4-0 தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட நீதிமான்களும் ஞானிகளும், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தை முழுவதுமாக நிறைவேற்றினாலும்: தங்களுடைய விருப்பையாவது, வெறுப்பையாவது, பின்பற்றுகிறவர்களூடைய ஆவிக்குரிய உள்ளான மனுஷன்; பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுடைய அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளாமல் இடறிவிழுந்து ஆவி,ஆத்துமா,சரீரத்தில் அதிகமான கசப்பை புசிக்கிறார்கள்:-
4-1 கர்த்தர் சாலொமோனுக்கு கற்பித்ததைக் கைக்கொள்ளாமற் போனதினாலும், தேவனுக்கு முன்பாகச் சற்குணனாயிருக்காமலும், பாவியாக இருந்தபடியினால் இடறிவிழுந்து: சாலொமோனுடைய ஞானம் முடிவிலே மாயைகளுக்கு அடிமையாக்கப்பட்டு, கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய சாவிலும் அதிக கசப்புள்ள ஸ்திரீயினால் பிடிக்கப்பட்டு, அதிகமான கசப்பை புசித்தான்:-
4-2 நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், என்று தங்களூடைய பாவங்களை அறிக்கையிடுகிறபோது; தேவதூதன் தொட்டதினால்/ பலிபீடத்திலிருந்து, ஒரு நெருப்புத் தழலை எடுத்து, தொட்டதினால் அக்கிரமம் நீங்கி, பாவம் நிவிர்த்தியானவர்கள்: தேவனுடைய ராஜ்யத்தின் உவமைகளூடைய இரகசியங்களையும், மற்றும் அதன் தொடர்புடைய மறைபொருள்களை வார்த்தைகளிலும், கிரியைகளிலும், வெளிப்படுத்துகிறார்கள்:-
4-3 தேவனுடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை ஏற்றுக்கொள்ளூகிறவர்களுக்கு சந்தோஷமும், எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருக்கிறது; தேவனுடைய வார்த்தைகளை சகித்து இளைத்துப்போகிறதினால் பொறுக்கக்கூடாமற்போகிறபோது, தேவனுடைய ஆலோசனைக்கு கீழ்படிந்து, தேவையான கருத்துள்ள வார்த்தைகளை பிரித்தெடுத்து பேசுகிறபோது, தேவனுடைய வார்த்தைகளுக்கு; ஜனங்கள் திரும்புவார்கள்.
4-4. கர்த்தருடைய கரத்தால் பலமாக பிடிக்கப்பட்டவர்கள் புலம்பல்கள் , தவிப்புகள் ,மற்றும் ஐயோ என்பவைகளை புசிக்கிறபோது, வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருக்கிறது, ஆனாலும் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்து போகிறார்கள் ; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தை கர்த்தர் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதைக் குறித்து சொல்லப்பட்ட அடையாளம் நிறைவேறும் நாள் வரை, அவர்கள் நாவை அவர்களுடைய மேல்வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணி பின்பு கர்த்தர் அவர்கள் வாயைத் திறக்கிறார்:-
4-5 தேவனால் அழைக்கப்பட்டவர்கள் தேவதூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தில் உள்ள தேவனுடைய சத்தியமான வசனங்களை, ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தாக வாங்கி புசிக்கிறபோது; வாய்க்கு தேனைப்போல மதுரமாயிருந்து, அதைப் புசித்தவுடனே வயிறு/ வாழ்க்கை கசப்பானவர்கள் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங் குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் .
4-6 தேவனாகிய கர்த்தர்: யோனாவை மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கிக்க அனுப்பினபோது ; யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போனதினால் , யோனாவின் வார்த்தையின்படி சமுத்திரத்திலே தள்ளப்பட்டு, கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்த பெரிய மீனினால் விழுங்கப்பட்டு, இராப்பகல் மூன்றுநாள் மீனின் வயிற்றிலிருந்து, வருத்தத்தின் அப்பத்தைச் புசித்தார்:-
4-7 தேவனாகிய கர்த்தர்: இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பதற்காக நசரேயனாக தெரிந்துகொள்ளப்பட்ட சிம்சோன், தன் கண்ணுக்குப் பிரியமான விருத்தசேதனமில்லாத பெலிஸ்திய ஸ்திரீயாகிய தெலீலாளிடத்தில், கர்த்தருடைய ஆவியின் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது; என்பதை வெளிப்படுத்தினபடியால், அவனுடைய கண்கள் பிடுங்கப்பட்டு , இரண்டு வெண்கல விலங்குபோடப்பட்டு சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருந்து கசப்பை புசித்தான்:-

Ecc 7:23 இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன்: நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று.
Ecc 7:24 தூரமும் மகா ஆழமுமாயிருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்?
Ecc 7:25 ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் ஆகாமியத்தையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என் மனதைச் செலுத்தினேன்.
Ecc 7:26 கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.
Ecc 7:27 காரியத்தை அறியும்படிக்கு ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்:
Ecc 7:28 என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன்; இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை.
Ecc 7:29 இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.
Ecc_7:23-29; Ecc_2:9-10; Ecc_1:12-18;Ecc_12:8-14,1Ki_3:11-15, 1Ki_11:1-6;1Ki_11:7-13; 2Ki_23:13-14; 1Ki_2:1-4; 1Ch_22:12-13,
1Ch_28:9; 2Ch_7:17-20; 2Ch_7:21-22; Ecc_9:1-4; Ecc_9:5-10; Ecc_9:11-12; Ecc_9:13-18;Mat_6:27-34,
4-2 நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், என்று தங்களூடைய பாவங்களை அறிக்கையிடுகிறபோது; தேவதூதன் தொட்டதினால்/ பலிபீடத்திலிருந்து, ஒரு நெருப்புத் தழலை எடுத்து, தொட்டதினால் அக்கிரமம் நீங்கி, பாவம் நிவிர்த்தியானவர்கள்: தேவனுடைய ராஜ்யத்தின் உவமைகளூடைய இரகசியங்களையும், மற்றும் அதன் தொடர்புடைய மறைபொருள்களை வார்த்தைகளிலும், கிரியைகளிலும், வெளிப்படுத்துகிறார்கள்:-
Isa 6:5 அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
Isa 6:6 அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து,
Isa 6:7 அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான்.
Isa 6:8 பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
Isa 6:9 அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.
Isa 6:10 இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
Isa 6:11 அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
Isa 6:12 கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும் வரைக்குமே.
Isa 6:13 ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.
Isa_6:1-4, Isa_6:5-10, Isa_5:1-6, Isa_5:7-13, Isa_5:16-21,Isa_5:22-25, Isa_20:1-6, Isa_33:5-13, Isa_33:14-19,Isa_33:20-24, , Dan_7:23-28, Dan_8:15-19, Dan_9:20-23; Dan_10:7-12, Dan_10:13-17, Dan_10:18-21,
4-3 தேவனுடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை ஏற்றுக்கொள்ளூகிறவர்களுக்கு சந்தோஷமும், எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருக்கிறது; தேவனுடைய வார்த்தைகளை சகித்து இளைத்துப்போகிறதினால் பொறுக்கக்கூடாமற்போகிறபோது, தேவனுடைய ஆலோசனைக்கு கீழ்படிந்து, தேவையான கருத்துள்ள வார்த்தைகளை பிரித்தெடுத்து பேசுகிறபோது, தேவனுடைய வார்த்தைகளுக்கு; ஜனங்கள் திரும்புவார்கள்.
Jer 15:15 கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடிய பொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய நிமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.
Jer 15:16 உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
Jer 15:17 நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.
Jer 15:18 என் நோவு நித்தியகாலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?
Jer 15:19 இதினிமித்தம்: நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jer_1:4-10;Jer_15:15-20; Jer_20:7-10,Jer_20:11-18, Jer_2:17-22,Jer_2:23-27, Jer_4:16-22, Jer_37:21,Jer_38:1-6,Jer_38:28,
4-4. கர்த்தருடைய கரத்தால் பலமாக பிடிக்கப்பட்டவர்கள் புலம்பல்கள் , தவிப்புகள் ,மற்றும் ஐயோ என்பவைகளை புசிக்கிறபோது, வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருக்கிறது, ஆனாலும் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்து போகிறார்கள் ; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தை கர்த்தர் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதைக் குறித்து சொல்லப்பட்ட அடையாளம் நிறைவேறும் நாள் வரை, அவர்கள் நாவை அவர்களுடைய மேல்வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணி பின்பு கர்த்தர் அவர்கள் வாயைத் திறக்கிறார்:-
Eze 24:21 நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.
Eze 24:22 அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்.
Eze 24:23 உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.
Eze 24:24 அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன்.
Eze 24:25 பின்னும் மனுபுத்திரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையையும், அவர்களுடைய குமாரரையும், அவர்களுடைய குமாரத்திகளையும் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ,
Eze 24:26 அந்த நாளிலேதானே தப்பிவந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன் காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ?
Eze 24:27 அந்த நாளிலேதானே உன் வாய் திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.
Eze_2:1-6, Eze_2:7-10,Eze_3:1-7, Eze_3:8-14; Eze_3:15-21; Eze_3:22-27; Eze_12:1-6,Eze_24:21-24;Eze_24:25-27; Eze_33:21-24;Eze_33:25-29;Eze_33:30-33;
4-5 தேவனால் அழைக்கப்பட்டவர்கள் தேவதூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தில் உள்ள தேவனுடைய சத்தியமான வசனங்களை, ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தாக வாங்கி புசிக்கிறபோது; வாய்க்கு தேனைப்போல மதுரமாயிருந்து, அதைப் புசித்தவுடனே வயிறு/ வாழ்க்கை கசப்பானவர்கள் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங் குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் .
Rev 19:7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
Rev 19:8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
Rev 19:9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
Rev 10:8 நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,
Rev 10:9 நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான்.
Rev 10:10 நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அது தேனைப்போல மதுரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.
Rev 10:11 அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.
Rev_10:8-11,Rev_19:7-9; Rev_8:13, Rev_11:3-8, Isa_65:8-9,Isa_65:13-15, Isa_25:6-8, Mal_3:15-18; Luk_14:7-12, Luk_14:13-19, Luk_14:20-24, Luk_12:41-48, Est_1:1-6; Est_1:7-12; Est_1:13-17; Est_1:18-22;
4-6 தேவனாகிய கர்த்தர்: யோனாவை மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கிக்க அனுப்பினபோது ; யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போனதினால் , யோனாவின் வார்த்தையின்படி சமுத்திரத்திலே தள்ளப்பட்டு, கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்த பெரிய மீனினால் விழுங்கப்பட்டு, இராப்பகல் மூன்றுநாள் மீனின் வயிற்றிலிருந்து, வருத்தத்தின் அப்பத்தைச் புசித்தார்:-
Jon 2:1 அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:
Jon 2:2 என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.
Jon 2:3 சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.
Jon 2:4 நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.
Jon 2:5 தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.
Jon 2:6 பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்.
Jon 2:7 என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.
Jon 2:8 பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.
Jon 2:9 நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.
Jon 2:10 கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.
Jon_1:1-6; Jon_1:7-12; Jon_1:13-17; Jon_2:1-5; Jon_2:6-10; Jon_4:1-5; Jon_4:6-11;
4-7 தேவனாகிய கர்த்தர்: இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பதற்காக நசரேயனாக தெரிந்துகொள்ளப்பட்ட சிம்சோன், தன் கண்ணுக்குப் பிரியமான விருத்தசேதனமில்லாத பெலிஸ்திய ஸ்திரீயாகிய தெலீலாளிடத்தில், கர்த்தருடைய ஆவியின் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது; என்பதை வெளிப்படுத்தினபடியால், அவனுடைய கண்கள் பிடுங்கப்பட்டு , இரண்டு வெண்கல விலங்குபோடப்பட்டு சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருந்து கசப்பை புசித்தான்:-
Jdg 16:21 பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.
Jdg 16:22 அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று.
Jdg 16:23 பெலிஸ்தரின் பிரபுக்கள்: நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள்.
Jdg 16:24 ஜனங்கள் அவனைக் கண்டவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.
Jdg 16:25 இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.
Jdg_14:1-6, Jdg_14:7-12, Jdg_14:13-17, Jdg_14:18-21,Jdg_15:1-5, Jdg_15:6-10,Jdg_15:11-15, Jdg_15:16-20,Jdg_16:1-5, Jdg_16:6-10,
Jdg_16:11-15, Jdg_16:16-20,Jdg_16:21-25, Jdg_16:26-30,
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)