தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 01


பாழாக்குகிற அருவருப்பு தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ இருதயத்தில் நின்று கொண்டிருக்கிறது. மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது.

பொருளடக்கம் ஒன்று

1-0 பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருக்கிறது மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது தேவனுடைய இராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
 
1-1 கிறிஸ்துவின் முதலாம் வருகையில் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு தேவனை தூரமாய்ப் போகப்பண்ணும்படியாக எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை/ பாழாக்குகிற அருவருப்பை பரிசுத்த ஸ்தலத்தில் / தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிறுத்தினவர்களின் ஆடையாளங்கள்
 
1-2 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு தேவனை தூரமாய்ப் போகப்பண்ணும்படியாக எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை/ பாழாக்குகிற அருவருப்பை பரிசுத்த ஸ்தலத்தில் / தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிறுத்தினவர்களின் ஆடையாளங்கள்
 
1-3 பழைய ஏற்பாடு தேவனுடைய ஜனங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் / தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்து சிலர் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகாராதனைக்காரர் ஆனார்கள்./ பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினார்கள்
 
1-4 புதிய ஏற்பாடு தேவனுடைய ஜனங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்து சிலர் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகாராதனைக்காரர் ஆனார்கள்./ பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினார்கள்
 
1-5-0 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகளின் அடையாளங்கள்
 
1-6-0 பரிசுத்த ஸ்தலத்தில் / தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டிகள் பரலோகராஜ்யத்தை திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
 
1-0 பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் பரிசுத்த ஸ்தலத்தில் / தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருக்கிறது தேவனுடைய இராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். . ( Mat 24:14) 
 
இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். 
 
இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். Mat 24:1-2 
 
தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு தேவனை தூரமாய்ப் போகப்பண்ணும்படியாக இஸ்ரவேல் வம்சத்தார் பலிபீடத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பு நிறுத்தியிருக்கிறார்கள் ஆகையால் இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று கட்டளையிட்டார்.
 
1-1 கிறிஸ்துவின் முதலாம் வருகையில் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு தேவனை தூரமாய்ப் போகப்பண்ணும்படியாக எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை/ பாழாக்குகிற அருவருப்பை பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிறுத்தினவர்களின் ஆடையாளங்கள்:-
 
அவர் என்னைப்பார்த்து: மனுபுத்திரனே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது. Eze 8:5 
 
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி, Eze 8:6 
 
என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன். அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது. அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார். Eze 8:7-9 
 
நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும் பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன. Eze 8:10 
 
இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன் தன் கையிலே தன் தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள்; தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று. Eze 8:11 
 
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார். Eze 8:12 
 
1-2 கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு தேவனை தூரமாய்ப் போகப்பண்ணும்படியாக எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை/ பாழாக்குகிற அருவருப்பை பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிறுத்தினவர்களின் ஆடையாளங்கள்:-
 
இயேசு ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்து வந்து: தேவாலயத்தின் கட்டடங்களுடைய ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போவது எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். Mat 24:1-3 
 
1-2-1 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். 
 
1-2-2 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், தேவாலயத்தின் கட்டடங்களுடைய ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போவது, மற்றும் மனுஷகுமாரனுடைய வருகைக்கும், உலகத்திற்கும் முடிவு உடனே வராது. (Mat 24:4-6) 
 
1-2-3 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்;
 
1-2-4 பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். Mat 24:7-8 
 
1-2-5 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். 
 
1-2-6 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம் முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். Mat 24:9-13 
 
பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் பரிசுத்த ஸ்தலத்தில் / தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிறுத்தினவர்களின் ஆடையாளங்களை தேவனுடைய இராஜ்யத்தினுடைய சுவிசேஷமாக பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது அவருடைய சீஷர்கள் கிழே குறிப்பிட்டு கேட்ட மூன்று கேள்விகளுக்கு முடிவு வரும் (Mat 24:14, Mat 24:1-3) 
 
1 தேவாலயத்தின் கட்டடங்களுடைய ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போவது எப்பொழுது சம்பவிக்கும்?
 
2 மனுஷகுமாரனுடைய வருகைக்கு அடையாளம் என்ன?
 
3 உலகத்தின் முடிவுக்கு அடையாளம் என்ன?
 
1-2-7 அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். Mat 24:23-24 
 
அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். 2Th 2:7-8 
 
அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். 2Th 2:9-10 
 
ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். 2Th 2:11-12 
 
1-2-8 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். Mat 24:25-27 
 
1-3 பழைய ஏற்பாடு தேவனுடைய ஜனங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்து சிலர் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகாராதனைக்காரர் ஆனார்கள்./ பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினார்கள்:-
 
மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள். (யாத்திராகமம் 32:1) 
 
அப்பொழுது நான்: பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான். (யாத்திராகமம் 32:24)
 
ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான். மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள். (யாத்திராகமம் 32:5-6)
 
ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்.(1கொரிந்தியர் 10:7) இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். (1கொரிந்தியர் 10:11-12) 
 
1-4 புதிய ஏற்பாடு தேவனுடைய ஜனங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்து சிலர் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகாராதனைக்காரர் ஆனார்கள்./ பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினார்கள்:-
 
(உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள புதிய ஏற்பாடு தேவனுடைய ஜனங்களாகிய நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிற; மேலே குறிப்பிட்ட பழைய ஏற்பாட்டினுடைய திருஷ்டாந்தங்களின் பொருளடக்கம்) 
 
மேலே குறிப்பிட்ட பழைய ஏற்பாடு தேவனுடைய ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்து சிலர் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகாராதனைக்காரர் ஆனது போல; புதிய ஏற்பாடு தேவனுடைய ஜனங்களூம் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்து சிலர் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகாராதனைக்காரர் ஆனார்கள் 
 
கிறிஸ்து பரலோகத்திலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை புதிய ஏற்பாடு கிறிஸ்தவ மதத்தின் ஏழு பலத்த/பெரிய சபைகள்/ ஏழு ஸ்திரீகள் கண்டபோது, அவர்கள் ஆரோன்/ஆரோனுடைய சந்ததியாரிடத்தில் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: எகிப்தின் அநித்தியமான பாவசந்தோஷங்களிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்து, இரட்சிப்பை கொடுத்த அந்த கிறிஸ்துவிற்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீங்கள் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தேவனுடைய ஆராதணை முறைகளை எங்களுக்காக உண்டுபண்ணுங்கள் என்றார்கள். 
 
அப்பொழுது ஆரோன்/ஆரோனுடைய சந்ததியார்கள் கிறிஸ்தவ மதத்தின் ஏழு பலத்த/பெரிய சபைகள்/ ஏழு ஸ்திரீகள் பின்பற்றுகிற கீழே குறிப்பிட்ட உபதேசங்களின் ஆலோசனைகளை கேட்டு, அவைகளை பகுத்து,பிரித்து, வரிசைப்படுத்தினபோது மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகள்: கிறிஸ்தவ மதத்தின் பிரிவினைகளோடு கலந்த மார்க்கபேதங்களின் சபை உபதேசங்களாக வெளிப்பட்டது. 
 
1 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் மூல உபதேசங்கள் 2 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் பிரிவினைகளின் உபதேசங்கள்
 
3 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் மார்க்க பேதங்களின் உபதேசங்கள்
 
4 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் மனிதனுடைய உபதேசங்கள்
 
5 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் முன்னோர்களின் உபதேசங்கள்
 
6 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் ஜாதிகளின் உபதேசங்கள் 
 
7 கிறிஸ்தவ சபை/ இருதயத்தில் விக்கிரகங்களின் உபதேசங்கள்
 
புதிய ஏற்பாடு தேவனுடைய ஜனங்கள் / கிறிஸ்தவ மதத்தின் ஏழு பலத்த/பெரிய சபைகள்/ ஏழு ஸ்திரீகள் தங்கள் விரும்பின தேவனுடைய வார்த்தைகளை தங்கள் சொந்த ஆவி ஆத்துமாவின் ஆகாரமாக புசித்து, தங்கள் சொந்த நீதியின் கிரியைகளை வெளிப்படுத்துவதற்காக தங்கள் விரும்பின வண்ணங்களில் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு; ஒரே பூரண புருஷனாகிய கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக்கொண்டு எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு கிறிஸ்துவின் பெயர் மாத்திரம் எங்கள்மேல் கிறிஸ்தவர்கள் என்று விளங்கட்டும் என்பார்கள். (ஏசாயா 4:1)
 
இப்படிப்பட்ட மனுஷருடைய கற்பனைகளையும் கிறிஸ்தவ மதத்தின் பிரிவினைகளோடு கலந்த மார்க்கபேதங்களையும் சபையின் உபதேசங்களாகப் போதித்து, வீணாய் தேவனுக்கு ஆராதனை செய்து; பின்பு ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்திருக்கும் இந்த ஆராதனை முறைகள்: பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரக ஆராதனையாகவும், பாழாக்குகிற அருவருப்பாகவும் நின்றுகொண்டிருக்கிறது (1கொரிந்தியர் 10:7,மத்தேயு 15:9, ஏசாயா 29:13)
 
1-5-0 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகளின் அடையாளங்கள்
 
1-5-1 பரிசுத்த ஸ்தலத்தில் / தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் விசுவாச உடன்படிக்கையில் நிலைத்திருக்காமல் தேவனுடைய சபையாகிய ஸ்திரீயை தீட்டுப்படுத்தி கறைப்படுத்துகிறார்கள்:-
 
இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொள்ளும் போது செய்து கொண்ட கிறிஸ்துவின் விசுவாச உடன் படிக்கையில் முடிவு வரை நிலைத்திருக்காமல், பாதியிலே மீறினபடியால்: கற்புள்ள கன்னிகை என்ற நல்ல பெயரை இழந்து, தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தினவர்கள் உடன் படிக்கையின் துரோகிகள்.
 
இவர்கள் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் மாயைகளையும் பொய்களையும் பின் தொடர்ந்து பரிசுத்த ஸ்தலத்தை/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தை பரிசுத்தக் குலைச்சலாக்கி, அன்றாட பலியாகிய மனந்திரும்புதலை முடிவுக்கு கொண்டு வந்து தேவனுடைய சபையாகிய ஸ்திரீயை தீட்டுப்படுத்தி கறைப்படுத்துகிறார்கள்
 
2Co_11:2-3, 2Th_2:1-12; Jer_2:20-25, Mat_25:1-4,Eph_4:30, Mal_2:15-16,Rev_14:4-5, Isa_4:1-6,
 
1-5-2 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் விடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தை அசட்டைபண்ணி தங்களூடைய ஊழியங்களூக்கு போய்விட்டார்கள்:-
 
1 அநேகர் தன் வயலுக்கு/ ஊழியத்திற்கு போய் விட்டார்கள்
 
2 அநேகர் தன் வியாபாரத்துக்கு/ பொருளாசையை பின் தொடர்ந்து போய் விட்டார்கள். 
 
3 அநேகர் தேவனுடைய ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தினார்கள்.
 
4 அநேகர் தேவனுடைய ஊழியக்காரரைப் பிடித்து, கொலை செய்தார்கள்.
 
5 அநேகர் நான் ஒரு வயலை / ஊழியத்தைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப்பார்க்க வேண்டும், என்றார்கள்.
 
6 அநேகர் நான் ஐந்தேர்மாடு/ ஐந்து வகையான ஊழியத்தைக் கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்றார்கள். 
 
7 அநேகர் நான் பெண்ணை விவாகம் பண்ணினேன்/ சபையோடு உடன்படிக்கை பண்ணினேன் அதினால் நான் வரக்கூடாது என்றார்கள். Mat_22:2-9,Luk_14:15-22;Luk_14:23-24,Est_1:9-12,Isa_65:13-16,Pro_9:1-6,
 
1-5-3 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் கலியாண வஸ்திரமில்லாமல் தங்கள் சுயநீதியின் வஸ்திரம் தரித்து கலியாண விருந்தை புசித்தபடியால் புறம்பான இருளாகிய அறியாமையிலே தள்ளபடுகிறார்கள்:-
 
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் ஆட்டுக் குட்டியானவருடைய கலியாண வஸ்திரமாகிய சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக் கொள்ளாமல்; தங்கள் சுய நீதியின் வஸ்திரம் தரித்துக் கொண்டு தேவனுடைய சத்தியமான வசனங்களை, ஆட்டுக் குட்டியானவருடைய கலியாண விருந்தாக இருதயத்திலும் அறிவிலும் புசிக்கிறவர்களை கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளாகிய அறியாமையிலே போடப்படுவார்கள்
 
Rev_19:7-8, Rev_3:4-5, Rev_3:18, Isa_61:10, Zec_3:3-4, Zep_1:8-9, Mat_22:11-14, Mat_7:21-23, Luk_13:23-27; Rev_16:12-15, Rev_17:13-14, Rev_17:8, Rev_22:14-16, 2Ch_18:18-22; Eze_14:9; 
 
1-5-4 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்; மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவின் சொரூபத்தை வணங்கி தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளுகிறார்கள்:-
 
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழுமுத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் / அறிவில் ஏற்றுக் கொள்ளாமலிருக்கிறபோது, அவர்களுடைய இரட்சிப்பு மரணமடைகிறது; மேலும் மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவின் சொரூபத்தை வணங்கி தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளுகிறவர்களுக்கு கிழே குறிப்பிட்ட தேவனுடைய கோபாக்கினைகள் பின் தொடரும்.
 
மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன்கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளு கிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக் குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். Rev_14:9-12,
 
1-5-5 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகளின் வாதை மகா கொடிதாயிருந்தபடியால். பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை:-.
 
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் தேவ சுரமண்டலமாகிய இருதயத்தில் தேவ சுரமண்டல இராகங்களை வாசித்து தேவனுடைய இரகசியங்களை கற்றுக்கொண்டு தேவனை துதிக்காமல்: மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு கிழே குறிப்பிட்ட தேவனுடைய கோபாக்கினைகள் பின் தொடரும்
 
அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது. தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக் கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான். Rev_14:9-12, .Rev_13:8-10
 
1-5-6 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்: தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்களுக்கு கீழ்படியாமல் இருக்கிறபோது வருகிற சாபங்கள் புலம்பலின் பாடலாக மாறுகிறது.
 
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் சியோனின் பாட்டாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக் குட்டியான வருடைய பாட்டையும் கற்றுக்கொண்டு பாடதவர்களுக்கு; தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசே, மற்றும் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய உடன் படிக்கையின் பிரமாணங்கள் மற்றும், எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்கள்; ஆகியவைகளின் மூலம் வருகிற சாபங்கள் புலம்பலின் பாடலாக இவர்களை பின் தொடரும் Lev_26:13-20, Deu_28:15-22
 
1-5-7 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்: பரிசுத்த ஆவியின் உடன்படிக்கையின் பிரமாணங்களுக்கு கீழ்படியாமல் இருக்கிறபோது தாறுமாறுகளின் ஆவிகளுக்கும் பைத்தியத்தின் ஆவிகளுக்கும் அடிமைப்பட்டு பரிகாசமும் நித்தையையும் அனுபவிக்கிறார்கள்.
 
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் முன் மாரி மழையாகிய பரிசுத்த ஆவியையும், பின் மாரி மழையாகிய அபிஷேக ஆவியையும்; ஓய்வு நாள் பிரமாணத்தை பின்பற்றி எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களிள் காத்திருந்து எலியாவின் ஆவியை பெற்றுக் கொள்ளாமல்: பரிசுத்த ஆவியின் உடன் படிக்கையை தள்ளி மீண்டும் பாவ மனிதனின் ஆவிக்கு அடிமைப்படுகிறவர்களுக்கு தேவனுடைய கோபாக்கினைகள் பின் தொடரும். Luk_17:30-33,Heb_6:4-8, Heb_10:26-27; Heb_10:28-31, Heb_12:15-17; 2Th_2:1-12; 2Pe_2:20-22 
 
1-5-8 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்: பரிசுத்த ஆவியின் உடன்படிக்கையை முறித்து; மனிதனால் உருவாக்கப்பட்ட ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிறபோது தேவனுடைய கோபாக்கினைகள் பின்தொடருகிறது.
 
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற விசுவாச அளவுப் பிரமாணத்தின் ஊழிய அழைப்பை அறிந்து கொண்டு; தேவனுடைய கற்பனைகளையும் இயேசுகிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியையும் பின்பற்றி தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றாமல் மனிதனால் உருவாக்கப்பட்ட ஊழிய அழைப்பை நிறைவேற்று கிறவர்களூக்கு கிழே குறிப்பிட்ட வசனங்களின் படி தேவனுடைய கோபாக்கினைகள் பின் தொடரும்
 
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்
 
.Luk_17:30-33;Mat_24:18-21,Mat_7:21-27; Luk_13:22-30; Rev_21:6-8, Rev_22:10-19
 
1-6-0 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட மணவாட்டிகள் பரலோகராஜ்யத்தை திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்:-
 
1-6-1 அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்
 
1-6-2 வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்
 
1-6-3 அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள் ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 
 
1-6-4 நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிற வர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
 
1-6-5 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள். அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார். Luk 13: 23-30
 
1-6-6 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
 
1-6-7 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (Mat 7:21-23)
 
1-6-8 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. 
 
நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். 
 
நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். Luk_13:23-30; Mat_7:21-23, Mat_25:1-12; Rev_22:10-16,Rev_21:6-8;


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries