11-0 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு :-
இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையின் முடிவு கிருபையினால் வெளிப்படாமல் கிரியைகளின் மூலம் வெளிப் படுத்தப்படுகிறது. Heb_12:2, Exo_19:5, 2Th_2:3-8, 2Ti_2:12, Rev_1:8, Rev_21:6, Rev_22:13,
11-1 கீழே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களால் இயேசு கிறிஸ்துவின் விசுவாச துரோகிகளின் மேல் தேவன் நியாயத்தீர்ப்பை அனுப்புகிறார். .Zec_11:5, Zec_11:8-10,2Ti_2:12, Mal_2:1-10, Pro_2:16-17,
11-2 கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை தங்கள் வாழ்க்கையின் முடிவு வரை காத்திருந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளாமல் பாதியிலே உடன்படிக்கையை முறித்தபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு. Mat_10:22 Mat_24:13, Mar_13:13, Rev_2:26,
11-3 சத்தியத்தின் மேல் உள்ள அன்பை அங்கீகரித்து தங்களுடைய விசுவாச உடன்படிக்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையும் காத்துக்கொள்ளாமல் போனபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு . .2Th_2:9-10, Dan_8:11-12,
11-4 அக்கிரமத்தின் மிகுதியினால் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகருடைய அன்பு தணிந்து விசுவாசத்தை இழந்து போனபடியால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு Mat_24:12,
11-5 இயேசு கிறிஸ்துவின் மூலம் விசுவாச உடன்படிக்கை செய்த நாளில் மரணமடைந்த கேட்டின் மகனாகிய பாவ மனிதன்; மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு பாவ கிரியைகளின் மூலம் வெளிப்படும்போது அவனுடைய விசுவாச உடன்படிக்கை அவனால் முறிக்கப்படுகிறது. . Rom_6:2-11, Rom_8:9-14, Col_2:11-12, 2Th_2:3, Eph_4:22-24,
11-6 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை நிலை நிறுத்துகிற பரிசுத்த ஆவி தேவனால் நீக்கப்படும்போது; தேவன் அந்த ஜனங்களுடன் செய்த உடன்படிக்கையை முறித்துப் போடுகிறார். Zec_11:5, Zec_11:8-10,2Ti_2:12,
11-7 தேவனுடைய வசனத்தின் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு இரட்சிப்படைய விரும்பாதபடியால் பொய்யை விசுவாசிக்கும்படி பரிசுத்த ஆவிக்கு பதிலாக வஞ்சக ஆவியை தேவன் அவர்களுக்குள்ளே நியாயத்தீர்ப்பாக அனுப்புகிறார். 2Th_2:11-12, 1Sa_16:14, 1Sa_16:16, 1Sa_16:23,
11-8 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையை முறித்த விசுவாச துரோகிகள், கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர்கள், அந்திக்கிறிஸ்துக்கள் ஆகியவர்களிடம் வெளிப்படுகிற வஞ்சிக்கிற ஆவிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
உங்களது ஆவிக்குரிய மனிதன் உங்கள் மூலம் வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையாயிருங்கள் Psa_49:20 , Pro_19:2-3, Hos_4:6, Isa_5:13, Isa_55:1-2, 1Co_3:18, Gal_6:3-4, Col_2:4, Col_2:18-19, 1Th_4:4-8, Heb_3:12-14, Eph_4:14-16, Pro_23:29-33, Eze_33:13,
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)