தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 18


கிறிஸ்தவ மதத்தினால் போதிக்கப்பட்ட கற்பனைகள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்

கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளுக்கு; கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 7-0

7-0 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி ; பரிசுத்த பந்தியில் கலந்து கொண்டு, கிறிஸ்துவை நினைவுகூர்தல் v/s கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்கள்:-

7-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுகிறபோது, கர்த்தர் வருமளவும் கிறிஸ்துவின் மரணத்தைத் நினைவுகூர்ந்து, தங்களுடைய ஆவி,ஆத்துமாவின்  மரணத்தைத்   தெரிவிக்கிறார்கள்:- 

7-2  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுகிறபோது, கர்த்தர் வருமளவும் கிறிஸ்துவின் உயிர்தெழுதலை  நினைவுகூர்ந்து தங்களுடைய ஆவி,ஆத்துமாவின்  உயிர்தெழுதலை  தெரிவிக்கிறார்கள்:-

7-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுகிறபோது, கர்த்தர் வருமளவும் கிறிஸ்துவின் மரணத்தைத் நினைவுகூர்ந்து, தங்களுடைய ஆவி,ஆத்துமாவின்  மரணத்தைத்   தெரிவிக்கிறார்கள்:- 

1Co 11:17  உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளைகொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறதே.

1Co 11:18  முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.

1Co 11:19  உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.

1Co 11:20  நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன் தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான்.

1Co 11:21  இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே.

1Co 11:22  புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.

1Co 11:23  நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,

1Co 11:24  ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

1Co 11:25  போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

1Co 11:26  ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

1Co 11:27  இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.

1Co 11:28  எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.

1Co 11:29  என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.

1Co 11:30  இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.

1Co 11:31  நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.

1Co 11:32  நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.

1Co 11:33  ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.

1Co 11:34  நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.

1Co_11:17-22, 1Co_10:71Co_11:28-32,1Co_11:33-37;1Co_11:23-271Co_3:1-4;1Ti_6:3-6; 2Ti_2:15-19; 1Jo_5:16-18, Jud_1:11-13,Hos_13:12-16;

7-2  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுகிறபோது, கர்த்தர் வருமளவும் கிறிஸ்துவின் உயிர்தெழுதலை  நினைவுகூர்ந்து தங்களுடைய ஆவி,ஆத்துமாவின்  உயிர்தெழுதலை  தெரிவிக்கிறார்கள்:-

1Co 5:6  நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?

1Co 5:7  ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.

1Co 5:8  ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.

Joh 6:53  அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Joh 6:54  என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.

Joh 6:55  என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.

Joh 6:56  என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.

Joh 6:57  ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.

Joh 6:58  வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.

Mat_26:26-32Luk_22:13-20;1Co_5:7-8; 1Co_11:23-25; 1Co_10:15-20, 1Co_10:21-24, Joh_6:53-58;


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries