தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து புஸ்தகம்
புஸ்தகம் 11
பாழாக்குகிற அருவருப்பு / தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் பரிசுத்த ஸ்தலத்தில் நின்றுகொண்டிருக்கிறது. ஆகையால் தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் கிறிஸ்தவ மதம் தள்ளப்பட்டு ஜனங்களினால் நிராகரிக்கப்படுகிறது.
பொருளடக்கம் 1-11
தானியேல் தீர்க்க தரிசனத்தின்படி, கிறிஸ்தவ மதத்தின் ஏழு பலத்த /பெரிய சபைகளின் பிரிவினைகளையும் மார்க்க பேதங்களையும் பின்பற்றுகிறவர்கள் அன்றாட பலியாகிய மனந்திரும்புதலை முடிவுக்கு
கொண்டு வந்து: மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனைகளை சபையின் மூல உபதேச வசனங்களாக போதித்து; இவைகளை தேவனுடைய ஆலயமாகிய பரிசுத்த ஸ்தலத்தில்/ இருதயத்தில் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகமாகவும் / பாழாக்குகிற அருவருப்பாகவும் நிறுத்தியிருக்கிறார்கள். இதனால் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறவர்களுடைய இரட்சிப்பு மரணமடைகிறது
ஆகையால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது, முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது. தேவனுடைய இராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
பரிசுத்த ஸ்தலத்தில் நின்றுகொண்டிருக்கிற பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து தங்கள் இருதயத்தில் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் தேவனுடைய ஏழு முத்திரைகள் மூலம் அடையாளம் போட்டு; ஆவிக்குரிய யூதர்களை கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக பிரிதெடுக்கப்பட்டு முன்மாரி, பின்மாரி மழையின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்கள் ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தாகிய தேவனுடைய சத்தியமான வசனங்களை புசித்து, ஆவியில் மறுருபமடைந்து: பரிசுத்தவான்களுடைய நீதிகளாகிய சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொண்டு; ஏழாவது ஆயிரம் வருடமாகிய தேவனுடைய ஒய்வு நாளை, தேவனுடைய இராஜ்யமாக இந்த பூமியிலே ஸ்தாபிக்க ஆயத்தமாகிறார்கள்.
பரிசுத்த ஸ்தலத்தில் நின்றுகொண்டிருக்கிற பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றுகிறவர்களையும், தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களையும், கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கை துரோகிகளையும், காட்டொலிவ மரமாகிய கிறிஸ்துவ மதத்தையும் அதன் உட்பிரிவுகளை பின்பற்றுகிறவர்களையும், சேனைகளின் தேவனாகிய கர்த்தர் தள்ளிவிட்டு நியாயத்தீர்ப்புக்கு நியமிக்கிறார்.
தேவனால் தள்ளிவிடப்பட்ட இவர்கள் ஆயிரம் வருட ஆட்சியில் முதல் ஏழு வருடங்களில் நடைபெறுகிற உபத்திரவகாலம் மற்றும் மகா உபத்திரவகாலத்திற்கு பங்கடைய ஆயத்தமாகிறார்கள். தேவனுடைய ஒய்வு நாளை குறித்து எழுதப்பட்ட பிரமாணங்களுடைய ஆசீர்வாதங்களும், சாபங்களும் ஆயிரம் வருட ஆட்சியாகிய தேவனுடைய இராஜ்யத்தில் உடனே நடைமுறைக்கு வருகிறது. அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.
இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் ( பாஷைகள் தாறுமாறாகயிருக்கிற கிறிஸ்தவ மதம்) விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
அவளுடைய ( மகா பாபிலோனாகிய கிறிஸ்தவ மதத்தின்) வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய (மகா பாபிலோனாகிய கிறிஸ்தவ மதத்தின்) பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு ( மகா பாபிலோனாகிய கிறிஸ்தவ மதத்திற்கு) நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு (மகா பாபிலோனாகிய கிறிஸ்தவ மதத்தை) விட்டு வெளியே வாருங்கள்.
அவளுடைய (மகா பாபிலோனாகிய கிறிஸ்தவ மதத்தின்) பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார். அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள். Rev 18:1-6
அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. 1Co 2:6-8