தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 01


பாழாக்குகிற அருவருப்பு தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ இருதயத்தில் நின்று கொண்டிருக்கிறது. மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது.

பொருளடக்கம் இரண்டு

2-0 தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிற பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை தேவனுடைய ஜனங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கக் காணும்போது, மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது  வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். 
 
2-1 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வசனங்கள் 
 
2-2 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வசனங்களின் பொருளடக்கம் 
 
2-3 பரிசுத்த ஸ்தலம்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயம் பரிசுத்தக்குலைச்சலாக்காமல் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய கிரியைகளின் தொடர்புடைய வேதவசனங்கள்
 
2-4 தேவனுடைய பரிசுத்த ஸ்தலம் / தேவனுடைய ஆலயமாகிய இருதயம் பரிசுத்தக்குலைச்சலாக்காமல் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய கிரியைகளின் தொடர்புடைய வேதவசனங்களின் பொருளடக்கம் 
 
2-5 நீங்களே தேவனுடைய ஆலயம்
 
2-6 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் அன்றாடபலி/ விளக்கு எரிந்துகொண்டிருக்கும்படி எப்பொழுதும் எண்ணெய் ஊற்றுதல் ஆவியின்படி பொருள் 
 
2-7 உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து தினந்தோறும் இரட்சிப்பின் பாத்திரத்தில் எண்ணெயை சேமித்து வைத்தல் 
 
2-8 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் அன்றாடபலியை பாழாக்குகிற அருவருப்பாக/ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகமாக மாற்றுகிற கிரியைகள் ஆவியின்படி பொருள்
 
2-9 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் ஓய்வுநாள் தகனபலியை பாழாக்குகிற அருவருப்பாக/ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகமாக மாற்றுகிற கிரியைகள் ஆவியின்படி பொருள்
 
2-10 புதிய ஏற்பாட்டில் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருந்த பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்று கொண்டிருக்கிறது 
 
2-11 கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களாகிய களங்கமில்லாத ஞானப்பாலும்’ பலமான ஆகாரமாகிய தேவனுடைய நீதியின் வசனங்களும்
 
2-12 பலமான ஆகாரமான தேவனுடைய நீதியின் விசுவாச வார்த்தையினுடைய சுவிசேஷம் / இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள் 
 
2-13 இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் கிரியைகள்
 
2-14 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு
 
2-15 பழைய ஏற்பாட்டில் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் / பாழாக்குகிற அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் / தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருக்கிறதை உணர்ந்து கொண்டவர்களுக்குள், கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? என்கிற மோசேயின் சத்தத்தை கேட்டு கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணுகிறவர்களின் அடையாளங்கள்
 
2-16 புதிய ஏற்பாட்டில் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் / பாழாக்குகிற அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் / தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருக்கிறதை உணர்ந்து கொண்டவர்களுக்குள், கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? என்கிற தேவனுடைய சத்தத்தை கேட்டு கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணுகிறவர்களின் அடையாளங்கள்
 
2-0 தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிற பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை தேவனுடைய ஜனங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கக் காணும்போது, வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். 
 
2-1 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வசனங்கள்:- 
 
பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் / பாழாக்குகிற அருவருப்பு சேனையினுடைய அதிபதி பரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று; அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது. பாதகத்தினிமித்தம் அன்றாட பலியோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது; அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று; அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது.
 
பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி: அன்றாட பலியைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக்குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான். அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான். (தானியேல் 8:11-14)
 
ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்ட சேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள். உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள். (தானியேல் 11:31-32) 
 
அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள். அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறுநாள் செல்லும். ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான் (தானியேல் 12:10-12) 
 
தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருந்த பாழாக்குகிற அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகமாக நின்று கொண்டிருக்கிறது மேலும் இதன் மூலம் தேவனுடைய நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? ( மத்தேயு 24:14, 1பேதுரு 4:17-18) 
 
2-2 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வசனங்களின் பொருளடக்கம்:- 
 
பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.
 
அன்றாடபலியை நீக்கி, பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்கும் அருவருப்பை பரிசுத்த ஸ்தலத்திலே/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் வைப்பார்கள். அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று; அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது; அப்பொழுது உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்.
 
தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள். அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.
 
2-3 பரிசுத்த ஸ்தலம்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயம் பரிசுத்தக்குலைச்சலாக்காமல் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய கிரியைகளின் தொடர்புடைய வேதவசனங்கள்:-
 
முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது. எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும்; இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்.(எபிரேயர் 9;1-2,) (எபிரேயர் 9;6. எபிரேயர் 9;8-10, லேவிராகமம் 24:1-8)
 
2-4 தேவனுடைய பரிசுத்த ஸ்தலம் / தேவனுடைய ஆலயமாகிய இருதயம் பரிசுத்தக்குலைச்சலாக்காமல் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய கிரியைகளின் தொடர்புடைய வேதவசனங்களின் பொருளடக்கம்:- 
 
தேவனுடைய பரிசுத்த ஸ்தலம் / தேவனுடைய ஆலயமாகிய இருதயம் பரிசுத்தக்குலைச்சலாக்காமல் இருப்பதற்கு தினந்தோறும் பரிசுத்த ஸ்தலத்தில்/ இருதயத்தில் அன்றாடபலியையும் மற்றும் ஓய்வுநாள் தோறும் ஓய்வுநாள் தகனபலியையும் ஆசாரியர்கள் செலுத்த வேண்டும் 
 
தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் அன்றாடபலியை செலுத்துவதின் பொருள் எழுத்தின்படி:- 
 
தேவனுடைய ஆலயமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே/ இருதயத்தில் எப்பொழுதும் குத்துவிளக்கு எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை தினந்தோறும் ஆசாரியர்கள் ஊற்ற வேண்டும்:- 
 
தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் அன்றாடபலியை செலுத்துவதின் பொருள் ஆவியின்படி:- 
 
தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் இரட்சிப்பின் பாத்திரத்தின் மூலமாக கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொண்டு அலட்சியப்படுத்தாமல், எப்பொழுதும் மனந்திரும்பி நற்கிரியைகளுக்கு முன்னேறிச்செல்ல வேண்டும்.
 
தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் ஓய்வுநாள் தகனபலியை செலுத்துவதின் பொருள் எழுத்தின்படி:- 
 
தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் பன்னிரண்டு அப்பத்தை சுத்தமான தூபவர்க்கம் போட்டு ஆசாரியர்கள் அடுக்கிவைக்க. வேண்டும்.
 
தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் ஓய்வுநாள் தகனபலியை செலுத்துவதின் பொருள் ஆவியின்படி:- 
 
தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் ஓய்வுநாள் பிரமாணத்தை/தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்து கலப்படமில்லாத வேதவார்த்தைகளைக் கொண்டு ஜனங்களுக்கு தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.
 
2-5 நீங்களே தேவனுடைய ஆலயம்:-
 
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். (1கொரிந்தியர் 3:16-17) 
 
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! (மத்தேயு 6:22-23 )
 
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும் இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. . (மத்தேயு 5:14-16 ) (லூக்கா 11:33-:36) 3-6 
 
சரீரத்தின் கண்/ விளக்கு ஆவியின்படி பொருள்:-
 
தேவதரிசனங்கள் மனுஷனின் விளக்காயிருக்கிறது.
 
சரீரத்தின் கண்/ விளக்கு வெளிச்சத்தின் பிரகாசம் ஆவியின்படி பொருள்:- 
 
தேவதரிசனங்கள் மூலம் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம்/ உங்கள் நற்கிரியைகள் மனுஷர் முன்பாகப் வெளிப்படுதல் 
 
சரீரத்தின் கண்/ விளக்குத் தண்டு ஆவியின்படி பொருள்:- 
 
தேவதரிசனங்களின் மூலம் ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணம்
 
2-6 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் அன்றாடபலி/ விளக்கு எரிந்துகொண்டிருக்கும்படி எப்பொழுதும் எண்ணெய் ஊற்றுதல் ஆவியின்படி பொருள்:- 
 
தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் தேவதரிசனத்தின் நற்கிரியைகள் வெளிப்படுவதற்காக. கடிந்துகொள்ளுதலை எப்பொழுதும் ஏற்றுக்கொண்டு மனந்திரும்புதல்
 
நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன். (சங்கீதம் 141:5) சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான். (சங்கீதம் 94:13)
 
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. ( 2 தீமோத்தேயு 3:16-17)
 
உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. (யாக்கோபு 5:14-16) 
 
2-7 உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து தினந்தோறும் இரட்சிப்பின் பாத்திரத்தில் எண்ணெயை சேமித்து வைத்தல்:- 
 
உன்னிலுள்ள நற்கிரியைகள் துர்கிரியைகளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. தினந்தோறும் உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக.( பிரசங்கி 9:8)
 
இரட்சிப்பின் பாத்திரத்தில் கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொண்டு அலட்சியப்படுத்தாமல், எப்பொழுதும்/ தினந்தோறும் மனந்திரும்பி நற்கிரியைகளுக்கு முன்னேறிச்செல்ல வேண்டும் 
 
தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் அன்றாடபலியை செழுத்தாமல் இருப்பது எழுத்தின்படி பொருள்:-
 
தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் தினந்தோறும் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றாமல் இருக்கிறபோது விளக்கு வெளிச்சம் அணைந்துபோய் புகையை கக்குகிறது / புகைகிற கொள்ளிக்கட்டையாக மாறுகிறது:- 
 
தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் அன்றாடபலியை செழுத்தாமல் இருப்பது ஆவியின்படி பொருள்:-
 
தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் தினந்தோறும்/ எப்பொழுதும் கடிந்துகொள்ளுதலின் ஆலோசனைகளை அசட்டை பண்ணுகிறபோது, நற்கிரியைகள் துர்கிரியைகளாக மாறி மற்றவர்களுக்கு துன்பம் கொடுக்கிறது
 
ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 
 
முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.(எபிரேயர் 6:4-8, எபிரேயர் 10:24-31,2பேதுரு 2:20-22)
 
2-8 தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில்/ பரிசுத்த ஸ்தலத்தில் அன்றாடபலியை பாழாக்குகிற அருவருப்பாக/ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகமாக மாற்றுகிற கிரியைகள் ஆவியின்படி பொருள்:-
 
எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள். ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார். 
 
உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள். (எரேமியா 23:14- 16) 
 
2-9 தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில்/ பரிசுத்த ஸ்தலத்தில் ஓய்வுநாள் தகனபலியை பாழாக்குகிற அருவருப்பாக/ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகமாக மாற்றுகிற கிரியைகள் ஆவியின்படி பொருள்:-
 
ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழி தப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.
 
கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். (ஏசாயா 28:7-12)
 
குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள்: உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள். என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.(மல்கியா 1:6-7) 
 
அதின் ஆசாரியர்கள் என் வேதத்துக்கு அநியாயஞ்செய்து, என் பரிசுத்த வஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணாமலும், அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பியாமலும் இருந்து, என் ஓய்வுநாட்களுக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள்; அவர்கள் நடுவிலே நான் கனஈனம்பண்ணப்படுகிறேன். (எசேக்கியல் 22:26) 
 
2-10 புதிய ஏற்பாட்டில் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருந்த பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் பரிசுத்த ஸ்தலத்தில் நின்று கொண்டிருக்கிறது:- 
 
தேவனுடைய ஆலயமாகிய இருதயம்/ பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்காமல் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய கிரியைகளின் தொடர்புடைய: அன்றாடபலி மற்றும் ஓய்வுநாள் தகனபலி, ஆகிய வேதவசனங்களின் பொருளடக்கம் பின்பற்றப்படாமல்; கிறிஸ்தவ மதத்தின் ஏழு பலத்த/பெரிய சபைகளின் பிரிவினைகளையும் மார்க்கபேதங்களையும் பின்பற்றுகிற ஜனங்களால் உருவாக்கப்பட்ட சபையின் மூல உபதேச வசனங்கள் /கலப்படமான ஞானப்பால் தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில்/ பரிசுத்த ஸ்தலத்தில் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகமாக / பாழாக்குகிற அருவருப்பாக நின்றுகொண்டிருக்கிறது.
 
கிறிஸ்தவ மதத்தின் ஏழு பலத்த/பெரிய சபைகளின் பிரிவினைகளையும் மார்க்கபேதங்களையும் பின்பற்றுகிற ஜனங்கள் ஜலத்தினால்/ தேவனுடைய வார்த்தைகளினால் மறுபடியும் பிறந்து மனந்திரும்பாமல்; தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்துகொண்டு அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து பேசும்போது தங்களுடைய மாயக்காரனுடைய ஆத்துமா வளச்சியடைய மனுஷரால் போதிக்கப்பட்ட சபையின் மூல உபதேசவசனங்கள்/ கலப்படமான ஞானப்பால்.
 
1.இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை அறிக்கைசெய்தல்.(ரோமர்10:9-10) 
 
2. பாவமன்னிப்பிற்கு இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல்.(அப்போஸ்தலர் 2:38) 
 
3. ஞானஸ்தானம் பெற்றுக்கொள்ளுதல்.(மாற்கு 16:16) 
 
4. அந்நிய பாஷையைப் பெற்றுக்கொள்ளுதல்.(அப்போஸ்தலர் 2:1-4)
 
5. சபை ஐக்கியத்தில் கலந்து கொள்ளுதல். (எபிரேயர் 10:25) 
 
6. காணிக்கை,தசமபாகம் செலுத்துதல்(மல்கியா 3:8-10)
 
7. பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுதல்.(1கொரிந்தியர் 11:23-27)
 
8. தேவனுடைய ஊழியத்தில் பங்கு பெறுதல்.(மாற்கு 16:15)
 
2-11 கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களாகிய களங்கமில்லாத ஞானப்பாலும்’ பலமான ஆகாரமாகிய தேவனுடைய நீதியின் வசனங்களும்:-
 
காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். 
 
பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். Heb 5:12-14 
 
1 செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல்,
 
2 தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், 
 
3 ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம்,
 
4 கைகளை வைக்குதல், 
 
5 மரித்தோரின் உயிர்த்தெழுதல், 
 
6 நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. Heb 6:1-2 
 
7 நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கு பலமான ஆகாரமான தேவனுடைய நீதியின் வசனம் Heb 5:12-14
 
பலமான ஆகாரமான தேவனுடைய நீதியின் வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது:-
 
விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்? அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி; இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; 
 
இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே. 
 
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. Rom 10:6-11 Rom_10:6-11,Deu_30:11-14,Jer_12:2; Eze_33:31; Mat_7:21; Heb 5:12-14
 
2-12 பலமான ஆகாரமான தேவனுடைய நீதியின் விசுவாச வார்த்தையினுடைய சுவிசேஷம் / இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் பிரமாணங்கள் Rom_1:16, Rom_12:6, Hab_2:1-4,
 
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்த்தையை தங்கள் வாயினால் அறிக்கை செய்து, தேவனுடன் உடன்படிக்கை செய்து கொண்ட யாவருக்கும் இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளின் பிரமாணங்கள். Mat_24:14, Mar_13:10, Joh_1:12, Gal_3:26, Exo_19:5, Joh_10:1-13,Rom_4:5, Joh_9:31, 
 
1 நான் என் காவலிலே தரித்து :- என் இருதயத்தில் எல்லா காவலுடன் நான் இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் காத்துக் கொண்டு. Pro_4:23, 1Co_16:13, Col_1:22-23, 
 
2 அரணிலே நிலை கொண்டிருந்து :- தேவன் எனக்கு பகிர்ந்த விசுவாச அளவுப் பிரமாணத்தில் நிலை கொண்டிருந்து….
 
,2Co_10:14; Mat_25:15; Rom_12:3-6, Rom_15:20; 1Co_12:11-12; Eph_4:7-13; 1Pe_4:10-11, 1Co_4:6-7, 1Co_12:4-11, 1Co_12:28-31, Hab_2:1-4,
 
3 அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும்:- தேவன் தம்முடைய அழைப்பின் எந்த சித்தத்தை செய்ய சொல்லுவா ரென்றும் கவனித்துப் பார்ப்பேன். Rom_12:2-6, Eph_1:10, Eph_5:17, Col_4:12, Act_9:6, Phi_2:13,
 
4 தேவன் என்னை கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும், கவனித்துப் பார்ப்பேன்;-
 
தேவன் என்னை கண்டிக்கும் போது நான் கடிந்து கொள்ளுதலை அலட்சியம் செய்யமாட்டேன்,என்னை சீர்திருத்தும்படி கடிந்து கொள்ளுதலை ஏற்றுக்கொள்ளுவேன். Psa_141:5, Pro_13:8, Pro_15:5, Pro_15:31-32, Pro_21:20, Pro_29:15, Tit_1:14, 2Ti_3:15-17,
 
5 தரிசனத்தை எழுதி :- தேவனுடைய கற்பனைகளை என் இருதயத்தில் எழுதி. Hab_2:2, Deu_6:4-9, Psa_37:31, Pro_3:1-9, Rom_2:14-15, Rom_2:27, 
 
6 குறித்த காலத்திற்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டி ருக்கிறது:- கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் தொடர்புடைய கடைசி காலத்திற்குத் தரிசனம் வைக்கப்பட்டிருக்கிறது. Dan_7:21,Dan_8:17, Dan_12:9, Rev_1:3, Rev_10:6, Rev_11:18, Job_24:1, Mat_16:3, Luk_12:56, Ecc_8:5-6, 
 
7 முடிவிலே அது விளங்கும் அது பொய் சொல்லாது:- தீர்க்கத்தரிசன நிறைவேறுதல்களில் அது விளங்கும். 1Co_3:13, 2Co_11:15, Mat_24:13
 
8 அது தாமத்தாலும் அதற்கு காத்திரு:- அது நிச்சயமாகவே வரும் அது தாமதிப்பதில்லை. Pro_23:18, Gen_49:18, Isa_40:18, Isa_49:18, Isa_49:23, Isa_64:4, Psa_42:11, Psa_43:5,
 
2-13 இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் கிரியைகள்
 
1 இயேசு கிறிஸ்துவின் விசுவாச சுவிசேஷத்தின் ஆரம்பம் :- அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் கிறிஸ்து இயேசுவின் விசுவாசத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு. Joh_1:12, Gal_3:26, Rom_4:1-10, Joh_9:31, Joh_10:1-13, Rom_3:24-28,Tit_3:5, Eph_5:26, Eph_2:8-9, Gal_3:2-7, Gal_5:4-6, Rom_11:6,
 
2 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தால் நீதிமான் ஆவியின் கிரியைகளில் பிழைப்பான் :-
 
கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தினால் மாம்சத்தின் கிரியைகளை அழித்தால்; விசுவாசத்தில் ஆவியின் கிரியைகளில் பிழைப்பான். Rom_1:17, Rom_8:1-4, Rom_8:5-11, Heb_10:36-39, 
 
3 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் ஆவியில் பின்வாங்கி போகுதல் :
 
கிறிஸ்து இயேசுவின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு, மாம்ச இச்சையின் கிரியைகளை ஆவியில் ஜெயங்கொள்ள முடியாதவர்கள், மாம்ச இச்சைக்கு மீண்டும் அடிமைப்பட்டவர்கள். Rom_8:5-6, Rom_8:13, Pro_14:14, Luk_8:13, 1Ti_6:9-12, Joh_6:51-66,
 
4 இயேசு கிறிஸ்துவின் மூலம் பரிசுத்த ஆவியின் கிரியைகளின் வகைகள்:- தேவன் தமது சித்தப்படி ஊழியர் அழைப்பைத் தீர்மானிக்கிறார். Rom_9:2, Rom_12:2-6, 1Co_12:12 1Co_12:13-27, 1Co_15:38, 1Ti_2:20-21, Eph_4:1-13, Eph_4:13-25, Eph_2:17-22, Col_2:18-22, Phi_2:13, Act_9:6, 1Pe_4:10, 
 
5 ஊழியர் அழைப்பின் அளவுப் பிரமாணம் 2Co_10:12-18,Rom_12:2-6, Eph_4:7, Eph_4:13, Eph_4:16,
 
6 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தில் எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணுதல்:- Hab_2:4-6,Eze_36:5, Mal_3:13-18, Mal_4:1-6, 2Ti_2:9, Isa_65:5, Isa_66:17, Psa_83:12, Deu_19:14, Deu_27:17, Amo_6:6-7, Amo_6:13, Hos_8:4, Luk_14:7-11, 
 
7 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தினால் ஆவியின் கிரியைகள் இல்லாதவர்கள்:-
 
கர்த்தராகிய இயேசுவை அறிக்கை செய்து, விசுவாசத்தை ஏற்றுக்கொண்டவர்கள்; கிறிஸ்துவின் ஆவியின் கிரியைகள் இல்லாதபடியால் ஆவியில் செத்தவர்கள். Jam_2:14-16, Jam_3:17-18, Mar_16:16, Joh_3:18, Joh_3:36, Joh_6:64, Jud_1:5, Tit_3:8, 1Jo_2:3-6, 1Jo_5:10, Rev_20:12,
 
2-14 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு :-
 
இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு கிருபையினால் வெளிப்படாமல் கிரியைகளின் மூலம் வெளிப் படுத்தப்படுகிறது. Heb_12:2, Exo_19:5, 2Th_2:3-8, 2Ti_2:12, Rev_1:8, Rev_21:6, Rev_22:13, 
 
1 கீழே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களால் இயேசு கிறிஸ்துவின் விசுவாச துரோகிகளின் மேல் தேவன் நியாயத்தீர்ப்பை அனுப்புகிறார். .Zec_11:5, Zec_11:8-10,2Ti_2:12, Mal_2:1-10, Pro_2:16-17,
 
2 கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை தங்கள் வாழ்க்கையின் முடிவு வரை காத்திருந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளாமல் பாதியிலே உடன்படிக்கையை முறித்தபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு. Mat_10:22 Mat_24:13, Mar_13:13, Rev_2:26,
 
3 சத்தியத்தின் மேல் உள்ள அன்பை அங்கீகரித்து தங்களுடைய விசுவாச உடன்படிக்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையும் காத்துக்கொள்ளாமல் போனபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு . .2Th_2:9-10, Dan_8:11-12,
 
4 அக்கிரமத்தின் மிகுதியினால் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகருடைய அன்பு தணிந்து விசுவாசத்தை இழந்து போனபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு Mat_24:12,
 
5 இயேசு கிறிஸ்துவின் மூலம் விசுவாச உடன்படிக்கை செய்த நாளில் மரணமடைந்த கேட்டின் மகனாகிய பாவ மனிதன்; மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு பாவ கிரியைகளின் மூலம் வெளிப்படும்போது அவனுடைய விசுவாச உடன்படிக்கை அவனால் முறிக்கப்படுகிறது. . Rom_6:2-11, Rom_8:9-14, Col_2:11-12, 2Th_2:3, Eph_4:22-24, 
 
6 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை நிலை நிறுத்துகிற பரிசுத்த ஆவி தேவனால் நீக்கப்படும்போது; தேவன் அந்த ஜனங்களுடன் செய்த உடன்படிக்கையை முறித்துப் போடுகிறார். Zec_11:5, Zec_11:8-10,2Ti_2:12,
 
7 தேவனுடைய வசனத்தின் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு இரட்சிப்படைய விரும்பாதபடியால் பொய்யை விசுவாசிக்கும்படி பரிசுத்த ஆவிக்கு பதிலாக வஞ்சக ஆவியை தேவன் அவர்களுக்குள்ளே நியாயத்தீர்ப்பாக அனுப்புகிறார். 2Th_2:11-12, 1Sa_16:14, 1Sa_16:16, 1Sa_16:23, 
 
8 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை முறித்த விசுவாச துரோகிகள், கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர்கள், அந்திக்கிறிஸ்துக்கள் ஆகியவர்களிடம் வெளிப்படுகிற வஞ்சிக்கிற ஆவிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள். உங்களது ஆவிக்குரிய மனிதன் உங்கள் மூலம் வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையாயிருங்கள்
 
Psa_49:20 , Pro_19:2-3, Hos_4:6, Isa_5:13, Isa_55:1-2, 1Co_3:18, Gal_6:3-4, Col_2:4, Col_2:18-19, 1Th_4:4-8, Heb_3:12-14, Eph_4:14-16, Pro_23:29-33, Eze_33:13,
 
2-15 பழைய ஏற்பாட்டில் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் / பாழாக்குகிற அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருக்கிறதை உணர்ந்து கொண்டவர்களுக்குள், கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? என்கிற மோசேயின் சத்தத்தை கேட்டு கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணுகிறவர்களின் அடையாளங்கள்:-
 
பழைய ஏற்பாடு பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை ஆராதனை செய்கிற,தேவனுடைய ஜனங்கள் தங்கள் சத்துருக்களாகிய புறஜாதிகளுக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன்/ ஆரோனுடைய சந்ததியார்கள் அவர்களை நீதியினுடைய கிரியைகளின் வஸ்திரம் இல்லாமல் நிர்வாணமாக்கியிருந்தார்கள்.
 
தேவனுடைய ஜனங்கள் நிர்வாணமாயிருக்கிறதையும் அவர்களுடைய ஆராதனையின் பாடலின் சத்தம் ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல;என்பதையும் உணர்ந்துகொண்டவர்கள்; கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணிக்கொண்டு லேவி கோத்திரத்தின் மூலம் தேவனுடைய ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டு, தேவனுடைய நியாத்தீர்ப்பை நிறைவேற்ற ஆயத்தமாகிறார்கள் (யாத்திராகமம் 32:25-29)
 
2-16 புதிய ஏற்பாட்டில் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் / பாழாக்குகிற அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருக்கிறதை உணர்ந்து கொண்டவர்களுக்குள், கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? என்கிற தேவனுடைய சத்தத்தை கேட்டு கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணுகிறவர்களின் அடையாளங்கள்:-
 
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவ மதத்தின் பிரிவினைகளோடு கலந்த மார்க்கபேதங்களுடைய சபையின் உபதேசங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் / பாழாக்குகிற அருவருப்பாக நின்றுகொண்டிருக்கிறது. 
 
இவைகளை ஆராதனை செய்கிற,தேவனுடைய ஜனங்களாகிய கிறிஸ்தவர்கள், தங்கள் சத்துருக்களாகிய புறஜாதிகளுக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன்/ ஆரோனுடைய சந்ததியார்கள் அவர்களை நீதியினுடைய கிரியைகளின் வஸ்திரம் இல்லாமல் நிர்வாணமாக்கியிருக்கிறார்கள். 
 
தேவனுடைய ஜனங்கள் நிர்வாணமாயிருக்கிறதையும் அவர்களுடைய ஆராதனையின் பாடலின் சத்தம் ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல;என்பதையும் உணர்ந்துகொண்டு; பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருக்கிற பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் நிமித்தம் தங்கள் இருதயத்தில் பெருமூச்சுவிட்டழுகிறவர்கள் கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணிக்கொண்டு, ஆவிக்குரிய யூதா கோத்திரத்தின் மூலம் தேவனுடைய ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டு, தேவனுடைய நியாத்தீர்ப்பை நிறைவேற்ற ஆயத்தமாகிறார்கள்
 
இவர்கள் தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் /அறிவில் பெற்றுக்கொண்டு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையின் சீயோன் குமாரத்திகளாக 1,44,000. வரிசையில் தெரிந்துகொள்ளப்பட்டு; தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற ஆயத்தமாகிறார்கள் 
 
மற்றும் தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் /அறிவில் பெற்றுக்கொள்ளாதவர்களின் தேவனுடைய இரட்சிப்பு மரணமடைகிறது இவைகளைக்குறித்து; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள். (எசேக்கியேல் 9:4-10, ஏரேமியா 25:29-30,ஏசாயா 66:6-9)


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries