தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.

புஸ்தகம் 20

முதலாம் உடன்படிக்கை V/S இரண்டாம் உடன்படிக்கை

பொருளடக்கம் 1-0

1-0 தேவனாகிய கர்த்தர், கிழே குறிப்பிட்ட சில மூல காரணங்களினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு; வெளிப்படுத்தப்படுகிறது.

1-1 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் தமக்கு சொந்தமான ஜனங்களை பிரித்தெடுப்பதற்கான வழிமுறைகளை,  தேவன் ஜனங்களுக்கு  வெளிப்படுத்தவில்லை:-

1-2 யேகோவா என்னும் என் நாமத்தினால் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களை பிரித்தெடுப்பதற்காக வழிமுறைகள் ஜனங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது:-

1-3 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றுகிறவர்களின், விக்கிரக ஆராதனை குற்றமாகவோ, பாவமாகவோ, தேவனால் அறிவிக்கப்படவில்லை:-  

1-4  சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றி, தேவனை பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தேவன் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணுகிறார்:-

1-5 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றி, தேவனை பற்றி உத்தம இருதயத்தோடு இல்லாதவர்கள், மனிதர்களால் உருவாக்கப்பட்ட தேவர்களையும் ஆராதனை செய்துகொண்டிருக்கிறார்கள்:-

1-6 தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி கிறிஸ்து வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது:-

1-7 ஆபிரகாமின்  சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை  சுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாக  பிரித்தெடுக்கிறார்:-

1-8 தேவனாகிய கர்த்தர், தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: கட்டளையிட்டவைகளையும்,   கட்டளையிடாதவைகளையும்  கலந்து பின்பற்றுகிறவர்களை தேவன் புறஜாதிகளாக பிரித்தெடுக்கிறார்:- 

1-1 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் தமக்கு சொந்தமான ஜனங்களை பிரித்தெடுப்பதற்கான வழிமுறைகளை,  தேவன் ஜனங்களுக்கு  வெளிப்படுத்தவில்லை:-

ஆதாம் முதல் மோசே வரைக்கும்; உள்ள சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்கள் வரையுள்ள காலத்தில் சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் முற்பிதாக்களுக்கு வெளிப்பட்ட நாட்களில்; தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும், கட்டளையிட்டு, அவைகளினால் தமக்கு சொந்தமான ஜனங்களை பிரித்தெடுப்பதற்கான வழிமுறைகளை,  தேவன் ஜனங்களுக்கு  வெளிப்படுத்தவில்லை.

1-2 யேகோவா என்னும் என் நாமத்தினால் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களை பிரித்தெடுப்பதற்காக வழிமுறைகள் ஜனங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது:-

தேவனாகிய கர்த்தர், தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், யேகோவா என்னும் என் நாமத்தினால் வெளிப்பட்டு முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும், கட்டளையிட்டு அவைகளினால் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களை பிரித்தெடுப்பதற்காக வழிமுறைகள் ஜனங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.

1-3 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றுகிறவர்களின், விக்கிரக ஆராதனை குற்றமாகவோ, பாவமாகவோ, தேவனால் அறிவிக்கப்படவில்லை:-  

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நம்முடைய முற்பிதாக்களுக்கு அறியப்பட்ட நாட்களில், தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும், தேவனால்  மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்படாத காலத்தில்:

மனிதனுடைய மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றி, தங்களுடைய விசுவாசத்தினால் உருவாக்கப்பட்ட ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும் கலந்து; ஜனங்கள் தங்கள் விருப்பத்திற் கேற்றபடி ஒரு மனிதனாகவோ / ஒரு குடும்பமாகவோ /

ஒரு வம்சமாகவோ / ஒரு குலமாகவோ / ஒரு கோத்திரமாகவோ  தேவனை  ஆராதனை செய்து கொண்டிருந்தார்கள். இப்படி மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றுகிற இந்த நாட்களில், விக்கிரக ஆராதனை குற்றமாகவோ, பாவமாகவோ, தேவனால் அறிவிக்கப்படவில்லை.  

1-4  சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றி, தேவனை பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தேவன் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணுகிறார்:-

தேவனை பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியுல்லவர்களாக இருக்கிறவர்கள்;

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றுகிற இந்த நாட்களில், நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் பரலோகத்தில் உள்ளவைகளுக்கு  வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்கு  மாறக்கூடிய ஒரு சில ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும் தன்னுடைய விசுவாசத்தினால் தேர்ந்தெடுத்து அவைகளை நிதானித்து, பகுத்தறிந்து கொண்டு,

நேரடியாகவும், நிழலாட்டமாகவும் தேவனுக்கு ஆராதனையாக செலுத்தினபடியால் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: ஆபிரகாமின் மூலமாக ஆபிரகாமின் சந்ததிகளுக்கு வாக்குத்தத்தத்தையும் உடன்படிக்கையையும் ஏற்படுத்துகிறார்.  Heb_6:13, Heb_6:16-18; Gen_14:18-20,Gen_22:15-18;   Heb_7:1-5, Heb_7:6-10 ,  Heb_11:8,

1-5 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றி, தேவனை பற்றி உத்தம இருதயத்தோடு இல்லாதவர்கள், மனிதர்களால் உருவாக்கப்பட்ட தேவர்களையும் ஆராதனை செய்துகொண்டிருக்கிறார்கள்:-

தேவனை பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவர்களாக இருக்கிறவர்கள்;

மனசாட்சி பிரமாணத்தை பின்பற்றுகிற இந்த நாட்களில், மனிதனுடைய விசுவாசத்தினால் உருவாக்கப்பட்ட ஆசரிப்பு முறைகளையும், ஆராதனை முறைகளையும் பின்பற்றுகிறவர்கள்:

அவைகளின் நிழலாட்டமானவைகளிலிருந்து பரலோகத்தில் உள்ளவைகளுக்கு  வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்கு  மாறக்கூடாதவைகளை நிதானித்து, பகுத்தறிந்து கொள்ளாமல்  ஆராதனையாக செலுத்துகிறவர்கள் மனிதர்களையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தேவர்களையும் ஆராதனை செய்துகொண்டிருக்கிறார்கள்

1-6 தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி கிறிஸ்து வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது:-

Gal 3:19  அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.

Gal 3:20  மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர்.

Gal 3:21  அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

Gal 3:22  அப்படியிராதபடியால், இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.

Gal_3:15-20; Gal_3:21-24; Rom_5:12-14;

1-7 ஆபிரகாமின்  சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை  சுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாக  பிரித்தெடுக்கிறார்:-

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நம்முடைய முற்பிதாக்களுக்கு அறியப்பட்ட நாட்களில், ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் நானூற்று முப்பது வருஷத்திற்குப் பின்பு வருகிறபோது;

தேவனாகிய கர்த்தர், யேகோவா என்னும்  நாமத்தினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: ஆபிரகாமின் சந்ததிகளுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தையும் உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்காக,

பரலோகத்தில் உள்ளவைகளுகு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்கு  மாறக்கூடியவைகளாக இருக்கிற நிழலாட்டமான தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும், கட்டளைகளாக வெளிப்படுத்தப்படுகிறதின் மூலம்  ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரித்து கொள்ளுவதற்காக ஜீவப்பிரமாணங்களை கொடுத்தார்.

இவைகளுடன் ஆதாமின் மீறுதலினால், ஆதாம் முதல் மோசே வரைக்கும்;  பாவஞ்செய்யாதவர்களையும் மரணமானது ஆண்டுகொண்டிருந்த படியால், முதலாம் உடண்படிக்கையின் மூலம் பாவிகளுக்கு நியாயப்பிரமாணம்  கொடுக்கப்பட்டு: அவைகளின் நன்மை தீமைகள் மூலம், பாவம் செய்கிறவர்களுக்கு  மரணத்தை   ஆளுகை செய்யும் வல்லமைகள்   கணக்கிடப்பட்டு, நியத்தீர்ப்புகள்  கொடுக்கப்பட்டது.

ஆகையால் இதுமுதற்கொண்டு இவைகளை பின்பற்றி நிதானித்து, பகுத்தறிந்து கொண்டு இவைகளின் மூலம் தேவனுக்கு ஆராதனையை செலுத்துகிறவர்களை தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாக  பிரித்தெடுக்கிறார்

 Act_7:17,Eze_20:23-25,1Ti_1:9-11; Act_7:38, Deu_33:2;  Deu_4:13-14; Deu_5:28-33;

Deu_6:1-2; Rom_9:30-33;

1-8 தேவனாகிய கர்த்தர், தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: கட்டளையிட்டவைகளையும்,   கட்டளையிடாதவைகளையும்  கலந்து பின்பற்றுகிறவர்களை தேவன் புறஜாதிகளாக பிரித்தெடுக்கிறார்:- 

தேவனாகிய கர்த்தர், தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: தேவன் கட்டளையிடாத  ஆசரிப்பு முறைகளையும்,  ஆராதனை முறைகளையும், பின்பற்றுகிறவர்கள் அவைகளின் நிழலாட்டமானவைகளிலிருந்து பரலோகத்தில் உள்ளவைகளுக்கு  வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்கு  மாறக்கூடாதவைகளை நிதானித்து, 

பகுத்தறிந்து கொள்ளாமல் ஆராதனை செய்கிறவர்கள் மனிதர்களையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட தேவர்களையும் ஆராதனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆகையால் இதுமுதற்கொண்டு இவர்களை தேவன் புறஜாதிகளாக பிரித்தெடுக்கிறார். 

Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries