தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து
புஸ்தகம் 17
ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் - தேவனுடைய ஆவியில் பிழைத்திருக்கிறவர்களுக்காக தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு உபத்திரவ காலத்திற்கு நடைமுறைக்கு வருகிறது.
பொருளடக்கம் 6-0
6-0 கிறிஸ்துவின் இரகசிய வருகையில்/ பகிரங்க வருகையில் எடுத்துக்கொள்ளப்படுகிறவர்களும் கைவிடப்படுகிறவர்களும்.
1-0 கிறிஸ்துவின் இரகசிய வருகையில் ஸ்திரியாகிய சபையிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறவர்கள் தேவனுடைய ஏழு முத்திரையின் அiடாயளங்களை பெற்றுக் கொள்ளுகிறதினால் 1.44.000 ஆண்பிள்ளைகளாக பிறக்கிறார்கள்
2-0 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு /தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகளுக்கு ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்து ஆயத்தமாயிருக்கிறது.
3-0 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசியவருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபை குமாரத்திகளின் அடையாளங்கள்.
4-0 கிறிஸ்துவின் பகிரங்க வருகையில் எடுத்துக்கொள்ளப்படுகிறவர்கள்
5-0 கிறிஸ்துவின் பகிரங்க வருகையில் கைவிடப்படுகிறவர்கள்
1-0 கிறிஸ்துவின் இரகசிய வருகையில் ஸ்திரியாகிய சபையிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறவர்கள் தேவனுடைய ஏழு முத்திரையின் அiடாயளங்களை பெற்றுக் கொள்ளுகிறதினால் 1.44.000 ஆண்பிள்ளைகளாக பிறக்கிறார்கள் .
1-1 ஆண் பிள்ளைகளை பெற்றெடுப்பதற்காக சபையானது பிரசவ வேதனையடைந்து வருத்தப்பட்டு அலறுகிறது.
தேவனுடைய வீட்டிலே துவங்கும் நித்திய நியாத்தீர்ப்பின் மூலம் தேவனுடைய ஏழு முத்திரைகளை தங்கள் நெற்றில் அடையா ளங்களாகப் பெற்றுக்கொள்ளும் 1.44.000 ஆண் பிள்ளைகளை பெற்றெடுப்பதற்காக சபையானது பிரசவ வேதனையடைந்து வருத்தப்பட்டு அலறுகிறது. 1Pe_4:16-18, Rev_12:1-2, Rom_8:19-22,
தேவனுடைய வீட்டிலே நித்திய நியாயத்தீர்பை துவங்கு வதற்காக, எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய் அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளின் நிமித்தம் தங்கள் இருத யத்தில் பெருமூச்சு விட்டழுகிறவர்களின் நெற்றியில்; தேவனுடைய முத்திரை அடையாளங்களைப்போட்டு, அவர்களின் நடுவிலிருந்து ஆண் பிள்ளைகளை பிரித்தெடுப்பதற்காக பரிசுத்த ஸ்தலத்திலுள்ள மூப்பர்களிடத்திலிருந்து சங்காரம் செய்யத் துவங்கினார்கள். Eze_9:1-11, Eze_11:1-13, Jer_25:29, Isa 66:6-10
1-2 ஆண்பிள்ளைகளை இனம் கண்டறிதல் :-
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்த அடையாளங்களை போல, தேவனுடைய முத்திரை அடையாளத்தின் வசனங்களின் தேவ அறிவை, ஒருவனுடைய சரீரமாகிய கூடாரத்தில் வாசம் பண்ணும் தலைச்சன் பிள்ளையாகிய ஜென்ம சுபாவ மனிதன் தரித்திருக்கும் போது; அவன் இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம் செய்து கொண்ட இரட்சிப்பின் உடன்படிக்கை மரணம் அடையாமல் ஜீவ னோடியிருக்கும்.
தேவமுத்திரையின் அடையாளத்தை ஒருவனுடைய ஜென்ம சுபாவ மனிதன் தரித்திருக்கும்போது அவன் முதற்பலனாக / ஆண் பிள்ளையாக / தலைச்சன் பிள்ளையாக பிரித்தெடுக்கப்படுகிறான் இப்படி பிரித்தெடுக்கப்பட்டவர்கள் தேவ சித்தத்தை நிறை வேற்றுவதின் மூலம் கிறிஸ்துவின் மணவாட்டி சபையாக மாறு கிறார்கள்.
தேவனுடைய முத்திரை அடையாத்தின் தேவ அறிவை கீழே குறிப்பிட்ட நான்கு வழிமுறைகளில் ஏற்றுக்கொள்ளுபவர்கள் எகிப் தின் வாதைகளிலிருந்து காக்கப்படுவது போல ஆவி ஆத்துமாவில் தேவன் அனுப்பும் நியாயத்தீர்ப்பின் மூலம் உண்டாகும் சாபங் களிலிருந்து காக்கப்படுகிறார்கள்.
1-2-1. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவை தங்கள் அறிவிலும், செயலிலும், எதிர்த்து நிற்காமல் ஏற்றுக்கொண்டு நடைமுறைபடுத்துகிறவர்கள்.
1-2-2. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவை ஏற்கனவே கொஞ்சம் அறிந்தவர்கள், மேலும் முழுமையாக தேவ அறிவை அறிந்து கொண்டு நடைமுறைபடுத்துகிறவர்கள்.
1-2-3. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறி வினால் இயன்றளவு நற்கிரியைகள் செய்துகொண்டு, மேலும் தேவ அறிவை முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சியோடு போராடு கிறவர்கள்
1-2-4. தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவினால் நற்கிரியைகள் செய்வதற்காக நல் மனம் உள்ளவர்களாக யிருந்து, நற்கிரியைகள் செய்து முன்னேறுவது; மேலும் தங்களைப் போல உள்ளவர்களுடன் இணைந்து, கிறிஸ்துவின் சரீர அவயவங்களாக நற்கிரியைகளை செய்து தேவ சித்ததை நிறை வேற்றுகிறவர்கள்.
மோசேயின் மூலமாக அறிவிக்கப்பட்ட தேவவார்த்தை களுக்கு இஸ்ரவேல் ஜனங்கள் கீழ்ப்படிந்து எகிப்தின் பத்து வாதை களிலிருந்து காக்கப்பட்டது போல; மேலே குறிப்பிட்ட இந்த நான்கு வகையான ஜனங்கள் தேவ சித்தத்தை நிறைவேற்றும் போது ஆவி. ஆத்துமாவில் தேவன் அனுப்பும் நியாயத்தீர்ப்பின் மூலம் உண்டாகும் சாபங்களிலிருந்து காக்கப்படுகிறார்கள். Rev_9:1-4, Rev_7:1-4, Rev_7:13-14,
1-2-5 தேவனுடைய முத்திரையின் அறிவை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு தேவனுடைய நித்திய நியாயத்தீர்ப்பு :-
தேவனால் முன் குறிக்கப்பட்ட 1,44,000 ஆண்பிள்ளை நாங்கள் தான் என்று யார்? உரிமைகொண்டாடாடினாலும், அல்லது யார்? 1,44,000 ஆண்பிள்ளைகள் வரிசையில் சேர்ந்து கொள்ள விரும்பி னாலும், அவர்கள் தேவனுடைய ஏழு முத்திரையின் அடையாள மாகிய தேவ வார்த்தையின் தேவ அறிவை பெற்று இருக்கிறார்களா? என்று தயவு செய்து பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்; ஏனென்றால் தேவ முத்திரையின் அறிவை சரியாக புரிந்து கொள் ளாமல் அல்லது அறியாதிருக்கும்போது, தேவனுடைய நித்திய நியா யத்தீர்ப்பின் தண்டனையை அடைய நேரிடும்.
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்த அடையாளங்கள் இல்லாத வீட்டில் தலைச்சன் பிள்ளை மரணமடைந்தது போல, தேவ முத்திரை யின் தேவ அறிவை ஏற்றுக்கொள்ளாத தலைச்சன் பிள்ளையாகிய ஜென்ம சுபாவ மனிதனுடைய இரட்சிப்பு மரணமடையும்; கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் தேவ முத்திரையின் அறிவை ஏற்றுக்கொள்ளும்போது மீண்டும் தேவனுடைய இரட்சிப்பை பெற் றுக்கொள்ள அநேக வாய்ப்புகள் உள்ளது.
ஒருவன் தேவனுடைய ஏழு முத்திரையின் அடையாள மாகிய தேவ அறிவை ஏற்றுக்கொள்ளாமல் தன்னுடைய சுய விசுவா சத்தை நிலை நிறுத்தும்படியாக மனிதனுடைய அறிவில் முயற்சி செய்யும் போது; அவனுடைய அறியாமையினால் மிருகமாகிய அந்திக் கிறிஸ்த்துவின் முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியிலும், வலது கையிலும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
இவர்கள் அந்திக் கிறிஸ்துவின் மண வாட்டி சபையாக மாறி, தேவனுடைய ஏழு முத்திரை அடையா ளங்களுக்கும் அவைகளை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் விரோத மாக அறிவிலும் கிரியைகளிலும், செயல்படுவதால் அந்திக் கிறிஸ்துக்கள் மற்றும் கள்ள தீர்க்கதரிசிகள் ஆகிய இவர்களுடன் நேரடியாக அக்கினி நரகத்தில் தள்ளப்படுவார்கள்.
தேவனால் முன் குறிக்கப்பட்ட 1.44.000 ஆண்பிள்ளை களாகிய மணவாட்டி சபை நாங்கள் என்று உரிமை கொண்டாடுகிற தேவ ஜனமாகிய சீயோன் குமாரத்தியே! உனக்கு கிடைத்த இந்த நாளிலாவது சமாதானத்திற்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயா னால் உனக்கு நலமாயிருக்கும்; முதற்பலனாக / ஆண்பிள்ளையாக / தலைச்சன்பிள்ளையாக 1.44.000 வரிசையில் சேரவிரும்புகிறவர்கள் தேவனுடைய ஏழு முத்திரை அடையாளத்தின் தேவ அறிவை சாந்த மாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
இந்த தீர்க்க தரிசன தேவ வார்த்தைகளை வாசிக்கிறவன் கேட்கிறவன் இவைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள் பாக்கிய வான்கள் Rev_1:2-3,
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன் ; விருப்பமுள்ள வன் ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன். Rev_22:14-17,
Rev 22:18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்க தரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும், தேவன் சாட்சியாக எச்சரிக்கிற தாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன் மேல் கூட்டுவார்.
Rev 22:19 ஒருவன் இந்த தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவ புஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப்புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத் துப் போடுவார்.
1-3 ஆண் பிள்ளைகளின் விசுவாச நற்கிரியைகள் Rev_14:1-5 , Rom_7:1-6, 2Th_2:7-12, 2Co_11:2,
1. இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் உறுதி யாக நிலைத்திருப்பவர்கள்.
2. பிதாவின் நாமமான தேவ வார்த்தையை தங்கள் ஆவியில் ஏற்றுக்கொண்டவர்கள்.
3. இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றுகிறவர்கள்.
4. தேவனுடைய சத்தியமான வார்த்தைகளிலே கபடமும் கள்ளத் தீர்க்க தரிசனமும் இல்லாமல் தேவனுடைய வார்த்தையை சாட்சியாக அறிவிப்பார்கள்.
5. ஸ்திரியாகிய சபையினால் தங்களை கரைபடுத்திக் கொள்ளாதவர்கள்.
6. அந்திக்கிறிஸ்துவின் சொருபத்தையும் அதன் அறிவையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள்.
7. மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவரின் பாட் டையும் கற்றுக் கொண்டு தேவ சுரமண்டலத்தோடு பாடக்குடிய வர்கள்.
8. தேவனுடைய வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவைபற்றிய சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்கதரிசனங்களை வாசித்தும் கேட்டும், இவைகளை கைக்கொண்டு பாக்கியவான்காளாக மாறுகிறவர்கள். Rev_1:2-3,
9. தேவனுடைய வார்த்தை, இயேசு கிறிஸ்துவை பற்றின சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்கதரிசன வசனங்களில் காத்திருந்து ஏழு சபைகளின் தேவதரிசனத்தைப் பெற்று ஆவியில் மருரூபம் அடைந்திருப்பவர்கள். Rev_1:9-11,
10. தேவனுடைய சத்தியமான வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவை பற்றிய சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்க தரிசன வசனங் களை புசித்து கிறிஸ்துவை தங்களுடைய இராஜாவாக அங்கிகரித்து அல்லேலூயா; என்று கெம்பீர சத்தமிடுகிறவர்கள் Rev_19:7-10
11. தேவனுடைய கற்பனைகளை பின்பற்றி அவருடன் செய்து கொண்ட விசுவாச உடன்படிக்கையில் உறுதியோடு பொறு மையாக காத்திருப்பவர்கள் மிருகத்தின் முத்திரையை தங்கள் நெற்றி யிலும் வலது கையில் தரித்துக் கொள்ளாலும், மிருகத்தின் சொரு பத்தை வணங்காமலும் இருந்து தங்களை காத்துக் கொள்ளுகிற வர்கள். Rev_14:9-13,
12. தேவனுடைய சத்தியமான வார்த்தைகள், இயேசு கிறிஸ் துவை பற்றிய சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்க தரிசன வசனங்களை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி சாத்தானை ஜெயிப்பவர் கள். Rev_12:7-12,
13. தேவனுடைய சத்தியமான வார்த்தைகள், இயேசு கிறிஸ் துவை பற்றிய சாட்சி ஆகிய இவைகளின் தீர்க்க தரிசன வசனங்களை பின்பற்றி 1.44.000 எண்ணிக்கையில் வருகிறவர்களுடன் வலுசர்ப்பம் 42 மாதம் யுத்தம் செய்தது. இந்த யுத்தத்தில் சிரச்சேதம் பன்னப்படு வது அல்லது மரணத்தை காணமல் உயிரோடு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவது, தங்கள் விசுவாசத்திற்கும் பொறுமைக் கும் ஏற்றபடி மாறுபடுகிறது. . Rev_12:13-17, Rev_13:7-10
14. தேவ வசனத்தின் நிமித்தமும் இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றிதினாலும் கொல்லப்பட்ட ஆத்துமாக்களை பலி பீடத்தின் கீழ் வந்து சேர்வார்கள். அவர்களுக்கு வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டு சிறிது காலம் இளைப்பாரிக் கொண்டு இருப்பார்கள். Rev_12:13-17, Rev_13:7-10
15. தேவ வசனத்தின் நிமித்தம் இயேசுகிறிஸ்துவின் சாட் சியை பின்பற்றி, மிருகத்தின் முத்திரையை தரித்துக் கொள்ளாமல் மரித்தவர்கள், அல்லது கொல்லப்பட்ட ஆத்துமாக்கள் முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைந்து கிறிஸ்துவுடன் ஆயிரம் வருடம் அரசாளுவார்கள். Rev_20:4-6,
2-0 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு /தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகளுக்கு ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்து ஆயத்தமாயிருக்கிறது.
2-1 கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி சீயோனுக்கு வருகிறார்கள்:-
தேவனுடைய முன் தீர்மானத்தின் படி தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுவதற்காக அழைக்கப்பட்ட அநேக கிறிஸ்தவர்களில், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஒரு சிலர் மட்டும்; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பாபிலோனாகிய கிறிஸ்தவ மதத்தின் தாறுமாறுகளின் ஆவிகளிடமிருந்து விடுதலையாக்கப்பட்டு, மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகளின் வரிசையில்: சீயோனாகிய தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்களுக்கும், எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களிடத்திற்கும் திரும்புகிறார்கள்.
Isa_2:2-6, Mic_4:1-4; Isa_4:1-6, Isa_52:4-11, Isa_48:20-22, Isa_66:7-9, Jer_50:8-10, Jer_51:6-14; Jer_51:45-50, Mic_4:10;Zec_2:7-13,Rev_18:1-6,
2-2 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு /தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகளுக்கு ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்து ஆயத்தமாயிருக்கிறது:-
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் மணவாட்டி சபையாக தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் ஒரு சிலர் மட்டும்; உண்மையுள்ளவர்கள் வரிசைக்கு முன்னேறி வந்துசேர்ந்து; ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தை புசிக்கிறார்கள்./ கிறிஸ்துவின் இரகசிய வருகையில் மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்; இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, இராஜாவாக முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாவில் கலந்துகொண்டு: தேவனுடைய சத்தியமான வசனங்களை இருதயத்திலும் அறிவிலும் விருந்தாக புசிக்கிறார்கள்.
Rev_19:7-9, Rev_3:20-21, Mat_22:2-4, Luk_12:32-40, Luk_14:7-11, Luk_14:12-14; Luk_14:15-22; Luk_14:23-24, Est_1:4-8, Est_1:9-12, Isa_65:13-16, Isa_25:6-9, Pro_9:1-6,
2-3 பரிசுத்த ஸ்தலத்தில் / தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிறபாழாக்குகிற அருவருப்பிற்கு /தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் தன்னை ஆயத்தம் பண்ணிக்கொள்ளுவதற்காக சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது:-
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்: கீழே குறிப்பிட்ட மூன்று அசுத்த ஆவிகளிடமிருந்து விலகியிருந்து : தன்னுடைய நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு தனக்கு உடுத்திக்கொள்வதற்கு வெண் வஸ்திரங்களை தேவனிடத்திலே வாங்கிக்கொண்டு; தன் அவமானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவர்கள் பாக்கியவான்கள்.
(வலுசர்ப்பம்/, மிருகம்/, கள்ளத்தீர்க்கதரிசி ஆகிய மூன்று பேர்களூடைய வாயிலுமிருந்து புறப்பட்டு வருகிற தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்.)
இப்படி தேவனிடத்திலே வெண்வஸ்திரங்களை வாங்கிக்கொண்டு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவர்கள் கிறிஸ்துவின் சிங்காசனத்திலிருந்து ஆட்சி அதிகாரங்களை பரிசாக பெற்றுக்கொள்ளுவதற்காக: அழைக்கப்பட்டவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் உண்மையுள்ளவர்கள், ஆகிய மூன்று நிலைகளில் உறுதியாக நிலைத்திருக்கிறார்கள்;
இவர்கள் பரிசுத்தவான்களுடைய நீதியின் கிரியைகளையே, தங்களுடைய நீதியின் வஸ்திரமாக தரித்துக்கொண்டு பூரண புருஷனாகிய கிறிஸ்துவிற்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல தங்களை ஆயத்தம்பண்ணிக்கொள்ளுகிறார்கள்
Rev_19:7-8, Rev_3:4-5, Rev_3:18, Isa_61:10, Zec_3:3-4, Mat_22:11-14, Mat_7:21-23, Luk_13:23-27; Psa_45:13-14; Rev_13:8-10, Rev_14:9-12, Rev_16:12-15, Rev_17:13-14, Rev_17:8, Rev_22:14-16, 2Ch_18:18-22; Eze_14:9;
2-4 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு/ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்; தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் /அறிவில் ஏற்றுக்கொள்ளுகிறார்கள்:-
எருசலேம் நகரம்/ தேவனுடைய நாமத்தை தரித்திருக்கிற கிறிஸ்தவர்கள் மத்தியில் செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடுகிறபோது: கீழே விவரிக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன்குமாரத்திகள்; தங்கள் நெற்றிகளில் /அறிவில் ஏற்றுக் கொள்ளுகிறார்கள்
இவர்கள் 1,44,000. வரிசையில் வந்து தேவனுடைய நியாயத் தீர்ப்பை நிறைவேற்றுகிற ஆண் பிள்ளைகளாக முத்திரை போட்டு பிரித்தெடுக்கப்படுகிறார்கள். மற்றும் இந்த தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை பெற்றுக் கொள்ளாதவர்களின் தேவனுடைய இரட்சிப்பு மரணமடைகிறது
1 புறஜாதிகளின் எந்த முறைகளையும் பின்பற்றக் கூடாது.
2 பலிபீடத்தின் பிரமாணங்களை பின்பற்றி நடக்க வேண்டும்.
3 கர்த்தருடைய பஸ்கா விருத்தை புசிக்க வேண்டும்.
4 ஓய்வு நாளை பரிசுசுத்தமாக ஆசரிக்க வேண்டும்.
5 மனச்சாட்சியின் பிரமாணத்திற்கு கீழ்படிய வேண்டும்.
6 இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றி நடக்க வேண்டும்.
7 பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
Rev_14:1, Rev_7:3, Rev_9:4, Rev_7:3-4; Eze_9:4-10, Gen_4:11-15,1Co_3:16-17, 2Co_6:16, 1Pe_4:17-18, Jer_25:29, Isa_66:6, Luk_19:41-46 ,Jer_7:11-12, Amo_9:1,
கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். Eze 9:4
பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும், Eze 9:5
முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள், என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள். Eze 9:6
2-5 பரிசுத்த ஸ்தலத்தில் /தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு/ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் தேவ சுரமண்டலத்தில் சுரமண்டல இராகங்களை வாசித்து தேவனுடைய இரகசியங்களை கற்றுக்கொண்டு தேவனை துதிக்கிறார்கள்:-
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன்குமாரத்திகள், தேவன் தங்களுக்கு கொடுத்த இருதயமாகிய சுரமண்டலத்தில் தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்ட சுரமண்டலத்தின் ஏழு சுரங்களைப் போல வெளிப்படுகிறவைகளான
(1. தேவனுடைய வேதம். 2. தேவனுடைய வழிகள், 3. நீதிநியாயங்கள். 4. சாட்சிகள். 5. கட்டளைகள் 6. கற்பனைகள் 7.பிரமாணங்கள்) ஆகிய இவைகளுடன் உவமைகளாக உள்ள தேவனுடைய வார்த்தைகளை ஒப்பிட்டு சிந்தித்து தியானிக்கும்போது தேவனுடைய இரகசியங்களை கற்றுக்கொண்டு ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிக்கிறார்கள்
./கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள், தேவனுடைய வார்த்தைகளை தங்களுடைய இருதயத்தில் விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிக்கிறார்கள் .Psa_92:2-3, Psa_71:22, Job_30:31, Rev_5:8-10, Rev_15:2-4, Psa_78:2, Eze_20:49, Eze_17:2, Mar_4:10-12, Luk_8:10, Mat_13:10-15, Mat_13:34-35, Isa_6:8-10;, Rev_14:2-3, Psa_49:1-4; Psa_137:1-6; Psa_57:8, Job_30:31; Isa_16:11, Mat_13:11-13
2-6 பரிசுத்த ஸ்தலத்தில்/தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு/ தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் சியோனின் பாட்டாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் கற்றுக்கொண்டு பாடுகிறார்கள்:-
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசே, மற்றும் இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள் மற்றும், எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்கள்; ஆகியவைகளின் மூலம் வருகிற ஆசீர்வாதங்களை கற்றுக்கொண்டு பாடுகிறார்கள்.Psa_137:1-6;Rev_15:3, Rev_5:8-10, Rev_14:1-5,Rev_20:6, Rev_1:6, Deu_31:30
2-7 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு /தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் முன்மாரி, பின்மாரி மழையை பெற்றுக்கொள்ளுகிறார்கள்:-
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற கிறிஸ்துவின் மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள்; முன்மாரி மழையாகிய பரிசுத்த ஆவியையும், பின்மாரி மழையாகிய அபிஷேக ஆவியையும்; ஓய்வு நாள் பிரமாணத்தை பின்பற்றி எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களில் காத்திருந்து எலியாவின் ஆவியை பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
Act_1:4-8, Act_1:12-15, Act_2:1-4, Deu_11:14, Job_29:23, Pro_16:15, Jer_3:1-5, Jer_5:20-25, Hos_6:1-3, Joe_2:23, Zec_10:1-4, Jam_5:7-8; Joe_2:28-32, Mal_4:4-6,
2-8 பரிசுத்த ஸ்தலத்தில் /தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நிற்கிற பாழாக்குகிற அருவருப்பிற்கு /தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்திற்கு விலகியிருந்து; கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிறபோது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்:-
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் பங்கடைகிற மணவாட்டி சபையாகிய சீயோன் குமாரத்திகள் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற விசுவாச அளவுப்பிரமாணத்தின் ஊழிய அழைப்பை அறிந்துகொண்டு; தேவனுடைய கற்பனைகளையும் இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியையும் பின்பற்றி தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறபடியால் இரத்தசாட்சியாக மரித்து பலிபீடத்தின் கீழே வந்து சேருகிறார்கள். /எலியா தீர்க்கதரிசி மற்றும் ஏழாந்தலைமுறையான ஏனோக்கை போல நேரடியாக பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்.
சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும். ( Rev 13:10 )Rev_1:2, Rev_1:9, Rev_6:9, Rev_12:11, Rev_12:17; Rev_13:10, Rev_14:12, Rev_19:9-10 ;Rev_22:6-9, Rev_22:16, Rev_20:4,
1 வீட்டின் மேலிருப்பவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டு போக இறங்குகிறவன் கைவிடப்படுவான்.
2 அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டு பேரில் ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்.
3 திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக் கொள்ளப்படுவாள், மற்றவள் கை விடப்படுவாள்.
4 வயலிலிருக்கிற இரண்டு பேரில் ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். Mat_24:14-21; Mar_13:10-18; Luk_17:28-37, Gen_19:17, Gen_19:26; Mat_5:13-16, 2Pe_2:20-22; Rev_1:7,
3-0 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசியவருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபை குமாரத்திகளின் அடையாளங்கள்.
3-1 பரிசுத்த ஸ்தலத்தில் /தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்று கொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின் பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசியவருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபை குமாரத்திகள் விசுவாச உடன்படிக்கையில் நிலைத்திருக்காமல் தேவனுடைய சபையாகிய ஸ்திரீயை தீட்டுப்படுத்தி கறைப்படுத்துகிறார்கள்:-
இயேசுகிறிஸ்துவின் மூலம் தேவனுடைய இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும் போது செய்து கொண்ட கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் முடிவுவரை நிலைத்திருக்காமல், பாதியிலே மீறினபடியால்: கற்புள்ள கன்னிகை என்ற நல்ல பெயரை இழந்து, தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தினவர்கள் உடன்படிக்கையின் துரோகிகள்.
பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபை குமாரத்திகள் என்ற பெயரை பெற்று இவர்கள் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் மாயைகளையும் பொய்களையும் பின் தொடர்ந்து பரிசுத்த ஸ்தலத்தை/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தை பரிசுத்தக் குலைச்சலாக்கி, அன்றாட பலியாகிய மனந்திரும்புதலை முடிவுக்கு கொண்டு வந்து தேவனுடைய சபையாகிய ஸ்திரீயை தீட்டுப்படுத்தி கறைப்படுத்துகிறார்கள்
2Co_11:2-3, 2Th_2:1-12; Jer_2:20-25, Mat_25:1-4,Eph_4:30, Mal_2:15-16,Rev_14:4-5, Isa_4:1-6,
3-2 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்று கொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் விடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபை குமாரத்திகள் ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தை அசட்டை பண்ணி தங்களூடைய ஊழியங்களூக்கு போய்விட்டார்கள்:-
1 அநேகர் தன் வயலுக்கு/ ஊழியத்திற்கு போய்விட்டார்கள்
2 அநேகர் தன் வியாபாரத்துக்கு/ பொருளாசையை பின் தொடர்ந்து போய்விட்டார்கள்.
3 அநேகர் தேவனுடைய ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தினார்கள்.
4 அநேகர் தேவனுடைய ஊழியக்காரரைப் பிடித்து, கொலை செய்தார்கள்.
5 அநேகர் நான் ஒரு வயலை /ஊழியத்தைக் கொண்டேன், நான் அகத்தியமாய்ப் போய், அதைப்பார்க்க வேண்டும், என்றார்கள்.
6 அநேகர் நான் ஐந்தேர் மாடு/ ஐந்து வகையான ஊழியத்தைக் கொண்டேன், அதைச் சோதித்துப்பார்க்கப் போகிறேன், என்றார்கள்.
7 அநேகர் நான் பெண்ணை விவாகம் பண்ணினேன்/ சபையோடு உடன்படிக்கை பண்ணினேன் அதினால் நான் வரக்கூடாது என்றார்கள். Mat_22:2-9,Luk_14:15-22;Luk_14:23-24,Est_1:9-12,Isa_65:13-16,Pro_9:1-6,
3-3 பரிசுத்த ஸ்தலத்தில் /தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்று கொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபை குமாரத்திகள் கலியாண வஸ்திரமில்லாமல் தங்கள் சுயநீதியின் வஸ்திரம் தரித்து கலியாண விருந்தை புசித்தபடியால் புறம்பான இருளாகிய அறியாமையிலே தள்ளபடுகிறார்கள்:-
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண வஸ்திரமாகிய சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம்தரித்துக் கொள்ளாமல்; தங்கள் சுய நீதியின் வஸ்திரம் தரித்துக் கொண்டு தேவனுடைய சத்தியமான வசனங்களை, ஆட்டுக்குட்டியான வருடைய கலியாணவிருந்தாக இருதயத்திலும் அறிவிலும் புசிக்கிறவர்களை கையுங்காலும் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளாகிய அறியாமையிலே போடப்படுவார்கள்
Rev_19:7-8, Rev_3:4-5, Rev_3:18, Isa_61:10, Zec_3:3-4, Zep_1:8-9, Mat_22:11-14, Mat_7:21-23, Luk_13:23-27; Rev_16:12-15, Rev_17:13-14, Rev_17:8, Rev_22:14-16, 2Ch_18:18-22; Eze_14:9;
3-4 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்று கொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபை குமாரத்திகள்; மிருகமாகிய அந்திக் கிறிஸ்துவின் சொரூபத்தை வணங்கி தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறார்கள்:-
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் மணவாட்டி சபை குமாரத்திகள் தேவனுக்கும் மனிதனுக்கும் மந்தியில் அடையாளமாக கொடுக்கப்பட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றியில் /அறிவில் ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறபோது, அவர்களுடைய இரட்சிப்பு மரணமடைகிறது;
மேலும் பாபிலோன் மகா நகர வேசியின் சபை குமாரத்திகள் மிருகமாகிய அந்திக் கிறிஸ்துவின் சொரூபத்தை வணங்கிதங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவர்களுக்கு கிழே குறிப்பிட்ட தேவனுடைய கோபாக்கினைகள் பின் தொடரும்.
மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக்குடித்து, பரிசுத்ததூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். Rev_14:9-12,
3-5 பரிசுத்த ஸ்தலத்தில் /தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் சபை குமாரத்திகளின் வாதை மகா கொடிதாயிருந்த படியால். பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை:-.
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் சபை குமாரத்திகள் தேவ சுரமண்டலமாகிய இருதயத்தில் தேவசுரமண்டல இராகங்களை வாசித்து தேவனுடைய இரகசியங்களை கற்றுக்கொண்டு தேவனை துதிக்காமல்: மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவை பின் பற்றுகிறவர்களுக்கு கிழே குறிப்பிட்ட தேவனுடைய கோபாக்கினைகள் பின் தொடரும்
அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத்தரித்துக் கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது. தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான். Rev_14:9-12, .Rev_13:8-10
3-6 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்று கொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் சபை குமாரத்திகள்: தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்களுக்கு கீழ்படியாமல் இருக்கிறபோது வருகிற சாபங்கள் புலம்பலின் பாடலாக மாறுகிறது.
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் சபை குமாரத்திகள் சியோனின் பாட்டாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக் குட்டியானவருடைய பாட்டையும் கற்றுக்கொண்டு பாடதவர்களுக்கு; தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசே, மற்றும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள் மற்றும், எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்கள்; ஆகியவைகளின் மூலம் வருகிற சாபங்கள் புலம்பலின் பாடலாக இவர்களை பின்தொடரும் Lev_26:13-20, Deu_28:15-22
3-7 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்றுகொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் சபை குமாரத்திகள் பரிசுத்த ஆவியின் உடன்படிக்கையின் பிரமாணங்களுக்கு கீழ்படியாமல் இருக்கிறபோது தாறுமாறுகளின் ஆவிகளுக்கும் பைத்தியத்தின் ஆவிகளுக்கும் அடிமைப்பட்டு பரிகாசமும் நித்தையையும் அனுபவிக்கிறார்கள்.
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் சபை குமாரத்திகள் முன்மாரி மழையாகிய பரிசுத்த ஆவியையும், பின்மாரி மழையாகிய அபிஷேக ஆவியையும்; ஓய்வு நாள் பிரமாணத்தை பின்பற்றி எருசலேமாகிய கர்த்தருடைய வசனங்களிள் காத்திருந்து எலியாவின் ஆவியை பெற்றுக் கொள்ளாமல்: பரிசுத்த ஆவியின் உடன் படிக்கையை தள்ளி மீண்டும் பாவ மனிதனின் ஆவிக்கு அடிமைப் படுகிறவர்களுக்கு தேவனுடைய கோபாக்கினைகள் பின்தொடரும். Luk_17:30-33, Heb_6:4-8, Heb_10:26-27; Heb_10:28-31, Heb_12:15-17; 2Th_2:1-12; 2Pe_2:20-22
3-8 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்று கொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் சபை குமாரத்திகள்: பரிசுத்த ஆவியின் உடன்படிக்கையை முறித்து; மனிதனால் உருவாக்கப்பட்ட ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிறபோது தேவனுடைய கோபாக்கினைகள் பின்தொடருகிறது.
கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் சபை குமாரத்திகள் தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுக்கிற விசுவாச அளவுப்பிரமாணத்தின் ஊழிய அழைப்பை அறிந்து கொண்டு; தேவனுடைய கற்பனைகளையும் இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியையும் பின்பற்றி தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றாமல் மனிதனால் உருவாக்கப்பட்ட ஊழிய அழைப்பை நிறைவேற்றுகிறவர்களூக்கு கிழே குறிப்பிட்ட வசனங்களின்படி தேவனுடைய கோபாக்கினைகள் பின் தொடரும்
ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். Luk_17:30-33; Mat_24:18-21, Mat_7:21-27; Luk_13:22-30; Rev_21:6-8, Rev_22:10-19
3-9 பரிசுத்த ஸ்தலத்தில்/ தேவனுடைய ஆலயமாகிய இருதயத்தில் நின்று கொண்டிருந்து தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தை / பாழாக்குகிற அருவருப்பை பின்பற்றினபடியால் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் கைவிடப்பட்ட பாபிலோன் மகா நகர வேசியின் சபை குமாரத்திகள் பரலோக ராஜ்யத்தை திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்:-
அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகை தேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்
வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்
அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம் பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள் ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிற வர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள். அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார். Luk 13: 23-30
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (Mat 7:21-23)
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். Luk_13:23-30; Mat_7:21-23, Mat_25:1-12; Rev_22:10-16,Rev_21:6-8;
4-0 கிறிஸ்துவின் பகிரங்க வருகையில் எடுத்துக்கொள்ளப்படுகிறவர்கள்
கிறிஸ்துவின் பகிரங்க வருகையில் தேவனுடைய இராஜ்யத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிறவர்களுக்கு பல உதவிகளை செய்து மரணம் அடையாமல் இருக்கிறவர்கள்/கைவிடப்பட்டவர்கள் நேரடியாக இந்த பூமியில் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுகிறார்கள்:-
தேவனுடைய இராஜ்யத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிறவர்களுக்கு பசியாயிருந்தபோது போஜனம்/ தாகமாயிருந்தபோது தண்ணீர்/அந்நியனாயிருந்தபோது வீட்டில் சேர்த்துக்கொள்ளுதல்/ வஸ்திரமில்லாதிருந்தபோது வஸ்திரங்கொடுப்பது /வியாதியாயிருந்தபோது விசாரிப்பது/காவலிலிருந்தபோது பார்க்க வருவது/ ஆகிய உதவிகளை செய்கிறவர்கள்.
Mat 25:31 அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
Mat 25:32 அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
Mat 25:33 செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
Mat 25:34 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Mat 25:35 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
Mat 25:36 வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.
Mat 25:37 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?
Mat 25:38 எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்?
Mat 25:39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
Mat 25:40 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
Mat 10:40 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
Mat 10:41 தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
Mat 10:42 சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
5-0 கிறிஸ்துவின் பகிரங்க வருகையில் கைவிடப்படுகிறவர்கள்:-
கிறிஸ்துவின் பகிரங்க வருகையில் தேவனுடைய இராஜ்யத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிறவர்களுக்கு பல உதவிகளை செய்யாமல் மரணம் அடையாமல் இருக்கிறவர்கள்/கைவிடப்பட்டவர்கள் நேரடியாக நித்திய ஆக்கினைத்தீர்பை அடைவார்கள் :-
தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்கள் நெற்றிகளில் பெற்றுக்கொண்டு தேவனுடைய இராஜ்யத்தின் ஊழியத்தை நிறைவேற்றுகிறவர்களுக்கு பசியாயிருந்தபோது போஜனம்/ தாகமாயிருந்தபோது தண்ணீர்/அந்நியனாயிருந்தபோது வீட்டில் சேர்த்துக்கொள்ளுதல்/ வஸ்திரமில்லாதிருந்தபோது வஸ்திரங்கொடுப்பது /வியாதியாயிருந்தபோது விசாரிப்பது/காவலிலிருந்தபோது பார்க்க வருவது/ ஆகிய உதவிகளை செய்யாமல் இருக்கிறவர்கள் நித்திய ஆக்கினைத்தீர்பை அடைவார்கள் .
Rev 1:7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
Mat 25:31 அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
Mat 25:32 அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
Mat 25:33 செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
Mat 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
Mat 25:42 பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;
Mat 25:43 அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.
Mat 25:44 அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
Mat 25:45 அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
Mat 25:46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.