12-0 இயேசு கிறிஸ்துவின் விசுவாச உடன்படிக்கையில் இடறினபடியால் வேதம் எல்லாரையும் ஏகமாய் பாவம், ஆவி, ஆத்துமாவின் மரணம், மற்றும் மாயையின் கீழ் காவலில் வைத்திருக்கிறது.
12-1 கிறிஸ்துவின் விசுவாசத்தினால் வருகிற நீதிப்பிர மாணத்தை, கிறிஸ்துவின் விசுவாசத்தை பின்பற்றுகிறவர்களுக்கு அளிக்கும்படி, வேதம் எல்லாரையும் ஏகமாய் பாவத்தின் கீழ் அடைத்து போட்டு நியாயப்பிரமாணத்தின் கீழ் காவலில் வைத் திருக்கிறது. Gal_3:22-23, Rom_7:14-25,
12-2 நியாயப்பிரமாணத்தை கிறிஸ்து நிறைவேற்று கிறபடியால் நியாயப்பிரமாண நீதியானது, பாவத்தின் கீழ் அடைக்கப் பட்டு நியாயப்பிரமாணத்தின் கீழ் காவல் பண்ணப்பட்டிருந்த நம்மை விடுதலையாக்கி, கிறிஸ்துவின் விசுவாசத்தினால் வருகிற நீதிப்பிர மாணத்திற்கு வழி நடத்துகிற பள்ளி ஆசிரியராக இருக்கிறது. Rom_8:1-4, Rom_8:5-11, Eph_2:1-5, Gal_3:10-13, Rom_5:17-21,
12-3 நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவின் விசுவாசத் தினால் வருகிற நீதிப்பிரமாணத்திற்கு வழி நடத்துகிற பள்ளி ஆசிரியராக இருக்கிறது. Gal_3:24, Heb_10:1-9, Heb_9:8-12, Rom_5:12-13,
12-4 நியாயப்பிரமாணத்தை கிறிஸ்து நிறைவேற்றுகிற படியால், நியாயப்பிரமாண நீதியின் மூலம் கிடைக்கிற ஆவி, ஆத்துமாவின் இரட்சிப்பு; நம்மை கிறிஸ்துவின் விசுவாச நீதியினால் வருகிற தேவனுடைய ரூபமும் சாயலுமான சரீர இரட்சிப்பிற்கு வழி நடத்துகிற பள்ளி ஆசிரியராக இருந்து வழி நடத்துகிறது.
12-5 நீதிப்பிரமாணத்தை பின்பற்றுகிற சந்ததி வரும் வரை, வேதம் எல்லாரையும் ஏகமாய் மாயையின் காவலின் கீழ் வைத்திருக்கிறது :-
கிறிஸ்துவின் விசுவாச நீதிப்பிரமாணத்தின் மூலம் வருகிற, சரீர மீட்பாகிய தேவனுடைய புத்திர சுவிகார மகிமையின் சுயாதீனத்தை பெற்றுக் கொள்ளுகிறவர்களுக்கு அளிக்கும் படியாக; வேதம் எல்லாரையும் ஏகமாய் பொய்யின் கீழ் அடைக்கலமாக்கி மாயையின் மறைவிடத்தின் கீழ், காவலில் வைத்திருக்கிறது. . Rom_8:19-23, 2Co_5:1-10, Isa_28:14-15, Isa_5:18-25, Isa_8:5-15, Isa_7:1-9, Isa_30:27-28,
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)