தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 10
இந்த மனுஷக்குமாரன் யார்?
பொருளடக்கம் 6
6. லோத்தின் நாட்களில் நடந்தது போல மனுஷக்குமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்.
6-1 லோத்தின் நாட்களில் புசித்துக் குடித்தார்கள் :-
எழுத்தின்படி புசித்துக்குடித்து விருந்து கொண்டாடினார்கள்.
6-2 லோத்தின் நாட்களில் பெண் கொண்டு பெண் கொடுத்தார்கள்:-
எழுத்தின்படி பெண் எடுத்து, பெண் கொடுத்து திருமண விழாக்கள் நடைபெற்றது.
6-3 லோத்தின் நாட்களில் கொண்டார்கள், விற்றார்கள் :-
எழுத்தின்படி நிலம் பொருள்களை விற்று, வாங்கி தங்கள் வியாபாரங்களை செய்தார்கள்.
6-4 லோத்தின் நாட்களில் நட்டார்கள்:-
எழுத்தின்படி நிறுவனங்கள், ஸ்தாபனங்கள் தோட்டங்கள், தோப்புகள் ஆகியவைகளை நிறுவினார்கள்.
6-5 லோத்தின் நாட்களில் கட்டினார்கள்:-
எழுத்தின்படி கட்டிடங்கள், பாலங்கள் புதிய திட்டங்கள் ஆவியவைகளை கட்டினார்கள். Luk_17:28-30,
6-6 சோதோமிலிருந்த லோத்தை, தேவன் நீதிமானாக அடையாளம் கண்டு தெரிந்துகொள்ளுதலின் பொருள் எழுத்தின் படி:-
லோத்து, சோதோமின் அக்கிரமக் கிரியைகளைக் கண்டு கேட்டு, நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட படியால், இருதயங்களை சோதித்து அறிகிற தேவன், லோத்தை சோதோமிலிருந்து நீதிமானாக அடையாளம் கண்டு பிரித்தெடுத்தார்
Gen_19:6-10, 2Pe_2:6-10,
லோத்தை போல உள்ள நீதிமான்களை தேவன் அடையாளம் கண்டு தெரிந்துகொள்ளுதலின் பொருள் ஆவியின்படி :-
ஞானர்தமாக சோதோம் என்றும் எகிப்து என்றும் சொல்லப் படும் எருசலேமின் கள்ள தீர்க்கதரிசிகளின் நடுவிலிருந்து, தேவன் நீதிமான்களை அடையாளம் போட்டு பிரித்தெடுப்பது.
ஞானர்தமாக சோதோம் என்றும் எகிப்து என்றும் சொல்லப்படும், எருசசேலம் நகர தேவாலாயத்தின் பரிசுத்த ஸ்தலத்தில், கள்ளத் தீர்க்கதரிசிகளின் மூலம் நடைபெறும் அக்கிரமக் கிரியைகளைக் கண்டு, கேட்டு, லோத்தைப்போல தங்கள் இருதயத்தில் வாதிக்கப்பட்டு, பெருமூச்சு விட்டழுகிறவர்களை, தேவாலாயத்தின் பரிசுத்த ஸ்தலத்திலே, தேவன் தம்முடைய முத்திரை அடையாளங்களை போட்டு, நீதிமான்களாக பிரித்தெடுக்கிறார்;
இப்படிபட்ட நீதிமான்கள் 1,44,000 பேர் வரிசையில் வந்து சேர்ந்து பரிசுத்தவான்களின் ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிற கிறிஸ்துவின் மண வாட்டி சபையாக மாறுகிறார்கள். Rev_11:8 Jer_23:14-17, Eze_9:4, Zep_3:18,
தேவனுடைய வார்த்தைகளை தங்கள் வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக்கொண்டிருந்து; தங்கள் இருதயத்திற்கு தேவனுடைய வார்த்தைகள் தூரமாயிருகிற அவபக்தியுள்ள துன்மார்கரான கள்ளத்தீர்க்க தரிசிகளை தேவன் நியாயத்தீர்ப்ப்பிற்கு நியமிக்கிறார். 2Pe_2:6-10, Isa_29:13, Jer_12:2, Eze_30:30-31, Isa_58:1-2, Isa_48:1-2, Hos_8:1-4, Nah_1:7, Tit_1:16, Amo_5:14,
6-7-0 லோத்தின் வீட்டைச் சூழ்ந்து கொண்ட சோதோமின் ஜனங்கள்:-
6-7-1. சோதோம் கொமோராவின் பாவத்தின் நிமித்தம் தேவ தூதர்கள்கள் அதை அழிப்பதற்கு முன்பு அதிலிருந்து நீதிமான்களை அடையாளம் கண்டு அவர்களை பிரித்தெடுக்கும்போது; சோதோமின் வாலிபர் முதல் கிழவர் மட்டும் நீதிமானாகிய லோத்தின் வீட்டை சூழ்ந்து கொண்டு, அவர்களை அவமானப்படுத்தவும், உபத்திரப் படுத்தவும் முயற்சி செய்து, அவர்களுடைய வீட்டை விட்டு வெளியே வரும்படி கூக்குரல் இட்டார்கள்.
ஆவியின்படி பொருள்:-
தேவனுடைய வார்த்தைகளை அனுதினமும் சிலுவையில் அடித்து, தினந்தோறும் தேவனுக்கு கோபமுண்டாக்குகிற கள்ள தீர்க்கதரிசிகளின் பாவத்தினிமித்தம், தேவ ஊழியர்கள் அவர்களுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு முன்பு; தேவனுடைய கற்பனைகளை பின்பற்றுகிற நீதிமான்களை அடையாளம் கண்டு அவர்களை கள்ள தீர்க்க தரிசிகளிலிருந்து பிரித்தெடுக்கும்போது,
சிறிய கள்ள தீர்க்கதரிசிகள் முதல் பிரபலமான பெரிய கள்ள தீர்க்கதரிசிகள் வரை, தேவ ஊழியர்களுக்கும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிற நீதிமான்களுக்கும் விரோதமாக எழும்பி, அவர்களை அவமானப்படுத்தவும், உபத்திரவப்படுத்தவும் முயற்சி செய்து, அவர்கள் அடைக்கலமாக ஓடி வந்த தேவனுடைய கற்பனைகளையும், பிரமானங்களையும் விட்டு வெளியே வரும்படி கூக்குரல் இட்டார்கள்.
Isa_65:8, Heb_6:4-9, Eze_9:4, Mat_10:11-15, Mat_11:23-24, Mar_6:10-11, Luk_10:10-12, Jud_1:6-8, Isa_3:6-9, Isa_65:2-7,
6-7-2. லோத்து தேவ தூதர்களுக்காக சோதோமின் ஜனங்களோடு பரிந்து பேசுதல் :-
என்னுடைய வீட்டிற்கு அடைக்கலமாக வந்தவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம், புருஷனை அறியாத இரண்டு குமாரத்தி கள் எனக்கு உண்டு அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டு வருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங் கள் என்று லோத்து, தன்னுடைய வீட்டை சூழ்ந்து கொண்டவர் களிடம் சொன்னார்.
ஆவியின்படி பொருள்:-
நான் என்னுடைய வீட்டிற்கு அடைக்கலமாக அழைத்து வந்த தேவ ஊழியர்களிடத்தில் உங்கள் கள்ள தீர்க்கதரிசன வெளிப்பாடு களைக் குறித்து, வாக்குவாதம் செய்ய வேண்டாம்; கிறிஸ்துவை அறியாத இரண்டு சபைகள் எனக்கு உண்டு; அவைகளை உங்களிடம் அழைத்து வருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டம் போல உங்களுடைய கள்ள தீர்க்கதரிசன வெளிப்பாடுகளை, வெளிப்படுத்திக் காட்டுங்கள்.
6-7-3. லோத்தின் வீட்டைச் சுற்றிலும் குருட்டாட்டம்
தேவ தூதர்கள் லோத்தின் வீட்டை விட்டு வெளியே வராததால், சோதோமின் ஜனங்கள் லோத்தின் வீட்டுக் கதவை உடைக்க முயற்சி செய்தார்கள், அப்பொழுது தேவ தூதர்கள் லோத்தை வீட்டுக்குள்ளே இழுத்துக் கொண்டு, கதவைப் பூட்டி தெரு வாசலிலிருக்கிற ஜனங்களுக்கு குருட்டாட்டம் பிடிக்க பண்ணினார்கள், அவர்கள் வீட்டு வாசலை தேடித் தேடி அலுத்துப் போனார்கள்.
ஆவியின்படி பொருள்:-
தேவ ஊழியர்களும் அவர்களை பின்பற்றுகிற நீதிமான்களும், தங்களுக்கு அடைக்கலப் பட்டணமாக ஓடி வந்த தேவனுடைய கற்பனைகளையும், பிரமாணங்களையும் விட்டு வெளியே வராமல், அவைகளிலே நிலைத்திருக்கிற படியால், கள்ள தீர்க்கதரிசிகள் எழும்பி தேவனுடைய கற்பனைகளை சீர்குலைக்க முயற்சி செய்து நீதிமான்களிடம் வாக்குவாதம் பண்ணினார்கள்;
அப்பொழுது தேவ ஊழியர்கள் தங்கள் இருதயக் கதவை அடைத்துக்கொண்டு, கள்ள தீர்க்கதரிசிகளிடம் வாக்குவாதம் செய்யாமல் தங்களைக் காத்துக் கொண்டு, தங்களுடன் வாக்குவாதம் செய்த கள்ள தீர்க்க தரிசிகளுடைய தரிசனங்களில் குருட்டாட்டம் உண்டாகும்படி தேவ ஊழியர்கள் கட்டளையிட்டார்கள், அப்பொழுது கள்ள தீர்க்க தரிசிகள் தேவ ஊழியர்களுக்கு விரோதமாக எழும்பி கிரியைகளை செய்யும் வழி முறைகளை கண்டறிய முடியாமல் தோல்வியடைந்தார்கள்.
Gen_19:10-13, Exo_10:20-23, Rev_11:5-8, Isa_56:9-12, Isa_42:19-25, Isa_29:9-14,
6-8 லோத்து தன்னுடையவர்களை சோதோமிலிருந்து இரட்சித்துக் கொள்ள முயற்சி செய்தல் :-
தேவ தூதர்களால் நீதிமானாக அடையாளம் காணப்பட்ட லோத்து, தன்னுடைய இருதயத்திற்கேற்றவர்கள் யாராவது சோதோ மில் இருந்தால், அவர்களை தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்புவித்துக் கொள்ளுவதற்கு அழைக்கச் சென்றபோது, அவர்கள் வர மறுத்து விட்டார்கள், மேலும் அது, அவர்களுக்கு பரியாசமாக தோன்றியது.
ஆவியின்படி பொருள்:-
கள்ளத் தீர்க்க தரிசிகளின் மத்தியில் யாராவது நீதிமான்கள் இருந்தால், அவர்களை லோத்தைப்போல உள்ள நீதிமான்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்புவித்துக் கொள்ளுவதற்காக அழைக்கச் சென்றபோது, அவர்கள் தங்களுடைய கள்ள தீர்க்க தரிசன வெளிப்பாடுகளிலிருந்து வெளியே வர மறுத்து விட்டார்கள் மேலும் அது அவர்களுக்கு பரியாசமாக தோன்றினது. Gen_19:12-13, 2Pe_3:3-4,
6-9 லோத்தின் நீதியின் நிமித்தம் அவனுடைய விட்டார் சோதோமிலிருந்து இரட்சிக்கப்படுதல்:-
சோதோம் கொமோராவின் கூக்குரல் தேவனுடைய சமூகத்திற்கு வந்து எட்டினபடியால், அதை அழிப்பதற்காக தேவ தூதர்கள் சோதோம் பட்டணத்திற்கு வந்தபோது; லோத்து அவர்களை யாரோ? வழிப்போக்கர்கள் என்று அறிந்து, தன்னுடைய வீட்டிற்கு அவர்களை அழைத்து வந்து, இரவு தங்கி, அப்பம் புசித்து, மீண்டும் பயணம் செய்யும்படி அவர்களை கேட்டுக் கொண்டார். இப்படி லோத்து தேவ தூதர்களை தன்னிடம் அழைத்து உபசரித்ததால் லோத்தின் வீட்டார் சோதோமிலிருந்து இரட்சிக்கப்பட்டார்கள். Gen_19:1-3, Heb_13:1-2, Gen_19:29, Gen_19:20-21,
லோத்தைப் போல உள்ள அநேக நீதிமான்களின் விட்டார் கள்ளத்தீர்க்கதரிசிகளிடமிருந்து இரட்சிக்கப்படுதல்
ஆவியின்படி பொருள்:-
கள்ள தீர்க்க தரிசிகள் மற்றும் அவர்களைப் பின்பற்றி கள்ள திர்க்க தரிசன வெளிப்பாடுகளை நாடி ஓடுகிற ஜனங்களின் அக் கிரமங்கள், தேவனுடைய சமூகத்திற்கு வந்து எட்டினபடியால் அவர்களை அழித்து, நிக்கிரகம் பண்ணுவதற்காக தேவனால் அனுப்பப்ட்ட தேவ ஊழியர்கள், தேவ நாமம் தரிக்கப்பட்ட தேவ ஜனங்கள் மத்தியில் வருகிறபோது;
அவர்களுக்குள்ளே லோத்தைப் போல உள்ள நீதிமான்கள் யாராவது, அவர்களை தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் தேவ ஊழியர்கள் என்று அறியாமல், யாரோ வழிப்போக்கர்களைப் போல உள்ள தேவ ஊழியர்கள் என்று அறிந்து, அவர்களுக்கு உதவி செய்ய முன் வருகிறார்களோ, அவர் களின் விட்டார் கள்ள தீர்க்க தரிசிகளின் வஞ்சிக்கிற ஆவிகளி லிருந்து இரட்சிக்கப்படுவார்கள்.
Heb_12:1-2, Mat_25:31-39, Mat_25:40-46, Mat_10:40-42, Mar_9:41-42,
6-10-0 லோத்தின் மனைவி பின்னிட்டு திரும்பிப் பார்த்து உப்பு தூணாக மாறினாள்
6-10-1. லோத்தின் நீதியின் நிமித்தம் தேவ தூதர்களால் கரம் பிடிக்கப்பட்டு, தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்புவித்துக் கொள்ளுவதற்காக சோதோம் பட்டணத்திற்கு வெளியே அழைத்து வரப்பட்ட லோத்தின் மனைவி, மீண்டும் சோதோமிலுள்ள தன்னுடைய பூமிக்குரிய ஆசீர்வாதங்களை பின்னிட்டு திரும்பிப் பார்த்தபோது, அந்த இடத்திலே உப்பு தூணாக மாறினாள்.
Gen_19:15-26, Gen_19:17,
ஆவியின்படி பொருள்:-
லோத்தின் மனைவியைப்போல நீதிமான்களையுடைய சபை பூமிக்குரிய ஆசீர்வாதங்களை பின்னிட்டு திரும்பிப் பார்க்கிறபோது, மற்றவர்களின் பரிகாசத்திற்கு ஏதுவாக மாறுகிறது.
விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமின் நிமித்தமும், லோத்தைப்போல உள்ள நீதிமான்களின் நிமித்தமும், தேவனுடைய வார்த்தைகளால் கரம் பிடிக்கப்பட்டு, தேவனுடைய நியாயத்தீர்ப்பி லிருந்து தப்புவித்துக் கொள்ளுவதற்காக, கள்ள தீர்க்க தரிசனங் களிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்ட லோத்தைப்போல நீதி மான்களையுடைய சபையானது, மீண்டும் கள்ளத்தீர்க்க தரிசனங்களி னால் உண்டான பூமிக்குரிய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளு வதற்காக ஆவியில் பின்னிட்டு திரும்பிப் பார்க்கிறபோது அந்த இடத்திலே மற்றவர்களின் பரிகாசத்திற்கு ஏதுவாக மாறுகிறது.
6-10-2. லோத்தின் குடும்பத்தார் தங்களை அழிவிலிருந்து தப்புவித்துக் கொள்ளுவதற்காக, தேவதூதர்கள் அவர்களுக்கு கொடுத்த நான்கு தேவ ஆலோசனைகள் :- Gen_19:17,
1. உன் ஜீவன் தப்ப ஓடிப்போ
2. பின்னிட்டு பாராதே
3. இந்த சம பூமியில் எங்கும் நில்லாதே
4. நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ
ஆவியின்படி பொருள்:-
1. உன் ஜீவன் தப்ப ஒடிப்போ:- உன் ஆவி, ஆத்துமாவை இரட்சித்துக் கொள்ள ஓடிப்போ
2. பின்னிட்டு பாராதே:- பூமிக்குரிய ஆசீர்வாதங்களை திரும் பிப் பார்க்காதே
3. இந்த சம பூமியில் எங்கும் நில்லாதே:- ஆவிக்குரிய காரியங்களில் மற்றவர்களைப் போல இருக்காதே
4. நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ:- நீ அழிந்து போகாதபடிக்கு கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் மேலான ஆவிக்குரிய காரியங்களுக்கு ஓடிப்போ Luk_17:32,
6-10-3. உன் ஜீவன் தப்ப ஓடிப்போ :-
தன்னுடைய ஆவி, ஆத்துமாவை, இரட்சித்துக் கொள்ளு வதற்காக தன் சரீர ஜீவனை இழந்து போகிறவன், அதை உயிர் தெழுதலில் மீண்டும் பெற்றுக்கொள்ளுகிறான் ; ஆனால் தன் சரீர ஜீவனை மட்டும் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறவன், அதை தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் இழந்து போகிறான் . Gen_19:17, Luk_17:33,
6-10-4. பின்னிட்டு பாராதே:-
மேல் வீட்டில் இருக்கிறவன் கீழ் வீட்டிற்கு பின்னிட்டு திரும்பாதிருக்கக்கடவன்.
மேல் வீட்டில் பெற்றுக் கொண்ட பரிசுத்த ஆவியின் ஆவிக்குரிய அனுபவத்தில் இருப்பவர்கள், தங்களுடைய பழைய புளித்தமாவின் ஆவிக்குரிய அனுபவத்திற்கு பின்னிட்டு திரும்பிப் பார்க்க வேண்டாம். Gen_19:17, Luk_17:31,
6-10-5. பின்னிட்டு பாராதே:-
வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்கு பின்னிட்டு திரும்ப வேண்டாம்.
தேவனுக்கு ஊழியம் செய்கிறவர்கள் தங்களுடைய நீதியின் கிரியைகளை சபையில் விவரித்து, அதனால் கிடைக்கும் பட்டம், பதவிகளை பெற்றுக் கொள்ளுவதற்காக மீண்டும் சபைக்கு திரும்பாதிருக்கக்கடவன். Gen_19:17, Luk_17:31,
6-10-6. பின்னிட்டு பாராதே:-
தேவனுடைய வார்த்தைகளுக்கு உன் ஆவி ஆத்துமாவில் புற முதுகு காட்டாதே.
தேவனுடைய இரட்சிப்பின் ஆசீர்வாங்களை பெற்றுக்கொண்டவர்களில் சிலர், தங்கள் மனம் விரும்பிய காரியங்களுக்காக, தங்கள் முகத்தை திருப்பிக் கொண்டு, தேவனுடைய வார்த்தைகளுக்கு தங்கள் முதுகை காட்டுவார்கள்; எனவே, இவர்கள் தங்களுடைய ஆபத்து நாளில் தேவனுடைய முகத்தை தேடும் போது; தேவன் அவர்களுக்கு தம்முடைய முதுகை காட்டுவார்; ஆகையால் இவர்கள் எல்லாத இடங்களிலும் தோல்வியடைந்து புற முதுகு காட்டி ஓடுவார்கள்.
2Ch_29:6, Luk_9:61-62, Jer_2:27, Jer_32:33-34, Eze_8:16-18 , Act_7:38-41, Jer_48:39, Exo_23:27, Jer_18:17, Jos_7:8, Jos_7:12,
6-10-7. இந்த சம பூமியில் எங்கும் நில்லாதே:-
ஆவிக்குரிய காரியங்களில் மற்ற ஜனங்களைப் போல இருக்காதே!
ஆவிக்குரிய காரியங்களில் மற்ற சாதாரண ஜனங்களைப் போல இருக்காமல், கன்மலையாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளுக்கு ஓடிப்போகிறவர்கள், தேவனுடைய நியாயத் தீர்ப்பிலிருந்து தப்புவிக்கப்படுவார்கள்; சாதாரண ஜனங்களைப்போல ஆவிக்குரிய காரியங்களில் நிலைத்திருப்பவர்கள், தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு நியமிக்கப்படுவார்கள். Gen_19:17, Luk_17:35,
6-10-8. இந்த சம பூமியில் எங்கும் நில்லாதே!
ஆவிக்குரிய காரியங்களில் மற்ற ஜனங்களைப் போல இருக்காதே!
பொதுவாக எல்லா ஜனங்களைப் போல இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குள்ளே யாருடைய ஆவி, ஆத்துமா, கன்மலையாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளுக்கு ஓடிப் போகிறதோ, அவர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பு விக்கப்படுவார்கள். சாதாரண ஜனங்களைப் போல ஆவிக்குரிய காரியங்களில் தூங்கிக் கொண்டிருப்பவர்கள் தேவனுடைய நியாயத் தீர்ப்பிற்கு நியமிக்கப்படுவார்கள். . Gen_19:17, Luk_17:34,
6-10-9. நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ:-
யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக் கடவர்கள்.
தேவனுடைய வார்த்தைகளையும் தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும் பின்பற்றுகிறவர்கள் ஆவி, ஆத்துமாவில் பின்னிட்டு திரும்பிப் பார்க்காமல், கன்மலையாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். Gen_19:17, Mat_24:16,
6-10-10. நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ:-
மற்ற பட்டணங்களிலிருந்து மலைகளுக்கு ஓடிப்போக விரும்புகிறவர்கள், யூதேயாவின் மலைகளுக்கு ஓடிப்போகாமல் தங்கள் மனம் விரும்பின இடங்களுக்கு ஓடிப்போகிறார்கள்.
மற்ற பட்டணங்களிலிருந்து மேலான ஆவிக்குரிய நிலை களுக்கு முன்னேற விரும்புகிறவர்கள் கன்மலையாகிய கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளுக்கு ஓடிப்போகாமல் மற்றவர்கள் மூலம் கேள்விப்படுகிற கீழே குறிப்பிட்ட பல இடங்களுக்கு ஓடிப்போகிறார்கள்.
1. கிறிஸ்து வனந்தாரத்திலே இருக்கிறார்.
2. கிறிஸ்து இங்கே இருக்கிறார்.
3. கிறிஸ்து அங்கே இருக்கிறார்.
4. கிறிஸ்து அறை விட்டிலே இருக்கிறார்.
இப்படி அவர்கள் கேள்விப்படுகிற பல இடங்களுக்கு சென்று, அந்திக் கிறிஸ்து மற்றும் கள்ளத் தீர்க்க தரிசிகளின் வஞ்சிக்கிற ஆவிகளுக்கு அடிமைப்படுகிறார்கள்.
6-11-0. தகப்பனாலே கர்ப்பவதிகளாகி பிள்ளைகளைப் பெற்ற லோத்தின் இரண்டு மகள்கள்.
ஆவியின்படி பொருள் :-
புதிய ஏற்பாட்டு சபையாகிய ஸ்திரிகள் பழைய ஏற்பாட்டு நீதிமான்களின் கிரியைகளை பின்பற்றி புளித்தமாவின் உபதேசங் களை உருவாக்குகிறார்கள்; லோத்தின் நாட்களில் நடந்ததுபோல மனுஷக்குமாரன் வெளிப்படும் நாட்களிலும் சபைகளில் புளித்தமாவின் உபதேங்களை ஒவ்வொரு நாளும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். Gen_19:36-38, Amo_2:6-7, 1Co_5:1-6,
6-12-0. மோவாப் தேசத்தின் குடிகளுக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பு
மோவாப் தேசத்தில் குடியிருப்பவனே! நீ தேவனுடைய நியாயத்தீர்ப்பின் எக்காள சத்தத்திற்கு கீழ்படியாமல் விலகி புற முதுகு காட்டி ஓடும்போது 1. திகில் 2. படுகுழி 3. கண்ணி 4. அக்கினி ஜூவாலை 5. சிறையிருப்பு ஆகிய ஐந்து நியாயத்தீர்ப்புகள் உனக்கு நேரிடும். Jer_48:39-42, Jer_48:43-44, Jer_48:45-47, Isa_24:16-20, Num_21:26-31,
ஆவியின் படி பொருள் :-
கள்ள தீர்க்கதரிசன வெளிப்பாடுகளில் குடிகொண்டிருந்து, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் எக்காள சத்தத்திற்கு கீழ்படியாமல் விலகி, தேவனுடைய சமுகத்தை விட்டு வெளியே ஓடி, அனுதினமும் தேவனுடைய வார்த்தைகளை சிலுவையில் அடித்து, அனுதினமும் தேவனுக்கு கோபம் உண்டாக்குகிறவர்களே உங்களுக்கு, கீழே குறிப்பிடுகிற ஐந்து வகையான தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் வெளிப்படும். Jer_23:14-17, Rev_11:8, Heb_6:4-9, Isa_65:2-5,
1. திகிலின் சப்தம்:-
தேவனுடைய நியாயத்தீர்ப்பின் எக்காள சத்தம் உங்களுக்கு அறிவிக்கப்படும். Amo_3:6-8, Hos_8:1-3, Isa_58:1-2,
2. படுகுழியில் விழுதல்:-
ஆவி, ஆத்துமா, பாதாள வல்லமையின் படுகுழியில் அகப்பட்டு மரணமடையும் Psa_30:3, Psa_40:1-3, Psa_49:14-15, Psa_88:1-18, Isa_38:18-20, Lam_3:37-47, Job_33:29-30,
3. கண்ணியில் அகப்படுதல் :-
ஆவி, ஆத்துமா, வஞ்சிக்கிற ஆவிகளின் தந்திரங்களுக்கு அகப்பட்டுக் கொள்ளுதல்
4. அக்கினி ஜூவாலையில் அகப்படுதல் :-
ஆவி, ஆத்துமா, பிரசவ வேதனைப்படுகிற ஸ்திரியின் இருதய வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பது
5. சிறையிருப்பிற்கு தள்ளப்படுதல்:-
தங்களுடைய மன விருப்பங்களுக்கு அடிமையாக இருக்கும் படி தள்ளப்படுதல்.
6-12-1. மோவாப் தேசத்தின் குடியானவனே! நீ திகிலின் சத்தத்திற்கு விலகி, புறமுகுது காட்டி ஓடும்போது படுகுழியில் விழுவாய்
ஆவியின் பொருள்:-
கள்ள தீர்க்கதரிசன வெளிப்பாடுகளில் நிலை கொண்டிருப் பவனே! உன்னுடைய ஆவி, ஆத்துமா தேவனுடைய நியாயத்தீர்ப்பின் சத்தத்திற்கு கீழ்படியாமல் விலகி, தேவனுடைய சமூகத்தை விட்டு வெளியே ஓடுகிறபோது, அனுதினமும் தேவனுடைய வார்த்தைகளை சிலுவையில் அடித்து, அனுதினமும் தேவனுக்கு கோபம் உண்டாக்குகிறாய்;
இப்பொழுது உன்னுடைய கள்ள தீர்க்கதரிசன வெளிப்பாடுகளினால், உன்னுடைய ஆவி, ஆத்துமாவை, நீயே கொலை செய்து, இரண்டாவது முறை ஆவியில் மரணமடைந்து, தேவனிடத்திலிருந்து நீ பெற்றுக்கொண்ட இரட் சிப்பை இழந்து மீண்டும் பாதாள வல்லமைக்கு அடிமைப்படுகிறாய்.
உன்னுடைய சரீர மரணத்திற்கு முன்பு, நீ தேவனுடைய நியாயத் தீர்ப்பின் செய்திக்கு கீழ்படிந்து, உன்னுடைய கள்ள தீர்க்கதரிசனங் களிலிருந்து வெளியே வந்து மனந்திரும்பும்போது, மீண்டும் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொண்டு பாதாள படுகுழியின் வல்லமையிலிருந்து தப்புவிக்கப்படுவாய்.
6-12-2. மோவாப் தேசத்தின் குடியானவனே! நீ படுகுழியிலிருந்து ஏறும்போது கண்ணியில் அகப்படுவாய்.
ஆவியின்படி பொருள் :-
கள்ள தீர்க்கதரிசனங்களின் வெளிப்பாடுகளில் நிலை கொண்டிருப்பவனே, உன்னுடைய ஆவி, ஆத்துமா, தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு கீழ்படியாமல் விலகி ஓடினபடியால், நீ தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட இரட்சிப்பை இழந்து, பாதாள வல்லமையின் படுகுழுயில் விழுந்து விட்டாய், இந்த நிலையில் நீ, தேவனுடைய நியாயத்தீர்ப்பின் செய்திக்கு கீழ்படிந்து தேவனிட மிருந்து மீண்டும் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளாமல்;
உன்னுடைய சுயமான முயற்சியினால் உன்னுடைய ஆவி, ஆத்துமாவை நீயே, பிழைக்க வைக்க முயற்சி எடுக்கிறபோது, அந்த முயற்சிகள் உன்னுடைய ஆவி, ஆத்துமாவை, வஞ்சிக்கிற ஆவிகளின் தந்திரங்களுக்கு வழி நடத்திச்சென்று புளித்தமாவின் உபதேசத்திற்கு உன்னை அடிமைப்படுத்துகிறது.
6-12-3. மோவாப் தேசத்தின் குடியானவனே, நீ தேவனுடைய தண்டனைக்கு தப்ப புறஜாதிகளிடம் அடைக்கலம் தேடி ஓடுகிறபோது, அக்கினி ஜூவாலையிலும், அக்கினியிலும் விழுவாய். Jer_48:45, Num_21:26-28,
எழுத்தின்படி பொருள் :- மோவாப் தேசத்தில் குடியிருப்பவன் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் தண்டனைக்கு தப்பித்துக் கொள்ளுவதற்காக, ஜாதிகளின் நிழலில் அடைக்கலமாக வந்து சேருகிறபோது, அவர்களிடமிருந்து அக்கினி ஜூவாலையும், அக்கினியும் புறப்பட்டு மோவாபின் எல்லைகளையும், அதில் கலகம் செய்கிறவர்களின் உச்சந்தலையும் பட்சிக்கும்.
ஆவியின்படி பொருள் :-
கள்ள தீர்க்கதரிசன வெளிப்பாடுகளின் நிலை கொண்டிருப்பவன், தேவனுடைய நியாயத்தீர்ப்பின் தண்டனைக்கு தப்பித்துக் கொள்ளுவதற்காக ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளைப் பின்பற்றி அவைகளினால் அடைக்கலம் தேடி ஓடுகிறபோது; அவைகளினால் தங்கள் இருதயத்திலிருந்து அக்கினி ஜூவாலைக்கு ஒப்பான வேதனையை ஏற்படுத்தும் வார்த்தைகளும், அக்கினியைப் போல கடுங்கோபத்தின் வார்த்தைகளும் எழும்பி, தங்களுடைய கள்ள தீர்க்கதரிசன முடிவையும், பதவிகளுக்காக போட்டியிடுகிறவர்களின் பெருமையையும் வெறுமையாக்கும்.
புற ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளிலிருந்து / புற ஜாதிகளின் அரசியல் அதிகாரத்திலிருந்து அக்கினி ஜூவாலையும், அக்கினியும் புறப்படுகிறது Jdg_9:15, Jdg_9:19-20, Jer_11:16, Jer_22:11-14, Eze_17:1-10, Eze_19:10-14, Isa_50:10-11,
6-12-4 மோவாப் விக்கிரகங்களை பின்பற்றின படியால் அவர்கள் குமாரரும், குமாரத்திகளும் சிறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். Num_21:29-30 Jer_48:46-47,
எழுத்தின்படி பொருள் :-
தேவனுடைய ஜனங்கள் என்ற பெயரை பெற்றுக் கொண்டு, நீங்கள் விக்கிரங்களை பின்பற்றுகிறபடியால், உங்கள் குமாரரும் குமாரத்திகளும் அந்த விக்கிரங்களுக்கே அடிமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆவியின்படி பொருள்:-
தேவனுடைய ஜனங்கள் என்ற பெயரை பெற்றுக்கொண்டு, நீங்கள் உங்கள் இருதயத்தில் பொருளாசையாகிய விக்கிரங்களை யும், பதவிகளின் விக்கிரங்களையும் பின்பற்றுகிறபடியால், உங்களை யும், உங்களைப் பின்பற்றுகிறவர்களையும் அவைகளுக்கே, அடிமை யாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். Isa_2:5-11, Eze_14:1-8, Hos_14:1-3, Hos_13:10-16, Eph_5:5, Isa_48:1-2, Isa_58:1-2,