தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 18


கிறிஸ்தவ மதத்தினால் போதிக்கப்பட்ட கற்பனைகள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்

கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளுக்கு; கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்

பொருளடக்கம் 1-0

கிறிஸ்தவ மதத்தின் ஏழுபலத்த /பெரிய சபைகளின் பிரிவினைகளையும் மார்க்க பேதங்களையும் பின்பற்றுகிற ஜனங்கள், ஜலத்தினால்/ தேவனுடைய வார்த்தைகளினால் மறுபடியும்  பிறந்து மனந்திரும்பாமல்;

தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்துகொண்டு: அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து பேசும்போது , தங்களுடைய மாயக்காரனுடைய ஆத்துமா வளச்சியடைய, மனுஷரால் போதிக்கப்பட்ட சபையின் மூல உபதேச வசனங்கள்/ கலப்படமான ஞானப்பால்.

1-0          இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கைசெய்தல்.

2-0       பாவமன்னிப்பிற்கு தேவனுடைய  இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல்.

3-0       ஜலத்தினால் ஞானஸ்நானம்  பெற்றுக்கொள்ளுதல்.

4-0       பரிசுத்த ஆவிக்காக காத்திருந்து அந்நிய பாஷையைப்       பெற்றுக்கொள்ளுதல்.

5-0       சபை ஐக்கியத்தி்ல்             கலந்து கொள்ளுதல்.

6-0       காணிக்கை,தசமபாகம் செலுத்துதல்

7-0         பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுதல்.

8-0       தேவனுடைய ஊழியத்தில் பங்கு பெறுதல்.

1-0 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி ; இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கைசெய்தல் v/s     கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்கள்:-

1-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கைசெய்தல்:-

1-2  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்களை பின்பற்றி;  இயேசு கிறிஸ்துவின் நாமத்தை  அறிக்கைசெய்தல்:-

1-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கைசெய்தல்:-

தேவனுடைய வார்த்தைகளினால் ஆவி,ஆத்துமாவில் மறுபடியும்  பிறந்து மனந்திரும்பாமல்; தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்துகொண்டு, அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கைசெய்தல்.

இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; Mat 15:8 

மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார். Mat 15:9 

Rom_10:9-10,  Mar_10:52, Luk_8:48, Luk_8:50, Luk_17:19, Act_16:30-31 ,Eph_2:8, Joh_1:12-13, Rom_4:5, Rom_3:24, 1Jo_5:10-12

1-2  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்களை பின்பற்றி;  இயேசு கிறிஸ்துவின் நாமத்தை  அறிக்கைசெய்தல்:-

தேவனுடைய வார்த்தைகளினால் ஆவி,ஆத்துமாவில் மறுபடியும்  பிறந்து / மனந்திரும்பி; தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களை தங்களுடைய இருதயத்திற்கும்  வாய்க்கும் சமீபமாக வைத்திருந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தை  அறிக்கைசெய்தல்.

விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்?

அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி;

இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். (ரோமர் 10:6-11)

Rom_10:6-11, Deu_30:11-14; Tit_1:16,2Ti_2:15-19;Hos_8:2-3; Isa_29:13;Isa_48:1-2; Eze_33:31; Mat_15:8-9; Mar_7:6;   Jer_12:1-3Psa_73:1-8, Psa_73:9-17, Psa_73:18-20,

               

 


Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries