தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 15


ஆத்துமா,ஆவி, சரீரம், பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளும் வழிமுறைகள்.

பொருளடக்கம் 2-0

2-0 தேவனுடைய இரட்சிப்பின் வஸ்திரத்தின் மூலம் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக  அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களும் அவைகளில் இடறிவிழுகிறவர்களும்:- 

2-1 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பினால்,  இயேசு கிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்குகிறபடியால், ஒப்புரவாக்குதலின் ஊழியத்தையும் ஒப்புரவாக்குதலின் உபதேசத்தையும் ஒப்புக்கொடுத்தார். 

2-2 தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும், நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு; தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்:- 

2-3  இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரைச்சீலையை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்து, நமக்கு இரட்சிப்பின் வஸ்திரங்களை உடுத்தி, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினார்:-  

2-4 இயேசு கிறிஸ்துவின் மூலம்  தேவனுடைய இரட்சிப்பை இலவசமாக பெற்றுக்கொண்டவர்கள்: தேவனுடைய கிருபையினால் கிடைத்த இரட்சிப்பின் வஸ்திரங்களை, எப்பொழுதும் வெள்ளையாக இருப்பதற்காக நீதியின் கிரியைகளின் மூலம்  காத்துக்கொள்ளுகிறவர்கள் பாக்கியவான்கள்:- 

2-5 தேவனுடைய விசுவாசத்தினாலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை தூரத்திலே கண்டு, அவைகளை நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிடுகிறவர்களின் மேல் தேவன் அன்பு வைத்து; அவர்களுக்கு வேண்டிய ஆகாரமாகிய அப்பத்தையும்,நீதியின் வஸ்திரத்தையும்  கொடுக்கிறார்:- 

2-6 தேவனுடைய வார்த்தையாகிய இருபுறமும் கருக்குள்ள  ஆவியின் பட்டயம் இல்லாதவர்கள்  தங்கள்  வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவர்கள்; தங்கள்  வஸ்திரமாகிய நீதியின் கிரியைகளை, தேவனுடைய வார்த்தைகளுக்காக விட்டுக்கொடுக்க முடியாதவர்கள், தங்களுடைய சொந்த வஸ்திரத்தை தரித்திருக்கிறார்கள்:- 

2-7 சீயோனாகிய  தேவனுடைய பிரமாணங்களூக்கும் , எருசலேமாகிய  கர்த்தரின் வசனங்களுக்கும், தீவிரித்து வருகிற பலவித பாஷைக்காரராகிய பத்து புறஜாதிகள்: ஒரு ஆவிக்குரிய யூதனுடைய வஸ்திரத்தின்  நீதியின் கிரியைகளை, பிடித்துக்கொண்டு தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்து நீதியின் கிரியைகளை விதைத்தும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாக அடித்து, நீதியின் கிரியைகளின் பிரதி பலனை அறுப்பார்கள்:- 

2-8 தேவனுடைய இரட்சிப்பின் வஸ்திரங்களின்   நீதியின் கிரியைகளின் மூலம், வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகளை கண்டறிந்து  தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்:-

2-1 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பினால்,  இயேசு கிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்குகிறபடியால், ஒப்புரவாக்குதலின் ஊழியத்தையும் ஒப்புரவாக்குதலின் உபதேசத்தையும் ஒப்புக்கொடுத்தார். 

Rom 5:8  நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். 

Rom 5:9  இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. 

Rom 5:10  நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. 

Rom 5:11  அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம். 

Rom 5:12  இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. 

Rom 5:13  நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. 

Rom 5:14  அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன். 

Rom 5:15  ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. 

Rom 5:16  மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. 

Rom_5:8-12, Rom_5:13-17, Rom_5:18-21, 2Co_5:18-21 ; Col_1:14-16, Col_1:17-21, 1Co_15:20-28; 1Co_15:45-50;1Co_15:51-54;Heb_2:11-14, Heb_2:15-18, 

2-2 தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும், நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு; தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்:- 

Ecc 3:18  மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன். 

Ecc 3:19  மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. 

Ecc 3:20  எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது. 

Ecc 3:21  உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? 

Ecc 3:22  இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்? 

Gen_3:4-7; Gen_3:8-11; Gen_3:17-21; Ecc_3:18-20,  Ecc_6:3-6,    

2-3  இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரைச்சீலையை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்து, நமக்கு இரட்சிப்பின் வஸ்திரங்களை உடுத்தி, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினார்:-  

Heb 10:19  ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், 

Heb 10:20  அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், 

Heb 10:21  தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், 

Heb 10:22  துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். 

Heb 10:23  அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. 

Heb 10:24  மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; 

Heb 10:25  சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். 

Heb 10:26  சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், 

Heb 10:27  நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். 

Rom_7:22-25,Rom_8:1-5,Rom_8:6-11,Rom_5:14, Gal_3:22; Isa_61:1-6; Isa_61:7-11;Psa_116:12-14, Jer_2:1-4, Jer_2:5-9,   Heb_9:1-5, Heb_9:6-10, Heb_9:11-15, Heb_10:16-25;  Heb_6:16-20,  Mat_27:45-53; 

2-4 இயேசு கிறிஸ்துவின் மூலம்  தேவனுடைய இரட்சிப்பை இலவசமாக பெற்றுக்கொண்டவர்கள்: தேவனுடைய கிருபையினால் கிடைத்த இரட்சிப்பின் வஸ்திரங்களை, எப்பொழுதும் வெள்ளையாக இருப்பதற்காக நீதியின் கிரியைகளின் மூலம்  காத்துக்கொள்ளுகிறவர்கள் பாக்கியவான்கள்:- 

Ecc 9:1  இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும், தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்குமுன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான். 

Ecc 9:2  எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும். 

Ecc 9:3  எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள். 

Ecc 9:4  இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி. 

Ecc 9:5  உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. 

Ecc 9:6  அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை. 

Ecc 9:7  நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார். 

Ecc 9:8  உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக. 

Ecc 9:9  சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே. 

Ecc 9:10  செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. 

Rom_12:1-3,Ecc_9:7-12,Zec_3:1-5, Isa_61:3, Isa_61:10; Isa_64:6-9,Luk_15:22;Luk_11:39,Luk_16:15,  Rev_16:12-15, Rev_22:12-16; Heb_9:1-2,Mat_6:16-17;  

2-5 தேவனுடைய விசுவாசத்தினாலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை தூரத்திலே கண்டு, அவைகளை நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிடுகிறவர்களின் மேல் தேவன் அன்பு வைத்து; அவர்களுக்கு வேண்டிய ஆகாரமாகிய அப்பத்தையும்,நீதியின் வஸ்திரத்தையும்  கொடுக்கிறார்:- 

Deu 10:12  இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, 

Deu 10:13  நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். 

Deu 10:14  இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள். 

Deu 10:15  ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப் பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார். 

Deu 10:16  ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள். 

Deu 10:17  உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. 

Deu 10:18  அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். 

Deu_10:12-18, Psa_68:5-6, Heb_11:12-16,Gen_23:4, Gen_47:9; 1Ch_29:14-15; Hos_14:3; Psa_39:12, Psa_119:19; 1Pe_1:17,  

1Pe_2:11-12;Gen_49:8-12;   Mic_4:4-9; Mic_4:10-13 ; Isa_33:14-20; Isa_37:30-35;Zec_8:21-23,Luk_15:21-24; Mat_22:11-12 ;Rev_11:3-8; Rev_6:11, Rev_14:1-4, Rev_19:14,

2-6 தேவனுடைய வார்த்தையாகிய இருபுறமும் கருக்குள்ள  ஆவியின் பட்டயம் இல்லாதவர்கள்  தங்கள்  வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவர்கள்; தங்கள்  வஸ்திரமாகிய நீதியின் கிரியைகளை, தேவனுடைய வார்த்தைகளுக்காக விட்டுக்கொடுக்க முடியாதவர்கள், தங்களுடைய சொந்த வஸ்திரத்தை தரித்திருக்கிறார்கள்:- 

Luk 22:35  பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள். 

Luk 22:36  அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன். 

Luk 22:37  அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார். 

Luk 22:38  அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். 

Luk 12:30  இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார். 

Luk 12:31  தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். 

Luk 12:32  பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். 

Luk 12:33  உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை. 

Luk 12:34  உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். 

Luk 12:35  உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், 

Luk 12:36  தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள். 

Luk_22:35-38, Eph_6:10-17;Isa_49:2; Heb_4:12; Isa_4:1-6,Isa_3:4-9 ;Luk_7:25, Mar_6:7-9 , Mar_13:16,  Mat_23:5-7,   Mat_7:15, 

Mat_10:16;Mat_27:35 ,   Mat_9:16-17 , Luk_5:36-39,  Isa_2:5-11;

Jer_2:20-25;Joh_5:44, Joh_7:18, Joh_12:43,  Mat_19:21,  Mar_10:21, Luk_12:30-36 ;Luk_18:22, Mat_13:44

2-7 சீயோனாகிய  தேவனுடைய பிரமாணங்களூக்கும் , எருசலேமாகிய  கர்த்தரின் வசனங்களுக்கும், தீவிரித்து வருகிற பலவித பாஷைக்காரராகிய பத்து புறஜாதிகள்: ஒரு ஆவிக்குரிய யூதனுடைய வஸ்திரத்தின்  நீதியின் கிரியைகளை, பிடித்துக்கொண்டு தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்து நீதியின் கிரியைகளை விதைத்தும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாக அடித்து, நீதியின் கிரியைகளின் பிரதி பலனை அறுப்பார்கள்:- 

Isa 2:1  ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம். 

Isa 2:2  கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். 

Isa 2:3  திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். 

Isa 2:4  அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. 

Isa 2:5  யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள். 

Isa 2:6  யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தரைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர்மேல் பிரியப்படுகிறார்களே. 

Isa_2:1-4; Mic_4:1-3; Zec_8:21-23,Rev_11:2,Rev_7:9-14,

2-8 தேவனுடைய இரட்சிப்பின் வஸ்திரங்களின்   நீதியின் கிரியைகளின் மூலம், வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகளை கண்டறிந்து  தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்:-

Rev 3:14  லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; 

Rev 3:15  உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். 

Rev 3:16  இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். 

Rev 3:17  நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; 

Rev 3:18  நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். 

Rev 3:19  நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. 

Rev 3:20  இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். 

Rev 3:21  நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். 

Rev 3:22  ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார். 

Mat_22:11-12 ; Ecc_9:7-12, Rev_3:4-5, Rev_3:14-19,  Rev_16:12-15;Rev_3:20-22,   Rev_19:7-8,  Mat_24:42, Mat_25:13, Mat_26:41; Mar_13:33-37, Mar_14:38; Luk_12:37-43, Luk_21:36; Act_20:31; 1Th_5:6; 1Pe_4:7; Rev_3:4, Rev_3:18; Exo_32:25; Isa_47:3, Eze_16:8 , Eze_16:36-37, Eze_23:10 , Eze_23:18, Eze_23:29, Hos_2:9; Hab_2:15; 2Co_5:3;


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries