தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 01


பாழாக்குகிற அருவருப்பு தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ இருதயத்தில் நின்று கொண்டிருக்கிறது. மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது.

பொருளடக்கம் ஒன்பது

9-0 தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிற பாழாக்குகிற அருவருப்பு தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்// இருதயத்தில் நிற்கக் காணும்போது, மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது. 
 
பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோல்கள் மூலம் பரலோக இராஜ்ஜியத்தை திறக்கிறவர்களின் அடையாளங்கள் 
 
9-1 பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை காண்பதற்கு முதலாவது திறவுகோல், ஒருவன் ஜலத்தினால்/ தேவனுடைய வார்த்தைகளினால் மறுபடியும் பிறப்பது :- 
 
ஜலமாகிய தேவனுடைய வார்த்தைகளினால் ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்/ தேவனுடைய ஆலோசனைகளை தங்கள் ஆத்துமாவில் ஏற்றுக் கொண்டு தங்கள் மனிதனுடைய ஆலோசனைகளை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து மனந்திரும்புகிறவர்களுக்கு ஆவிக்குரிய கண் பார்வை கிடைக்கிறது; 
 
தேவனுடைய இராஜ்ஜியம் இதோ இங்கே இருக்கிறது, அதோ அங்கே இருக்கிறது என்று , யாரையும் பின்பற்ற வேண்டாம் அல்லது எந்த இடத்திற்கும் ஓட வேண்டாம், நீங்கள் இருக்கிற இடத்திலிருந்தே தேவனுடைய இராஜ்ஜியத்தை உங்கள் ஆவிக்குரிய கண்களால் பார்க்க முடியும்.. Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12, Mar_9:1, Luk_9:24-27 ,Joh_3:3, Luk_17:20-23,Tit_3:5, 1Pe_1:23,1Pe_3:21, 
 
9-2 ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் வளர்ச்சியடைய கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள்/ களங்கமில்லாத ஞானப்பால்:-. 1Pe_2:2-3, Heb_6:1-2, Heb_5:12-14, 
 
9-2-1. செத்த கிரியைகளிலிருந்து நீங்கலாகும் மனந்திரும்புதல்/ ஆவி, ஆத்துமாவில் மரணத்தை உண்டாக்கும் கிரியைகளிலிருந்து மனந்திரும்புதல் 
 
9-2-2. தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்/ இயேசு, கிறிஸ்துவினுடைய விசுவாசத்தின் சுவிசேஷம் 
 
9-2-3. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம் 
 
9-2-4. கைகளை வைக்குதல் /ஊழியர் அழைப்பின் அளவுப் பிரமாணம் 
 
9-2-5. மரித்தோரின் உயிர்த்தெழுதல் தெழுதல் /இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை 
 
9-2-6. நித்திய நியாயத்தீர்ப்பு 
 
9-2-7. நீதியின் வசனம் / பிரமாணம் 
 
9-2-8. நீதியின் வசனத்தின் ஊழியத்தில் பங்கு பெறுதல் Heb_5:12-14, Heb_6:1-2 Rom_10:6-10 Deu_30:11-16 
 
9-3 பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை கண்டவர்கள் பரலோக இராஜ்ஜியத்திற்குள்ளே பிரவேசிப்பதற்கு இரண்டாவது திறவுகோல்; ஒருவன் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறப்பது :- 
 
ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களினால் தீமையை வெறுத்து, நன்மையை அறிந்து கொள்ளும் அறிவில் பூரண வளர்ச்சியடைகிறது. இந்த நிலையில் ஒருவன் தன்னுடைய மனிதனின் ஆவியை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து பரிசுத்த ஆவியுடன் உடன்படிக்கை செய்து பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்போது; அவன் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்து தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறான், அல்லது அவனுக்குள்ளே தேவனுடைய இராஜ்ஜியம் இருக்கிறது. 
 
Joh_3:3-5, Heb_5:12-14, Mat_16:24-28, Joh_3:5, Mat_12:28, Luk_11:20, Jam_1:17-18, Tit_3:5, 
 
9-4 கீழே விவரிக்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகளை பரிசுத்த ஆவியினால் சித்தித்து, தியானிக்கும்போது; தங்களுடைய ஆவி, ஆத்துமா தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசித்து பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை புசித்து பிழைக்கிறது. 
 
9-4-1 நியாயப்பிரமாணம், தீர்க்க தரிசனங்கள், பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது. Rom_3:20-22, Mat_5:17, Mat_7:12, Mat_22:36-40, Luk_16:16-17, Mat_11:13-15, Luk_1:17, Mal_4:6, Isa_3:4-5, Hos_6:1-3, Luk_12:2-3, Luk_8:17-18, Luk_9:16-17 
 
9-4-2 தேவனுடைய இராஜ்ஜியத்தின் உவமைகளில் சுரமண்டலத்தின் ஏழு சுரங்களைப் போல வெளிப்படுகிற (1. தேவனுடைய வேதம். 2. தேவனுடைய வழிகள் 3. நீதி நியாயங்கள். 4. சாட்சிகள். 5. கட்டளைகள் 6. கற்பனைகள் 7. பிரமாணங்கள்) ஆகிய ஏழு தேவனுடைய வார்த்தைகள் பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது Psa_92:2-3, Psa_71:22, Job_30:31, Rev_5:8-10, Rev_15:2-4, Psa_49:4, Psa_78:2, Eze_20:49, Eze_17:2, Mar_4:10-12, Luk_8:10, Mat_13:10-15, Mat_13:34-35, Isa_6:8-10 
 
9-4-3 வேதம், கிறிஸ்துவின் சாட்சி ஆகமம் பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது. Isa_8:16-20, 2Pe_1:16-21, Isa_50:10-11, Isa_41:21-24, Joh_10:35, Rev_1:2, Rev_1:9, Rev_6:9, Rev_12:11, Rev_12:17, Rev_14:12, Rev_19:9-10 , Rev_20:4 
 
9-4-4 நித்திய ஜீவ வார்த்தைகள் பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது Joh_5:39; Mat_22:29; Luk_24:44-47; Joh_6:27, Joh_6:40, Joh_6:63, 
 
9-4-5 வேதத்தில் திருட்டாந்தமாக/உதாரணமாக எழுதப்பட்டவைகள் பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது 1Co_10:11, Heb_4:10-11, 
 
9-4-6 வேதத்தில் நிழலாட்டமாக/ ஞான அர்த்தமுள்ளவைகளாக எழுதப்பட்டவைகள் பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது Heb_10:1, Heb_8:5, Heb_9:23, Gal_4:24, Rev_11:8, 
 
9-4-7 வேதத்தில் தீர்க்க தரிசனங்களாக எழுதப்பட்டவைகள் பலமான ஆகாரமான தேவ நீதியின் வசனத்தை வெளிப்படுத்துகிறது 2Pe_1:20-21, 2Ti_3:16; 1Pe_1:11, Rev_19:10 
 
9-4-8 ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தை புசித்து, தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுதல்:- 
 
இயேசு கிறிஸ்து, இராஜாவாக முடிசூடப்படும் பட்டாபிஷேக விழாவில் கலந்து கொண்டு தேவனுடைய சத்தியமான வசனங்களை விருந்தாக புசித்து, தேவனுடைய இராஜ்ஜியத்தினுடைய ஆட்சியின் பதவிகளை பரிசாகப்பெற்று, அல்லேலூயா என்று கெம்பீர சத்தத்தோடு ஆரவாரம் செய்து தேவனை மகிமைப்படுத்துகிறார்கள். 
 
இவர்கள் பரிசுத்த ஆவியின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து முன்னேறும்போது அவர்கள் பரலோக இராஜ்ஜியத்தில் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற தேவனுடைய சித்தத்தையும் அதன் விசுவாச அளவுப் பிரமாணத்தையும் அறிந்து கொண்டு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுதல் Rev_19:1-9 Mat_13:10-15, Rev_3:20-22 
 
9-5 தேவனுடைய நீதியின் கிரியைகள்இல்லாமல் கண்சொருகிப்போன குருடர்கள்:- 
 
ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி மறுபடி பிறந்தும், பரிசுத்த ஆவியினால் மறுபடி பிறந்தும், தேவனுடைய இராஜ்ஜியத்தின் இரகசியங்களுக்குள்ளே பிரவேசிக்கிறவர்களுக்கு தேவ நீதியின்படி நற்கிரியைகள் இல்லாதபோது; தேவனுடைய இராஜ்ஜியத் தின் தரிசனங்களை இழந்து மீண்டும் ஆவிக்குரிய குருடர்களாக மாறுகிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு தேவனுடைய இராஜ்ஜியத்தின் வழிகளை காட்டும்போது, குருடனுக்கு வழி காட்டுகிற குருடனாக இருக்கிறார்கள் 2Pe_1:4-11, 2Pe_2:20-22; Heb_6:4-8; Heb_10:26-31 Mat_22:8-14,Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries