தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 16
கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
பொருளடக்கம் 5-0
இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம்; ஒருவன் பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை காண்பதற்கு முதலாவது திறவுகோல்
5-1 இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம்; ஒருவன் பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை காண்பதற்கு முதலாவது திறவுகோல்:-
ஜலமாகிய தேவனுடைய வார்த்தைகளினால் ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்/ தேவனுடைய ஆலோசனைகளை தங்கள் ஆத்துமாவில் ஏற்றுக் கொண்டு; தங்கள் மனிதனுடைய ஆலோசனைகளை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து, ஆத்துமாவில் மனந்திரும்புகிறவர்களுக்கு ஆவிக்குரிய கண் பார்வை கிடைக்கிறது.
தேவனுடைய இராஜ்ஜியம் இதோ இங்கே இருக்கிறது, அதோ அங்கே இருக்கிறது என்று , யாரையும் பின்பற்ற வேண்டாம், அல்லது எந்த இடத்திற்கும் ஓட வேண்டாம்; நீங்கள் இருக்கிற இடத்திலிருந்தே தேவனுடைய இராஜ்ஜியத்தை உங்கள் ஆவிக்குரிய கண்களால் பார்க்க முடியும்..
Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12, Mar_9:1, Luk_9:24-27 ,Joh_3:3, Luk_17:20-23,Tit_3:5, 1Pe_1:23,1Pe_3:21,
ஆனால் இந்த கடைசி காலத்தில், பழைய/புதிய ஏற்பாட்டில் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருந்த பாழாக்குகிற அருவருப்பு /தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகம்; தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் பரிசுத்த ஸ்தலத்தில் நின்று கொண்டிருக்கிறது.
தேவனுடைய ஆலயமாகிய இருதயம்/ பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக் குலைச்சலாக்காமல், இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய கிரியைகளின் தொடர்புடைய: அன்றாடபலி மற்றும் ஓய்வுநாள் தகனபலி, ஆகிய வேத வசனங்களின் பொருளடக்கம் பின்பற்றப்படாமல்;
கிறிஸ்தவ மதத்தின், ஏழுபலத்த /பெரிய சபைகளின் பிரிவினைகளையும் மார்க்க பேதங்களையும் பின்பற்றுகிற ஜனங்களால் உருவாக்கப்பட்ட சபையின் மூல உபதேச வசனங்கள்; /கலப்படமான ஞானப்பால் தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில்/ பரிசுத்த ஸ்தலத்தில்: தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகமாக / பாழாக்குகிற அருவருப்பாக நின்றுகொண்டிருக்கிறது.
5-2 மாயக்காரராகிய வேதபாரகர்கள்/ பரிசேயர்கள்/ நியாயசாஸ்திரிகள், பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிற முதலாவது திறவுகோல்:-
மாயக்காரராகிய வேதபாரகர்கள்/ பரிசேயர்கள்/ நியாயசாஸ்திரிகள், மனுஷர்: பரலோக இராஜ்ஜியத்தின் அறிவாகிய தரிசனங்களை கண்டு, அறிந்து உணர்ந்து கொள்ளாமல், இருப்பதற்காக பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறார்கள்.
Mat 23:13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.
Luk 11:52 நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்.
கிறிஸ்தவ மதத்தின்: ஏழுபலத்த /பெரிய சபைகளின் பிரிவினைகளையும் மார்க்க பேதங்களையும் பின்பற்றுகிற மாயக்காரராகிய வேதபாரகர்கள்/ பரிசேயர்கள்/ நியாயசாஸ்திரிகள்/, ஜனங்கள் : ஜலத்தினால்/ தேவனுடைய வார்த்தைகளினால் ஆத்துமாவில் மறுபடியும் பிறந்து மனந்திரும்பாமல்,
தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு, தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்துகொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து பேசும்போது: தங்களுடைய மாயக்காரனுடைய ஆத்துமா வளச்சியடைய, மனுஷரால் போதிக்கப்பட்ட சபையின் மூல உபதேச வசனங்கள்/ கலப்படமான ஞானப்பால்லாக வெளிப்படுகிறது .
1. இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை அறிக்கைசெய்தல். Rom_10:5-13,
2. பாவமன்னிப்பிற்கு இரட்சிப்பைபெற்றுக்கொள்ளுதல். Act_2:38,
3. ஞானஸ்தானம் பெற்றுக்கொள்ளுதல். Mar_16:16 ,
4. அந்நிய பாஷையைப் பெற்றுக்கொள்ளுதல். . Act_2:1-4,
5. சபை ஐக்கியத்தில் கலந்து கொள்ளுதல். Heb_10:25,
6. காணிக்கை,தசமபாகம் செலுத்துதல் Mal_3:8-10,
7. பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுதல். 1Co_11:23-27;
8. தேவனுடைய ஊழியத்தில் பங்கு பெறுதல். Mar_16:15 ,
5-3 கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களாகிய களங்கமில்லாத ஞானப்பாலும், பலமான ஆகாரமாகிய தேவனுடைய நீதியின் வசனங்களும்:-
ஜலத்தினால்/கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளினால் மனந்திரும்பி, ஆத்துமாவில் மறுபடியும் பிறந்தவர்களுடைய ஆவிக்குரிய மனிதன் வளர்ச்சியடைய; கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்கள்/ களங்கமில்லாத ஞானப்பால்:-. 1Pe_2:2-3, Heb_6:1-2, Heb_5:12-14,
காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்க வேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.
பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங் களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். Heb 5:12-14
1 செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல்,
2 தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்,
3 ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம்,
4 கைகளை வைக்குதல்,
5 மரித்தோரின் உயிர்த்தெழுதல்,
6 நித்திய நியாயத் தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி பலமான ஆகாரமான தேவனுடைய நீதியின் வசனத்திற்கு கடந்து போவோமாக. Heb 6:1-2
7 பூரண வயதுள்ளவர்களுக்கு பலமான ஆகாரமான தேவனுடைய நீதியின் வசனம் / பிரமாணம் Heb 5:12-14
நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கு பலமான ஆகாரமான தேவனுடைய நீதியின் வசனங்கள் Heb 5:12-14
8. நீதியின் வசனத்தின் ஊழியத்தில் பங்கு பெறுவதற்காக, பலமான ஆகாரமான தேவனுடைய நீதியின் வார்த்தை; உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது:- Heb_5:12-14, Heb_6:1-2 Rom_10:6-10 Deu_30:11-16
விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்? அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்?
என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி; இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. Rom 10:6-11 Rom_10:6-11, Deu_30:11-14, Jer_12:2; Eze_33:31; Mat_7:21;