தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 13


தேவனுடைய நாமத்தை பின்தொடர்கிற நான்கு வகையான ஜனங்கள்

பொருளடக்கம் 4

4-0 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிறபடியால் புறஜாதியார்/இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்கள் விசாரித்துக் கேளாமல் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடையாமலிருக்கிறார்கள்.
 
இவர்கள் தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமலும் தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அறியாமலும், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவனுடைய நீதிப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியாதிருந்து. இடறுதற்கான கல்லில் இடறிவிழுந்து கொண்டிருக்கிறார்கள்.
 
இவர்களுடைய இருதயம் கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தூரமாக விலகியிருந்துகொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக்கொண்டிருந்து புசிக்கிறபடியால்: தேவனுடைய நீதிப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியாதிருந்து. இடறுதற்கான கல்லில் இடறிவிழுந்து கொண்டிருக்கிறார்கள்.
 
4-1 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிறபடியால் புறஜாதியார்/இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்கள் விசாரித்துக் கேளாமல் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடையாமலிருக்கிறார்கள்.
 
Isa 66:3 மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறான்.
 
Isa 66:3 ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறான்.
 
Isa 66:3 காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறான்.
 
Isa 66:3 தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாக இருக்கிறான்
 
Isa 66:3 இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.
 
Isa 66:4 நான் கூப்பிட்டும் மறுஉத்தரவு கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.
 
Rom 11:7 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிற இஸ்ரவேலர்கள்/கிறிஸ்தவர்கள் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்.
 
Rom 9:31 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
 
Rom 9:32 என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
 
Isa 58:1 சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.
 
Isa 58:2 தங்கள் தேவனுடைய நியாயத்தை விட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதிநியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.
 
Isa 48:1 இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.
 
Isa 48:2 அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருக்கிறார்கள்.
 
4-2 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிறபடியால் புறஜாதியார்/இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்கள் விசாரித்துக் கேளாமல் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடையாமலிருக்கிறார்கள்.
 
Eze 33:30 மேலும் மனுபுத்திரனே, உன் ஜனத்தின் புத்திரர் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப் பேசி, கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனோடே சகோதரனும் சொல்லி,
 
Eze 33:31 ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப் போகிறது.
 
Eze 33:32 இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள்.
 
Eze 33:33 இதோ, அது வருகிறது, அது வருகையில் தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
 
Pro 1:24 நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
 
Pro 1:25 என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
 
Pro 1:26 ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.
 
Pro 1:27 நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
 
Pro 1:28 அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
 
Pro 1:29 அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற்போனார்கள். Pro 1:30 என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை பண்ணினார்கள்.
 
Pro 1:31 ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள். Pro 1:32 பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.
 
Pro 1:33 எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். Psa 25:8 கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.
 
4-3 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிறபடியால் புறஜாதியார்/இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்கள் விசாரித்துக் கேளாமல் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடையாமலிருக்கிறார்கள்.
 
Rom 10:21 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிற இஸ்ரவேலரை /கிறிஸ்தவர்களைக்குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.
 
Isa 65:1 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; Isa 65:2 நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன்.
 
Isa 65:3 அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி,
 
Isa 65:3 தோட்டங்களிலே பலியிட்டு, எழுத்தின்படி பொருள்:- தோட்டங்களிலே ஆராதனை ஊழியங்கள்.
 
Isa 65:3 செங்கற்களின்மேல் தூபங்காட்டி,
எழுத்தின்படிபொருள்:- செங்கற்களிலான பிரசங்க மேடைகளின்மேல் ஆராதனை ஊழியங்கள்.
 
Isa 65:4 பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, எழுத்தின்படிபொருள்:- பிரேதக்குழியின் தொடர்பிலான ஊழியங்கள்.
 
Isa 65:4 பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, எழுத்தின்படிபொருள்:-பொதுவான இடங்களில் முழு இரவு ஜெப ஆராதனை ஊழியங்கள்.
 
Isa 65:4 பன்றியிறைச்சியைத் தின்று,
எழுத்தின்படிபொருள்:- நன்மை தீமைகளை பகுத்தறியாமல் தங்களுடைய விசுவாச வசனங்களை ஏற்றுக்கொண்டு.
 
Isa 65:4 தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:
 
எழுத்தின்படிபொருள்:- தங்களுடைய கல்வியின் மூலமாக பதவிகளை ஏற்படுத்திக்கொண்டு.
 
Isa 65:5 நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.
 
Isa 65:3-5 வசனங்களின் எழுத்தின்படிபொருள்:-
Isa 65:3 அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி,
தோட்டங்களிலே ஆராதனை ஊழியங்கள். செங்கற்களிலான பிரசங்க மேடைகளின்மேல் ஆராதனை ஊழியங்கள்.
 
பிரேதக்குழியின் தொடர்பிலான ஊழியங்கள். பொதுவான இடங்களில் முழு இரவு ஜெப ஆராதனை ஊழியங்கள். நன்மை தீமைகளை பகுத்தறியாமல் விசுவாச வசனங்களை ஏற்றுக்கொண்டு. தங்களுடைய கல்வியின் மூலமாக பதவிகளை ஏற்படுத்திக்கொண்டு.
 
Isa 65:5 நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும்,நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.
 
Isa 65:6 இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன்.
 
Isa 65:7 உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களுக்கும் தக்கதாக அவர்கள் மடியிலே சரிக்கட்டுவேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே அளப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
4-4 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிறபடியால் புறஜாதியார்/இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்கள் விசாரித்துக் கேளாமல் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடையாமலிருக்கிறார்கள்.
 
Isa 65:10 என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாக இருக்கும்.
 
Isa 65:10. பொருளடக்கம்:-
தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிற ஜனத்துக்கு: தேவனால் சாரோன் ஆட்டுத்தொழுவமாக இருந்து பெரும்பாதையான பரிசுத்த வழியை காட்டுகிறது.(Isa 35:1-10,Heb 12:5-13)
 
Isa 35:1 வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். Isa 35:2 அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
 
Isa 35:3 தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
 
Isa 35:4 மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
 
Isa 35:5 அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.
 
Isa 35:6 அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
 
Isa 35:7 வெட்டாந்தரை தண்ணீர்த் தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்; வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.
 
Isa 35:8 அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
 
Isa 35:9 அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.
 
Isa 35:10 கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
 
Heb 12:5 அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
 
Heb 12:6 கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
 
Heb 12:7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
 
Heb 12:8 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
 
Heb 12:9 அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
 
Heb 12:10 அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
 
Heb 12:11 எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
 
Heb 12:12 ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, Heb 12:13 முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.
 
4-5 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிறபடியால் புறஜாதியார்/இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்கள் விசாரித்துக் கேளாமல் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடையாமலிருக்கிறார்கள்.
 
Isa 65:10 என்னைத் தேடுகிற என் ஜனத்துக்கு ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுத்தொழுவமாக இருக்கும்.
 
Isa 65:10. பொருளடக்கம்:-
தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிற ஜனத்துக்கு: தேவனால் நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுத்தொழுவமாக இருந்து, சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்கி, நீங்கள் உங்கள் சத்துருக்களை ஜெயங்கொண்டு; தங்கள் இளவயதின் நாட்களிலும் தங்கள் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல பாடச்செய்கிறது.
 
பாட்டு:- நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் ( Hos 2:12-15, Jos 7:13-25,)
 
Hos 2:12 என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும்.
 
Hos 2:13 அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
Hos 2:14 ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவளோடே பட்சமாய்ப் பேசி,
 
Hos 2:15 அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.
 
Jos 7:10 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன?
 
Jos 7:11 இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே.
 
Jos 7:12 ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன்.
 
Jos 7:13 எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே, சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
 
Jos 7:14 காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.
 
Jos 7:15 அப்பொழுது சாபத்தீடானதை எடுத்தவனாய்க் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குள்ள யாவும் அக்கினியில் சுட்டெரிக்கப்படக்கடவது என்றார்.
 
Jos 7:16 யோசுவா அதிகாலமே எழுந்திருந்து, இஸ்ரவேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரப்பண்ணினான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது.
 
Jos 7:17 அவன் யூதாவின் வம்சங்களை வரப்பண்ணினபோது, சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியரின் வம்சத்தைப் பேர்பேராக வரப்பண்ணினபோது, சப்தி குறிக்கப்பட்டான்.
 
Jos 7:18 அவன் வீட்டாரை அவன் பேர்பேராக வரப்பண்ணினபோது, யூதா கோத்திரத்துச் சேராகின் குமாரனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான்.
 
Jos 7:19 அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைபண்ணி, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு ஒளிக்காதே என்றான்.
Jos 7:20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன்.
 
Jos 7:21 கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச் சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்.
 
Jos 7:22 உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்துக்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைத்திருந்தது, வெள்ளியும் அதின்கீழ் இருந்தது. Jos 7:23 அவைகளைக் கூடாரத்தின் மத்தியிலிருந்து எடுத்து, யோசுவாவினிடத்திலும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள்.
 
Jos 7:24 அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்.
 
Jos 7:25 அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி;
 
Jos 7:26 அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.
 
4-6 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிறபடியால் புறஜாதியார்/இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்கள் விசாரித்துக் கேளாமல் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடையாமலிருக்கிறார்கள்.
 
Isa 65:10 என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடையாகவும் இருக்கும். Isa 65:11 ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து, காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறைய வார்க்கிறவர்களே,
 
Isa 65:10-11. வசனங்களின் பொருளடக்கம்:-
 
தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிற ஜனத்துக்கு: தேவனால் சாரோன் ஆட்டுத்தொழுவமாக இருந்து பெரும்பாதையான பரிசுத்த வழியை காட்டுகிறது.(Isa 35:1-10,Heb 12:5-13)
 
தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிற ஜனத்துக்கு: தேவனால் நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுத்தொழுவமாக இருந்து, சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்கி, நீங்கள் உங்கள் சத்துருக்களை ஜெயங்கொண்டு; தங்கள் இளவயதின் நாட்களிலும் தங்கள் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல பாடச்செய்கிறது. ( Hos 2:12-15, Jos 7:13-25,)
 
தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிற ஜனங்கள் தேவனால் சாரோன் மற்றும் நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கு ஆகிய இரண்டு இடங்களில் பல ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டிருந்தாலும்: தேவனை விட்டு, தேவனுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோனை / தேவனுடைய பிரமாணங்களை மறந்து, தங்களுடைய ஐக்கியத்திற்காக புதிய வெளிப்பாடுகளை ஆயத்தம்பண்ணி, தங்களுடைய ஐக்கியத்தியத்தில் பங்குபெறுகிற ஒவ்வொருவருக்கும் விசேஷமான பதவிகளை கொடுத்து மிகவும் பெருமைப்படுத்துகிறார்கள்.
 
Isa 65:12 உங்களை நான் பட்டயத்துக்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறுஉத்தரவு கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்.
 
Isa 66:17 தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்கள், ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
எழுத்தின்படிபொருள்:- தங்களுடைய நீதியின் கிரியைகளின் மூலம் தங்களை மற்றவர்களுக்கு முன்பாக நீதிமான்களாக வெளிப்படுத்துகிறவர்கள் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
Isa 66:17 தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர்பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்கள், ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
எழுத்தின்படிபொருள்:-
 
தோட்டங்களிலே நடைபெறும் ஆராதனை ஊழியங்களிள்,உயர்ந்த நீதியுள்ளவர்கள் முதல் ஒருவர்பின் ஒருவராய்ச். தங்களுடைய நீதியின் கிரியைகளின் மூலம் தங்களை மற்றவர்களுக்கு முன்பாக நீதிமான்களாக வெளிப்படுத்துகிறவர்கள். ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
Isa 66:17 பன்றியிறைச்சியை, சாப்பிடுகிறவர்கள். ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
எழுத்தின்படிபொருள்:-
 
நன்மை தீமைகளை பகுத்தறியாமல் தங்களுடைய விசுவாச வசனங்களை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள். ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
Isa 66:17 அருவருப்பானதை சாப்பிடுகிறவர்கள். ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
எழுத்தின்படிபொருள்:-
மனிதனின் நீதியின் கிரியைகளை தங்களுடைய ஆவிக்குரிய ஆகாரமாக சாப்பிடுகிறவர்கள். ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
Isa 66:17 எலியை சாப்பிடுகிறவர்கள். ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
எழுத்தின்படிபொருள்:-
 
தங்களுடைய விருப்பத்திற்கேற்றபடியுள்ள நீதியின் கிரியைகளை தங்களுடைய ஆவிக்குரிய ஆகாரமாக சாப்பிடுகிறவர்கள். ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
4-7 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிறபடியால் புறஜாதியார்/இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்கள் விசாரித்துக் கேளாமல் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடையாமலிருக்கிறார்கள்.
 
Isa 57:3 நாள் பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் வேசிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள்.
 
Isa 57:4 நீங்கள் யாரைப் பரியாசம்பண்ணுகிறீர்கள்? யாருக்கு விரோதமாய் வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்பண்ணுகிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ?
 
Isa 57:5 நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், விக்கிரக தேவர்களோடே மோகாக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ்ப் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள்.
 
Isa 57:6 பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ?
 
Isa 57:7 நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.
 
Isa 57:8 கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் மஞ்சத்தை அகலமாக்கி, அவர்களோடே உடன்படிக்கைபண்ணினாய்; அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய்.
 
Isa 57:9 நீ தைலத்தைப் பூசிக்கொண்டு ராஜாவினிடத்தில் போகிறாய்; உன் பரிமளங்களை மிகுதியாக்கி, உன் ஸ்தானாபதிகளைத் தூரத்துக்கு அனுப்பி, உன்னைப் பாதாளமட்டும் தாழ்த்துகிறாய்.
 
Isa 57:10 வழிதூரமானதால் உழன்றுபோகிறாய்; அது விருதாவென்று நீ சொல்லுகிறதில்லை; உன் கைபெலத்தைக் கண்டுபிடித்தாய்; ஆகையால் நீ ஆயாசப்படவில்லை.
 
Isa 57:11 நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும், உன் மனதிலே வைக்காமலும் போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய்.
 
Isa 57:12 உன் நீதியையும் உன் கிரியைகளையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது.
 
Isa 57:13 நீ கூப்பிடும்போது, உன் கணங்கள் உன்னைத் தப்புவிக்கட்டும்; காற்று அவைகளையெல்லாம் பறக்கடித்து, மாயை அவைகளைக் கொண்டுபோம்; என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சுதந்தரித்து, என் பரிசுத்த பர்வதத்திலே காணியாட்சிக்காரனாயிருப்பான்.
 
Isa 57:14 வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும்.
 
Isa 57:15 நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.
 
Isa 57:16 நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.
 
Isa 57:17 நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே.
 
Isa 57:18 அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்.
 
Isa 57:19 தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
Isa 57:20 துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.
 
Isa 57:21 துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.
 
4-8 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிறபடியால் புறஜாதியார்/இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்கள் விசாரித்துக் கேளாமல் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடையாமலிருக்கிறார்கள்.
 
இவர்களுடைய இருதயம் கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தூரமாக விலகியிருந்துகொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக்கொண்டிருந்து புசிக்கிறபடியால்: தேவனுடைய நீதிப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியாதிருந்து. இடறுதற்கான கல்லில் இடறிவிழுந்து கொண்டிருக்கிறார்கள்.
 
Isa 29:10 கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார்.
 
Isa 29:11 ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்.
 
Isa 29:12 அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான்.
 
Isa 29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
 
Isa 29:14 ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
 
Mat 15:7 மாயக்காரரே, உங்களைக்குறித்து: Mat 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;
 
Mat 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
 
Jer 12:1 கர்த்தாவே, உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?
 
Jer 12:2 நீர் அவர்களை நாட்டினீர், வேர் பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்குச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.
 
Jer 12:3 கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல அவர்களைப் பிடுங்கிப்போட்டு, கொலைநாளுக்கு அவர்களை நியமியும்
 
4-9 தேவனுடைய நாமத்தை விசாரித்துக் கேளாமல் தேடுகிறபடியால் புறஜாதியார்/இஸ்ரவேலர்/கிறிஸ்தவர்கள் விசாரித்துக் கேளாமல் தேடுகிற தேவனுடைய நீதிப்பிரமாணத்தை அடையாமலிருக்கிறார்கள்.
 
1-0-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு ; அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டிருந்து புசிக்கிறவர்கள். / அறிக்கையிடுகிறவர்களுடைய ஆத்துமா, மாயக்காரனுடைய நீதியினால் பிழைக்கிறது. இவர்கள் பொதுவாக உலகத்தில் தோன்றின பெரிய மதங்களையோ அல்லது அவைகளின் உட்பிரிவுகளையோ கொண்டவர்களாக இருப்பார்கள்.
 
1-1-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தன்னுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, அவைகளை தன்னுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருக்கிறபோது; தேவனுடைய வார்த்தைகளையும் தன்னுடைய இருதயம் விரும்புகிற வார்த்தைகளையும் கலந்து தன்னுடைய வாயினால் அறிக்கை செய்து கொண்டு, தன்னுடைய இருதயமும் மாம்சமும் விரும்புகிற மாயக்காரனுடைய நீதியாகிய மாயைகளினாலும் / பொய்யினாலும் தன்னுடைய ஆத்துமாவின் கிரியைகளை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
 
1-2-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறவர்களுடைய வாயிலும், இருதயத்திலும் வெளிப்படுகிற மாயக்காரனுடைய கிரியைகள் ; தேவனுக்கு முன்பாக நீதி இல்லாமலும் மனிதனுக்கு முன்பாக நீதி இல்லாமலும், வெளிப்படுகிறது. ஆகையால் இவர்கள் தங்களை மனிதர்களுக்கு முன்பாக நீதிமான்களாக காட்டுகிறார்கள், இவைகளையே தன்னுடைய ஆத்துமாவின் ஆகாரமாகவும் புசித்து, மற்றவர்களுடைய ஆத்துமாவின் ஆகாரமாகவும் புசிக்க கொடுக்கிறார்கள்.
 
1-2-1 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாய் சமீபமாயிருக்கிறது. Jer_12:1-2, Isa_29:10-14, Eze_33:31-33, Isa_58:1-2, Isa_48:1-2, Mat_15:8-9, Mar_7:6-7, Pro_5:3-7
 
1-2-2 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறது. Jer_18:11-12, Eze_11:21, Hos_13:6, Zec_7:12, Jer_2:25, Jer_7:23-24, Jer_17:5, Jer_16:12
 
1-2-3 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது, கள்ள தீர்க்க தரிசனங்கள் வெளிப்படுகிறது. . Jer_14:14,Jer_23:16-17,Jer_23:28-32,Eze_13:1-8,Eze_13:9-16,Eze_13:17-23,Eze_14:7-10 ,1Jo_2:3-6
 
1-2-4 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும் போது; தங்களுடைய மாயக்காரனுடைய பொய்களும் மாயைகளும் திரளான ஆற்று வெள்ளம் போல கழுத்து வரை கரை புரண்டு வந்து, மனிதனுடைய வாயிலே தேவன் போட்ட கடிவாளத்தைப் போல அவனை அலைக்கழிக்கிறது. . Jer_9:3-6, Jer_9:8-9, Isa_41:21-24, Isa_28:14-18, Isa_5:18-22, Isa_8:5-8, Isa_30:28
 
1-2-5 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது ; கிழக்கு திசையாரின் மாயைகளின் சாஸ்திரங்களுக்கு இருதயம் அடிமைப்பட்டிருந்து அவைகளை கக்குகிறது /வாந்தி பண்ணுகிறது. . Isa_2:5-6, Job_15:2-3, Job_15:31-35, Job_27:21-23, Hos_12:1, Hos_8:7
 
1-2-6 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது ; தங்களுடைய வாய் அர்த்தமில்லாத / உபயோகமில்லாத திரளான வார்த்தைகளை கக்குகிறது / கடல் அலைகளினால் கரையில் ஒதுங்குகிற அழுக்கைப்போல தன்னுடைய வாய் ஆலோசனைகளை கக்குகிறது. Isa_28:8-9, Isa_57:20-21, Jud_1:10-13 , Rev_12:15-17
 
1-2-7 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது, தங்களுடைய மனம் விரும்புகிற பரலோக இராஜ்ஜியத்தின் பதவிகளை எடுத்துக் கொள்ளுவற்கு முயற்சி செய்து கொண்டு, பொய்யான மாயைகளின் தரிசனங்களும் திரளாக பொங்கி வருகிறது. Job_8:13-19, Job_15:31-35, Isa_33:14-17, Mat_24:45-51, 1Sa_12:19-21, Deu_32:16-21, Jer_16:19, Rom_8:21
 
1-2-8 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும்போது ; தங்களுடைய இருதய ஆலோசனைகளினால் பொய்யான மாயைகளின் புதிய வெளிப்பாடுகள் / தரிசனங்கள் திரளாக பொங்கி வருகிறது. . Isa_5:18-22,Isa_28:14-19,Isa_30:27-28,Jer_2:4-9, Jer_8:19, Psa_24:1-6, Psa_119:37, Psa_144:11-15, Jon_2:8
 
1-2-9 தேவனுடைய வார்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும்போது, மனிதர்களுக்கு முன்பாக தங்களை நீதிமான்களாக வெளிப்படுத்திக் கொண்டு மனிதர்கள் மூலம் வரும் மகிமையை தேடுவது. Mat_23:7, Joh_7:18, Joh_12:43, Jud_1:16-19, Isa_2:5-9, Jer_22:17
 
1-2-10 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும் போது ; சபைகளின் மூலம் வருகிற அதிகார பதவிகளுக்கு போராடுவது. . Isa_7:1-7, Isa_7:10-15, Isa_8:5-10, Isa_8:11-15, Amo_5:14-15
 
1-2-11 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு; அவைகளை தங்களுடைய வாய்க்கும் மட்டும் சமீபமாக வைத்திருப்பவர்களுடைய ஊழிய அழைப்பு மனிதர்களால் தீர்மானிக்கப்பட்டு நியமிக்கப்படுகிறது. . Isa_7:21-22, Exo_29:1, 2Ch_13:9-11, 2Ki_17:32-34, Mat_23:1-8, Mat_19:12
 
1-3-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தன்னுடைய வாய் சமீபமாகயிருந்து கொண்டு அவைகள் தன்னுடைய இருதயத்திற்கு தூரமாக விலகியிருக்கிறபோது; தேவனுடைய ஆலோசனைகளை உணர்ந்து கொள்ளாமல், தன்னுடைய இருதயத்தின் சுயமான ஆலோசனைகளையும், தேவனுடைய வார்த்தைகளையும் கலந்து தன்னுடைய வாய் அறிக்கை செய்து மனிதனுடைய கற்பனைகளை உபதேசங்களாக வெளிப்படுகிறது.
 
1-4-0 தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கிறபோது; தங்களுடைய வாய் மனிதனுடைய கற்பனைகளை, தங்களுடைய மூல உபதேசங்களாக அறிக்கை செய்து, ஒவ்வொருவருடைய இருதய சிந்தனைகளுக்கு ஏற்றபடி தேவனுடைய வார்த்தைகளில் மார்க்க பேதங்களையும், பிரிவினைகளையும் உருவாக்கிக் கொண்டு, தங்களுடைய மூல உபதேசங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது.
 
1-5-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தன்னுடைய வாய் சமீபமாகயிருந்து கொண்டு அவைகள் தன்னுடைய இருதயத்திற்கு தூரமாக விலகியிருக்கிறபோது கீழே குறிப்பிடுகிற காரியங்கள் சம்பவிக்கிறது.
 
1. தேவனுடைய தீர்க்க தரிசனங்களின் தொடர்புடைய மூன்று காலங்களை உணர்ந்து கொள்ளாமல் இருப்பது.
2. தேவ நீதி மற்றும் மனுஷ நீதி தொர்புடைய தேவனுடைய மூல உபதேசங்களை அறிந்து கொள்ளாமல் இருப்பது.
3. தன்னுடைய இருதயத்தில் சாட்சியிடுகிற மாயக்காரனுடைய மாயைகளின் வெளிப்பாடுகளை, சாத்தானுடைய வாயிலிருந்து புறப்படுகிற திரளான ஆற்று நீரைப்போல தன்னுடைய வாயிலிருந்து புறப்பட்டு கரை புரண்டோடுகிறது.
4. மாயக்காரனுடைய ஆத்துமாவிற்கு தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் தொடங்குகிறது.
 
1-5-1 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருக்கும் போது, தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் பெருகுகிறது. Amo_8:11-14, Eze_4:16-17, Eze_5:16-17, Eze_14:13-14, Eze_14:21, Lev_26:26 , Isa_3:1-7, Isa_5:13, Psa_105:16, Amo_4:4-8
 
1-5-2 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, தங்களுடைய வாயினால் மட்டும் தேவனுடைய நாமத்தை அறிக்கையிடுகிற தேவ ஜனங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் வருகிறது. . Lam_1:11, Lam_4:4-5, Jer_15:2, Jer_24:8-10, Jer_29:17-18, Jer_44:12-13, Jer_44:27, Lam_5:10, Eze_5:12, Isa_51:17-19
 
1-5-3 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தீர்க்க தரிசிகளின் இருதயம் தூரமாக விலகியிருக்கும் போது, அவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் வருகிறது. . Jer_14:12-13, Jer_11:20-22, Jer_14:15-16 , Jer_14:18, Isa_55:1-3, Jer_14:1-6, Jdg_5:11
 
1-5-4 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, தேவனுடைய நாமத்தை தரித்துக் கொண்ட தேவ ஜனங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சம் வருகிறது. Isa_14:30, Eze_6:11-12, Job_24:5, Job_15:23, Jer_16:4-5, Jer_18:21, Jer_34:17, Eze_12:15-16
 
1-5-5 தேவனுடைய வார்த்தைகளின் பஞ்சத்தை உணர்ந்து கொண்டவர்கள், எப்பொழுது மனந்திரும்பி தேவனுடைய வார்த்தைகளை தங்களுடைய இருதயத்திற்கு சமீபமாக ஏற்றுக்கொள்ளுகிறார்களோ, அப்பொழுது தேவனுடைய வார்த்தைகளின் வல்லமைகள் அவர்களுடைய பஞ்சத்தை நீங்கி நித்தியமான ஆசீர்வாதங்களை கொண்டு வருகிறது. Exo_20:6, Isa_55:10-11, Psa_29:4, 1Sa_3:19, Psa_119:140, Jer_23:28-29, Mic_2:7, Zec_1:2-6, Mat_24:35, Mar_13:31, Luk_21:33, Heb_4:12, Rev_19:13, Psa_19:7, Deu_32:45-47, Gal_3:15-17
 
1-6-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருக்கும்போது ; தங்களுடைய மாயக்காரனுடைய ஆத்துமா விரும்பி புசிக்கும் சில மாயைகளின் அப்பங்கள்.
 
1-6-1 புளிப்புள்ளஅப்பங்கள் :-
பரிசேயர் மற்றும் சதுசேயரின் உபதேசங்கள்.
Mat_16:11-12, Mar_8:15, Luk_12:1, Gal_5:9, Mar_8:14-15, 1Co_5:6-8
 
1-6-2 மனிதனுடைய கற்பனைகளாகிய அப்பங்கள்:-
மனிதன் உருவாக்கின உபதேசங்கள் Mat_15:8-9, Mar_7:6-8, Lev_26:26, Isa_29:10-14
 
1-6-3 சொந்தமாக உருவாக்கின அப்பங்கள்:-
சொந்தமாக உருவாக்கின உபதேசங்கள் Isa_4:1, Jer_7:18, Isa_28:7-13, Jer_44:17-18
 
1-6-4 மனுஷரால் உருவாக்கப்பட்ட சபையின் மூல உபதேசமாகிய அப்பங்கள்:-
1. இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை அறிக்கை செய்தல் Rom_10:9-10
2. பாவ மன்னிப்பிற்கு இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல் Act_2:38
3. ஞானஸ்தானம் பெற்றுக்கொள்ளுதல் Mar_16:16
4. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுதல் Act_2:1-4
5. சபை ஐக்கியத்தில் கலந்து கொள்ளுதல் Heb_10:25
6. காணிக்கை, தசமபாகம் செலுத்துதல் Mal_3:8-10
7. பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுதல் 1Co_11:23-27, Isa_4:1
8. தேவனுடைய ஊழியத்தில் பங்கு பெறுதல் Mar_16:15
 
1-6-5 இரகசியமான அப்பங்கள் :-
வேத வசனங்களின் இரகசியங்களை மட்டும் தேடி தங்களுடைய ஆவிக்குரிய அப்பங்களாக புசிப்பது. Pro_9:13-18, Pro_5:3-7, Pro_7:1-5, Pro_2:16-20, Pro_6:23-24, Pro_22:14, 1Co_13:1-2
 
1-6-6 கல்லுகளை அப்பங்களாக மாற்றி புசிப்பது :-
உபவாசத்திற்கு பின்பு தங்களுடைய இருதய ஆலோசனைகளினால் திரளாக பொங்கி வருகிற பொய்யான மாயைகளின் புதிய வெளிப்பாடுகள் / தரிசனங்களை தங்களுடைய ஆவிக்குரிய அப்பங்களாக புசிப்பது. Luk_4:1-4, Isa_58:1-7
 
1-6-7அசுத்தமான அப்பங்கள் :-
தசமபாகம் / காணிக்கை /பொருத்தனை / ஆகிய தேவனுடைய காரியங்களில் அவைகளின் பிரமாணங்களின் படி தேவனுக்கு செலுத்தாமல் தேவனை வஞ்சிக்கிறபோது; தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்கி தேவனையும் மனிதனையும் ஏமாற்றுவது. Mal_1:6-8, Mal_1:12-14, Psa_69:21-24, Rom_11:7-10, 1Co_10:21-23, 1Co_11:27-32
 
1-6-8 மேஜை யிலிருந்து கீழே விழுந்த அப்பங்கள் :-
பரிசுத்தவான்கள் செய்த தவறுதல்களை / பாவங்களை தானும் செய்து, தன்னுடைய கிரியைகளை நியாயப்படுத்துவது. 1Sa_3:19, 2Ki_10:10, Joh_7:8-10, Rom_3:7
 
1-7-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து, அவைகளை தங்கள் வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்துக் கொண்டு புசிக்கிறவர்கள்; எப்பொழுது மனந்திரும்பி/ பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத் திருக்கிறார்களோ, அப்பொழுது தங்களுடைய இருதயத்திலும் தேவனுடைய வார்த்தைகளை புசித்து தங்களுடைய ஆத்துமாவில் தேவ நீதியில் பிழைக்கவே பிழைக்கலாம். Rev_3:19-22, Heb_9:1-4, Heb_9:6-8, Heb_9:9-10, Heb_9:13, Heb_9:11-12, Heb_9:14, Heb_10:19-22, 1Pe_3:18-19, Rom_8:1-4, Rom_7:22-25, Job_28:12-14, Job_28:20-22
 
1-8-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்து கொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து தேவனைத் தேடி கொண்டிருக்கிறவர்களை, தேவன் நாள் முழுவதும் கரம் நீட்டி கூப்பிடுகிறார்; ஆனால் அவர்களோ தேவனுடைய கரத்தை நோக்கிப் பார்த்து, தேவனுடைய ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளாமல், தங்களுடைய இருதய ஆலோசனைகளை பின்பற்றிக் கொண்டு, நாள் முழுவதும் தேவனை கோபப்படுத்துகிறபடியால், 
 
அவர்கள் விரும்புகிற நம்பிக்கையின் வாசலாகிய ஆகோரின் பள்ளத்தாக்கிற்கு தேவன் கொண்டு வந்து, தன் இளவயதில் புசித்த புலம்பலின் விருந்தை கொடுத்து, புலம்பலின் பாட்டை மீண்டும் பாட வைக்கிறார்.
 
பாட்டு:- நீ எங்களை கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார். Rom_10:21, Isa_65:2-7, Pro_1:23-33, Jer_18:15-17, Zec_7:9-14, Isa_65:10-12, Hos_2:13-16, Jos_7:22-26


Previous
Home

Social Media
Location

The Scripture Feast Ministries