தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 17
ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் - தேவனுடைய ஆவியில் பிழைத்திருக்கிறவர்களுக்காக தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு உபத்திரவ காலத்திற்கு நடைமுறைக்கு வருகிறது.
பொருளடக்கம் 11-0
கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்கள் தெளிவாக பேசுவதற்கும் தெளிவாக பேசமுடியாமல் இருப்பதற்கும் உள்ள சில விசேஷமான காரணங்கள்.
11-1 கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்கள் தெளிவாக பேசுவதற்கு மூல உபதேசங்களாக வெளிப்படுகிற சில விசேஷமான காரணங்கள்.
11-2 கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்கள் தெளிவாக பேசு வதற்கு தடையாக வெளிப்படுகிற சில விசேஷமான காரணங்கள்.
11-1 கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்கள் தெளிவாக பேசுவதற்கு மூல உபதேசங்களாக வெளிப்படுகிற சில விசேஷமான காரணங்கள்.
1 கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களுக்கு தங்களுடைய வாயும், இருதயமும் சமீபமாயிருக்கிறபோது உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியுடன் தேவ நீதியின் வார்த்தைகள் வெளிப்படுகிறது.. Rom_10:6-11, Deu_30:11-14, Job_28:12-14, Job_28:20-22, Gen_1:1-2, 1Co_13:1-2
2 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது சரீரமும், ஆவியும் உயிர்ப்பிக்கபடுகிறது. Joh_3:3-8; Joh_12:24; Eze_14:1-8, Rom_8:10, 1Pe_3:17-18, 1Pe_2:20-21, 1Co_15:35-38
3 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது தேவனுடைய வார்த்தைகளின் சரீரமும், ஆவியும், தேவனுடைய சித்தத்திற்கேற்றபடி உள்ள மேனியுடன் உருமாற்றம் அடைகிறது. Job_26:1-5, Job_14:4, Rom_4:17, Heb_11:3, 1Co_15:39-46, 1Co_2:11-16, 1Co_2:6-10
4 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது உருமாற்றம் அடைந்து, உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியுடன் தேவ நீதியின் வார்த்தைகள் வெளிப்படுகிறது. Mal_2:1-9, Gen_6:8-9, Jer_23:21-22, Jdg_5:9-11, Isa_41:21-24, Pro_3:9-10 , Mal_3:7-12
5 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது உருமாற்றம் அடைந்து, உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியுடன் ஆரோக்கியமான உபதேசங்கள் வெளிப்படுகிறது. Tit_1:9, 1Ti_1:7-11, 1Ti_6:3-5, 2Ti_2:15-19, 2Ti_1:13, 2Ti_4:3, Tit_1:13-16, Tit_2:1-2, Heb_5:12-14
6 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது தேவ நீதியின் பிரமாணத்தினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. . Deu_29:1, Deu_5:1-4, Rom_9:4, Rom_3:1-2, Lev_18:1-5, Eze_18:24, Eze_20:11, Eze_20:13, Eze_20:21, Psa_19:1-6, Psa_19:7-14, Psa_119:1-8
7 தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுகிறபோது உயிர்ப்பிக்கப்பட்ட ஆவியுடன் கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்கள் வெளிப்படுகிறது. Heb_6:1-2, Heb_5:12-14, Isa_4:1-6, Isa_2:1-6, Isa_3:12-15, Isa_5:13-14
8 பழைய ஏற்பாட்டில் யேகோவா என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள்:-
1. புத்திர சுவீகாரம் 2. மகிமை 3. உடன்படிக்கைகள் 4.நியாயப்பிரமாணம் 5. தேவாரதனை 6. வாக்குத்தத்தங்கள்
7. தேவனுடைய வாக்கியங்கள் 8. தேவனுடைய வாக்கியங்களின் ஊழியத்தில் பங்கு பெறுதல் Rom_9:4, Rom_3:1-2
9 புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள்:-
1. செத்த கிரியைகளிலிருந்து நீங்கலாகும் மனந்திரும்புதல்
2. தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்
3. ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம்
4. கைகளை வைக்குதல்
5. மரித்தோரின் உயிர்த்தெழுதல்
6. நித்திய நியாயத்தீர்ப்பு
7. நீதியின் வசனம் / பிரமாணம்
8. நீதியின் வசனத்தின் ஊழியத்தில் பங்கு பெறுதல்
Heb_5:12-14, Heb_6:1-2
10-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட நியாயப்பிரமாணமும், தீர்க்க தரிசனங்களும் தங்களுடைய இருதயத்திற்கும் வாய்க்கும் சமீபமாயிருக்கும்போது வெளிப்படுகிற மூன்று காலங்களின் தொடர்புடைய தேவ நீதியின் வசனங்களினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Rom_3:20-22, Mat_5:17, Mat_7:12, Mat_22:36-40, Luk_16:16-17, Mat_11:13-15, Luk_1:17, Mal_4:6, Isa_3:4-5, Hos_6:1-3, Luk_12:2-3, Luk_8:17-18, Luk_9:16-17
11-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட உவமைகளும் சுரமண்டலத்தின் ஏழு சுரங்களைப் போல வெளிப்படுகிற (1. தேவனுடைய வேதம். 2. தேவனுடைய வழிகள் 3. நீதி நியாயங்கள். 4. சாட்சிகள். 5. கட்டளைகள் 6. கற்பனைகள் 7. பிரமாணங்கள்) ஆகிய ஏழு தேவனுடைய வார்த்தைகளையும் தங்களுடைய வாய்க்கும் இருதயத்திற்கும் சமீபமாயிருக்கும் போது வெளிப்படுகிற பரலோக இராஜ்ஜியத்தின் தொடர்புடைய தேவ நீதியின் வசனங்களினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Psa_92:2-3, Psa_71:22, Job_30:31, Rev_5:8-10, Rev_15:2-4, Psa_49:4, Psa_78:2, Eze_20:49, Eze_17:2, Mar_4:10-12, Luk_8:10, Mat_13:10-15, Mat_13:34-35, Isa_6:8-10
12-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட வேதமும் கிறிஸ்துவின் சாட்சி ஆகமமும் தங்களுடைய வாய்க்கும் இருதயத்திற்கும் சமீபமாயிருக்கும்போது வெளிப்படுகிற, நிகழ்காலத்தின் தொடர்புடைய தேவ நீதியின் புதிய வசனங்களினால் தங்களுடைய ஆத்துமா தேவ நீதியினால் பிழைக்கிறது. Isa_8:16-20, 2Pe_1:16-21, Isa_50:10-11, Isa_41:21-24, Joh_10:35, Rev_1:2, Rev_1:9, Rev_6:9, Rev_12:11, Rev_12:17, Rev_14:12, Rev_19:9-10 , Rev_20:4
13-0 தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட முத்திரை அடையாளங்களின் மூலம் மனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியில் அiடாயளமாக கொடுக்கப்பட்ட தேவ வார்த்தைகளை, தங்களுடைய வாய்க்கும் இருதயத்திற்கும் சமீபமாக வைத்திருக்கிறபோது வெளிப்படுகிற தேவ நீதியின் வசனங்களினால்; தேவனுடைய வீட்டிலே நடைபெறும் நியாயத்தீர்ப்பிலிருந்து தங்களுடைய ஆத்துமா விடுதலையாக்கப்பட்டு தேவ நீதியினால் பிழைக்கிறது.
தேவனுடைய வீட்டிலே தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பு / இருதயமாகிய தேவனுடைய வீட்டிலே, தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பு துவங்குகிறது. . 1Co_3:16-17, 2Co_6:16, 1Pe_4:17-18, Jer_25:29, Isa_66:6, Luk_19:41-46 , Jer_7:11-12, Amo_9:1
தேவனுடைய வீட்டிலே நடைபெறும் தேவனுடைய முதல் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆண்பிள்ளைகள் தங்களுடைய நெற்றியில் பெற்றுக்கொள்ளும் தேவ முத்திரையின் ஏழு அடையாளங்கள்
தேவனுடைய சத்தியமான வார்த்தைகளினால் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொண்ட ஜென்ம பாவ மனிதனுடைய நெற்றியில் / அறிவில் தேவனுடைய ஏழு முத்திரையின் அடையாளங் களை பெற்றுக் கொள்ளாமலிருக்கும்போது; அவன் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட தேவனுடைய இரட்சிப்பு அவனுக்குள் மரணமடைகிறது. இதற்கு இணையாக அவனுடைய ஆவிக்குரிய மனிதனும் அவனுக்குள் மரணமடைகிறான் இப்பொழுது இரட்சிப்பின் சந்தோஷம் இல்லாமல் அந்தகாரத்தின் வல்லமைக்கு அடிமைப்படுகிறான்.
தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஏற்பாட்டில் 1,44,000 பரிசுத்தவான்களை பிரித்தெடுப்பதற்காக தேவ வார்த்தை என்னும் நாமத்தில் வெளிப்பட்ட மூல உபதேசங்கள் / தேவனுடைய இராஜ்ஜியத்தின் மூல உபதேசங்கள்:-
1. ஜாதிகளின் எந்த ஒரு முறையையும் பின்பற்றக் கூடாது.
Lev_18:1-5, Eze_11:12-13
2. கர்த்தருடைய பஸ்காவை புசிக்க வேண்டும். Gen_17:9-14, Exo_12:48.
3. ஓய்வு நாள் பிரமாணத்தை பின்பற்ற வேண்டும்.
Exo_16:4-5, Exo_16:11-19, Exo_20:8-11
4. மனச்சாட்சிப் பிரமாணத்தை பின்பற்ற வேண்டும்.
Rom_2:23-29, 1Jo_3:20-33
5. இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்ற வேண்டும்.
Joh_3:31-36, Rev_6:9
6. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்
Eph_1:13, Eph_4:30
7. பலிபீடத்தின் சட்ட திட்ட பிரமாணங்களை பின்பற்ற வேண்டும்.
Exo_29:37, Exo_30:28-29
8. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து ஊழியத்தில் பங்குபெற வேண்டும்.
Isa_65:8-9, Isa_65:12-16, Isa_33:15-17
14-0 தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய வாயும் இருதயமும் சமீபமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள்; தேவனைத் தேடாமல் இருந்தாலும் தேவன் அவர்களுக்கு வெளிப்படுகிறார், இவர்கள் தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் வரிசையில், தேவனிடத்தில் வந்து சேர்ந்து, தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை புசித்து, தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற தேவ சித்தத்தை நிறை வேற்றுகிறபடியால், தங்களுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்.
Isa_65:1,Rom_10:20, Rom_4:5-8, Psa_32:1-2, Rom_8:27-33, Rom_9:10-16, Rom_9:30-33, Isa_65:8-9, Rom_11:1-5, Isa_65:13-15, Mal_3:13-18 ,Joh_3:27, Jer_10:23, Pro 16:9, Amo_4:13, Isa_40:14, Joh_6:39-40, Joh_6:44-45, Joh_6:53-57, Joh_6:65
11-2 கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் ஊழிய அழைப்பை பெற்றுக் கொண்டவர்கள் தெளிவாக பேசு வதற்கு தடையாக வெளிப்படுகிற சில விசேஷமான காரணங்கள்.
தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளுக்கு தங்களுடைய வாயும் இருதயமும் சமீபமாக இருந்த போதிலும், தங்களுடைய இருதயம் தேவனுடைய ஆலோசனைகளை உணர்ந்து கொள்ளாமலும், அவைகளை தங்களுடைய வாயினால் தெளிவாக பேச முடியாமலும் இருப்பதற்கு தங்களுடைய ஆத்துமாவில் தடையாக வருகிற சில விசேஷமான காரணங்கள்.
தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டவர்கள் தெளிவாக பேசுவதற்கு தடையாக வருகிற சில விசேஷமான காரணங்கள்
1. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் குருட்டுத்தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும்போது தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Mat_9:27-28 , Mat_11:5, Mat_12:22 , Mat_15:14 , Mat_15:30-31 , Mat_20:30, Mat_21:14, Mat_23:16-17 , Mat_23:19, Mat_23:24, Mat_23:26, Mar_8:22-23 , Mar_10:46, Mar_10:49, Mar_10:51, Luk_4:18, Luk_6:39, Rom_2:19, 2Pe_1:9, Rev_3:17
2. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் செவிட்டுத் தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும்போது தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Mat_9:32-33 , Mat_12:22 , Mat_15:30-31, Luk_11:14Mat_11:5, Mar_7:32, Mar_7:37, Mar_9:25, Luk_7:22
3. ஊழியஅழைப்பின் அளவுப் பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு தேவதரிசனங்கள் வெளிப்படுத்தப் படும்போது அவைகளை விசுவாசியாமற் போனால், தரிசனம் நிறை வேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவ தரிசனத்தை எழுதுவதினால் நாவின் கட்டு அவிழ்க்கப்பட்டு தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Luk_1:11-20, Luk_1:57-64, Luk_1:65-70, Luk_1:71-79
4. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக்கொண்டவர்கள் தேவ அறிவை அடைந்த பிறகு தங்கள் இருதயத்தில் அர்த்தமில்லாத வார்த்தைகளை பிரித்தெடுப்பதால் தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Heb_5:12-14, Pro_25:4, Pro_10:20, Jer_15:16-21
5. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவ தரிசனத்தை அடைந்த பிறகு, நான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன் என்று தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தும்போது அவன் உதடுகள் அக்கினியால் பரிசுத்தமாக்கப் பட்டு தேவ வார்த்தைகளை தெளிவாக பேச முடியும். Isa_6:5-10
6. தேவனால் முன் குறிக்கப்பட்டவர்கள் தேவ சித்தத்தை அறிந்த பிறகு, நான் சிறுபிள்ளை எனக்கு பேசத் தெரியாது என்று தன்னை; தேவ சமுகத்தில் தாழ்த்தும்போது தேவனே அவர்கள் உதடுகளை தொடுவதினால் அவர்கள் தெளிவாக பேச முடியும். Jer_1:4-9
7. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவனுடைய வார்த்தைகளை புசித்து, கலக வீட்டாருக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பை கூறின பின்பு அவைகள் நிறைவேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவனுடைய நியாயத்தீப்பை தெளிவாக பேச முடியும். Eze_3:24-27, Eze_4:25-27
8. தேவனுடைய ஞானத்தை பெற்றுக் கொள்ளுவதற்காக ஆவியில் எளிமையுள்ளவனாக இருந்து தன்னை தேவனுக்கு முன்பாக தாழ்த்துகிறபோது தேவனுடைய சத்தியாமான வார்த்தை களின் ஞானத்தை தெளிவாக பேச முடியும். Dan_10:14-19
1. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் குருட்டுத்தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும் போது தேவனுடைய வார்த் தைகளை தெளிவாக பேச முடியும்.
சரீர அவயவங்களில் குருட்டுத்தன்மை குறைபாடு மட்டும் உள்ளவர்கள், மற்றவர்கள் காண்கிற காட்சிகளை தெளிவாகக் காணமுடியாமல் எப்படி நிலைகுலைந்து தடுமாறிப் பேசுகிறார்களோ, அதுபோலவே தங்கள் ஆவி, ஆத்துமாவில் தேவனுடைய தரிசனங் களையும் வெளிப்பாடுகளையும் தெளிவாக காணமுடியாத ஆவிக் குரிய குருட்டுத்தன்மை உள்ளவர்களும் தேவனுடைய வார்த்தை களை மற்றவர்களுக்கு முன்பாக தெளிவாக பேச முடியாமல் நிலை குலைந்து தடுமாறுகிறார்கள்.
குருடனுக்கு குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா? ஆவி ஆத்துமாவில் தேவனு டைய தரிசனங்களையும் வெளிப்பாடுகளையும் தெளிவாக காணமுடி யாத ஆவிக்குரிய குருட்டுத்தன்மையுள்ளவர்கள்; இவர்களைப் போல ஆவிக்குரிய குருட்டுத்தன்மை உள்ள மற்றவர்களுக்கு இவர் கள் எப்படி ஆவி, ஆத்துமாவில் தேவனுடைய தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் குறித்துள்ள ஆவிக்குரிய வெளிச்சத்திற்கு வழி நடத்த முடியும், அப்படி வழி நடத்தினால் இருவரும் பள்ளத்தில் / பாதாளத்தில் விழுவார்கள் அல்லவா?
இவர்களுக்கு ஆவி ஆத்துமாவில் குருட்டத்தன்மை நீங்கும் போது தங்கள் ஆவி, ஆத்துமாவில் தேவ தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் தெளிவாகக் கண்டும், உணர்ந்து கொண்டும் மற்றவர்களுக்கு தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் தேவ தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் தெளிவாக பேச முடியும்.
Mat_9:27-28 , Mat_11:5, Mat_12:22 , Mat_15:14 , Mat_15:30-31 , Mat_20:30, Mat_21:14, Mat_23:16-17 , Mat_23:19, Mat_23:24, Mat_23:26, Mar_8:22-23 , Mar_10:46, Mar_10:49, Mar_10:51, Luk_4:18, Luk_6:39Rom_2:19, 2Pe_1:9, Rev_3:17
2. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை
பெற்றுக் கொண்டவர்களுக்கு ஆவி, ஆத்துமாவில் செவிட்டுத் தன்மையை உண்டாக்குகிற பொல்லாத ஆவி நீங்கும்போது தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும்.
சரீர அவயவங்களில் செவிட்டுத்தன்மை குறைபாடு மட்டும் உள்ளவர்கள் மற்றவர்கள் பேசுவதை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் எப்படி? மற்றவர்களுக்கு தெளிவாக மறுபடி / பதில் கொடுக்க முடியாமல், தன் வார்த்தைகளில் நிலைகுலைந்து தடுமாறுகிறார்களோ; அது போலவே தங்கள் இருதயத்தில் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியப் படுத்துகிற ஆவிக்குரிய செவிட்டுத்தன்மை உள்ளவர்களுக்கும் தேவனுடைய வார்த்தைகளை மற்றவர்களுக்கு முன்பாக தெளிவாக பேச முடியாமல் நிலை குலைந்து தடுமாறுகிறார்கள்.
காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று வேதத்தில் குறிப்பிடக் காரணம் இந்த ஆவிக்குரிய செவிட்டுத்தன்மை அநேகருக்கு உண்டு என்பதை தேவன் அறிந்தபடியால்; இப்படி வேதத்தில் எழுதப் பட்டிருக்கிறது. இவர்களுக்கு ஆவிக்குரிய செவிட்டுத்தன்மை நீங்கும் போது, தேவனுடைய வார்த்தைகளை தங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக பேச முடியும்.
Mat_9:32-33 , Mat_12:22 , Mat_15:30-31 , Luk_11:14Mat_11:5, Mar_7:32, Mar_7:37, Mar_9:25, Luk_7:22
3. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு தேவ தரிசனங்கள் வெளிப்படுத்தப்படும்போது அவைகளை விசுவாசியாமற்போனால் தரிசனம் நிறைவேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவ தரிசனத்தை எழுதுவதினால் நாவின் கட்டு அவிழ்க்கப்பட்டு தேவனுடைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும்.
ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு தேவ தரிசனங்கள் வெளிப்படுத்தப்படும்போது, அவைகளை விசுவாசியாமற் போனால் தேவ தரிசனம் நிறைவேறும் காலம் வரை, அவர்கள் தேவ தரிசனங்களை போசாமல் ஊமையாக இருந்து; அவைகள் நிறைவேறின பின்பு, அந்த தரிசனங்களை எழுத்து பலகையில் எழுதி மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும்போது அவர்கள் நாவின் கட்டு அவிழ்க்கப்பட்டு தேவ தரிசனங்களை தெளிவாக பேச முடியும். Luk_1:11-20 Luk_1:57-64Luk_1:65-70, Luk_1:71-79,
4. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவ அறிவை அடைந்த பிறகு தங்கள் இருயதத் தில் அர்த்தமில்லாத வார்த்தைகளை பிரித்தெடுப்பதால் தேவனு டைய வார்த்தைகளை தெளிவாக பேச முடியும்.
Jer 15:16 உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவை களை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந் தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்து; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப் பட்டிருக்கிறது.
Jer 15:17 நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.
Jer 15:18 என் நோவு நித்திய காலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற் றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப் போலவும் இருப்பீரோ?
Jer 15:19 இதினிமித்தம் : நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்து மிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப் பெற்றதைப் பிரித் தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும் பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jer 15:20 உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்காமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார் கள்; உன்னை இரட்சிப்பதற்காவும், உன்னைத்தப்பு விப்பதற்காவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jer 15:21 நான் உன்னைப்பொல்லாதவர்களின் கைக்குத்தப்பு வித்து, உன்னைப் பல வந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார். (தேவ நாமம் தரிக்கப்பட்ட தேவ ஜனங்கள் தேவ அறிவை அடைந்த பிறகு அர்த்தமில்லாத வார்த்தைகளை தங்கள் இருதயத்தில் பிரித்தெடுத்தால் அதிக விலை மதிப்புள்ள தேவனுடைய வாயின் வார்த்தைகளை அவர்கள் வாயினால் பேசமுடியும்) Heb_5:12-14, Pro_25:4, Pro_10:20,
5. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவ தரிசனத்தை அடைந்த பிறகு நான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன் என்று தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தும் போது அவன் உதடுகள் அக்கினியால் பரிசுத்தமாக்கப் பட்டு தேவ வார்த்தைகளை தெளிவாக பேச முடியும்.
ஒருவன் தேவனுடைய இராஜ்ஜியத்தின் தரிசனத்தை பெற்ற பிறகு, நான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன், அசுத்தமானவை களை பேசுகிற ஜனங்களுக்குள்ளே வாசமாயிருக்கிறவன் என்று தன் னைத் தாழ்த்தி தேவ சமூகத்தில் அறிக்கையிட வேண்டும் அப் பொழுது பலிபீடத்தின் அக்கினியால் தன் உதடுகள் தொடப்பட்டு அவனுடைய அக்கிரமம் நீங்கி,பாவம் நீவர்த்தியாகும் அதற்கு பின்பு தேவனுடைய வார்த்தைகளை உவமைகளாக / மறைபொருளாக பேசுவதற்கு தேவனால் அனுப்பப்படுகிறான்.
Isa 6:5 அப்பொழுது நான் : ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.
Isa6:6 அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து
Isa 6:7 அதினால் என் வாயைத் தொட்டு : இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான்.
Isa 6:8 பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப்போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத் தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
Isa 6:9 அப்பொழுது அவர் : நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.
Isa 6:10 இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்கா மலுமிருக்க, நீ அவர்கள் இருயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
6. தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள் தேவ சித்தத்தை அறிந்த பிறகு நான் சிறுபிள்ளை எனக்கு பேசத்தெரியாது என்று தன்னை தேவ சமூகத்தில் தாழ்த்தும்போது தேவனே அவர்கள் உதடுகளை தொடுவதினால் அவர்கள் தெளிவாக பேச முடியும்.
தேவனால் முன் குறிக்கப்பட்ட ஒருவன் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொண்டபிறகு, எனக்கு தேவ வார்த்தைகளை பேசத்தெரியாது, நான் படித்து அறிந்துகொள்ள வேண்டிய காரியங் கள் அநேகம் உண்டு என்று தேவ சமூகத்தில தனைத்தாழ்த்தும் போது தேவனே அவனுடைய உதடுகளைத் தொட்டு தேவனுடைய வார்த்தைகளை அவனுடைய வாயிலே வைத்து, தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக அனுப்புகிறார்.
Jer 1:4 கர்த்ததருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர் :
Jer 1:5 நான் உன்னைத்தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படு முன்னே நான் உன்னைப் பரிசுத்தம் பண்ணி, உன்னை ஜாதிகளுக் குத் தீர்க்க தரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.
Jer 1:6 அப்பொழுது நான் : ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.
Jer 1:7 ஆனாலும் கர்த்தர் : நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசு வாயாக.
Jer 1:8 நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும் படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,
Jer 1:9 கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு : இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்.
Jer 1:10 பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும் நாட்டவும் உன்னை நான் இன்றைய தினம் ஜாதிகளின் மேலும் ராஜ்யங்களின் மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
7. ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்களை பெற்றுக் கொண்டவர்கள் தேவனுடைய வார்த்தைகளை புசித்து, கலக வீட்டாருக்கு தேவனுடைய நியாயத்தீர்ப்பை கூறின பின்பு, அவைகள் நிறைவேறும் காலம் வரை ஊமையாயிருந்து பின்பு தேவனுடைய நியாயத்தீர்ப்பை தெளிவாக பேச முடியும்.
Eze 3:24 உடனே ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி: நீ போய், உன் வீட்டுக்குள் உன்னை அடைத்துக்கொண்டிரு.
Eze 3:25 இதோ, மனுபுத்திரனே, உன்மேல் கயிறுகளைப் போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போக வேண்டாம்.
Eze 3:26 நான் உன் நாவை உன் மேல் வாயோடே ஓட்டிக் கொள்ளப்பபண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்து கொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலக வீட்டார்.
Eze 3:27 நான் உன்னோடே பேசும் போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் உன்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட் கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.
Eze 24:25 பின்னும் மனுபுத்திரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச் சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களு டைய ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையையும், அவர்களுடைய குமாரரையும் அவர்களுடைய குமாரத்திகளையும் அவர்களை விட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ,
Eze 24:26 அந்த நாளிலே தானே தப்பி வந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன் காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ?
Eze 24:27 அந்த நாளிலே தானே உன் வாய் திறக்கப்பட்டு, நீ தப்பி வந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப் படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்து கொள்வார்கள் என்றார்.
8. தேவனுடைய ஞானத்தை பெற்றுக் கொள்ளுவதற்காக ஆவியில் எளிமையுள்ளவனாக இருந்து, தன்னை தேவனுக்கு முன் பாக தாழ்த்துகிறபோது தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் ஞானத்தை தெளிவாக பேச முடியும்.
Dan 10:14 இப்போதும் கடைசி நாட்களில் உன் ஜனங்களுக் குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும் படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்.
Dan 10:15 அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல் லுகையில், நான் தலை கவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப் போனேன்.
Dan 10:16 அப்பொழுது மனு புத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி : என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.
Dan 10:17 ஆகையால் என் ஆண்டவனுடைய அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில் பெல னில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன்.
Dan 10:18 அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத்தொட்டு, என்னைத் திடப்படுத்தி,
Dan 10:19 பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக ; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.