தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 17


ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் - தேவனுடைய ஆவியில் பிழைத்திருக்கிறவர்களுக்காக தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு உபத்திரவ காலத்திற்கு நடைமுறைக்கு வருகிறது.

பொருளடக்கம் 5-0
 
5-0 தேவனுடைய ஏழு முத்திரைகளை நெற்றிகளில் அடையாளம் போட்டு தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியில் தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு நடைபெறுகிறது:- 

1. தேவனுடைய வீட்டிலே நியாய்த்தீர்ப்பு (இருதமாகிய தேவனுடைய ஆலயம்) 

2. தேவனுடைய வீட்டிலே நியாயத்தீர்ப்பு (எருசலேமின் தேவாலயம்) 

3. பரிசுத்தவான்களின் பிரதிபலனுக்காக நியாயத்தீர்ப்பு 

4. கைவிடப்பட்டவர்களின் நியாயத்தீர்ப்பு (பரிசுத்தவான் களுக்கு நன்மை செய்யாதபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு) 

5. பாதாள இராஜ்ஜியத்தில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு 

(பாதாளத்தில் சாத்தானின் 1000 ஆண்டு ஆட்சி / பாதாளத்தில் சுய நீதிகளை பரிசோதிக்கும் முதலாம் மரணத்தின் தேவனுடைய நியாயத்தீர்ப்பு) 

6. அர்மகதோன் யுத்தம் :- 

உலகத்தின் இராஜ்ஜியங்களை கிறிஸ்துவின் இராஜ்ஜியமாக மாற்றுவதற்கான யுத்தம். 

7. கோகு மா கோகு யுத்தம் - தேவனுடைய ஆட்சிக்கு எதிராகவும் இணையாகவும் செயல்பட்ட சாத்தானின் கூட்டத்தாரின் நியாயத்தீர்ப்பு. 

8. வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு - இரண்டாம் மரணத்தின் நியாயத்தீர்ப்பு 

5-0 தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியில் தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு நடைபெறுகிறது:- 

ஆயிரம் ஆண்டு ஆட்சி காலம் முழுவதும் தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டே இருக் கும். இந்த எட்டு வகையான நித்திய நியாயத்தீர்ப்பில் ஆதாம் முதல் ஆயிரம் ஆண்டு ஆட்சியின் கடைசி வரை வாழ்கிற எல்லா ஆத்துமாக் களும் தேவ தூதர்களின் ஆத்துமாக்களும் ஏதாவது ஒரு நியாயத்தீர்ப்பில் கண்டிப்பாக பங்கடைய வேண்டும். 

உலகத்தின் இராஜ்யங்களை கிறிஸ்துவின் இராஜ்யமாக மாறுதவற்கு ஆயிரம் ஆண்டின் முதல் ஏழு வருட உபத்திரவ காலத்தில் ஆறு நியாயத்தீர்ப்புகளும் மற்றும் ஆயிரம் ஆண்டின் கடைசி ஏழுவருடங்களில் சாத்தான் காவலிருந்து விடுதலையாக்கப்பட்டு, பரிசுத்தவான் களுக்கு எதிராகவும், எருசலேம் நகரகத்திற்கு எதிரகாவும் வருகிறவர் களுக்கு இரண்டு நியாயத்தீர்ப்புகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு புதிய வானம், புதிய பூமியின் காலங்கள் தேவ ஜனங்களுடன் ஆரம்பிக்கப்படுகிறது. 

1. தேவனுடைய ஏழு முத்திரைகள் மூலம் அடையாளம் போட்டு 1,44,000. வரிசையில் வந்து தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிறவர்களை பிரித்தெடுத்தல்:- 

1-1 தேவனுடைய ஆலயத்திலே நியாயத்தீர்ப்பு துவங்குகிறது 

Jer 25:29 இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

Jer 25:30 ஆதலால் நீ அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார். 

1-2 எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். 

Eze 9:4 கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். 

Eze 9:5 பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும், 

Eze 9:6 முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள், என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள். 

Eze 9:7 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, பிராகாரங்களைக் கொலையுண்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார்கள். 

Eze 9:8 அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான் மாத்திரம் தனித்து, முகங்குப்புற விழுந்து: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன். 

Eze 9:9 அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள். 

Eze 9:10 ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கஞ்செய்வதுமில்லை; அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் சிரசின்மேல் இறங்கப்பண்ணுவேன் என்றார். 

Eze 11:12 என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார். 

Eze 11:13 நான் இப்படித் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன். 

1-3 தேவனுடைய ஆலயத்திலே நடைபெறுகிற நியாயத்தீர்ப்பினால் தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிற /1,44,000. வரிசையில் வருகிற ஆண்பிள்ளைகள் பிறக்கிறது 

Isa 66:6 நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டுகிற கர்த்தருடைய சத்தந்தானே. Isa 66:7 பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள். 

Isa 66:8 இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது. 

Isa 66:9 பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார். 

Isa 66:10 எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள்நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள். 

Isa 66:11 நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்; 

Isa 66:12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். 

Isa 66:13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். 

Isa 66:14 நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப் போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும். 

1-4 கீழே விவரிக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றிகளில் /அறிவில் பெற்றுக்கொள்ளுகிறவர்களை; 1,44,000. வரிசையில் வந்து தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிற ஆண்பிள்ளைகளாக முத்திரை போட்டு பிரித்தெடுத்தல்.மற்றும் இந்த தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை பெற்றுக்கொள்ளாதவர்களின் இரடசிப்பு மரணமடைகிறது 

தேவனுடைய வீட்டிலே தேவனுடைய நியாயத்தீர்ப்பு / இருதயமாகிய தேவனுடைய வீட்டிலே, தேவனுடைய நியாயத்தீர்ப்பு துவங்குகிறது. 1Co_3:16-17, 2Co_6:16, 1Pe_4:17-18, Jer_25:29, Isa_66:6, Luk_19:41-46 , Jer_7:11-12, Amo_9:1, 

1-4-1. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் முதலாம் அடையாளம் 
புறஜாதிகளின் எந்த முறைகளையும் பின்பற்றக்கூடாது. 

1-4-2. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் இரண்டாம் அடையாளம் 
பலிபீடத்தின் பிரமாணங்களை பின் பற்றி நடக்க வேண்டும். 

1-4-3. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் மூன்றாம் அடையாளம் 
கர்த்தருடைய பஸ்கா விருத்தை புசிக்க வேண்டும். 

1-4-4. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் நான்காம் அடையாளம் 
ஓய்வு நாளை பரிசுசுத்தமாக ஆசரிக்க வேண்டும் 

1-4-5. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் ஐந்தாம் அடையாளம் 
மனச்சாட்சியின் பிரமாணத்திற்கு கீழ்படிய வேண்டும் 

1-4-6. தேவனுடைய நியாயத்திர்ப்பின் ஆறாம் அடையாளம் 
இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றி நடக்க வேண்டும். 

1-4-7. தேவனுடைய நியாயத்தீர்ப்பின் ஏழாம் அடையாளம் 
பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள வேண்டும். 

1-4-1 தேவனுடைய நியாயத்தீர்ப்பின் முதலாம் அடையாளம் 
புறஜாதிகளின் எந்த முறைகளையும் பின்பற்றக்கூடாது 

1 எருசலேம் நகரத்தின் மத்தியில் செய்யப்படும் அருவருப்பு களின் நிமித்தம் தங்கள் இருதயத்தில் பெரு மூச்சுவிட்டழுகிற வர்களின் நெற்றியில் தேவனுடைய முத்திரையின் அடையாங்களைப் போடு Eze_9:4, Mal_2:13, Joe_1:9, 1Sa_2:17, Isa_64:4-5, 

2 எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து பெரு மூச்சுவிட்டழு கிறவர்கள் / பாவத்திற்கு அடிமைப்பட்டு அதிலிருந்து வெளியே வர முடியாமல் பெரு மூச்சுவிட்டழுகிறவர்கள் Exo_2:23-25, Exo_6:5, Act_7:34, Rom_7:14-25, 2Sa_24:10, 

3 நோவா, லோத்து போன்ற நீதிமான்கள் அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருத்தாலும் நாள் தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியை களைக் கண்டு கேட்டு வருத்தப்பட்டு; நீதியுள்ள தங்களுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்டவர்கள் Gen_6:5-8, Gen_18:20-21, 2Pe_2:5-10 

4 தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டவர்கள் Ezr_1:3-5, Ezr_9:5-6, Isa_7:2, Isa_19:8, Isa_66:2, 1Ch_17:1-2, Son_2:12, Eze_7:16, 

5 மனிதனுக்கும் தேவனுக்கும் மத்தியில் அடையாளங்களாக கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தைகள் Eze_20:19-20, 

1. கர்த்தருடைய வேதம் 

2. கர்த்தருடைய வழிகள் 

3. கர்த்தருடைய நியாயங்கள் 

4. கர்த்தருடைய சாட்சிகள் 

5. கர்த்தருடைய கட்டளைகள் 

6. கர்த்தருடைய கற்பனைகள் 

7. கர்த்தருடைய பிரமாணங்கள் 

8. ஓய்வுநாட்களின் ஆசரிப்பு முறைகள் 

Exo_20:10-12Lev_18:1-5, Exo_16:4-5, Exo_16:26-29, Ezr_9:1-2, Neh_10:28-31 2Ki_17:7-17, 2Ki_17:32-41, .Psa_19:1, Psa_119:1, 

6 தேவனுடைய நாமத்தை தரித்துக்கொண்ட தேவ ஜனங்கள் தங்களை சுற்றியுள்ள புறஜாதிகளின் எந்த முறைகளையும் / ஆசரிப்பு முறைகளையும் பின்பற்றாமல் தேவன் தங்களுக்கு கொடுத்த மோசேயின் புஸ்தகங்கள் மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷங் களில் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளை பின்பற்ற வேண்டும். 

1-4-2 தேவனுடைய நியாயத்தீர்ப்பின் இரண்டாம் அடையாளம் 

பலிபீடத்தின் பிரமாணங்களைபின் பற்றி நடக்க வேண்டும் 

தேவனுடைய பலீபீடத்தை தொடுகிறதெல்லாம் பரிசுத்த மாக்கப்படுவது, தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் அடையாள முத்திரையாக கொடுக்கப்பட்டுள்ளது. Exo_29:37, Exo_30:28-29, Lev_10:3, 

1. பலிபீட ஊழியத்திற்கு அந்நியர்கள் வரக்கூடாது :- 

அந்நியர்கள் தேவனுடைய பலிபீட ஊழியத்தின் பொறுப்பை ஏற்க முன்வரக்கூடாது Num_3:10, Num_30:33, Num_16:1,Chapter 2Ch_26:16-21, 

2. தேவனுடைய பலிபீடத்திற்கு செல்லுவதற்கு முன் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், எனென்றால் பலிபீடத்தின் சட்டதிட்ட பிரமாணங்களை பின்பற்றாமலிருக்கும் போது தேவனு டைய நியாயத்தீர்பினால் அந்த இடத்திலேயே சங்கரிக்கப்படுவீர்கள் Lev_10:1-11, Exo_29:1 

3. காயின் தேவனுக்கு பலி செலுத்துவதற்காக கொண்டு வந்த காணிக்கைகளை நீங்கள் தேவனுக்கு பலி செலுத்துவதற்காக கொண்டு வர வேண்டாம் Heb_11:4, 1Jo_3:9-12 Gen_4:3-4, 

தேவன் உங்களுக்கு கிருபையாக கொடுத்த ஊழியத்தின் மூலம் மற்றவர்கள் தேவனுடைய நாமத்தை ஏற்றுக்கொள்ளுபடி கிருபையாக தேவன் செய்த அற்புதங்கள் அடையாளங்கள்; இவைகளைக் கொண்டு வந்து உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப் படுவதற்கு காணிக்கையாக பலிபிடத்திற்கு கொண்டு வரவேண்டாம். 

4. பலிபிடத்திற்கு வரும் முன் உன் ஆத்துமாவாகிய சகோதர னிடத்தில் நல்மனம் பொருந்து; பின்பு உன் காணிக்கையை / பலிகளை கர்த்தருக்கு செலுத்துவாயாக Mat_5:23-26, Ecc_5:1-6, 1Sa_15:22, 

5. தேவனுடைய சமூகத்தில் அங்கிகரிக்கப்படும் சில காணிக்கைகளும் பலிகளும் Psa_4:5, Psa_27:6, Psa_40:6, Psa_50:5, Heb_10:6, Psa_50:23, Psa_51:16-17, Psa_116:17, Psa_107:22, Pro_21:3, Hos_6:6, Mat_9:13, Mat_12:7,Mar_12:33, Rom_12:1, Phi_2:17, 1Co_10:18, Heb_13:9-16, 

தேவனுடைய உக்கிர கோபாக்கினைக்கு உங்கள் ஆத்துமாவை தப்புவித்துக் கொள்ளுங்கள் 

Rev_7:1-3 , Rev_9:4-11, Pro_6:1-5, Rev_18:4-6, Isa_48:20 ,Isa_52:11-12, Jer_50:8-9, Jer_51:45-50,Zec_2:7-8, Psa_137:1,Chapter Ezr_1:1-6, Zec_8:15-23, Zec_7:8-14 Zec_8:1-3, Zec_8:8-23, Zec_7:8-14,Isa_2:1-5, Mic_4:1-3 

பலிபீடத்தின் வாசல் நடையிலே எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகம் நிற்கிறது / இருதயத்தின் வாசல் நடையிலே தேவனுக்கு எரிச்சலை மூட்டும் பொருளாசையாகிய விக்கிரகம் நிற்கிறது. Eze_8:5, Eze_11:2-3, Eze_14:4, Eph_5:5,Col_3:5, 1Co_5:11, 1Co_10:7, Eze_9:1-11,Eze_11:1-15, 

தேவனுடைய ஆலயத்திலே அருவருப்புகள் நிறைந்திருக் கிறது / மனிதனுடைய இருதயத்திலே அருவருப்புகள் நிறைந்திருக் கிறது Eze_8:10-18, Psa_81:12, Pro_11:20, Pro_6:16-19, Mat_23:27-28, Isa_28:8, 

1-4-3 தேவனுடைய நியாயத்திர்ப்பின் மூன்றாம் அடையாளம்:- கர்த்தருடைய பஸ்கா விருந்தை புசிக்க வேண்டும் 

கர்த்தருடைய பஸ்கா விருந்தை புசிக்கும்படி எல்லா ஆண்மக்களும் விருத்தசேதன உடன்படிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் Exo_12:1, Exo_13:1 , Chapter Num_9:1-14, Deu_16:1-12 

1. புளித்தமாவை உங்களை விட்டு அகற்றுங்கள் / மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கற்பனைகளில் உபதேசத்தை உங்களை விட்டு விலக்குங்கள் 1Co_5:6-8, Mat_16:6, Mat_16:11-12, Mar_8:15, Luk_12:1, 

2. ஓய்வு நாட்களில் சாதாரண வேலை ஒன்றும் செய்ய வேண்டாம் ஆனால் ஆவிக்குரிய மனிதனின் ஜீவனைக் காப்பாற்று வதற்காக ஆவிக்குரிய ஆகாரமாகிய தேவனுடைய சத்தியமான வார்த்தைதைகளின் உணவு சமைப்பதற்காக வேலைகள் செய்யப்படலாம். Mat_12:5, Luk_6:1-5, Rev_3:19-20, Rev_19:9, Rev_21:4-5, Isa_33:15-17, Isa_65:13-16, 

3. தலைச்சன் பிள்ளை சங்காரம் :- Exo_11:5-7, 

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளினால் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக்கொண்ட ஜென்ம பாவ மனிதனுடைய நெற்றியில் / அறிவில் தேவனுடைய முத்திரையின் அடையாளங் களை பெற்றுக் கொள்ளாமலிருக்கும்போது; அவன் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட தேவனுடைய இரட்சிப்பு அவனுக்குள் மரணமடைகிறது. இதற்கு இணையாக அவனுடைய ஆவிக்குரிய மனிதனும் அவனுக்குள் மரணமடைகிறான் இப்பொழுது இரட்சிப்பின் சந்தோஷம் இல்லாமல் அந்தகாரத்தின் வல்லமைக்கு அடிமைப்படுகிறான். 

4. ஆவிக்குரிய மனிதனின் மறு பிறப்பு Rom_8:3-11, 1Pe_3:18, 1Pe_2:24 

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை தன்னுடைய அறிவில் ஏற்றுக்கொண்டு ஜென்ம பாவ மனிதனை சிலுவையில் அடிக்கும்போது; அந்த ஜென்ம பாவ மனிதன் கொல்லப்பட்டு அவனுடைய ஆவிக்குரிய மனிதன் உயிப்பிக்கப்படுகிறான் இப்படி ஆவியில் மறுபடியும் பிறக்கிறான். 

5. தேவனுக்கு முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள் 

ஜலத்தினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்து, தேவ ஆசீர்வாதங்களை பெற்று தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களை; தேவனுக்கு முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்படுவதற்காக சிலருடைய ஜென்ம பாவ மனிதன் தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் கொல்லப்படுகிறது, மேலும் சிலர் தாங்களாகவே கிறிஸ்துவின் விசுவாச வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு தங்களுடைய ஜென்ம பாவ மனிதனை சிலுவையிலே அடித்து கொலை செய்து ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டு தேவனுடைய முதற்பலனாகும்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

இவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்று பரிசுத்த கற்பனைகளுக்கு கீழ்படியாமல் பின்வாங்கும்போது தேவனுடைய சாபங்கள் இவர்களை பின்தொடரும்; இந்த சாபங்களிலிருந்து வெளியே வரும்படி உள்ளான ஆவிக்குரிய மனிதன் பரிசுத்த கற்பனைகளின் நற்கிரியைகளை செய்யும்படி கட்டாயப்படுத்தப் படுகிறான். 

ஜென்ம பாவ மனிதனின் நற்கிரியைகளுக்கேற்றபடி தன் பாவங்களிலிருந்து வெளியே வந்து மீண்டும் தேவனை தொழுது கொண்டு தன் மேல் இருக்கிற சாபங்களிலிருந்து விடுதலையாக்கப் பட்டு தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுகிறான். .Lev_26:1,D eu_28:1, 

6. தேவன் உன்னை முதற்பலனாக மீட்டுக்கொண்ட நாளை நினைவு கூறுவாயாக 

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்ட நாளை நினைவு கூர்ந்து, உன் ஜென்ம பாவ மனிதனின் முதற்பலன் களையெல்லாம் கர்த்தருக்கு பலி செலுத்தி உன் ஆவிக்குரிய மனிதனின் முதற்பலன்களையெல்லாம் மீட்டுக்கொள்ளுவாயாக. 

முதற்பலனாகிய கிறிஸ்து உங்களை தேவனுக்கு முதற்பலனாக மீட்டுக்கொண்டபடியால், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்ட நாளை நினைவு கூர்ந்து உன் ஜென்ம பாவ மனிதனின் முதற்பலன்களையெல்லாம் கர்த்தருக்கு பலி செலுத்தி, உன் ஆவிக்குரிய மனிதனின் முதற்பலன்களையெல்லாம் மீட்டுக்கொள்ளுவாயாக. Psa_116:13, 1Ch_16:23, Psa_20:5, Psa_71:15, Psa_96:2, Exo_13:9-16, Exo_23:19, Exo_34:26, Pro_3:9, 1Co_15:23, Col_1:15-18, Jam_1:18, Mic_6:6-9, 

7. கர்த்தருடைய பஸ்கா விருந்தை புசிக்கும் வழிமுறைகள் 

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை ஏற்றுக்கொள் ளும் வழிமுறைகள் Exo_12:6-12, Eph_6:13-18, 

7-1 கர்த்தருடைய பஸ்காவை புசிக்கும்படி எல்லா ஆன்மக்களும் விருத்தச்சேதனம் பண்ணப்பட வேண்டும் . பாவத்தை ஜெயங்கொண்ட யாவரும் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை தன்னுடைய அறிவில் ஏற்றுக்கொண்டு தங்களுடைய சரீர அவயவங்களில் விருத்தச்சேதன கிரியைகளை அடையாளங்களாக பெற்றிருக்க வேண்டும். . Gen_17:9-14, Exo_12:48,.Act_7:51, 1Co_7:19, Rom_2:28-29, Gal_5:6, Gal_6:15, 

7-2 உங்களது இடுப்பில் கச்சையை கட்டிக்கொள்ளுங்கள்:- 

நீங்கள் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை மைய மாகக் கொண்டு அதற்கேற்ற படியுள்ள உங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள் 

7-3 உங்கள் பாதங்களில் பாதரட்சையை அணிந்திருக்க வேண்டும்:- 

சமாதனத்தின் சுவிசேஷத்திற்கு முன்னேறிச் செல்ல நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். 

7-4 உங்களது தடியை உங்கள் கையில் பிடித்துக் கொண்டு பஸ்கா அப்பம் புசிக்க வேண்டும்:- 1Co_12:4-11, 1Pe_4:10, Rom_12:3, 

தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுதவற்காக தேவன் உங்களுக்கு பகிர்ந்து கொடுத்த ஊழியர் அழைப்பின் அளவுப்பிரமாணத்தில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும். 

7-5 நீங்கள் தீவிரமாக பஸ்கா அப்பத்தை புசிக்க வேண்டும் :- Jer_48:10, 2Ti_2:5, Col_4:6, 1Sa_21:8-9, 

கர்த்தருடைய வேலையை அசதியாக செய்கிறவன் சபிக்கப்பட்டவன் எனவே சமயம் வாய்த்தாலும் வாய்க்காமல் போனாலும் தேவனுடைய சித்தத்தை தீவிரமாக நிறைவேற்றும்படி எப்பொழுதும் முன் ஜாக்கிரதையுடன் ஆயத்தமாக இருக்கவேண்டும். 

7-6 பஸ்காவை புசிக்கிற நீங்கள் விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலை விட்டுப் புறப்பட வேண்டாம் :- 

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை புசிக்கிற நீங்கள் தேவனுடைய வார்த்தைகள் தன் நிழலாட்டமானவைகளிலிருந்து பொருளுக்கு மாறுதவற்கு முன் தேவனுடைய உடன்படிக்கையின் சட்ட திட்ட பிரமாணங்களை மீறி தன் இச்சையாக பொருளுக்கு மாற்றக்கூடாது (கிறிஸ்துவின் வார்த்தைகளினால் நிழலாட்டமான வைகள் தன்னுடைய பொருளுக்கு மாற்றப்படுகிறது) Exo_12:22-23, Exo_16:29-30, Heb_9:8-10, Gal_3:20-26, Heb_10:1, Heb_10:19-27, Col_2:16-17, 1Co_7:18-23, 1Co_11:26, 

7-7 கர்த்தருடைய பஸ்காவை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்க வேண்டும்:- தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை அவரவர் தங்கள் ஆவி ஆத்துமா சரீரத்தில் சிந்தித்து தியானித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். 

7-8 பஸ்கா மாம்சத்தில் கொச்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டு போகக்கூடாது :- தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் எந்த ஒரு பகுதியையும் தேவனுடைய உடன்படிக்கைக்கு விரோதமான கருத்தை உணர்த்தும் படி விவரிக்கப்படக்கூடாது. 

7-9 பஸ்கா மாம்சத்தின் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது:- 

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் எந்த ஒரு பகுதியையும் உடன்படிக்கையிலிருந்து பிரித்து எடுத்துப் போடக்கூடாது. Exo_12:46, Joh_19:33-36, Deu_4:2, Deu_12:32, Mat_5:17-19, Rev_22:18-19, Pro_30:5-6, 

1-4-4 தேவனுடைய நியாயத்தீர்ப்பின் நான்காம் அடையாளம் :- ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் 

தேவனுடைய ஒரு நாள் மனிதனுக்கு ஆயிரம் வருடங்கள், தேவனுடைய ஆறு நாள் மனிதனுக்கு ஆறு ஆயிரம் வருடங்கள், தேவனுடைய ஏழாவது நாள் மனிதனுக்கு ஏழாவது ஆயிரம் வருடங்கள். 2Pe_3:8, Psa_90:4,Heb_3:7-19, Heb_4:1-10,Exo_16:4-5, Exo_16:11-19, Exo_20:8-11, Isa_56:1-8, 

ஆதாம் முதல் இன்று வரை மனித சரித்திரத்தில் ஆறு ஆயிரம் வருடங்கள் முடிந்து ஏழாவது ஆயிரம் வருடங்கள் ஆரம்பமாகி தொடர்கிறது Ecc_8:5-6, Hos_6:1-3, Joh_12:32-33, 

1 கீழே குறிப்பிட்ட தலைப்புகள் ஆயிரம் வருடங்களின் சம்பவங்களாக ஆயிரம் தலைமுறைகளுக்குள்ளே ஒரு தலைமுறையான இந்த தலைமுறையில் நடைபெறுகிறது 

1. ஓய்வு நாள் Act_2:15-21, Joe_2:28, 

2. பின்மாரியின் மழைக்காலம். Mal_4:1-6, Zec_10:1, 

3. உபத்திரவகாலம்/ மகா உபத்திரவகாலம் Dan_12:1-13,Mat_24:14-22, 

4. நீதியை சரிகட்டும் நாட்கள் Mar_13:8-13, Luk_21:20-28, 

5. அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிற நாட்கள் Dan_7:13-28, Oba_1:17-21, 

6. தேவனுடைய வீட்டிலே நியாயத்தீர்ப்பின் நாள் 1Pe_4:16-17, 

7. ஆயிரம் ஆண்டுகளின் ஆட்சியின் காலம் Rev_15:2, 

8. தேவனுடைய இராஜ்ஜியத்தின் காலம் Rev_20:4-6, 

2. ஓய்வு நாளில் சாதரண வேலை ஒன்றும் செய்ய வேண்டாம் Exo_31:13-17, Exo_35:2, Deu_5:12-15, 

3. ஓய்வு நாளில் நெருப்பு மூட்ட வேண்டாம் Exo_35:1-3, Lev_26:26, Hos_7:4-8, Isa_50:10-11, 

4. ஓய்வு நாளில் நெருப்பு மூட்ட விறகு பொறுக்க வேண்டாம்:- 

ஓய்வு நாளில் / தேவனுடைய இராஜ்ஜியத்தில் பரிசுத்த வேதாகம புஸ்தகத்திலிருந்து விருப்பமான / ஆசீர்வாதமான வசனங்களைப் பொருக்கி எடுத்து அவைகளினால் தங்களுக்கு ஆவிக்குரிய அப்பங்களை சுட வேண்டாம் மேலும் தங்களுக்கு ஆவிக்குரிய வெளிச்சம் / எழுப்புதல்களை உண்டாக்குவதற்க்காக கீழே குறிப்பிட்ட கர்த்தருடைய பிரமாணங்களில் மனிதனுடைய கற்பனைகளை இணைக்க வேண்டாம். Num_15:32-36, Jer_7:17-20, Jer_44:16-19, Exo_31:14-17; Exo_35:1-3,Isa_50:10-11,Num_15:32-36, Neh_13:15-19 , Neh_13:20-22 , Jer_17:19-22 

1. கர்த்தருடைய வேதம் 

2. கர்த்தருடைய வழிகள் 

3. கர்த்தருடைய நியாயங்கள் 

4. கர்த்தருடைய சாட்சிகள் 

5. கர்த்தருடைய கட்டளைகள் 

6. கர்த்தருடைய கற்பனைகள் 

7. கர்த்தருடைய பிரமாணங்கள் 

8. கர்த்தருடைய ஆசரிப்பு முறைகள் 

5. ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும் Neh_13:15-22, Isa_58:1-14, 

6. ஓய்வுநாளில் வெளியே இருந்து எந்த ஒரு பொருளையும் எருசேலம் நகரத்திற்கு உள்ளே கொண்டு வரக்கூடாது :- தேவனுடைய இராஜ்ஜியத்தில் வெளியே இருந்து எந்த ஒரு சுய விசுவாச எண்ணங்களையும், தேவனுடைய சத்தியமான வார்த்தை களுக்குள்ளே கொண்டு வரக்கூடாது. 

7. ஓய்வு நாளில் உங்களுடைய வீடுகளிலிருந்து எந்த ஒரு பொருளையும் வெளியே கொண்டு வரக்கூடாது. 

தேவனுடைய இராஜ்ஜியத்தில் உங்களுடைய அறிவு சிந்தனைகளிலிருந்து சொந்தமான யோசனைகளையோ / விதிமுறை களையோ / எந்த ஒரு சுய விசுவாசமான எண்ணங்களையோ வெளியே கொண்டு வரக்கூடாது. 

1-4-5 தேவனுடைய நியாயத்தீர்ப்பின் ஐந்தாம் அடையாளம்: 

மனச்சாட்சி பிரமாணத்தை பின்பற்ற வேண்டும் 

மனச்சாட்சிப் பிரமாணம் தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் அடையாள முத்திரையாக கொடுக்கப்பட்டுள்ளது. Rom_2:13-16, Rom_2:23-29, 1Jo_3:20-33, Joh_6:45, Mic_6:8-9, 2Ki_17:32-34, 

1-4-6 தேவனுடைய முதலாம் நியாயத்தீர்ப்பின் ஆறாம் அடையாளம்: 

இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்ற வேண்டும் 

இயேசு கிறிஸ்துவின் சாட்சியை / வாழ்க்கை மாதிரியை பின்பற்றுவது தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் அடையாள முத்திரையாக கொடுக்கப்பட்டுள்ளது. Joh_3:31-36, Rev_6:9, Rev_12:11 , Rev_12:17 

1-4-7 தேவனுடைய நியாயத்தீர்ப்பின் ஏழாம் அடையாளம்: 

பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளவேண்டும் 

ஓய்வுநாள் ஆராதணை முறைகளை கடந்து சென்று, பிதாவின் வாக்குத்தத்தமான பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுவது தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் முத்திரை அடையாளமாக கொடுக்கப் பட்டுள்ளது. Act_1:4-12, Luk_24:47-49, Joh_15:26, Joh_16:7-11, 2Co_1:22, Eph_1:13, Eph_4:30, 2Ti_2:19, 

1-5 நீதிமான் தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் துன்மார்க்கன் மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் எழுத்திபடி ஆவியின் படி 

1-5-1. நீதிமான்கள் தேவனுடைய முத்திரை அடையாளத்தை நெற்றியில் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் எழுத்தின்படி:- 

வேத வசனங்களில் நிழலாட்டமாக பின்பற்ற வேண்டிய உடன்படிக்கையின் ஆசரிப்பு முறைகள், ஓய்வு நாளின் ஆசரிப்பு முறைகள் ஆகியவற்றை எழுத்திபடி செய்து அவைகளின் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுதல் Heb_8:5, Heb_9:9-10Heb_9:23, Heb_10:1 ,1Pe_3:21Col_2:16-23, Col_2:8-10, 1Th_4:8-11, 

1-5-2. நீதிமான்கள் தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் ஆவியின்படி:- 

இயேசு கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் ஜெயங் கொண்டதின் மூலம் வேத வசனங்களில் நிழலாட்டமாக பின்பற்ற வேண்டிய உடன்படிக்கையின் ஆசரிப்பு முறைகளும், ஓய்வு நாளின் ஆசரிப்பு முறைகளும், அதன் பொருளுக்கு மாற்றப்படுகிறது. 

பொருளுக்கு மாற்றப்பட்ட தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை தங்கள் அறிவு புத்தி ஆகிய இவைகளில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு புது சிருஷ்டியாக மாற்றப்பட்டு தேவ சித்தத்தை பூரணமாக நிறைவேற்றும்படி தங்கள் சரீர அவயவங்களில் நற்கிரியைகளை அடையாளங்களாக தரித்துக் கொள்ளுதல். 

1-5-3. துன்மார்கன் மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருளை அறித்து கொள்ளுவதற்கு, உதாரணமாக கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட ஒரு உவமையின் பொருள் எழுத்தின்படி ஆவியின்படி :- Mat_24:19, Mar_13:17, Luk_21:23, 

1-5-4. கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட ஒரு உவமையின் பொருள் எழுத்தின்படி:- 

அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுப்பவர்களுக் கும் ஐயோ! கடைசி நாட்களில் பூமியில் அறிவு பெருகும்போது பாவங்களும் அக்கிரமங்களும் பூமியில் பெருகி அதன் பின் விளைவாக கொடிய வியாதிகளும் கொள்ளை நோய்களும் ஜனங் களுக்குள்ளே பரவலாக இருக்கும்; 

அப்பொழுது நல்ல மருத்துவ சிகிச்சையும் ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் அவர்கள் வியாதி யின் கொடுமையிலிருந்து அவர்களை விடுவிக்க மாட்டாது, விசேஷ மாக கர்ப்பவதிகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கும் ஏற்படும் வியாதியினாலும் நோயினாலும் அவர்களுக்கு மிகவும் வேதனைகளும் கஷ்டங்களும் பெருகும். 

1-5-5. கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட உவமையின் பொருள் ஆவியின்படி:- 

அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுப்பவர்களுக் கும் ஐயோ! கடைசி நாட்களில் பூமியில் அறிவு பெருகும்போது தேவ ஊழியர்கள் மத்தியில் கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம் இருக்கும்; அப்பொழுது அறியாமையினால் பல வாக்குவாதங் களும் சண்டைகளும் ஏற்பட்டு தங்கள் சமாதானத்தை இழந்து வேதனைகளும் கஷ்டங்களும் அவர்களுக்குள்ளே பெருகும் 

விசேஷமாக ஆத்துமாக்களுக்காக கர்ப்ப வேதனைப்பட்டும், கிறிஸ்துவுக்குள் புதிய ஆத்துமாக்களை பெற்றெடுக்க முடியாதவர் களுக்கும், புதிய ஆத்துமாக்களை பெற்றெடுத்தும் அவர்களுக்கு களங்கமில்லாத ஞானப்பாலைக்கொடுத்து ஆவியில் வளர்க்க முடியாதவர்களுக்கு மன குழப்பமும் வேதனைகளும் பெருகும். 

தேவ ஊழியர்கள் மத்தியில் கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம் இருக்கிறபடியினாலும் அறியாமையினாலும் கிறிஸ்துவுக்குள் புதிதாக பிறந்த ஆத்துமாக்கள் களங்கமில்லாத ஞானப்பாலைத்தேடி தாய் சபையை விட்டு மற்ற இடங்களுக்கு கடந்து செல்லுகிறது; இதனால் ஆத்துமாக்களுக்காக கர்ப்ப வேதனைப் பட்டு, ஆத்துமாக்களை பெற்றெடுத்தும் அவர்களை ஆவியில் வளர்க்க முடியாதவர்களுக்கு மன குழப்பமும் வேதனைகளும் பெருகும். 

1-5-6. மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியி லும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் எழுத்தின் படி:- 

கணினியின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியி லும் வலது கையிலும் மருத்துவ சிகிச்சை மூலம் பெற்றுக்கொண்டு அதனால் பொருளாதாரம் மற்றும் வாணிபத் தேவைகளுக்கு பயன் படுத்துவது. 

1-5-7. மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியி லும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருள்ஆவியின் படி:- 

அந்திக் கிறிஸ்துவின் விசுவாசத்தையும் கிரியைகளையும் தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் மூன்று தலைவர்களான கள்ளத்தீர்க்கதரிசி, அந்திக் கிறிஸ்து, சாத்தான், இவர்கள் வாயிலிருந்து புறப்படும் மூன்று அசுத்த ஆவிகளினால் வஞ்சிக்கப்பட்டு தேவனுக்கும் தேவனுடைய கற்பனைகளை பின்பற்றுகிறவர்களுக்கும் விரோதமாகவும் இணையாகவும் விசுவாசத்திலும் கிரியைகளிலும் நடந்து, 

மேலும் தேவனுடைய கற்பனைகளை பின்பற்றுகிறவர்களை வஞ்சிக்க முயற்சி செய்வது / உபத்திரவப்படுத்துவது / கொலை செய்வது ஆகிய கிரியைகளை செய்வார்கள்; எனவே அந்தி கிறிஸ்துவின் விசுவாசத்தையும் கிரியைகளையும் தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொண்டவர்களை ஆவியின்படி அடையாளம் கண்டு பிடிப்பவர்கள் மட்டும், பரலோக தேவனின் சத்தியமான வார்த்தைகளின் ஊழியத்தை பயமில்லாமல் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். 

1-6-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்கள் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் அறிவைப் பெற்று தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்கள் Rev_14:1-5, Rev_19:9, 

1-6-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்கள்; மூன்று அசுத்த ஆவிகளினால் வஞ்சிக்கப்பட்டு தேவனுக்கும் தேவனுடைய கற்பனைகளை பின்பற்றுகிறவர்களுக்கும், விரோதமாகவும் இணையாகவும், விசுவாசத்திலும் கிரியைகளிலும் செயல்படுவார்கள். Rev_19:20, 

1-6-3 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

கிறிஸ்துவுடன் இருப்பவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பவட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருப்பார்கள் 

இவர்கள் பரிசுத்த ஆவி, அபிசேஷக ஆவி, சத்திய ஆவி, ஆகியவைகளின் கிரியைகளினால் ஒருங்கிணைக்கப்படுவார்கள். 

1-6-4 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

மூன்று அசுத்த ஆவிகளின் அற்புதங்களினால் கள்ளத்தீர்க்கதரிசி, அந்திக்கிறிஸ்து, சாத்தான் , ஆகிய இவர்களை பின் தொடர்கிறவர்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள் Rev_16:13-15, 

1-6-5 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

ஒரு ஸ்திரீ சகல ஜாதிகளையும் இரும்புக்கோலால் ஆளுகை செய்யும் ஆண்பிள்ளையை பெறும்படி பிரசவ வேதனையடைந்து வருத்தப்பட்டு அலறுகிறாள். Rev_12:1-5, 

1-6-6 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

ஒரு ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுக்கிறிஸ்துவின் சாட்சிகளுடையவர்களின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறாள் Rev_17:6, Rev_18:4, Rev_18:24, 

1-6-7 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில்பெயர்எழுதப்பட்டவர்கள் மிருகத்தின்அடையாளத்தையும் அசுத்த ஆவிகளின் அற்புதங்களையும்தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் Rev_13:8, Rev_17:8, 

1-6-8 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் மிருகத்தை வணங்கி அசுத்த ஆவிகளின் அற்புதங்களை தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொள்ளுவார்கள் Rev_13:8, Rev_17:8, 

1-6-9 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

தேவன் பரிசுத்தவான்களுக்கு1260 நாள் அளவும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி அதிகாரங்களைக் கொடுத்தார். பரிசுத்தவான்கள் தேவ வசனத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை ஜெயித்தார்கள். Rev_11:3, Rev_12:11 

1-6-10 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

கீழே விழத்தள்ளப்பட்ட சாத்தான் மிருகத்தின் முத்திரையை பெற்றவர்களுக்கு 42 மாதமளவும் பரிசுத்தவான்களோடு யுத்தம் செய்து ஜெயங்கொள்ளும்படி அதிகாரம் கொடுத்தது Rev_13:1, 

1-6-11 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

பரிசுத்தவான்கள் தங்களுடைய ஊழியத்தில் ஆவிக்குரிய பட்டயமாகிய தேவ வசனத்தைக்கொண்டு கடிந்து கொண்டு உபதேசம் பண்ணும்போது அதை எதிர்ப்பவர்கள் எழுத்தின் படியுள்ள பட்டயத்தைக்கொண்டு வெட்டுவார்கள் 

ஆனாலும் சமாதானத்தின் சுவிசேஷத்தை உடையவனாயிருந்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவர்கள் எலியாவைப்போல பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் Rev_13:9-10, Rev_14:12-13, 

1-6-12 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

ஒருவன் தீமை செய்கிறதிலிருந்து விலகி நன்மை செய்கிறபோது, தேவன் அவன் மேல் வைத்த நியாயத்தீர்ப்பை அவனை விட்டு விலக்குவார்; ஒருவன் பரிசுத்தவான்களுக்கு தீமை செய்யத் திட்டமிடுகிறபோது, அது போலவே தேவன் அவனுக்கு தீமையை திட்டமிட்டுச் செய்வார் Rev_11:5, 

1-6-13 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

அந்திக் கிறிஸ்துவின் முத்திரைஅடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக் கொள்ளாதவர்கள் மூன்று அசுத்த ஆவிகளையும் ஜெயங்கொண்டு தேவனுடைய முத்திரை அடை யாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைவார்கள். Rev_20:4-6 

1-6-14 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

அந்திக் கிறிஸ்துவின் விசுவாசத்தையும்கிரியைகளையும் தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனுடைய கோபாக்கினையில் பங்கடைவார்கள் Rev_16:1-2, Rev_14:9-11, 

1-6-15 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து அக்கினி கலந்த கண்ணாடிக் கடலில் ஞானஸ்தானம், பெற்று மகிமையடைவார்கள். . Rev_15:2-3, Rev_4:6, 

1-6-16 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

மூன்று அசுத்த ஆவிகளின் அற்புதங்களினால் கள்ளத்தீர்க்கதரிசி, அந்திக்கிறிஸ்து, சாத்தான், ஆகிய இவர்களை பின் தொடர்கிறவர்கள் அக்கினி நரகத்தில் தள்ளப்படுவார்கள். Rev_19:20, Rev_20:10, 

இரண்டாம் நியாயத்தீர்ப்பு :- 

அரசியல், பொருளாதாரம், மதம், மற்றும் விஞ்ஞானம் இவைகளின் மாற்றங்களுக்காக எருசலேம் தேவாலயத்தில் தேவனுடைய நியாயத்தீர்ப்பு / மூன்றாம் உலக மகா யுத்தம். Isa_34:1, Eze_38:1, Eze_39:1 chapters. 

மூன்றாம் நியாயத்தீர்ப்பு :- 

பரிசுத்தவான்களின் பிரதிபலனுக்காக தேவனுடைய நியாயத்தீர்ப்பு / கிறிஸ்துவினுடைய நியாயாசனம். . .Rev_4:1-11, Rev_5:9-14, Rev_14:1-20, Rev_15:2-4, Rev_20:4-6,Psa_50:1-5, Psa_82:1-8, Isa_32:1, Joh_10:34-35, 1Co_6:2-3, Rom_14:10, 2Co_5:10 

நான்காம் நியாயத்தீர்ப்பு :- 

இந்த பூமியில் உள்ள ஜனங் களுக்குள்ளே ஆயிரம் ஆண்டு ஆட்சியில் பங்கடையும் ஜனங்களை பிரித்தெடுப்பதற்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பு. Mat_25:31-36, Mat_10:40-42, Mar_9:41-42, .Isa_16:1-5, Jos_2:4-6, Jdg_5:20, Job_38:12-13, Job_38:31-33, 

1. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் தேவ ஊழியர்கள் பசியாயிருந்தபோது போஜனம் கொடுக்காதவர்கள். 

2. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் தேவ ஊழியர்கள் தாகமாயிருந்தபோது தாகத்தைத் தீர்க்காதவர்கள் 

3. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் தேவ ஊழியர்கள் அந்நியனாயிருந்தபோது சேர்த்துக்கொள்ளாதவர்கள் 

4. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் தேவ ஊழியர்கள் வஸ்திரமில்லாதபோது வஸ்திரம் கொடுக்காதவர்கள். 

5. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் தேவ ஊழியர்கள் வியாதியாயிருந்தபோது விசாரிக்க வராதவர்கள். 

6. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் தேவ ஊழியர்கள் காவலிருந்தபோது பார்க்க வராதவர்கள் 

7. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் சீயோனுக்கு தேவ ஊழியர்களை அனுப்பாதவர்கள்:- 

தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலா பட்டணந்துவக்கி வனாந்தரமட்டும் சேர்த்துச் சீயோன் குமாரத் தியின் மலைக்கு அனுப்புங்கள். இல்லாவிட்டால் கூட்டைவிட்டுத் துரத்தப்பட்டு அலைகிற குருவியைப் போல மோவாபின் குமா ரத்திகள் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள். 

8. தேவனுடைய நாமத்தின் நிமித்தம் சீயோனின் தேவ ஊழி யர்களுக்கு அடைக்கலம் கொடுக்காதவர்கள் :- 

நீ ஆலோசனைப்பண்ணி, நியாயஞ்செய்து மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக் கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடாதிரு. மோவாபே, துரத்தி விடப்பட்ட என் ஜனங்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; சங்கரிக்கிற வனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு;ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்: சங்கரிப்பு ஒழிந்து போகும்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இராதபடிக்கு அழிந்து போவார்கள். 

ஐந்தாம் நியாயத்தீர்ப்பு :- 

ஆயிரம் ஆண்டு ஆட்சிக்கு இணையாக பாதாளத்தில் முத லாம் மரணத்தின் தேவனுடைய நியாயத்தீர்ப்பு. 

Rev_20:1-3, Rev_20:10 ,Rev_20:13, 1Pe_4:5-6Psa_49:14-15, Job_18:13-15, Job_14:20, 1Co_5:1-5, 1Co_15:33-42, 

ஆறாம் நியாயத்தீர்ப்பு :- 

ஆயிரம் ஆண்டு ஆட்சி துவங்குவதற்கு முன் அரசியல், பொருளாதாரம், மதம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றின் மாறு தலுக்காக அர்மகெதோன் யுத்தத்தின் நியாயத்தீர்ப்பு. Rev_16:16-17, Rev_15:1-8, Rev_16:1-21, Rev_19:11-21 

ஏழாம் நியாயத்தீர்ப்பு :- 

ஆயிரம் ஆண்டு ஆட்சியின் முடிவில் அரசியல், பொருளாதா ரம், மதம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றின் மாறுதலுக்காக கோகு மாகோகு யுத்தத்தின் நியாயத்தீர்ப்பு. Rev_20:7-10, 

எட்டாவது நியாயத்தீர்ப்பு :- 

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு Rev_20:11-15, Job_14:12, Mal_3:16,

Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries