தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 16


 கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

பொருளடக்கம் 10-0

பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை கண்டவர்கள்: பரலோக இராஜ்ஜியத்திற்குள்ளே பிரவேசிப்பதற்கு: இரண்டாவது திறவுகோல், ஒருவன் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறப்பது 

10-1 பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை கண்டவர்கள்: பரலோக இராஜ்ஜியத்திற்குள்ளே பிரவேசிப்பதற்கு இரண்டாவது திறவுகோல்; ஒருவன் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறப்பது :- 

ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஆத்துமாவில் மனந்திரும்பி மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன்: கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களினால்; தீமையை வெறுத்து, நன்மையை அறிந்து கொள்ளும் அறிவில் பூரண வளர்ச்சியடைகிறது. 

கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்களினால், நீதியின் கிரியைகளை செய்து, தங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து : புத்தியுள்ள ஆராதனையை நிறைவேற்றின பின்பு; தன்னுடைய ஜென்ம பாவ மனிதனின் ஆவியை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து: பரிசுத்த ஆவியுடன் உடன்படிக்கை செய்து, பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்போது; அவன் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்து, தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறான், அல்லது அவனுக்குள்ளே தேவனுடைய இராஜ்ஜியம் இருக்கிறது. 

Joh_3:3-5, Heb_5:12-14, Mat_16:24-28, Joh_3:5, Mat_12:28, Luk_11:20, Jam_1:17-18, Tit_3:5, 

10-2 கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களினால் நீதியின் கிரியைகள் இல்லாமல்: கண்சொருகிப்போன குருடர்கள்:- 

ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் ஆத்துமாவில் மனந்திரும்பி மறுபடி பிறந்தும், பரிசுத்த ஆவியினால் மறுபடி பிறந்தும், தேவனுடைய இராஜ்ஜியத்தின் இரகசியங்களுக்குள்ளே பிரவேசிக்கிறவர்களுக்கு: தேவ நீதியின்படி நற்கிரியைகள் இல்லாதபோது; தேவனுடைய இராஜ்ஜியத்தின் தரிசனங்களை இழந்து, மீண்டும் ஆவிக்குரிய குருடர்களாக மாறுகிறார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு தேவனுடைய இராஜ்ஜியத்தின் வழிகளை காட்டும்போது, குருடனுக்கு வழி காட்டுகிற குருடனாக இருக்கிறார்கள். 2Pe_1:4-11, 2Pe_2:20-22; Heb_6:4-8; Heb_10:26-31 Mat_22:8-14,Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12, 

10-3. கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களினால்/ ஜலத்தினால் மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்து; தேவனுக்கு முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். 

ஜலத்தினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்து, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: தேவ ஆசீர்வாதங்களை பெற்று, தேவனுக்கு முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்படுவதற்காக, சிலருடைய ஜென்ம பாவ மனிதன் தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் கொல்லப்படுகிறது; மேலும் சிலர் தாங்களாகவே, கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு ; தங்களுடைய ஜென்ம பாவ மனிதனை சிலுவையிலே அடித்து கொலை செய்து, ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டு, தேவனுடைய முதற்பலனாகும்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

இவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்று பரிசுத்த கற்பனைகளுக்கு கீழ்படியாமல் பின்வாங்கும்போது: தேவனுடைய சாபங்கள் இவர்களை பின்தொடரும், இந்த சாபங்களிலிருந்து வெளியே வரும்படி, உள்ளான ஆவிக்குரிய மனிதன்; பரிசுத்த கற்பனைகளின் நற்கிரியைகளை செய்யும்படி கட்டாயப்படுத்தப் படுகிறான். 

ஜென்ம பாவ மனிதனின் நற்கிரியைகளுக்கேற்றபடி, தன் பாவங்களிலிருந்து வெளியே வந்து; மீண்டும் தேவனை தொழுது கொண்டு, தன் மேல் இருக்கிற சாபங்களிலிருந்து விடுதலையாக்கப் பட்டு, தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுகிறான். .Lev_26:1,D eu_28:1,

Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries