தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 01


பாழாக்குகிற அருவருப்பு தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ இருதயத்தில் நின்று கொண்டிருக்கிறது. மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது.

பொருளடக்கம் மூன்று

3-0 தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிற பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை தேவனுடைய ஜனங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கக் காணும்போது, மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது   யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள் 
 
(பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு/ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திiற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகளின் அடையாளங்கள்.) 
 
பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருக்கிற அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள். Isa 4:1 
 
பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருக்கிறதை உணர்ந்து கொண்ட தேவனுடைய ஜனங்கள் தேவனுடைய பிரமாணாங்களின் மூலம் நற்கிரியைகளில் நீதியுள்ளவன் எவனோ,அவன் இன்னும் நீதிசெய்வதற்காகவும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாவதற்காகவும், தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் /அறிவில் பெற்றுக்கொண்டு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாக சீயோன் குமாரத்திகள் தெரிந்துகொள்ளப்படுகிறார்கள்
 
பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருக்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு தப்பின தேவனுடைய ஜனங்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும். 
 
அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது, 
 
சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான். 
 
அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும். பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும். Isa 4:2-6
 
3-1 கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி சீயோனுக்கு வருகிறார்கள்:-
 
தேவனுடைய முன் தீர்மானத்தின்படி தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுவதற்காக அழைக்கப்பட்ட அநேக கிறிஸ்தவர்களில், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஒரு சிலர் மட்டும்; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பாபிலோனாகிய கிறிஸ்தவ மதத்தின் தாறுமாறுகளின் ஆவிகளிடமிருந்து விடுதலையாக்கப்பட்டு, மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகளின் வரிசையில்: சீயோனாகிய தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்களுக்கும், எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களிடத்திற்கும் திரும்புகிறார்கள் 
 
Isa_2:2-6, Mic_4:1-4; Isa_4:1-6, Isa_52:4-11, Isa_48:20-22, Isa_66:7-9, Jer_50:8-10, Jer_51:6-14; Jer_51:45-50, Mic_4:10;Zec_2:7-13,Rev_18:1-6, 
 
3-2 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகளுக்கு ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது:-
 
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் மணவாட்டி சபையாக தெரிந்துகொள்ளப் பட்டவர்களில் ஒரு சிலர் மட்டும்; உண்மையுள்ளவர்கள் வரிசைக்கு முன்னேறி வந்து சேர்ந்து; ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தை புசிக்கிறார்கள்./ கிறிஸ்துவின் இரகசிய வருகையில் மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்; இரட்சகராகிய இயேசுகிறிஸ்து, இராஜாவாக முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாவில் கலந்துகொண்டு: தேவனுடைய சத்தியமான வசனங்களை இருதயத்திலும் அறிவிலும் விருந்தாக புசிக்கிறார்கள்.
 
Rev_19:7-9, Rev_3:20-21, Mat_22:2-4,Luk_12:32-40,Luk_14:7-11,Luk_14:12-14; Luk_14:15-22;Luk_14:23-24, Est_1:4-8, Est_1:9-12,Isa_65:13-16,Isa_25:6-9, Pro_9:1-6,
 
3-3 பரிசுத்த ஸ்தலத்தில் / தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் தன்னை ஆயத்தம்பண்ணிக்கொள்ளுவதற்காக சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது:-
 
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்: கீழே குறிப்பிட்ட மூன்று அசுத்த ஆவிகளிடமிருந்து விலகியிருந்து : தன்னுடைய நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு தனக்கு உடுத்திக்கொள்வதற்கு வெண் வஸ்திரங்களை தேவனிடத்திலே வாங்கிக் கொண்டு; தன் அவமானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவர்கள் பாக்கியவான்கள்.
 
(வலுசர்ப்பம்/, மிருகம்/, கள்ளத்தீர்க்கதரிசி ஆகிய மூன்று பேர்களூடைய வாயிலுமிருந்து புறப்பட்டு வருகிற தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்.)
 
இப்படி தேவனிடத்திலே வெண் வஸ்திரங்களை வாங்கிக்கொண்டு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக் கொள்ளுகிறவர்கள் கிறிஸ்துவின் சிங்காசனத்திலிருந்து ஆட்சி அதிகாரங்களை பரிசாக பெற்றுக் கொள்ளுவதற்காக: அழைக்கப்பட்டவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் உண்மையுள்ளவர்கள், ஆகிய மூன்று நிலைகளில் உறுதியாக நிலைத்திருக்கிறார்கள்; இவர்கள் பரிசுத்த வான்களுடைய நீதியின் கிரியைகளையே, தங்களுடைய நீதியின் வஸ்திரமாக தரித்துக்கொண்டு பூரண புருஷனாகிய கிறிஸ்துவிற்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல தங்களை ஆயத்தம் பண்ணிக்கொள்ளுகிறார்கள்
 
Rev_19:7-8, Rev_3:4-5, Rev_3:18, Isa_61:10, Zec_3:3-4, Mat_22:11-14, Mat_7:21-23, Luk_13:23-27; Psa_45:13-14; Rev_13:8-10, Rev_14:9-12, Rev_16:12-15, Rev_17:13-14, Rev_17:8, Rev_22:14-16, 2Ch_18:18-22; Eze_14:9; 
 
3-4 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு/ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்; தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் /அறிவில் ஏற்றுக்கொள்ளுகிறார்கள்:- 
 
எருசலேம் நகரம்/ தேவனுடைய நாமத்தை தரித்திருக்கிற கிறிஸ்தவர்கள் மத்தியில் செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடுகிறபோது: கீழே விவரிக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்; தங்கள் நெற்றிகளில் /அறிவில் ஏற்றுக்கொள்ளுகிறார்கள் 
 
இவர்கள் 1,44,000. வரிசையில் வந்து தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிற ஆண்பிள்ளைகளாக முத்திரை போட்டு பிரித்தெடுக்கப்படுகிறார்கள். மற்றும் இந்த தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை பெற்றுக்கொள்ளாதவர்களின் தேவனுடைய இரட்சிப்பு மரணமடைகிறது
 
1 புறஜாதிகளின் எந்த முறைகளையும் பின்பற்றக்கூடாது.
 
2 பலிபீடத்தின் பிரமாணங்களை பின் பற்றி நடக்க வேண்டும். 
 
3 கர்த்தருடைய பஸ்கா விருத்தை புசிக்க வேண்டும்.
 
4 ஓய்வு நாளை பரிசுசுத்தமாக ஆசரிக்க வேண்டும்.
 
5 மனச்சாட்சியின் பிரமாணத்திற்கு கீழ்படிய வேண்டும்.
 
6 இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றி நடக்க வேண்டும்.
 
7 பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
 
Rev_14:1, Rev_7:3, Rev_9:4, Rev_7:3-4; Eze_9:4-10, Gen_4:11-15, 1Co_3:16-17, 2Co_6:16, 1Pe_4:17-18, Jer_25:29, Isa_66:6, Luk_19:41-46 , Jer_7:11-12, Amo_9:1,
 
3-5 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு/ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் தேவ சுரமண்டலத்தில் சுரமண்டல இராகங்களை வாசித்து தேவனுடைய இரகசியங்களை கற்றுக்கொண்டு தேவனை துதிக்கிறார்கள்:-
 
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள், தேவன் தங்களுக்கு கொடுத்த இருதயமாகிய சுரமண்டலத்தில் தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட சுரமண்டலத்தின் ஏழு சுரங்களைப் போல வெளிப்படுகிறவைகளான
 
(1. தேவனுடைய வேதம். 2. தேவனுடைய வழிகள், 3. நீதி நியாயங்கள். 4. சாட்சிகள். 5. கட்டளைகள் 6. கற்பனைகள் 7.பிரமாணங்கள்) ஆகிய இவைகளுடன் உவமைகளாக உள்ள தேவனுடைய வார்த்தைகளை ஒப்பிட்டு சிந்தித்து தியானிக்கும் போது தேவனுடைய இரகசியங்களை கற்றுக்கொண்டு ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிக்கிறார்கள்./ கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டிசபையாகிய சீயோன் குமாரத்திகள், தேவனுடைய வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிக்கிறார்கள் 
 
.Psa_92:2-3, Psa_71:22, Job_30:31, Rev_5:8-10, Rev_15:2-4, Psa_78:2, Eze_20:49, Eze_17:2, Mar_4:10-12, Luk_8:10, Mat_13:10-15, Mat_13:34-35, Isa_6:8-10;, Rev_14:2-3, Psa_49:1-4; Psa_137:1-6; Psa_57:8, Job_30:31; Isa_16:11, Mat_13:11-13
 
3-6 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு/ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் சியோனின் பாட்டாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் கற்றுக்கொண்டு பாடுகிறார்கள்:-
 
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசே, மற்றும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய உடன் படிக்கையின் பிரமாணங்கள் மற்றும், எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்கள்; ஆகியவைகளின் மூலம் வருகிற ஆசீர்வாதங்களை கற்றுக்கொண்டு பாடுகிறார்கள். Psa_137:1-6; Rev_15:3, Rev_5:8-10, Rev_14:1-5, Rev_20:6, Rev_1:6, Deu_31:30 
 
3-7 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு/ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் முன்மாரி, பின்மாரி மழையை பெற்றுக் கொள்ளுகிறார்கள்:-
 
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற கிறிஸ்துவின் மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்; முன்மாரி மழையாகிய பரிசுத்த ஆவியையும், பின்மாரி மழையாகிய அபிஷேக ஆவியையும்; ஓய்வு நாள் பிரமாணத்தை பின்பற்றி எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களில் காத்திருந்து எலியாவின் ஆவியை பெற்றுக் கொள்ளுகிறார்கள்.
 
Act_1:4-8, Act_1:12-15, Act_2:1-4, Deu_11:14, Job_29:23, Pro_16:15, Jer_3:1-5, Jer_5:20-25, Hos_6:1-3, Joe_2:23, Zec_10:1-4, Jam_5:7-8; Joe_2:28-32, Mal_4:4-6, 
 
3-8 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு/ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிறபோது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்:-
 
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற விசுவாச அளவுப் பிரமாணத்தின் ஊழிய அழைப்பை அறிந்துகொண்டு; தேவனுடைய கற்பனைகளையும் இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியையும் பின்பற்றி தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறபடியால் இரத்த சாட்சியாக மரித்து பலி பீடத்தின் கீழே வந்து சேருகிறார்கள். /எலியா தீர்க்கதரிசி மற்றும் ஏழாந்தலை முறையான ஏனோக்கை போல நேரடியாக பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்.
 
சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும் . ( Rev 13:10 )Rev_1:2, Rev_1:9, Rev_6:9, Rev_12:11, Rev_12:17; Rev_13:10, Rev_14:12, Rev_19:9-10 ;Rev_22:6-9, Rev_22:16, Rev_20:4, 
 
1 வீட்டின் மேலிருப்பவன் ஏற்றுக் கொள்ளப்படுவான், வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்குகிறவன் கைவிடப்படுவான். 
 
2 அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான், மற்றவன் கை விடப்படுவான்.
 
3 திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக் கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.
 
4 வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கை விடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
 
Mat_24:14-21; Mar_13:10-18; Luk_17:28-37, Gen_19:17, Gen_19:26; Mat_5:13-16, 2Pe_2:20-22; Rev_1:7,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries