தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 16


கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

பொருளடக்கம் 14-0

கிறிஸ்தவன், மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிறபோது; கிருபையிலிருந்து தேவனுடைய சத்தியத்தினாலே உண்டாகிற இரட்சிப்பு ஆரம்பமாகிறது.


14-1 கிறிஸ்தவன், மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிறபோது; தேவனுடைய சத்திய ஆவி வெளிப்படுகிறது:- 

14-2 கிறிஸ்தவன், மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிறபோது; சத்திய வசனங்களை கர்ப்பத்தரித்து, முதற்பலனாகிய ஆண்பிள்ளையாக பிறக்கிறார்கள். 

14-3 கிறிஸ்து இயேசுவினாலே, ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின் கிரியைகளில் இடறி விழுகிறவர்கள்; சரித்திர புருஷனாகிய மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை தூபங்காட்டி, ஆராதணை செய்து வருகிறார்கள்:- 

14-4 சர்ப்பமானது, மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்/ மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவும் உயர்த்தப்பட்டு; தூபங்காட்டி ஆராதணை செய்து வருகிறார்கள். 

14-5 கிறிஸ்துவின் இரண்டாம் வருகை தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, சரித்திர புருஷனாகிய மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை; தூபங்காட்டி ஆராதணை செய்து வருகிறார்கள். 

14-6 பழைய ஏற்பாட்டில், தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற கன்றுக்குட்டியை கண்டு; கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணுகிறவர்களின் அடையாளங்கள்:- 

14-7 புதிய ஏற்பாட்டில், சரித்திர புருஷனாகிய மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை/ கன்றுக்குட்டியை தூபங்காட்டி ஆராதணை செய்து வருகிறதை கண்டு; கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணுகிறவர்களின் அடையாளங்கள்:- 

14-1 கிறிஸ்தவன், மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிறபோது; தேவனுடைய சத்திய ஆவி வெளிப்படுகிறது:- 

1Jn 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 

1Jn 4:2 தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 

1Jn 4:3 மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 

1Jn 4:4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். 

1Jn 4:5 அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். 

1Jn 4:6 நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். 

1Jn 4:7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். 

1Jn 4:8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். 

1Jn 4:9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. 

1Jn 4:10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. 

2Jn 1:7 மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான். 

2Jn 1:8 உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். 

2Jn 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். 

2Jn 1:10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். 

2Jn 1:11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான். 

1Jo_4:1-3;2Jo_1:7-11, Joh_3:14-16, Num_21:7-9; 2Ki_18:4; 1Ti_3:14-16, 1Jo_4:15, 1Jo_2:18-22, 2Co_5:14-16,Rom_10:5-13, Deu_30:11-15, Mat_10:32-33; Luk_12:8; Rom_14:8-11; Joh_9:22,Joh_12:41-43; Phi_2:11; 

14-2 கிறிஸ்தவன், மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிறபோது; சத்திய வசனங்களை கர்ப்பத்தரித்து, முதற்பலனாகிய ஆண்பிள்ளையாக பிறக்கிறார்கள்:- 

Jas 1:16 என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள். 

Jas 1:17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. 

Jas 1:18 அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார். 

2Th 2:13 கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 

2Th 2:14 நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார். 

2Th 2:15 ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள். 

2Th 2:16 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், 

2Th 2:17 உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக. 

14-3 கிறிஸ்து இயேசுவினாலே, ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின் கிரியைகளில் இடறி விழுகிறவர்கள்; சரித்திர புருஷனாகிய மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை, தூபங்காட்டி ஆராதணை செய்து வருகிறார்கள்:- 

மனிதனுக்கு தேவனுடைய இரட்சிப்பு, கிருபையினாலே ஆரம்பமாகிறது:- 

ஒரு மனிதன், தேவனுடைய கிருபையினாலே, இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும் வரை; தொடர்ந்து வந்துகொண்டிருந்த பாவம்/ மரணம்/சாபங்கள், 

ஆகியவைகள் மனிதனின் மேல் இருந்த கடன்களிலிருந்து நம்மை விடுதலையாக்கி, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே தேவன் நம்மை இரட்சித்தார். 

Eph 2:1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். 

Eph 2:2 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். 

Eph 2:3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். 

Eph 2:4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, 

Eph 2:5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். 

Eph 2:6 கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, 

Eph 2:7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். 

Eph 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; 

Eph 2:9 ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; 

Eph 2:10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். 

Eph_2:1-7 , Eph_2:8-13 , Eph_2:14-22 ,Rom_5:1-2,Rom_3:25-28,Rom_4:5-10,Rom_4:11-16, Rom_3:26-31,Rom_6:14-17 ,Gal_2:15-20, Rom_11:1-6, 2Co_8:9, Eph_1:6-7 ,2Ti_1:9,Heb_4:12-16 ,Heb_12:27-28,Jam_4:5-9 ,Rom_5:19-21, Rom_9:11-18, Act_15:11, Tit_3:4-8, 

மனிதனுக்கு தேவனுடைய இரட்சிப்பு கிரியைகளினாலே பூரணமடைந்து முடிவடைகிறது:- 

Jas 2:14 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? 

Jas 2:17 அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். 

Jas 2:18 ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே. 

Jas 2:19 தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. 

Jas 2:20 வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? 

Jas 2:21 நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? 

Jas 2:22 விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. 

Jas 2:23 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான். 

Jas 2:24 ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. 

Jas 2:25 அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? 

Jas 2:26 அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. 

Rom 4:4 கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். 

தேவனுடைய இரட்சிப்பை கிருபையினாலே, விசுவாசத்தின் மூலம் பெற்றுக்கொண்டு ஆரம்பித்தவர்கள்: கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தை விசுவாசித்து; பாவம் நிவிர்த்தியாகும் வழிமுறைகளை பின்ப்பற்றி, நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றுகிற கிரியைகளின் மூலம்: தேவனுக்கு முன்பாக நீதிமானாக முடியாதவர்கள்; 

சரித்திர புருஷனாகிய மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்து, என்னுடைய பாவங்களுக்காக மரித்து, நியாயப்பிரமாணத்தின் நீதியை நிறைவேற்றினார்; நான் அதை விசுவாசக்கிறதினால், தேவனுக்கு முன்பாக நீதிமானாக மாறுகிறேன்: என்று தேவனிடத்தில் பெற்றுக்கொண்ட இரட்சிப்பின் கிரியைகள் இல்லாமல்: விசுவாசத்திலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக மாறுகிறவர்கள், தேவனிடத்தில் தாங்கள் பெற்றுக்கொண்ட இரட்சிப்பில் இடறி விழுந்து, சரித்திர புருஷனாகிய மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை தூபங்காட்டி, ஆராதணை செய்து வருகிறார்கள். 

Rom 2:13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். 

Joh 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 

Joh 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். 

தேவனுடைய கிருபையினாலே, விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பை பெற்றுக்கொண்டு ஆரம்பித்தவர்கள்: மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத, அநேக வஞ்சகர்கள் தேவனுடைய ஆவியில் மரணமடைந்தும், கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தின் கிரியைகள் இல்லாமல் மரணமடைந்தும், பிதாவை ஆவியோடும் உண்மையோடும் ஆராதணை செய்ய முடியாமல்; சரித்திர புருஷனாகிய மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை, தூபங்காட்டி ஆராதணை செய்து வருகிறார்கள். 

Rom_2:10-15, Gal_2:16-21,Gal_5:1-4; Rom_9:28-33; Rom_3:20-24,Tit_1:15-16,Act_7:39-43,Mat_25:24-30; Luk_19:11-17, Luk_19:18-25, Luk_19:26-27; 

14-4 சர்ப்பமானது, மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்/ மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவும், உயர்த்தப்பட்டு தூபங்காட்டி, ஆராதணை செய்து வருகிறார்கள்:- 

சர்ப்பமானது, மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும்/ மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவும் உயர்த்தப்படவேண்டும். இயேசு கிறிஸ்து இரண்டு நாளுக்கு/ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்பு; கிறிஸ்தவர்கள் அந்த வெண்கலச் சர்ப்பத்திற்குத் தூபங்காட்டி, ஆராதணை செய்து வருகிறார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டிருக்கிறார்கள். 

Joh 3:14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், 

Joh 3:15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். 

Joh 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். 

Joh 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 

Joh 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 

Joh 3:19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிற படியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 

Joh 3:20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 

Joh 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். 

Num 21:5 ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். 

Num 21:6 அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். 

Num 21:7 அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணினான். 

Num 21:8 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். 

Num 21:9 அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான். 

2Ki 18:1 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான். 

2Ki 18:2 அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் ஆபி. 

2Ki 18:3 அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 

2Ki 18:4 அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான். 

2Ki 18:5 அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. 

2Ki 18:6 அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். 

2Ki 18:7 ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான். 

14-5 கிறிஸ்துவின் இரண்டாம் வருகை தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, சரித்திர புருஷனாகிய மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை, தூபங்காட்டி ஆராதணை செய்து வருகிறார்கள்:- 

Exo 32:1 மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள். 

Exo 32:2 அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். 

Exo 32:3 ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள். 

Exo 32:4 அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள். 

Exo 32:5 ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான். 

Exo 32:6 மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள். 

Exo 32:7 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள். 

Exo 32:8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார். 

Exo 32:9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள். 

Exo 32:10 ஆகையால் என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார். 

14-6 பழைய ஏற்பாட்டில் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற கன்றுக்குட்டியை கண்டு, கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணுகிறவர்களின் அடையாளங்கள்:- 

பழைய ஏற்பாட்டில், தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் / பாழாக்குகிற அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் /தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்று கொண்டிருக்கிறதை உணர்ந்து கொண்டவர்களுக்குள்: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? என்கிற மோசேயின் சத்தத்தை கேட்டு, கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணுகிறவர்களின் அடையாளங்கள். 

பழைய ஏற்பாடு பரிசுத்த ஸ்தலத்தில்/தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை ஆராதனை செய்கிற, தேவனுடைய ஜனங்கள்; தங்கள் சத்துருக்களாகிய புறஜாதிகளுக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன்/ ஆரோனுடைய சந்ததியார்கள், அவர்களை நீதியினுடைய கிரியைகளின் வஸ்திரம் இல்லாமல் நிர்வாணமாக்கியிருந்தார்கள். 

தேவனுடைய ஜனங்கள் நிர்வாணமாயிருக்கிறதையும், அவர்களுடைய ஆராதனையின் பாடலின் சத்தம், ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; என்பதையும் உணர்ந்து கொண்டவர்கள்; கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணிக்கொண்டு; லேவி கோத்திரத்தின் மூலம் தேவனுடைய ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டு, தேவனுடைய நியாத்தீர்ப்பை நிறைவேற்ற ஆயத்தமாகிறார்கள். Exo_32:25-29, 

14-7 புதிய ஏற்பாட்டில் சரித்திர புருஷனாகிய மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை/ கன்றுக்குட்டியை தூபங்காட்டி ஆராதணை செய்து வருகிறதை கண்டு; கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணுகிறவர்களின் அடையாளங்கள்:- 

புதிய ஏற்பாட்டில், சரித்திர புருஷனாகிய மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை/ கன்றுக்குட்டியை தூபங்காட்டி ஆராதணை செய்து வருகிறதை கண்டு/ புதிய ஏற்பாட்டில் தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் / பாழாக்குகிற அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருக்கிறதை உணர்ந்து கொண்டவர்களுக்குள், கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? என்கிற தேவனுடைய சத்தத்தை கேட்டு: கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணுகிறவர்களின் அடையாளங்கள்:- 

புதிய ஏற்பாட்டில், சரித்திர புருஷனாகிய மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை/ கன்றுக்குட்டியை தூபங்காட்டி ஆராதணை செய்து வருகிறவர்கள்; தங்களுடைய கிறிஸ்தவ மதத்தின் பிரிவினைகளோடு கலந்த மார்க்கபேதங்களுடைய சபையின் உபதேசங்கள்: பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம் / பாழாக்குகிற அருவருப்பாக நின்றுகொண்டிருக்கிறது. 

புதிய ஏற்பாட்டில், சரித்திர புருஷனாகிய மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை/ கன்றுக்குட்டியை தூபங்காட்டி ஆராதணை செய்து வருகிற கிறிஸ்தவர்களை, தங்கள் சத்துருக்களாகிய புறஜாதிகளுக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன்/ ஆரோனுடைய சந்ததியார்கள், அவர்களை நீதியினுடைய கிரியைகளின் வஸ்திரம் இல்லாமல் நிர்வாணமாக்கியிருக்கிறார்கள். 

Hos 13:1 எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான். 

Hos 13:2 இப்போதும் அவர்கள் அதிகமதிகமாய்ப் பாவஞ்செய்து, தங்கள் வெள்ளியினால் வார்ப்பித்த சுரூபங்களையும், தங்கள் புத்திக்கேற்க விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டுபண்ணுகிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனுஷரில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்லுகிறார்கள். 

Hos 13:3 ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள். 

Hos 13:4 நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை. 

Hos 13:5 நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன். 

Hos 13:6 தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள். 

தேவனுடைய ஜனங்கள் நிர்வாணமாயிருக்கிறதையும், அவர்களுடைய ஆராதனையின்பாடலின் சத்தம்: ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; என்பதையும் உணர்ந்துகொண்டு; பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்று கொண்டிருக்கிற பாழாக்குகிற அருவருப்பு /தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் நிமித்தம்: 

தங்கள் இருதயத்தில் பெருமூச்சுவிட்டழுகிறவர்கள், கர்த்தருக்கு தங்களைப் பிரதிஷ்டை பண்ணிக்கொண்டு, ஆவிக்குரிய யூதா கோத்திரத்தின் மூலம் தேவனுடைய ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டு, தேவனுடைய நியாத்தீர்ப்பை நிறைவேற்ற ஆயத்தமாகிறார்கள். 

இவர்கள் தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட, தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் /அறிவில் பெற்றுக்கொண்டு; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற, மணவாட்டி சபையின் சீயோன் குமாரத்திகளாக 1,44,000. வரிசையில் தெரிந்து கொள்ளப்பட்டு; தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற ஆயத்தமாகிறார்கள். 

மற்றும் தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட, தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் /அறிவில் பெற்றுக் கொள்ளாதவர்களின்; தேவனுடைய இரட்சிப்பு மரணமடைகிறது, இவைகளைக் குறித்து; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்து கொள்ளுவார்கள். (எசேக்கியேல் 9:4-10, ஏரேமியா 25:29-30,ஏசாயா 66:6-9)

Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries