5-0 கிறிஸ்துவானவர் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும், முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினுடைய தலையாகவும், மகிமையின் பிதாவுமானவர் ஏற்படுத்தினார்:-
5-1 கிறிஸ்துவானவர் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தபடியால், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும், முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினுடைய தலையாகவும், மகிமையின் பிதாவுமானவர் ஏற்படுத்தினார்:-
5-2 கிறிஸ்துவின் நித்திய ஜீவ சத்திய வார்த்தைகளை கர்ப்பந்தரித்து, தேவனுடைய ரூபமும் சாயலுமான மகிமையை தங்களுடைய அறிவு ,புத்தி, ஞானம், ஆகிய இவைகளில் பூரணமாக சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்கள்: தலையாகிய கிறிஸ்துவின் 1,44,000 சரீர அவயவங்களாக முழுதும், இசைவாய்க் கூட்டி இணைக்கப்படுகிறபோது , முழு சரீரவளர்ச்சியாகிய முதற்பேறானவர்களின் சபை வெளிப்படுகிறது:-
5-3 தேவனுடைய புத்திரர்கள்: தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, மாயையின் அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு வெளிப்படுவதற்கு; சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருந்து, தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது :-
5-4 தேவனுடைய புத்திரர்களாக பிறந்தவர்கள்:தங்களுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து, இரட்சிப்பின் வஸ்திரத்தை காத்துக்கொள்ளூகிறபோது; மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தின் மாயைகளிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள்:-
5-0 கிறிஸ்துவானவர் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும், முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினுடைய தலையாகவும், மகிமையின் பிதாவுமானவர் ஏற்படுத்தினார்:-
5-1 கிறிஸ்துவானவர் பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தபடியால், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும், முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினுடைய தலையாகவும், மகிமையின் பிதாவுமானவர் ஏற்படுத்தினார்:-
Eph 1:17 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
Eph 1:18 தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;
Eph 1:19 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
Eph 1:20 எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,
Eph 1:21 அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,
Eph 1:22 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,
Eph 1:23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.
Heb 12:22 நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,
Heb 12:23 பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,
Heb 12:24 புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.
Heb 12:25 பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?
Heb_12:23-24;Rev_3:19-22, Rev_14:1-5; Eph_4:7-12, Eph_4:13-16; Joh_20:17; Eph_1:1-7; Eph_1:8-15; Eph_1:16-19; Eph_1:20-23;
Psa_22:16-22;Heb_2:5-10 , Heb_2:11-14, Heb_2:15-18, Mat_12:50, Mat_25:40, Mat_28:10; Rom_8:29; Col_1:14-16, Col_1:17-21,
1Co_15:20-28; 1Co_15:45-50;1Co_15:51-54;
5-2 கிறிஸ்துவின் நித்திய ஜீவ சத்திய வார்த்தைகளை கர்ப்பந்தரித்து, தேவனுடைய ரூபமும் சாயலுமான மகிமையை தங்களுடைய அறிவு ,புத்தி, ஞானம், ஆகிய இவைகளில் பூரணமாக சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்கள்: தலையாகிய கிறிஸ்துவின் 1,44,000 சரீர அவயவங்களாக முழுதும், இசைவாய்க் கூட்டி இணைக்கப்படுகிறபோது , முழு சரீரவளர்ச்சியாகிய முதற்பேறானவர்களின் சபை வெளிப்படுகிறது:-
Eph 4:14 நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
Eph 4:15 அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
Eph 4:16 அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன் தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.
Eph 4:17 ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.
Eph 4:18 அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து;
Eph 4:19 உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.
Eph 4:20 நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.
Eph 4:21 இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.
Eph 4:22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
Eph 4:23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
Eph 4:24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Eph 4:25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
Eph_4:13-16;Joh_1:12-14;Joh_3:14-18, Jam_1:16-18; 2Th_2:13-14;1Pe_1:1-5 , 1Pe_1:6-10 ,1Pe_1:11-15 ,1Pe_1:16-20 ,1Pe_1:21-25
,Heb_6:16-20, Heb_7:11-15, Heb_7:16-20, Heb_7:21-28, Heb_8:1-6, Heb_8:7-10,Heb_8:11-13, Heb_9:1-6, Heb_9:7-12, Heb_9:13-18;
Heb_9:19-24,Heb_9:25-28, Heb_10:1-6, Heb_10:7-14, Heb_10:15-20, Heb_10:21-27, Heb_10:28-33, Heb_10:34-39,
5-3 தேவனுடைய புத்திரர்கள்: தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, மாயையின் அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு வெளிப்படுவதற்கு; சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருந்து, தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது :-
Rom 8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார்.
Rom 8:17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
Rom 8:18 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
Rom 8:19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
Rom 8:20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,
Rom 8:21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
Rom 8:22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
Rom 8:23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
Rom_8:16-23,Rom_8:24-30, Rom_9:15-18; Isa_66:1-5;Isa_66:6-10; Isa_54:1-5; Isa_54:6-10; Gal_4:22-28; Rev_12:1-5;
Joh_17:1-5, Joh_17:6-10,Joh_17:11-15, Joh_17:16-20,Joh_17:21-23, Joh_17:24-26,
5-4 தேவனுடைய புத்திரர்களாக பிறந்தவர்கள்:தங்களுடைய இரட்சிப்பின் உடன்படிக்கையில் நிலைத்திருந்து, இரட்சிப்பின் வஸ்திரத்தை காத்துக்கொள்ளூகிறபோது; மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்தின் மாயைகளிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள்:-
Ecc 9:7 நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.
Ecc 9:8 உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக.
Ecc 9:9 சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே.
Ecc 9:10 செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
Ecc 9:11 நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.
Ecc 9:12 தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாத காலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.
Ecc_9:1-6, Ecc_9:7-12, Ecc_8:5-6,Mal_2:13-16; Mal_2:1-6; Mal_2:7-12; Joh_5:21-29; Rom_8:1-8,Rom_8:9-15,
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)