தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 16
கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
பொருளடக்கம் 9-0
தேவனுடைய கிருபையினாலே, இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை பெற்றுக்கொண்டவர்கள்; நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றும் வழிமுறைகள்
தேவனுடைய கிருபையினாலே, இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை பெற்றுக்கொண்டவர்கள்: மாம்சத்திலே பாவத்தைப் பலிசெலுத்துகிறபோது, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டு, நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றும் வழிமுறைகள்.
ஒரு மனிதன், தேவனுடைய கிருபையினாலே இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு: தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும் வரை, தொடர்ந்து வந்துகொண்டிருந்த பாவம்/ மரணம்/சாபங்கள்,
ஆகியவைகள் மனிதனின் மேல் இருந்த கடன்களிலிருந்து நம்மை விடுதலையாக்கி; நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே தேவன் நம்மை இரட்சித்தார்.
ஆகையால் தேவனுடைய கிருபையினாலே, இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை பெற்றுக்கொண்டவர்கள்/ கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தை தங்களுடைய மனதிலே பெற்றுக்கொண்டவர்கள்:
அவைகளுக்கு விரோதமாய்ப் போராடுகிற, வேறொரு பிரமாணத்தை தங்கள் அவயவங்களில் இருக்கிறதை உணர்ந்து கொண்டு; அது தங்களுடைய சரீர அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு, தங்களை சிறையாக்கிக் கொள்ளுகிறபோது: ( Rom 7:23 Rom 8:1-4 )
தேவனே, மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி; மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
அதுபோல, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில்; நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கு சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று: தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்;
இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனையாகவும்/பலியாகவும்/ காணிக்கையாகவும் தேவன் அங்கிகரிக்கிறார். நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். Rom 12:1-2
தேவனுடைய கிருபையினாலே இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை பெற்றுக்கொண்டவர்கள்/ கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தை தங்களுடைய மனதிலே பெற்றுக்கொண்டவர்கள்: நன்மைசெய்தால் மேன்மை உண்டு, நன்மைசெய்யாதிருந்தால் அவனுடைய பாவம், பலி மிருகமாக அவனுடைய இருதய வாசற்படியிலே படுத்திருக்கும்;
அவனுடைய பாவத்தை/பாவ மிருகமாகிய மாம்சத்தை/ஜென்ம பாவ மனிதனை/ அவனுடைய பாவ சரீரத்தை, அவனுடைய பாவத்தைப் போக்கும் பலியாக செலுத்தி:அவனுடைய பாவ மாம்சத்திலே, அவனே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதின் மூலம், கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தினால்; பாவம் நிவிர்த்தியாகும் வழிமுறைகளை பின்ப்பற்றி, நியாயப்பிரமாணத்தின் நீதியை மனிதனே நிறைவேற்றுகிறபடியால்: தேவனுக்கு முன்பாக நீதிமானாக மாறுகிறான்
ஒருவனுடைய பாவ சரீரத்தை, அவனுடைய பாவத்தைப் போக்கும் பலியாக செலுத்தி: அவனுடைய பாவ மாம்சத்திலே, பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காமல் இருக்கிறபோது; அவனுடைய இருதய வாசற்படியில் பாவம் மிருகமாக படுத்திருக்கும். அந்த பாவமிருகம், அவனுடைய இருதயத்திற்குள்ளே பிரவேசித்து அவனை அடிமைப்படுத்தி அவனை ஆட்சி செய்யும்.
ஒருவன் பாவத்தை பலிசெலுத்தினால், அவன் பாவத்தை அவனே அடிமைப்படுத்தி, அவனே பாவத்தை ஆட்சி செய்ய முடியும். அவன் பாவத்தை பலிசெலுத்தாமல் இருக்கிறபோது; பாவ மிருகம் அவனுடைய இருதயத்திற்குள்ளே பிரவேசித்து, அவனை அடிமைப்படுத்தி, அவனுடைய பாவ மிருகம் அவனை ஆட்சி செய்யும்.
Gen 4:6 And Jehovah saith unto Cain, `Why hast thou displeasure? and why hath thy countenance fallen?
Gen 4:7 Is there not, if thou dost well, acceptance? and if thou dost not well, at the opening a sin-offering is crouching, and unto thee its desire, and thou rulest over it.'
Gen 4:6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?
Gen 4:7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
1Pe 4:14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
1Pe 4:15 ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
1Pe 4:16 ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.
1Pe 4:17 நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
1Pe 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
1Pe 4:19 ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.
1Pe 3:16 கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.
1Pe 3:17 தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மை செய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.
1Pe 3:18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
1Pe 3:19 அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.
1Pe 3:20 அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
1Pe 3:21 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;
1Pe 3:22 அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
Rom_8:1-4;1Pe_3:16-21, 1Pe_4:1-6, 1Pe_2:19-25, 1Pe_4:16-19, Heb_6:13-20, Heb_10:19-22, Heb_9:8-15, Heb_13:9-13; Rom_2:10-15, Gal_2:20-21,Gal_5:1-6,Gal_6:12-18;Col_2:11-14 Gal_5:14-18, Gal_5:19-26, Rom_6:1-8, Rom_6:9-13, Col_2:13-19, Col_2:20-25, Col_3:3-4,