தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 06


நித்திய ஜீவ வார்த்தைகளினால் கடைசிகால இரட்சிப்பின் நற்செய்தி

பொருளடக்கம் 15-16-17

15. சபைகளில் சுய நீதியின் வஸ்திரம் தரித்து விருந்து
16. மறுதேசத்து வஸ்திரம் தரித்திருக்கிற ராஜகுமாரரின் விருந்து.
17. சுய நீதியின் வஸ்திரம் / மறுதேசத்து ராஜகுமாரரின் வஸ்திரம் தரித்து விருந்து கொண்டாடுகிறவர்களின் பிரதிபலன்கள். 

அத்தியாயம் பதினைந்து
 
சபைகளில் சுய நீதியின் வஸ்திரம் தரித்து விருந்து:-
 
வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்துக் கொண்டு நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள்ளா மல், தங்கள் சுய நீதியின் வஸ்திரம் தரித்துக்கொண்டு தேவனுடைய வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசாக / பிரதிபலனாக இந்த பூமியில் தங்கள் விரும்பின பதவிகளை தங்க ளுடைய பிரதிபலனுக்காக தாங்களே, தங்களுக்கு நியமித்துக் கொள்ளுதல்
 
Est 1:9 ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள். 
 
Est 1:10 ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் சௌந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று, 
 
Est 1:11 ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான். 
 
Est 1:12 ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான். 
 
Est 1:13 அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள். 
 
Est 1:14 ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி: 
 
Est 1:15 ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான். 
 
Est 1:16 அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவுக்கு மாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள். 
 
Est 1:17 ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரீயாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரீகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள். 
 
Est 1:18 இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் ஸ்திரீகள் ராஜஸ்திரீயின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும். 
 
Est 1:19 ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப் பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும். 
 
Est 1:20 இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரணமான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான். 
 
Est 1:21 இந்த வார்த்தை ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் நலமாய்த் தோன்றினதினால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து, 
 
Est 1:22 எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத் தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான். Isa_4:1, Rom_2:17-24, 1Ti_1:5-11, Isa_2:5-6, Isa_5:8-12, 1Co_3:1-9, Jer_4:1-6, Jdg_5:9-11, Jud_1:10-16, 
 
அத்தியாயம் பதினாறு
 
மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற ராஜகுமாரரின் விருந்து :-
 
வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்துக் கொண்டு நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள் ளாமல், தங்கள் சுய நீதியின் வஸ்திரம் தரித்துக்கொண்டு தேவனுடைய வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொண்டவர்கள் : தங்கள் மனம் விரும்பின தேவனுடைய இராஜ்ஜியத்தின் பதவிகளை தங்களுடைய பிரதிபலனுக்காக இந்த பூமியிலே தாங்களே, தங்களுக்கு நியமித்துக் கொள்ளுதல்
 
Zep 1:4 நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும், 
 
Zep 1:5 வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும், 
 
Zep 1:6 கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன். 
 
Zep 1:7 கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். 
 
Zep 1:8 கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன். 
 
Zep 1:9 வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன். 
 
Zep 1:10 அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார். Zep_1:4-10, Amo_6:1-8, Amo_6:9-13, Dan_5:1, Isa_65:8-14, 1Co_11:18-22, Pro_5:1-6,Pro_5:7-13, Pro_5:14-20, Pro_5:21-23, Pro_2:10-15, Pro_2:16-19, Pro_2:20-22, Pro_6:23-24, Pro_7:1-5 , Pro_7:6-10, Pro_7:11-15, Pro_7:16-20, Pro_7:21-27, Pro_9:13-18,
 
அத்தியாயம் பதினேழு
 
வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்துக்கொண்டு நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள்ளாமல், தங்கள் சுய நீதியின் வஸ்திரம் / மறுதேசத்து ராஜ குமாரரின் வஸ்திரம் தரித்துக்கொண்டு தேவனுடைய வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு தேவனுடைய நீதியுள்ள நியாயத் தீர்ப்பு 
 
வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்துக்கொண்டு நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு: தேவன் தம்முடைய இராஜ்ஜியத்தின் பதவிகளை பரிசாக கொடுக்க வரும்போது ;
 
Luk 14:7 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: 
 
Luk 14:8 ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். 
 
Luk 14:9 அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். 
 
Luk 14:10 நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும். 
 
Luk 14:11 தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். 
 
ஆனால் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவன் பந்தியில் மிகவும் முதன்மையான இடமாகிய இராஜாவின் ஸ்தானத் தில் அமர்ந்து கொண்டு, நான் தான் கிறிஸ்து என்று சொல்லிக் கொள்ளுகிற இராஜ வஸ்திரத்தை தரித்திருக்கிறவனைப் பார்த்து : 
 
Mat 22:11 விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: 
 
Mat 22:12 சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். 
 
Mat 22:13 அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். 
 
Mat 22:14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். 
 
Mat 24:3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். 
 
Mat 24:4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 
 
Mat 24:5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். 
 
Isa 65:12 Isa_65:12, ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் : இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள் ; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள். 
 
Isa 65:13 Isa_65:13, இதோ, என் ஊழியக்காரர் மன மகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மன நோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள். . Mat_23:5-12, Mat_24:23-26, Joh_7:18, Joh_12:43, Isa_2:5-6, 1Th_2:6,Rom_11:8-10, Psa_69:22-28, Psa_109:5-10, Isa_28:7-13,Isa_29:9-14,Jer_7:34, Jer_16:9, Jer_25:10, Rev_18:23, 


Previous
Home

Social Media
Location

The Scripture Feast Ministries