தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.


புஸ்தகம் 20


முதலாம் உடன்படிக்கை V/S இரண்டாம் உடன்படிக்கை

பொருளடக்கம் 4-0

4-0 கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணங்கள்;-  

4-1 ஆபிரகாமின்  சந்ததிகள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை  சுதந்தரித்துக் கொள்ளுகிறதற்காக; கிறிஸ்து, மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை கடந்து வந்து: நேரடியாக வெளிப்படுத்தின நிலையானதும்  உறுதியானதுமான கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணங்கள்:-  

முதலாம் ஆதாம் முதல், இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து வரைக்கும், பாவஞ்செய்யாதவர்களையும், ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் ஆண்டுகொண்டிருந்த படியால், இரண்டாம் உடண்படிக்கையின் மூலம் நீதிமான்களுக்கு; கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணம் வெளிப்பட்டு: அவைகளின் நன்மை தீமைகள் மூலம், தேவ நீதியின் கிரியைகள்  செய்கிறவர்களுக்கு நித்திய ஜீவனை ஆளுகை செய்யும் வல்லமைகள்   கணக்கிடப்பட்டு, நியத்தீர்ப்புகள்  கொடுக்கப்பட்டது.

Gal_3:15-20;Heb_2:13-20,  Heb_9:16-24, Heb_10:19-25; Heb_6:13-20,

4-2 கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் பிரமாணங்களின் மூலம், தினந்தோறும் ஆத்துமா ஜலத்தினால் மறுபடியும் பிறப்பு:-

தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களின் மூலம் தினந்தோறும் ஆத்துமாவில் மறுரூபமடைந்து பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை ஆவிக்குரிய கண்களால் பார்ப்பது:-.

பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை  காண்பதற்கு முதலாவது திறவுகோல், ஒருவன் ஜலத்தினால்/ தேவனுடைய வார்த்தைகளினால்  மறுபடியும் பிறப்பது:-

ஜலமாகிய தேவனுடைய வார்த்தைகளினால்  ஞானஸ்தானம் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்/ தேவனுடைய ஆலோசனைகளை தங்கள் ஆத்துமாவில் ஏற்றுக் கொண்டு தங்கள் மனிதனுடைய ஆலோசனைகளை  மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து மனந்திரும்புகிறவர்களுக்கு ஆவிக்குரிய கண் பார்வை கிடைக்கிறது; தேவனுடைய இராஜ்ஜியம் இதோ இங்கே இருக்கிறது, அதோ அங்கே இருக்கிறது என்று , யாரையும் பின்பற்ற வேண்டாம் அல்லது எந்த இடத்திற்கும் ஓட வேண்டாம், நீங்கள் இருக்கிற இடத்திலிருந்தே தேவனுடைய இராஜ்ஜியத்தை உங்கள் ஆவிக்குரிய கண்களால் பார்க்க முடியும்.

தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களின் மூலம், நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்கிறதின் பின்விளைவாக வருகிற, பலமான ஆகாரமாகிய  தேவனுடைய நீதியின் வசனத்தில் பழக்கமுல்லவர்களாக இருக்கிறவர்கள்;  தேவனுடைய வாக்கியங்களின் ஞானேந்திரியங்களை உடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களாக மறுரூபமடைகிறார்கள்.

.  Joh_1:31, Joh_3:23, Luk_7:29-30, Mar_16:16, Luk_3:7, Luk_3:12, Mar_9:1, Luk_9:24-27 ,Joh_3:3, Luk_17:20-23,Tit_3:5, 1Pe_1:23,1Pe_3:21,

நித்திய ஜீவ வார்த்தைகள் நித்திய காலமாக இருப்பதால் அவைகளுக்கு குறிப்பிட்ட கால அளவுகள் வரையறுக்கப்படவில்லை, ஆனால் ஒருவர் நித்திய ஜீவ வார்த்தைகளின் மூலம் ஞானஸ்தானம் பெற்று அவைகளுடன் உடன்படிக்கை செய்து கொள்ளும்போது, நித்திய ஜீவ வார்த்தைகளின் கால அளவுகளை அவனுடைய கிரியைகளின் மூலம் ஆரம்பிக்கப்பட்டு தேவனுடைய வார்த்தைகளை நிறைவேறுவதற்கு தேவையான கால அளவுகளை  எடுத்துக்கொள்ளுகிறது./ உடன் படிக்கை செய்து கொண்டவரின் கிரியைகள் மூலம் நித்திய ஜீவ வார்த்தைகளின் சுவையும் வெளிப்படுகிறது.  Mat_16:15-19, Joh_6:65-69, Joh_1:1-5, Isa_51:1, 1Ki_5:17, 1Ki_6:7, 1Pe_1:4, 1Pe_1:23, 1Jo_1:1-4, Act_5:19-20,Pro_5:3-7, Jer_2:13, Phi_2:14-16, Jer_23:28-29,

4-3 தினந்தோறும் மறுபடியும் பிறந்த   ஆத்துமா, பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களுக்கு உள்ளே பிரவேசிப்பதற்கு, தடையாக இருக்கிற பாவ மாம்சத்தின்  சரீரத்தை: தினந்தோறும் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பது:-

தினந்தோறும் மறுபடியும் பிறந்த   ஆத்துமா, பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களுக்கு உள்ளே பிரவேசிப்பதற்கு தடையாக; மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறபடியால்:  பாவ மாம்சத்தின்  சரீரத்தை தினந்தோறும் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பது

தினந்தோறும் ஜலத்தினால் மறுபடியும் பிறந்த   ஆத்துமா, தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களின் மூலம் தினந்தோறும் ஆத்துமாவில் மறுரூபமடைந்து பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை ஆவிக்குரிய கண்களால் பார்த்தவர்கள், பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களுக்கு உள்ளே பிரவேசிப்பதற்கு தடையாக; தினந்தோறும் மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.

Gal_5:16-24Gal_4:21-27Gal_4:28-31; Heb_9:8-15, Heb_13:8-14,   Rom_7:22-29;Rom_8:1-8, Rom_8:9-15, Rom_12:1-81Co_15:29-32, 1Co_15:33-40, 1Co_15:41-49, 1Pe_4:16-19 ,

Heb 13:10  நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.Heb_13:8-14

Rom 7:22  உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.

Rom 7:23  ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. Rom_7:22-29;

Gal 4:29  ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது.

Gal 4:30  அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது.

 Gal_4:21-27, Gal_4:28-31;

Heb 9:8  அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். Heb_9:8-15,

1Co 15:44  ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.

1Co 15:45  அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

1Co 15:46  ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. 1Co_15:29-32,1Co_15:33-40, 1Co_15:41-49,

முதலாம் கூடாரமாகிய சரீரத்தை தினந்தோறும் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறதினால், தேவனுக்குப் புத்தியுள்ள ஆராதனை செய்கிறவர்களுக்கு: பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களுக்கு உள்ளே பிரவேசித்து  தினந்தோறும் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடைகிறது;

இதனால் நம்முடைய இரண்டாம் கூடாரமாகிய இருதய  பலிபீடத்திலிருந்து தேவனால் வெளிப்படுத்தப்படுகிறவைகளை, நம்முடைய முதலாம் கூடாரமாகிய சரீரத்தில்  நடைமுறைப்படுத்துவதற்கு,  நமக்கு தேவனால் அதிகாரம் கிடைக்கிறது. Rom_8:1-8, Rom_8:9-15,Rom_12:1-8,

ஒருவனுடைய முதலாம் கூடாரமாகிய சரீரத்தை தினந்தோறும் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறவர்கள், தங்களை பரிசுத்தஞ்செய்யும்படியாக, எல்லாருக்கும் முன்பாக பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.

ஆகையால், கிறிஸ்துவின் நிமித்தம் வரும்  நிந்தையைச் சுமந்து, தனியாக தேவனிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம். நிலையான நகரம் நமக்கு பூமியிலே இல்லை; தினந்தோறும் பரலோகத்தில் உள்ளவைகளுக்கு வரப்போகிற உன்மையான நன்மைகளுக்குரிய , நேரடியான பொருளையே நாடித் தேடுகிறோம்.

Rom_8:1-8, Rom_8:9-15,Rom_7:22-25, Rom_12:1-8,Heb_13:8-14, 1Pe_4:16-19 ,

4-4 தினந்தோறும் மறுபடியும் பிறந்த   ஆத்துமா, பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களுக்கு உள்ளே பிரவேசிப்பதற்கு தடையாக, பாதாளமாகிய இருதயத்தில் கீழ்ப்படியாமையினால்  அடிமைப்பட்டிருக்கிற அசுத்த  ஆவிகளுக்கு, தினந்தோறும் ஆத்துமாவாகிய எஜமானே, சுவிசேஷம் அறிவித்து மனந்திருப்புவது:-

தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களின் மூலம் தினந்தோறும் ஆத்துமாவில் மறுரூபமடைந்து, பரலோக இராஜ்ஜியத்தின் தரிசனங்களை ஆவிக்குரிய கண்களால் பார்த்தவர்கள்:தங்கள் பாவ மாம்சத்தின்  சரீரத்தை, பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக தினந்தோறும் ஒப்புக்கொடுக்கிறவர்கள்;ஆவியில் உயிர்ப்பிக்கபட்டு

மீண்டும் பாதாளத்தின் வல்லமைகள் தங்களை மேற்கொண்டு ஆவி,ஆத்துமா,சரீரம் மரணமடையாதபடிக்கு,தங்கள் இருதயமாகிய பாதாளத்தில்  கீழ்ப்படியாமையினால் அடிமைப்பட்டிருக்கிற அசுத்த  ஆவிகளுக்கு, தினந்தோறும் தங்கள் எஜமானாகிய ஆத்துமாவே தங்கள் இருதயமாகிய பாதாளத்தில் இறங்கி சென்று, தேவன் முன்பாக தங்கள் ஆவி பிழைக்கும்படியாக, சுவிசேஷம் அறிவித்து மனந்திருப்ப வேண்டும். 

இப்படி தினந்தோறும்/ அனுதினமும் தங்கள் சரீரத்தை  ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தும், சரீரத்தின்  எஜமானாகிய ஆத்துமா  தினந்தோறும் தங்கள் இருதயமாகிய பாதாளத்தில் இறங்கி சென்று, தேவன்முன்பாக தங்கள் ஆவி பிழைக்கும்படியாக, சுவிசேஷம்  அறிவித்து மனந்திருப்புகிற இந்த தேவ நீதியின் கிரியைகள்:

கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியினால் தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது தினந்தோறும் நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. 1Pe_3:12-16, 1Pe_3:17-21; 1Pe_4:1-6, 1Pe_4:7-11;

தினந்தோறும்/ அனுதினமும் பாதாள அக்கினியில் அனலினால் ஞானஸ்தானம் எடுத்து,  தங்களுடைய  ஆவி,ஆத்துமா,சரீரத்தை தினந்தோறும் ஒப்புரவாக்குகிறவர்கள், சாவுக்கேதுவாகிய ஆவி,ஆத்துமா,சரீரத்தை,  பாதாளத்தின் வல்லமையாகிய முதலாம் மரணத்தை ஜெயங்கொள்ளுகிற சாவாமையை தரித்துக்கொள்ளுகிறபோது, முதலாம் மரணமும், இரண்டாம் மரணமும், ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறுகிறது,

மேலும்  சாவுக்கேதுவாகிய ஆவி,ஆத்துமா,சரீரம் பாதாளத்தின் வல்லமையாகிய முதலாம் மரணத்தை ஜெயங்கொள்ளுகிறதினால் , முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைந்து தேவனுடைய சாயலையும் ரூபத்தையும் சுதந்தரித்துக்கொள்ளூகிறார்கள்.

கீழ்ப்படியாமல் போன ஆவிகளுக்கு கிறிஸ்து சுவிசேஷம் அறிவிக்கும் முறையைப் பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்துவது 1Pe_3:18-21, 1Pe_4:5-6, Eph_4:7-16, Psa_68:18-20,

அடிமைக்கு எஜமானே சுவிசேஷம் அறிவிக்கும் முறையைப் பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்துவது    Gal_4:29-30, 1Co_3:1-3Gal_4:3-8 , Rom_6:16, 2Pe_2:19Joh_8:34, Gal_4:6-7, Rom_8:5-17, Gal_4:19-31,Gal_5:16-17 , Pro_29:19-21, Pro_30:22-23, Isa_3:12, Pro_19:10,

4-5 பாதாள அக்கினியில் அனலினால் ஞானஸ்தானம்:-

கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் போடப்பட்ட அஸ்தி பாரத்தின் பெலத்தை பரிசோதிக்கும்படி பாதாளத்தின் வல்லமையான மரண இருள் போன்ற கஷ்டங்கள், சோதனைகளால், ஞானஸ்தானம் பெற்று தங்கள் ஞானத்தின் கிரியைகளை வெளிப்படுதல் / நித்திய ஜீவ வார்த்தைகள் இல்லாமல் பாதாள அக்கினியின் அனலில் அகப்படும்போது முதலாம் மரணம் நேரிடும் இதனால் தேவனுடைய ரூபமும், சாயலும் நஷ்டமடைந்து அக்கினியும் கந்தகமும் கலந்த நித்திய நரகத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள். Mat_16:15-19, 1Co_3:10-17, Job_20:26, Psa_49:6-15, Job_14:20-22, 1Co_5:1-5, Son_8:6, Job_31:1-12, Deu_32:22-29, Hos_8:14, Hos_13:14-16, Psa_16:8-11, Act_2:25-28, Psa_18:7, Lam_4:11, Psa_11:3, Psa_80:5,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries