தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 16


கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

பொருளடக்கம் 15-0

கிறிஸ்தவன், மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைசெய்கிறபோது; தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை விருந்தாக புசிக்கிறான் 

15-1 தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை விருந்தாக புசிக்கிறவர்களின் பிரதிபலன்கள்:- 

15-2 இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளுடன் உடன்படிக்கை செய்து விசேஷ இரட்சிப்பை ஏற்றுக் கொண்டவர்களின் ஆவிக்குரிய நிலமைகள்:- 

15-3. இருதயத்தில் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து. 

15-4. நித்திய ஜீவ வார்த்தைகளினால் நல்ல ருசியான விருந்து 

15-5. நித்திய ஜீவ வார்த்தைகளினால் கடைசிகால இரட்சிப்பின் நற்செய்தி 

15-6. சுய நீதியின் வஸ்திரம் / மறுதேசத்து ராஜகுமாரரின் வஸ்திரம் தரித்து விருந்து கொண்டாடுகிறவர்களின் பிரதிபலன்கள். 

15-1 தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை விருந்தாக புசிக்கிறவர்களின் பிரதிபலன்கள்:- 

இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேல் உள்ள விசுவாசத்தில், தங்களுடைய முழு நம்பிக்கையையும் வைத்து, அவருடன் விசுவாச உடன்படிக்கை செய்து, அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ; அத்தனை பேர்களையும் இரட்சகராகிய இயேசுகிறிஸ்து, அவர் இராஜாவாக முடிசூட்டப்படும், தன்னுடைய பட்டாபிஷேக விழாவிற்கு அழைத்து, அவர்களுக்கு தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை விருந்தாகக் கொடுத்து, அவர்களின் கிரியை களின்படி பிரதிபலனை பரிசாக அளிக்கிறார். 

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகர், இந்த விருந்தை புசிக்க அபாத்திராக போனார்கள். 

ஆனால் தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களிள் ஒரு சிலர், இயேசு கிறிஸ்து இராஜாவாக முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாவில்/ ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண விருந்தில் கலந்து கொண்டு; இந்த தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை விருந்தாக புசிக்கிறார்கள். 

அதன் சுவைகளை உணர்ந்து கொண்டவர்கள்,ஆவி,ஆத்துமாவில், மறுரூபமடைந்து: தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதின் மூலம் கிறிஸ்துவின் இராஜ்யத்தில் ஆட்சி அதிகாரங்களை, பிரதிபலனாக பெற்றுக்கொள்ளுகிறார்கள். 

15-2 இயேசு கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளுடன் உடன்படிக்கை செய்து விசேஷ இரட்சிப்பை ஏற்றுக் கொண்டவர்களின் ஆவிக்குரிய நிலமைகள்:- 

1 ஜலத்தினால் மறுபடியும் பிறப்பு/ தேவனுடைய வார்த்தைகளினால் மனம் மறுரூபம் அடைந்து, தேவனுடைய இராஜ்ஜியத்தை விசுவாசக் கண்களால் பார்ப்பது. 

2. ஆவியினால் மறுபடியும் பிறப்பு / தேவனுடைய வார்த்தைகளினாலும் பரிசுத்த ஆவியினாலும், மனம் மறுரூபம் அடைந்து ,தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளே விசுவாசக் கண்களால் பிரவேசிப்பது. 

3. மறுபடியும் பிறந்தவர்களுக்கு களங்கமில்லாத ஞானப்பால்/ மறுபடியும் பிறந்தவர்கள், ஆவிக்குரிய காரியங்களில் வளர்ச்சியடைய; கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள். 

4. பலமான ஆகாரம்/ தீமையை வெறுத்து, நன்மையை அறிந்து கொள்ளும் அறிவில் பூரண வளர்ச்சியடைந்து நீதியின் வசனத்தை பகுத்தறியும் ஞானத்தை அடைதல். 

5. பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்கள் / உவமைகளின் இரகசியங்களை அறிந்து கொள்ளுவதினால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற தேவ சித் தத்தை / பங்களிப்பை அறிந்து கொள்ளுதல். 

6. தங்களுடைய விசுவாச உடன்படிக்கையில் நிலைத்திருந்து முன் னேறும் போது, அவர்கள் பரலோக இராஜ்ஜியத்தில் தேவனுடைய சித் தத்தையும், அதன் விசுவாச அளவுப் பிரமாணத்தையும்; அறிந்து கொண்டு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுதல். 

7. ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து/ இயேசு கிறிஸ்து, இராஜாவாக முடிசூடப்படும் பட்டாபிஷேக விழாவில் கலந்து கொண்டு. தேவனுடைய சத்தியமான வசனங்களை விருந்தாக புசித்து, தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஆட்சியின் பதவியை பரிசாகப்பெற்று, அல்லேலூயா; என்று கெம்பீர சத்தத்தோடு ,ஆரவாரம் செய்து தேவனை மகிமைப்படுத்துதல். 

8. மரணத்தை ஜெயமாக விழுங்குதல்/தேவனுடைய சத்தியமான நித்திய ஜீவ வசனங்களின் அறிவில் மறு ரூபமடைந்து, அதன் கிரியைகளின் மூலம் அழிவுள்ளது அழியாமையையும், சாவுள்ளது சாவாமையும், தரித்துக் கொள்ளும்போது; மரணம் ஜெயமாக விழுங்கப்படும். 

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து சமைக்கப்பட்டு: இந்த புஸ்தகத்தில் புசிக்க ஏற்றபடி / அவரவர் உட்கொள்ளும் அளவுக்கேற்றபடி / தன்மைக்கேற்றபடி பரிமாறப்படுகிறது. 

இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகர்; இந்த விருந்தை புசிக்க அபாத்திராக போனார்கள். 

ஆனால், தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் ஒரு சிலர், இயேசு கிறிஸ்து ராஜாவாக முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாவில் கலந்து கொண்டு; இந்த தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை: பல ருசியுள்ள தேவ வார்த்தைகளின் தலைப்புகளாக புசிக்கிறார்கள். 

அதன் சுவைகளை உணர்ந்து கொண்டபடியால், ஆவி, ஆத்துமாவில் மறுரூபமடைந்து, தங்களுக்கு கொடுத்த தேவ சித்தத்தை நிறைவேற்றுவதின் மூலம், ஜெயங்கொள்ளுகிறவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறார்கள். 

அவர்கள் தங்களுக்கு வைக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொண்டு, பரலோக இராஜ்ஜியத்தின் ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்கும் மணவாளனாகிய கிறிஸ்துவுடன்; தேவனுடைய இராஜ்ஜியத்தில் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுகிறார்கள். 

15-3. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து இருதயத்தில் நடைபெறுகிறது :- 

இருதயத்தில் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை சிந்தித்து தியானித்து ஏற்றுக்கொள்ளுதல் 

Rev 3:20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத்திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான். 

Rev 19:9 பின்னும், அவன் என்னை நோக்கி : ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவ னுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். 

Isa_64:6, Rev_22:14, Heb_5:12-14, Amo_5:14, Gen_1:16-17, Gen_21:8-10, Gal_4:28-31, Isa_28:9, Heb_6:1-2, 2Ti_3:16-17, Tit_3:8, Eph_5:23-26, 

15-4. நித்திய ஜீவ வார்த்தைகளினால் நல்ல ருசியான விருந்து இருதயத்தில் நடைபெறுகிறது :- 

தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட நித்திய ஜீவ வார்த்தைகளினால் நல்ல ருசியான விருந்து இருதயத்தில் பரிமாறப்படுகிறது. 

Joh 5:39 வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணு கிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவை களே. 

Joh 5:40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டா கும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. 

Joh 6:68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. 

Joh 6:69 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான் Deu_8:3, Luk_8:10, Mat_13:10-15, Mar_4:10-12, Psa_49:4, Psa_78:2 Mat_5:1-10, Psa_19:1-6, Job_22:22, Job_23:12, Job_37:1-5, Pro_2:6, Mat_28:20, Jer_9:20, 2Pe_1:18-19, Pro_5:7, Joh_2:5, Psa_132:15, Pro_1:23, 1Jo_1:1-3, 1Jo_2:7-8, Joh_1:1-5, Rev_1:5, Rev_3:14, Rev_19:13, 

15-5. நித்திய ஜீவ வார்த்தைகளினால் கடைசிகால இரட்சிப்பின் நற்செய்தி:- 

நித்திய ஜீவ வார்த்தைகளினால் கடைசிகால இரட்சிப் பின் நற்செய்தி இருதயத்திற்கு அறிவிக்கப்படுகிறது 1Pe_1:5, 1Pe_1:18-25,Rev_14:6-7, 1Pe_4:17-19, Rev_1:1-3, Jam_1:16-21, 1Pe_2:1-9, 1Jo_2:7-14, 1Jo_2:21-27, Joh_6:27-39, Joh_6:40-47,Joh_6:48-60, 

தலைமுறை, தலைமுறையாக இவைகளை பின்பற்ற வேண் டும் என்று குறிப்பிட்ட வேத பகுதிகள் : நித்திய ஜீவ வார்த்தைகள். Gen_17:12, Exo_3:15, Exo_12:14, Exo_31:13Exo_34:7, Lev_3:17, Psa_45:17, Psa_100:5, Dan_4:3, Dan_4:34 Joe_3:20, 

15-6. சுய நீதியின் வஸ்திரம் / மறுதேசத்து ராஜகுமாரரின் வஸ்திரம் தரித்து விருந்து கொண்டாடுகிறவர்களின் பிரதிபலன்கள் 

வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்துக்கொண்டு நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொள்ளாமல், தங்கள் சுய நீதியின் வஸ்திரம் / மறுதேசத்து ராஜ குமாரரின் வஸ்திரம் தரித்துக்கொண்டு; தேவனுடைய வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு தேவனுடைய நீதியுள்ள நியாயத் தீர்ப்பு 

வேத பிரமாணத்தின்படி நீதியின் வஸ்திரம் தரித்துக்கொண்டு நித்திய ஜீவ வார்த்தைகளின் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு: தேவன் தம்முடைய இராஜ்ஜியத்தின் பதவிகளை பரிசாக கொடுக்க வரும்போது ; 

Luk 14:7 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: 

Luk 14:8 ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். 

Luk 14:9 அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். 

Luk 14:10 நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும். 

Luk 14:11 தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். 

ஆனால் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவன் பந்தியில் மிகவும் முதன்மையான இடமாகிய இராஜாவின் ஸ்தானத் தில் அமர்ந்து கொண்டு, நான் தான் கிறிஸ்து என்று சொல்லிக் கொள்ளுகிற இராஜ வஸ்திரத்தை தரித்திருக்கிறவனைப் பார்த்து : 

Mat 22:11 விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: 

Mat 22:12 சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். 

Mat 22:13 அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். 

Mat 22:14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். 

Mat 24:3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். 

Mat 24:4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 

Mat 24:5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். 

Isa 65:12 Isa_65:12, ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் : இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள் ; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள். 

Isa 65:13 Isa_65:13, இதோ, என் ஊழியக்காரர் மன மகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மன நோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள். 

. Mat_23:5-12, Mat_24:23-26, Joh_7:18, Joh_12:43, Isa_2:5-6, 1Th_2:6,Rom_11:8-10, Psa_69:22-28, Psa_109:5-10, Isa_28:7-13,Isa_29:9-14,Jer_7:34, Jer_16:9, Jer_25:10, Rev_18:23,

Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries