தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.


புஸ்தகம் 20


முதலாம் உடன்படிக்கை V/S இரண்டாம் உடன்படிக்கை

பொருளடக்கம் 2-0

2-0 முதலாம் உடன்படிக்கையின் பழைய ஏற்பாடு V/S இரண்டாம் உடன்படிக்கையின் புதிய ஏற்பாடு

2-1 முதலாம் உடன்படிக்கையின் மூலம்  செய்யப்படும்  ஆராதனைக்கேற்ற வழிமுறைகள்,  பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருந்து; பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமாக  இருந்தது:-

முதலாம் உடன்படிக்கையின் முதலாங்கூடாரம் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமாக  இருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியை, ஆவி, ஆத்துமாவில் மரணத்தை உருவாக்கும்,  செத்தக் கிரியைகள் இல்லாமல் சுத்திகரித்து எப்பொழுதும் பூரணப்படுத்தக்கூடாதவைகள். Heb_8:1-8, Heb_9:1-7, Heb_9:8-15, Heb_10:1-6,

Heb 9:1  அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது.

Heb 8:4  பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே;

Heb 8:5  இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப் போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.

Heb 8:6  இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.

Heb 8:7  அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே.

2-2 இரண்டாம் உடன்படிக்கையின் மூலம்  செய்யப்படும்  ஆராதனைக்கேற்ற வழிமுறைகள்,  பரலோகத்தில் உள்ளவைகளுக்கு    வரப்போகிற உன்மையான நன்மைகளூக்குரிய , நேரடியான பொருளாக இருந்து, பரலோகத்திற்குரிய பரிசுத்த ஸ்தலமாக  இருக்கிறது:-

Heb 9:22  நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.

Heb 9:23  ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.

Heb 9:24  அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார். Heb_8:1-8, Heb_9:1-7, Heb_9:8-15, Heb_9:16-24, Heb_10:1-6, Heb_10:19-25;

2-3 முதலாம் உடன்படிக்கை, பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம்  இருக்கிறபடியால், ஆவி, ஆத்துமாவில் மரணத்தை உருவாக்கும்,  செத்தக் கிரியைகள் இல்லாமல் மனச்சாட்சியை, சுத்திகரித்து எப்பொழுதும் பூரணப்படுத்தமாட்டாது.:-  

முதலாம் உடன்படிக்கையின் மூலம்  செய்யப்படும்  ஆராதனைக்கேற்ற வழிமுறைகள்,  பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம்  இருக்கிறபடியால்,

அவைகளை பழுதுள்ள  மிருக பலிகளினாலே செலுத்த வருகிறவர்கள் / தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட இரத்தமும், கடாரியின் சாம்பலும், பூமியில் உருவாக்கப்பட்ட சரீரத்தை சுத்திகரிப்பு உண்டாகும்படி பரிசுத்தப்படுத்துகிறது:

ஆனால் அவைகள் பரலோகத்தில் இருந்து தேவனால் பூமிக்கு அனுப்பின ஆவி, ஆத்துமாவில், மரணத்தை உருவாக்குகிற   செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதலையும் மனச்சாட்சியின்   சுத்திகரிப்பையும் எப்பொழுதும் பூரணப்படுத்தமாட்டாது.

Heb 10:1  இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.

Heb_8:1-8, Heb_9:1-7, Heb_9:8-15, Heb_9:16-24, Heb_10:1-6, Heb_10:19-25;

2-4 கிறிஸ்துவின் மூலம் இரண்டாம் உடன்படிக்கையினால்   செய்யப்படும்  ஆராதனைக்கேற்ற வழிமுறைகள், செத்தக் கிரியைகள் இல்லாமல் மனச்சாட்சியை, சுத்திகரித்து எப்பொழுதும் பூரணப்படுத்துகிறது:-

கிறிஸ்துவின் மூலம் இரண்டாம் உடன்படிக்கையினால்   செய்யப்படும்  ஆராதனைக்கேற்ற வழிமுறைகள்,  பரலோகத்திலுள்ளவைகளூக்கு  வரப்போகிற உன்மையான நன்மைகளுக்குரிய , நேரடியான பொருளாக இருக்கிறபடியால், ஆவி, ஆத்துமாவில் மரணத்தை உருவாக்கும்,  செத்தக் கிரியைகள் இல்லாமல் மனச்சாட்சியை, சுத்திகரித்து எப்பொழுதும் பூரணப்படுத்துகிறது

கிறிஸ்துவின் மூலம் இரண்டாம் உடன்படிக்கையினால்   செய்யப்படும்  ஆராதனைக்கேற்ற வழிமுறைகள்,  பரலோகத்திலுள்ளவைகளூக்கு  வரப்போகிற உன்மையான நன்மைகளுக்குரிய , நேரடியான பொருளாக இருக்கிறபடியால்,

தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் பழுதற்ற ஜீவபலியாக தேவனுக்குப் பிரியமுமானதாக ஒப்புக்கொடுக்கிறபோது;  கிறிஸ்துவின் மூலம்  பாவத்தை ஆக்கினைத்தீர்ப்பு செய்யும் வழிமுறைகள், ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு: பூமியில் உருவாக்கப்பட்ட சரீரத்தையும்,

பரலோகத்தில் இருந்து தேவனால் பூமிக்கு அனுப்பின ஆவி, ஆத்துமாவில், மரணத்தை உருவாக்குகிற   செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதலையும், மனச்சாட்சியின்  சுத்திகரிப்பையும், எப்பொழுதும் சுத்திகரிப்பு உண்டாகும்படி பரிசுத்தப்படுத்துகிறதினால் பூரணமாக்கப்படுத்துகிறது.

Heb 9:11  கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,

Heb 9:12  வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

Heb 9:13  அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,

Heb 9:14  நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

Heb 9:15  ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.

Heb_8:1-8, Heb_9:1-7, Heb_9:8-15, Heb_9:16-24, Heb_10:1-6, Heb_10:19-25;

2-5 முதலாம் கூடாரமாகிய சரீரத்தில்  ஆராதனை செய்கிறவர்களுக்கு; இரண்டாம் கூடாரமாகிய நம்முடைய இருதய  பலிபீடத்திற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் அதிகாரமில்லை:-

முதலாம் கூடாரமாகிய சரீரத்தில்  ஆராதனை செய்கிறவர்களுக்கு; இரண்டாம் கூடாரமாகிய நம்முடைய இருதய  பலிபீடத்திற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக்/ முதலாம் கூடாரமாகிய சரீரத்தில்  நடைமுறைப்படுத்துவதற்கு  அதிகாரமில்லை.

Rom 7:22  உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.

Rom 7:23  ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.

Rom 7:24  நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?

Rom 7:25  நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.

முதலாம் கூடாரமாகிய சரீரத்தை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறதினால், தேவனுக்குப் புத்தியுள்ள ஆராதனை செய்கிறவர்களுக்கு: தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடைகிறபோது;

நம்முடைய இரண்டாம் கூடாரமாகிய இருதய  பலிபீடத்திலிருந்து தேவனால் வெளிப்படுத்தப்படுகிறவைகளை, நம்முடைய முதலாம் கூடாரமாகிய சரீரத்தில்  நடைமுறைப்படுத்துவதற்கு,  நமக்கு தேவனால் அதிகாரம் கிடைக்கிறது.   

ஒருவனுடைய முதலாம் கூடாரமாகிய சரீரத்தை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறவர்கள், தங்களை பரிசுத்தஞ்செய்யும்படியாக, எல்லாருக்கும் முன்பாக பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.

ஆகையால், கிறிஸ்துவின் நிமித்தம் வரும்  நிந்தையைச் சுமந்து, தனியாக தேவனிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம். நிலையான நகரம் நமக்கு பூமியிலே இல்லை; பரலோகத்தில் உள்ளவைகளுக்கு வரப்போகிற உன்மையான நன்மைகளுக்குரிய , நேரடியான பொருளையே நாடித் தேடுகிறோம்.

Rom_8:1-8, Rom_8:9-15,Rom_7:22-25, Rom_12:1-8,Heb_13:8-14,

Rom 12:1  அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

Rom 12:2  நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

Rom 12:3  அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.

Rom 12:4  ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,

Rom 12:5  அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.

Heb 13:8  இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

Heb 13:9  பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.

Heb 13:10  நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.

Heb 13:11  ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும்.

Heb 13:12  அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.

Heb 13:13  ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்.

Heb 13:14  நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.

2-6 முதலாம் கூடாரம் நிற்குமளவும் இரண்டாம் கூடாரமாகிய  பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்:-

முதலாம் உடன்படிக்கையின் முதலாம் கூடாரம் நிற்குமளவும், இரண்டாம் உடன்படிக்கையின் இரண்டாம் கூடாரமாகிய  பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.

ஏனென்றால், மலையின் மேல்  யார்?  முதலாம் உடன்படிக்கையின்  நியாயப்பிரமாணத்தின்படி, பரலோகத்திலுள்ளவைகளூக்கு சாயலானவைகளையும், நிழலாட்டமானவைகளையும்,  ஒப்பானவைகளின் மூலம்  இரத்தஞ்சிந்துதலினாலே சுத்திகரிக்கப்படும் வழிமுறைகளினால்:  பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் எழுதிக்கொடுத்தாரோ,

அவரே, மலையின் மேல்  அவைகளை நடைமுறைப்படுத்தி, பரலோகத்திலுள்ளவைகளூக்கு  வரப்போகிற உன்மையான நன்மைகளுக்குரிய   நேரடியான பொருளாகிய சத்தியங்களை நிருபித்து வெளிப்படுத்தும் வரை, அவர் எழுதிக்கொடுத்த முதலாம் உடன்படிக்கையின்  நியாயப்பிரமாணத்திற்கு பெலன் இல்லை.

Heb_9:8-15, Heb_9:16-24,

Heb 9:8  அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.

Heb 9:9  அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.

Heb 9:10  இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.

2-7 இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின்  நீதியை  நிறைவேற்றுகிறபடியால் இரண்டாம் உடன்படிக்கையின் மூலம்  , இரண்டாம் கூடாரமாகிய  பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்:-

தேவனுக்கும் மோசேக்கும் மத்தியில், முதலாம் உடன்படிக்கையை ஏற்படுத்தினவர், தேவனால் ஆபிரகாமிற்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்காக:   நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு,

தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.

இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின்  நீதியை  நிறைவேற்றுகிறபடியால் இரண்டாம் உடன்படிக்கையின் மூலம்  , இரண்டாம் கூடாரமாகிய  பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.

இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின்படி, பரலோகத்திலுள்ளவைகளூக்கு சாயலானவைகளையும், நிழலாட்டமானவைகளையும்,  இரத்தஞ்சிந்துதலினாலே சுத்திகரிக்கப்படும் வழிமுறைகளினால்:  பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும்,

கொல்கோதா, மலையின் மேல்  தன்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை  குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவைகளை நிறைவேற்றி, பரலோகத்திலுள்ளவைகளூக்கு  வரப்போகிற உன்மையான நன்மைகளுக்குரிய   நேரடியான பொருளாகிய சத்தியங்களை நிருபித்து வெளிப்படுத்தினபடியால்

முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் ஆபிரகாமிற்கு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.

Heb_9:8-15, Heb_9:16-24,Rom_7:22-25, Rom_8:1-8, Rom_8:9-15,

2-8 முதலாம் ஆதாமின் பாவம் V/S இரண்டாம் ஆதாமின் நீதி:-

மரணத்தின் கூர் பாவம்,  பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்:  அது போல நித்திய ஜீவனின் கூர் தேவ நீதி. தேவ நீதியின் பெலன் கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின்பிரமாணம்.

நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; அது போல கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் தேவ நீதி உலகத்திலிருந்தது.

நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் செத்ததாயிருக்குமே, மேலும் மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது: அது போல கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின்பிரமாணம் இல்லாதிருந்தால் தேவ நீதி  செத்ததாயிருக்குமே. மேலும், தேவ நீதி பெருகும்படிக்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின்பிரமாணம், கிறிஸ்துவின் மூலமாக நேரடியாக வெளிப்பட்டது.  

கீழே குறிப்பிட்ட வேத வசனங்களில் பாவம் என்று எழுதியிருக்கிற இடத்தில், தேவ நீதி என்றும்   நியாயப்பிரமாணம் என்று எழுதியிருக்கிற இடத்தில், கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின்பிரமாணம் என்றும்; ஒப்பிட்டு தியானிக்கும்போது தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

Rom 7:8  பாவமானது கற்பனையினாலே சமயம் பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.

Rom 7:9  முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.

Rom 7:10  இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன்.

Rom 7:11  பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.

2-9 முதலாம் ஆதாமின் பாவம் V/S இரண்டாம் ஆதாமின் நீதி:-

ஒரு மனுஷனுடைய ஒரு கீழ்ப்படியாமையினாலே வந்த மீறுதலின்  ஒரே குற்றத்தினிமித்தம்; அநேகர் பாவிகளாக்கப்பட்டு, எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல,

ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே வந்த ஒரே நீதியினால் எல்லா மனுஷருக்கும் அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்குகிறபடியால் நித்திய ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

Rom 5:10  நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

Rom 5:11  அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.

Rom 5:12  இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

2-10 முதலாம் ஆதாமின் மீறுதலினால், முதலாம் உடன்படிக்கையின் மூலம் பாவிகளுக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது:-

ஆதாமின் மீறுதலினால், ஆதாம் முதல் மோசே வரைக்கும்;  பாவஞ்செய்யாதவர்களையும் மரணமானது ஆண்டுகொண்டிருந்த படியால், முதலாம் உடண்படிக்கையின் மூலம் பாவிகளுக்கு நியாயப்பிரமாணம்  கொடுக்கப்பட்டு: அவைகளின் நன்மை தீமைகள் மூலம், பாவம் செய்கிறவர்களுக்கு, ஆவி, ஆத்துமா, சரீரத்தில்  மரணத்தை   ஆளுகை செய்யும் வல்லமைகள்   கணக்கிடப்பட்டு, நியத்தீர்ப்புகள்  கொடுக்கப்பட்டது.

முந்தின மனுஷனாகிய முதலாம்  ஆதாமினால்  பாவமும், பாவத்தினாலே ஆவி, ஆத்துமா, சரீரத்தில்    மரணமும், உலகத்திலே பிரவேசித்தது: அந்த    மரணமானது ஆதாம் முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது, நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.

Rom 5:13  நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.

Rom 5:14  அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.

Exo_31:18; Exo_24:12-18Exo_32:15-20, Exo_34:1-4, Exo_34:28-29; Deu_4:13-14, Deu_5:22, Deu_9:8-12; Rom_2:14-16Rom_5:10-14; Rom_5:15-18; Rom_5:19-21; 1Ti_1:7-11;

2-11 இரண்டாம் ஆதாமின் மரணத்தினால் இரண்டாம் உடண்படிக்கையின் மூலம் கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணம் வெளிப்பட்டது:- 

முதலாம் ஆதாம் முதல், இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து வரைக்கும், பாவஞ்செய்யாதவர்களையும் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் ஆண்டுகொண்டிருந்த படியால், இரண்டாம் உடண்படிக்கையின் மூலம் நீதிமான்களுக்கு; கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணம் வெளிப்பட்டு: அவைகளின் நன்மை தீமைகள் மூலம், தேவ நீதியின் கிரியைகள்  செய்கிறவர்களுக்கு நித்திய ஜீவனை ஆளுகை செய்யும் வல்லமைகள்   கணக்கிடப்பட்டு, நியத்தீர்ப்புகள்  கொடுக்கப்பட்டது.

Heb 11:1  விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

Heb 11:2  அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.

Heb 11:3  விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

Heb 11:4  விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.

Heb 11:5  விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான்.

Heb 11:6  விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.

நோவா, ஆபிரகாம், உடன் சுதந்தரராகிய ஈசாக்கு,  யாக்கோபு,  யோசேப்பு, மோசே, ராகாப் என்னும் வேசி, கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.

Heb 11:39  இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.

Heb 11:40  அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.

1Co_15:20-28,1Co_15:45-50,1Co_15:51-58,1Co_15:29-34,1Co_15:35-44,1Ti_2:9-15 ,Heb_9:15-22; Heb_8:7-13; Gal_3:19-26,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries