தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 01
பாழாக்குகிற அருவருப்பு தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ இருதயத்தில் நின்று கொண்டிருக்கிறது. மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது.
பொருளடக்கம் நான்கு
4-0 தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிற பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை தேவனுடைய ஜனங்கள் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கக் காணும்போது, மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன்.
தேவனுடைய ஜனங்கள் பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கக் காணும்போது, முன்மாரி மழையாகிய பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டவர்கள்; தாங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்
( லூக்கா 24:49, யோவான் 16:7-11,அப்போஸ்தலர் 1:4-5, அப்போஸ்தலர் 1:8, எபேசியர் 4:30-32 .எபிரேயர் 6:4-8, எபிரேயர் 10:24-31,2பேதுரு 2:20-22)
எருசலேம் நகரத்தில் காத்திருந்து பிதா வாக்குத்தத்தம்பண்ணின முன்மாரி மழையாகிய பரிசுத்த ஆவியை பெற்றுக்கொண்டவர்கள் பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துகொண்டவர்களாக பரிசுத்த ஆவியில் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், பரிசுத்த ஆவிக்கு சாட்சிகளாயிருங்கள்
எருசலேம் ஆவியின்படி பொருள்:- கர்த்தருடைய வசனங்கள்
யூதேயா ஆவியின்படி பொருள்:- தேவனுடைய பிரமாணங்கள்
சமாரியா ஆவியின்படி பொருள்:- தேவனுடைய பிரமாணங்களும் ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளும் கலப்படமான பிரமாணங்கள்
பூமியின் கடைசிபரியந்தம் ஆவியின்படி பொருள்:- ஜாதிகளின் ஆசரிப்பு முறைகள்