தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.


புஸ்தகம் 20


முதலாம் உடன்படிக்கை V/S இரண்டாம் உடன்படிக்கை

பொருளடக்கம் 3-0

3-0 ஆபிரகாமின்  சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை  சுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாக  பிரித்தெடுக்கிறார்:-

3-1 ஆபிரகாமின்  சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை  சுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம் தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாக  பிரித்தெடுக்கிறார்:-

சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நம்முடைய முற்பிதாக்களுக்கு அறியப்பட்ட நாட்களில், ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் நானூற்று முப்பது வருஷத்திற்குப் பின்பு வருகிறபோது;

தேவனாகிய கர்த்தர், யேகோவா என்னும்  நாமத்தினால் தீர்க்கதரிசியாகிய மோசேயினிடத்தில், முதலாம் உடண்படிக்கையின் பழைய ஏற்பாடு மூலம்: ஆபிரகாமின் சந்ததிகளுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தையும் உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்காக,

பரலோகத்தில் உள்ளவைகளுக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்கு  மாறக்கூடியவைகளாக இருக்கிற நிழலாட்டமான தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும், கட்டளைகளாக வெளிப்படுத்தப்படுகிறதின் மூலம்  ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்த தேசத்தை சுதந்தரித்து கொள்ளுவதற்காக ஜீவப்பிரமாணங்களை கொடுத்தார்.

இவைகளுடன் ஆதாமின் மீறுதலினால், ஆதாம் முதல் மோசே வரைக்கும்;  பாவஞ்செய்யாதவர்களையும் மரணமானது ஆண்டுகொண்டிருந்த படியால், முதலாம் உடண்படிக்கையின் மூலம் பாவிகளுக்கு நியாயப்பிரமாணம்  கொடுக்கப்பட்டு: அவைகளின் நன்மை தீமைகள் மூலம், பாவம் செய்கிறவர்களுக்கு  மரணத்தை   ஆளுகை செய்யும் வல்லமைகள்   கணக்கிடப்பட்டு, நியத்தீர்ப்புகள்  கொடுக்கப்பட்டது.

ஆகையால் இதுமுதற்கொண்டு இவைகளை பின்பற்றி நிதானித்து, பகுத்தறிந்து கொண்டு இவைகளின் மூலம் தேவனுக்கு ஆராதனையை செலுத்துகிறவர்களை தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாக  பிரித்தெடுக்கிறார்

 Act_7:17,Eze_20:23-25,1Ti_1:9-11; Act_7:38, Deu_33:2Deu_4:13-14; Deu_5:28-33;

Deu_6:1-2; Rom_9:30-33;

3-2 ஆபிரகாமின்  சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை  சுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; இயேசு கிறிஸ்துவின் மூலம் இரண்டாம் உடண்படிக்கையின் புதிய  ஏற்பாட்டினால்  தேவன் தமக்கு சொந்தமான ஜனங்களாக  பிரித்தெடுக்கிறார்:-

ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி கிறிஸ்து வருகிறபோது, ஆபிரகாமின்  சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை  சுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; தேவன் வார்த்தையிலிருந்து மாம்சமாகமாறி,

இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் ஜனங்களுக்கு  நேரடியாக வார்த்தையின் மூலம் வெளிப்பட்டு, பரலோகராஜ்யத்தின் உவமைகளின் இரசியங்கள் மூலமாக பரலோகத்திலுள்ளவைகளூக்கு  வரப்போகிற உன்மையான நன்மைகளுக்குரிய   நேரடியான பொருளாகிய சத்தியங்களை, வெளிப்படுத்தின பின்பு,

இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின்படி, பரலோகத்தில் உள்ளவைகளூக்கு சாயலானவைகளையும், நிழலாட்ட மானவைகளையும்,  இரத்தஞ்சிந்துதலினாலே சுத்திகரிக்கப்படும் வழிமுறைகளினால்:  பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரண பலிகளையும், நிறைவேற்றுவதற்காக,

கொல்கோதா, மலையின் மேல்  தன்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை  குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவைகளை பரலோகத்திலுள்ளவைகளூக்கு  வரப்போகிற உன்மையான நன்மைகளுக்குரிய   நேரடியான பொருளாகிய சத்தியங்களை நிருபித்து வெளிப்படுத்தினபடியால்

முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் ஆபிரகாமிற்கு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.

முதலாம் ஆதாம் முதல், இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து வரைக்கும், பாவஞ்செய்யாதவர்களையும், ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் ஆண்டுகொண்டிருந்த படியால், இரண்டாம் உடண்படிக்கையின் மூலம் நீதிமான்களுக்கு; கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணம் வெளிப்பட்டு: அவைகளின் நன்மை தீமைகள் மூலம், தேவ நீதியின் கிரியைகள்  செய்கிறவர்களுக்கு நித்திய ஜீவனை ஆளுகை செய்யும் வல்லமைகள்   கணக்கிடப்பட்டு, நியத்தீர்ப்புகள்  கொடுக்கப்பட்டது.

Gal_3:15-20;Heb_2:13-20,  Heb_9:16-24, Heb_10:19-25; Heb_6:13-20,

3-3 ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி கிறிஸ்து வருகிறபோது, இரண்டு மாறாத விசேஷங்களினால், நேரடியாக வெளிப்படுத்துகிறார்;-  

ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி கிறிஸ்து வருகிறபோது, ஆபிரகாமின்  சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை  சுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; கிறிஸ்து, மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை கடந்து வந்து: இரண்டு மாறாத விசேஷங்களினால், நேரடியாக வெளிப்படுத்துகிறார்;-  

ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தைப்பெற்ற கிறிஸ்துவின் சந்ததிகள் / 1,44,000 வரிசையில் வருகிறவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக, நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை கடந்து வந்து:

தேவனிடத்தில் அடைக்கலமாக ஓடிவருகிறவர்களுக்கு மாதியாக, இரண்டு மாறாத விசேஷங்களினால், அவைகளை சுதந்தரித்துக் கொண்டு,  பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.

Joh_3:13; Heb_2:13-20Joh_6:33, Joh_6:38, Joh_6:51, Joh_6:62, Joh_8:42, Joh_13:3-10, Joh_16:28-30, Joh_17:5;Eph_4:7-13,Eph_4:14-16; Joh_17:1-5, Joh_17:6-10, Joh_17:11-15, Joh_17:16-20, Joh_17:21-26, Heb_9:16-20,Heb_9:21-24,

3-4  ஆபிரகாமின்  சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை  சுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; கிறிஸ்து, மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை கடந்து வந்து: நேரடியாக வெளிப்படுத்தின நிலையானதும்  உறுதியானதுமான   இரண்டு மாறாத விசேஷங்கள்;-  

1 சாவுக்கேதுவாகிய ஆவி,ஆத்துமா,சரீரம் மரணத்தின்  அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, சாவாமையை தரித்துக் கொள்ளுகிறவர்கள். முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைந்து தேவனுடைய சாயலையும் ரூபத்தையும் சுதந்தரித்துக்கொள்ளூகிறார்கள்.

2 அழிவுள்ள  மாயைகளின்  அடிமைத்தனத்தினின்று ஆவி,ஆத்துமா,சரீரம், விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் சுதந்தரித்துக்கொள்ளூகிறார்கள்.

3-5  கிறிஸ்து பாவத்தை ஆக்கினி தீர்ப்பு செய்யும் வழிமுறைகளின் மூலம்  பரலோகத்தில் உள்ளவைகளுக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு / சத்தியத்திற்கு  மாறக்கூடியவைகளாக இருக்கிற தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், தேவனுடைய ஆராதனை முறைகளையும் பின்பற்றி, தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறதினால் தேவனுக்கு புத்தியுள்ள ஆராதனை செய்கிறார்கள்;

இப்படி இவர்கள் சாவுக்கேதுவாகிய ஆவி,ஆத்துமா,சரீரம் பாதாளத்தின் வல்லமையாகிய முதலாம் மரணத்தை ஜெயங்கொள்ளுகிற சாவாமையை தரித்துக்கொள்ளுகிறபோது, முதலாம் மரணமும், இரண்டாம் மரணமும், ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறுகிறது,

மேலும்  சாவுக்கேதுவாகிய ஆவி,ஆத்துமா,சரீரம் பாதாளத்தின் வல்லமையாகிய முதலாம் மரணத்தை ஜெயங்கொள்ளுகிறதினால் , முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைந்து தேவனுடைய சாயலையும் ரூபத்தையும் சுதந்தரித்துக்கொள்ளூகிறார்கள்.

3-6  இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் ஜனங்களுக்கு  நேரடியாக வார்த்தையின் மூலம் வெளிப்பட்டு, பரலோகராஜ்யத்தின் உவமைகளின் இரசியங்கள் மூலமாக, பரலோகத்திலுள்ளவைகளூக்கு  வரப்போகிற உன்மையான நன்மைகளுக்குரிய   நேரடியான பொருளாகிய சத்தியங்களின் மூலம்:

பரலோகராஜ்யத்தின் இரசியங்களாகிய தேவனுடைய சத்தியமான வசனங்களை தங்கள் இருதயத்தில் விருந்தாக புசித்தவர்கள்; அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்,

இவர்கள் அழிவுள்ளதாகிய மாயைக்குக் கீழ்ப்பட்டிருந்து, இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, தங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுகிறார்கள்;

இவர்கள் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், தனக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய், தனக்குத் தேவன் பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணத்தின்படி: தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி அழியாமையை தரித்துக்கொள்ளுகிறபோது, அழிவுள்ளதாகிய மாயை ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறுகிறது.  

2Co_5:1-5,2Co_5:6-10,1Co_15:50-58,Rom_12:1-6;;Rom_8:1-8, Rom_8:9-15, Rom_8:16-22, Rom_8:23-29;     Gal_3:15-20;Heb_2:13-20,  Heb_9:16-24, Heb_10:19-25; Heb_6:13-20, 1Pe_1:21-25

 


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries