தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 16
கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
பொருளடக்கம் 13-0
இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் இடறி விழாமல், கிருபையினுடைய நீதியின் கிரியைகளின் மூலம்; சத்தியத்தினால் பாவம் நிவிர்த்தியாகும் வழிமுறைகளுக்கு முன்னேறுதல்
ஒரு மனிதன், தேவனுடைய கிருபையினாலே இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு, தேவனுடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும் வரை; தொடர்ந்து வந்துகொண்டிருந்த பாவம்/ மரணம்/சாபங்கள்,ஆகியவைகள்: மனிதனின் மேல் இருந்த கடன்களிலிருந்து நம்மை விடுதலையாக்கி, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே தேவன் நம்மை இரட்சித்தார்.
ஆகையால், தேவனுடைய கிருபையினாலே இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை பெற்றுக்கொண்டவர்கள்/ கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தை தங்களுடைய மனதிலே பெற்றுக்கொண்டவர்கள்: அவைகளுக்கு விரோதமாய்ப் போராடுகிற, வேறொரு பிரமாணத்தை தங்கள் அவயவங்களில் இருக்கிறதை உணர்ந்து கொண்டு; அது தங்களுடைய சரீர அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு தங்களை சிறையாக்கிக் கொள்ளுகிறபோது:( Rom 7:23 Rom 8:1-4 )
தேவனே மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
அதுபோல, மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில், நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கு: சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று;
தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனையாகவும்/பலியாகவும்/ காணிக்கையாகவும் தேவன் அங்கிகரிக்கிறார்.
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். Rom 12:1-2
தேவனுடைய கிருபையினாலே இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை பெற்றுக்கொண்டவர்கள்/ கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தை தங்களுடைய மனதிலே பெற்றுக்கொண்டவர்கள்: நன்மைசெய்தால் மேன்மை உண்டு, நன்மைசெய்யாதிருந்தால், அவனுடைய பாவம், பலி மிருகமாக அவனுடைய இருதய வாசற்படியிலே படுத்திருக்கும்;
அவனுடைய பாவத்தை/பாவ மிருகமாகிய மாம்சத்தை/ஜென்ம பாவ மனிதனை/ அவனுடைய பாவ சரீரத்தை, அவனுடைய பாவத்தைப் போக்கும் பலியாக செலுத்தி; அவனுடைய பாவ மாம்சத்திலே அவனே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதின் மூலம்:
கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணத்தினால், பாவம் நிவிர்த்தியாகும் வழிமுறைகளை பின்ப்பற்றி; நியாயப்பிரமாணத்தின் நீதியை, மனிதனே நிறைவேற்றுகிறபடியால் தேவனுக்கு முன்பாக நீதிமானாக மாறுகிறான்.
மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாக மாறின பின்பு / இருதய வாசற்படியில் படுத்திருக்கும் ஜென்ம பாவ மனிதனை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்த பின்பு/ தீமையை நன்மையாக மாற்றிய பின்பு/ நியாயப்பிரமாணத்தின் நீதிக்கு விரோதமாக வருகிற பாவங்கள் நிவிர்த்தியான பின்பு /
நன்மையாகிய தேவனுடைய சத்திய வசனங்களின் பிரமாணங்களை நிறைவேற்றுகிறபோது; சத்தியத்திற்கு விரோதமாக வருகிற பாவங்கள் தேவனுடைய நியாயத்தீர்பினால் நிவிர்த்தியாகிறது.
நியாயப்பிரமாணத்தின் நீதிக்கு விரோதமாக வருகிற பாவங்களை நிவிர்த்தி செய்யாமல், நன்மையாகிய தேவனுடைய சத்திய வசனங்களின் பிரமாணங்களை நிறைவேற்றுகிறபோது: சத்தியத்திற்கு விரோதமாக வருகிற பாவங்கள் நிவிர்த்தி செய்ய முடியாது; மேலும் தேவனுடைய சத்தியத்தின் வசனங்கள் தேவன் அனுப்பின நியாத்தீர்ப்பை நிறைவேற்றும்.
ஒருவனுடைய பாவ சரீரத்தை, அவனுடைய பாவத்தைப் போக்கும் பலியாக செலுத்தி, அவனுடைய பாவ மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காமல் இருக்கிறபோது; அவனுடைய இருதய வாசற்படியில் படுத்திருக்கும் அந்த பாவமிருகம் , அவனுடைய இருதயத்திற்குள்ளே பிரவேசித்து, அவனை அடிமைப்படுத்தி, அவனை ஆட்சி செய்யும். ஒருவன் பாவத்தை பலிசெலுத்தினால், அவன் பாவத்தை அவனே அடிமைப்படுத்தி, அவனே பாவத்தை ஆட்சி செய்ய முடியும். அவன் பாவத்தை பலிசெலுத்தாமல் இருக்கிறபோது; பாவ மிருகம் அவனுடைய இருதயத்திற்குள்ளே பிரவேசித்து, அவனை அடிமைப்படுத்தி ,பாவ மிருகம் அவனை ஆட்சி செய்யும்.
Gen 4:6 And Jehovah saith unto Cain, `Why hast thou displeasure? and why hath thy countenance fallen?
Gen 4:7 Is there not, if thou dost well, acceptance? and if thou dost not well, at the opening a sin-offering is crouching, and unto thee its desire, and thou rulest over it.'
Gen 4:6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?
Gen 4:7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
Php 3:9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,
Php 3:10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,
Php 3:11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
Php 3:12 நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.
Php 3:13 சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
Php 3:14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
Php 3:15 ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
Rom_8:1-4;1Pe_3:16-21, 1Pe_4:1-6, 1Pe_2:19-25, 1Pe_4:16-19, Phi_3:9-14;Isa_26:1-9; Col_1:5-6,Tit_1:1-4, Heb_6:13-20, Heb_10:19-22, Heb_9:8-15, Heb_13:9-13; Rom_2:10-15, Gal_2:20-21,Gal_5:1-6,Gal_6:12-18;Col_2:11-14 Gal_5:14-18, Gal_5:19-26, Rom_6:1-8, Rom_6:9-13, Col_2:13-19, Col_2:20-25, Col_3:3-4,