிப் பிரமாணம் / ஜாதிகளின் பிரமாணம் / பத்து கட்டளைகள் சீனாய் மலையில் உண்டான உடன் படிக்கை Lev_18:5, Rom_10:5, Gal_4:21-25, Gal_4:26-31,Gal_3:20, 1Ti_1:9-11, Eze_20:25,

2-3 நியாயப்பிரமாணத்தில் சாட்சியிருக்கிற மூலக் காரணிகள் :-

நியாயப்பிரமாணத்தின் மூலம் நன்மை + தீமைகள் இருதயத் தில் சாட்சியிருக்கிறது.

மனசாட்சியின் மூலம் குற்றமுண்டு + குற்றமில்லை என்று இருதயத்தில் சாட்சியிருக்கிறது. Rom_2:14-15, Rom_2:27,Rom_7:7-13, Deu_30:14-15 , Mic_6:8-9,

2-4 நியாயப்பிரமாணம் இருதயத்தில் சாட்யிருக்கிற படி யால் வெளிப்பட்ட நன்மைகளின் கிரியைகள்:-

நியாயப்பிரமாணம் இருதயத்தில் சாட்யிருக்கிற படியால், நியாப்பிரமாணத்தின் மூலம் வருகிற சுய நீதியினால் மனுஷர்களுக்கு முண்பாக நீதிமான், ஆனால் இது தேவனுக்கு முன்பாக நீதிமான் அல்ல.

நியாயப்பிரமாணம் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு கிறிஸ்துவின் விசுவாச நீதிக்கு வழி நடத்துகிறது.

 Gal_2:15, Gal_3:10-12,Gal_3:19-25, Rom_3:19-22, Phi_3:9-11,

2-5 நியாயப்பிரமாணம் வாயினால் சாட்சியிருக்கிற படியால் வெளிப்பட்ட தீமைகளின் கிரியைகள் :-

நியாயப்பிரமாண வார்த்தைகளை வாயினால் சாட்யிடு கிறவர்களுக்கு, நியாயப்பிரமாணத்தினுடைய நீதியின் கிரியைகள் இல்லாமலிருந்து; பாவத்தினால் ஆவி, ஆத்துமாவில் மரணம் ஏற்பட்டு, நியாயப்பிர மாணத்தின் சாபங்கள் அவர்களை பின் தொடருகிறது

 Gal_3:10, Rom_2:6-12, Rom_2:17-24,Rom_2:25-29, Rom_7:5, Rom_7:14-25,Eph_2:1-3,

2-6 நியாயப்பிரமாணத்தின் சாபத்தை ஜெயங்கொள் ளும் வழி முறைகள் :-

நியாயப்பிரமாணத்தின் மூலம் வெளிப்பட்ட தீமைகளை நன்மையினால் ஜெயங்கொண்டு கரும பாவங்களை ஜெயங்கொள் ளுவது / கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் பாவத்தை, மாம்சத்திலே பலி செலுத்துவதால் நியாயப்பிரமாண நிதியை நிறை வேற்றுவது. Rom_8:1-4, Rom_8:5-11, Rom_10:5,Lev_18:5, 1Pe_3:16-18, 1Pe_4:16, 2Pe_2:19, Rom_2:25-29,

2-7 நியாயப்பிரமாணத்தின் சாபத்தை ஜெயங்கொண்ட வர்களின் பிரதிபலன்கள்:-

ஆவி, ஆத்துமா இரண்டாம் மரணமாகிய அக்கினி நரகத்தி லிருந்து விருதலையாக்கப்படுகிறது ஆனால் சரீரம் முதலாம் மரண மாகிய பாதாளத்தின் வல்லமைகளை ஜெயங்கொள்ள முடியாத படியால் சரீரம் தேவனுடைய ரூபத்திலும் சாயலிலும் மரணமடைந்து, மிருக சாயலை பெற்றுக் கொள்ளுகிறது

1Co_5:1-5, 1Co_15:35-38,1Co_15:39-44, Mat_6:25, Psa_49:14 , Job_18:5-14, Job_18:15-21,

2-8 நியாயப்பிரமாணத்தின் சாபத்தை ஜெயங்கொள்ளாதவர்களின் பிரதிபலன்கள் :-

மனச்சாட்சிப் பிரமாணமாகிய நியாயப்பிரமாணத்தை கைக் கொள்ளாதபடியால், பாவம் இவர்களை ஜெயங்கொள்ளுகிறது, இதனால் ஆவி, ஆத்துமா, சரீரம் மரணமடைகிறது; இவர்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்த கமும் எரிகிற அக்கினி கடலில் தள்ளப்படுகிறது.

Rom_2:11-12, Rom_5:20-21, Gal_3:10, Heb_10:28, Jam_2:8-13, Jam_4:11-12

3-0 முதலாம் உடன்படிக்கை V/S இரண்டாம் உடன்படிக்கை

3-1 ஆபிரகாமின்சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களைசுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாகபிரித்தெடுக்கிறார்:-

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நம்முடைய முற்பிதாக்களுக்கு அறியப்பட்ட நாட்களில், ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் நானூற்று முப்பது வருஷத்திற்குப் பின்பு வருகிறபோது;

தேவனாகிய கர்த்தர், யேகோவா என்னும் நாமத்தினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: ஆபிரகாமின் சந்ததிகளுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தையும் உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்காக,

பரலோகத்தில் உள்ளவைகளுக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்குமாறக்கூடியவைகளாக இருக்கிற நிழலாட்டமான தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும், கட்டளைகளாக வெளிப்படுத்தப்படுகிறதின் மூலம்ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரித்து கொள்ளுவதற்காக ஜீவப்பிரமாணங்களை கொடுத்தார்.

இவைகளுடன் ஆதாமின் மீறுதலினால், ஆதாம் முதல் மோசே வரைக்கும்; பாவஞ்செய்யாதவர்களையும் மரணமானது ஆண்டுகொண்டிருந்த படியால், முதலாம் உடண்படிக்கையின் மூலம் பாவிகளுக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டு: அவைகளின் நன்மை தீமைகள் மூலம், பாவம் செய்கிறவர்களுக்கு மரணத்தைஆளுகை செய்யும் வல்லமைகள்கணக்கிடப்பட்டு, நியத்தீர்ப்புகள்கொடுக்கப்பட்டது.

ஆகையால் இதுமுதற்கொண்டு இவைகளை பின்பற்றி நிதானித்து, பகுத்தறிந்து கொண்டு இவைகளின் மூலம் தேவனுக்கு ஆராதனையை செலுத்துகிறவர்களை தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாகபிரித்தெடுக்கிறார்Act_7:17,Eze_20:23-25,1Ti_1:9-11; Act_7:38,Deu_33:2;Deu_4:13-14; Deu_5:28-33; Deu_6:1-2; Rom_9:30-33;

3-2 ஆபிரகாமின்சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களைசுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; இயேசு கிறிஸ்துவின் மூலம் இரண்டாம் உடண்படிக்கையின் புதியஏற்பாட்டினால்தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாகபிரித்தெடுக்கிறார்:-

ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி கிறிஸ்து வருகிறபோது, ஆபிரகாமின்சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களைசுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக;தேவன் வார்த்தையிலிருந்து மாம்சமாகமாறி,

இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் ஜனங்களுக்குநேரடியாக வார்த்தையின் மூலம் வெளிப்பட்டு,பரலோகராஜ்யத்தின்உவமைகளின்இரசியங்கள்மூலமாகபரலோகத்திலுள்ளவைகளூக்குவரப்போகிற உன்மையான நன்மைகளுக்குரிய நேரடியான பொருளாகியசத்தியங்களை,வெளிப்படுத்தின பின்பு,

இயேசுகிறிஸ்து நியாயப்பிரமாணத்தின்படி, பரலோகத்தில்உள்ளவைகளூக்கு சாயலானவைகளையும், நிழலாட்ட மானவைகளையும், இரத்தஞ்சிந்துதலினாலே சுத்திகரிக்கப்படும் வழிமுறைகளினால்:  பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரண பலிகளையும், நிறைவேற்றுவதற்காக,

கொல்கோதா, மலையின்மேல்தன்னுடையஆவி,ஆத்துமா, சரீரத்தை குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது,அவைகளைபரலோகத்திலுள்ளவைகளூக்குவரப்போகிற உன்மையான நன்மைகளுக்குரிய நேரடியான பொருளாகியசத்தியங்களைநிருபித்துவெளிப்படுத்தினபடியால்

முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் ஆபிரகாமிற்கு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.

முதலாம் ஆதாம் முதல், இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து வரைக்கும், பாவஞ்செய்யாதவர்களையும், ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் ஆண்டுகொண்டிருந்த படியால், இரண்டாம் உடண்படிக்கையின் மூலம் நீதிமான்களுக்கு; கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணம் வெளிப்பட்டு: அவைகளின் நன்மை தீமைகள் மூலம், தேவ நீதியின் கிரியைகள்செய்கிறவர்களுக்கு நித்திய ஜீவனை ஆளுகை செய்யும் வல்லமைகள்கணக்கிடப்பட்டு, நியத்தீர்ப்புகள்கொடுக்கப்பட்டது.

Gal_3:15-20;Heb_2:13-20, Heb_9:16-24, Heb_10:19-25; Heb_6:13-20,

3-3 ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி கிறிஸ்து வருகிறபோது, இரண்டு மாறாத விசேஷங்களினால், நேரடியாகவெளிப்படுத்துகிறார்;-

ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி கிறிஸ்து வருகிறபோது, ஆபிரகாமின்சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களைசுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; கிறிஸ்து, மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை கடந்து வந்து: இரண்டு மாறாத விசேஷங்களினால், நேரடியாகவெளிப்படுத்துகிறார்;-

ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற கிறிஸ்துவின் சந்ததிகள் / 1,44,000 வரிசையில் வருகிறவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக, நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை கடந்து வந்து:

தேவனிடத்தில் அடைக்கலமாக ஓடிவருகிறவர்களுக்கு மாதியாக, இரண்டு மாறாத விசேஷங்களினால், அவைகளை சுதந்தரித்துக் கொண்டு, பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.

Joh_3:13; Heb_2:13-20, Joh_6:33, Joh_6:38, Joh_6:51, Joh_6:62, Joh_8:42, Joh_13:3-10, Joh_16:28-30, Joh_17:5;Eph_4:7-13,Eph_4:14-16; Joh_17:1-5, Joh_17:6-10, Joh_17:11-15, Joh_17:16-20, Joh_17:21-26, Heb_9:16-20,Heb_9:21-24,

3-4 ஆபிரகாமின்சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களைசுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; கிறிஸ்து, மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை கடந்து வந்து: நேரடியாகவெளிப்படுத்தின நிலையானதும் உறுதியானதுமான இரண்டு மாறாத விசேஷங்கள்;-

1 சாவுக்கேதுவாகிய ஆவி,ஆத்துமா,சரீரம் மரணத்தின் அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, சாவாமையை தரித்துக் கொள்ளுகிறவர்கள். முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைந்து தேவனுடைய சாயலையும் ரூபத்தையும் சுதந்தரித்துக்கொள்ளூகிறார்கள்.

2அழிவுள்ள மாயைகளின் அடிமைத்தனத்தினின்று ஆவி,ஆத்துமா,சரீரம், விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் சுதந்தரித்துக்கொள்ளூகிறார்கள்.

3-5 கிறிஸ்து பாவத்தை ஆக்கினி தீர்ப்பு செய்யும் வழிமுறைகளின் மூலம் பரலோகத்தில் உள்ளவைகளுக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்குமாறக்கூடியவைகளாக இருக்கிற தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும் பின்பற்றி,தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறதினால் தேவனுக்கு புத்தியுள்ள ஆராதனை செய்கிறார்கள்;

இப்படி இவர்கள் சாவுக்கேதுவாகிய ஆவி,ஆத்துமா,சரீரம் பாதாளத்தின் வல்லமையாகிய முதலாம் மரணத்தை ஜெயங்கொள்ளுகிற சாவாமையை தரித்துக்கொள்ளுகிறபோது, முதலாம் மரணமும், இரண்டாம் மரணமும், ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறுகிறது,

மேலும் சாவுக்கேதுவாகிய ஆவி,ஆத்துமா,சரீரம் பாதாளத்தின் வல்லமையாகிய முதலாம் மரணத்தை ஜெயங்கொள்ளுகிறதினால் , முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைந்து தேவனுடைய சாயலையும் ரூபத்தையும் சுதந்தரித்துக்கொள்ளூகிறார்கள்.

3-6 இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் ஜனங்களுக்குநேரடியாக வார்த்தையின் மூலம் வெளிப்பட்டு,பரலோகராஜ்யத்தின்உவமைகளின்இரசியங்கள்மூலமாக,பரலோகத்திலுள்ளவைகளூக்குவரப்போகிற உன்மையான நன்மைகளுக்குரிய நேரடியான பொருளாகியசத்தியங்களின் மூலம்:

பரலோகராஜ்யத்தின் இரசியங்களாகிய தேவனுடைய சத்தியமான வசனங்களை தங்கள் இருதயத்தில் விருந்தாக புசித்தவர்கள்; அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்,

இவர்கள் அழிவுள்ளதாகிய மாயைக்குக் கீழ்ப்பட்டிருந்து, இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, தங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுகிறார்கள்;

இவர்கள் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், தனக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய், தனக்குத் தேவன் பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணத்தின்படி: தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி அழியாமையை தரித்துக்கொள்ளுகிறபோது, அழிவுள்ளதாகிய மாயை ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறுகிறது.

2Co_5:1-5,2Co_5:6-10,1Co_15:50-58,Rom_12:1-6;;Rom_8:1-8, Rom_8:9-15, Rom_8:16-22, Rom_8:23-29; Gal_3:15-20;Heb_2:13-20, Heb_9:16-24, Heb_10:19-25; Heb_6:13-20, 1Pe_1:21-25


Social Media
Location

The Scripture Feast Ministries