5-0 தினந்தோறும் தங்கள் இருதயமாகிய பாதாள அக்கினியின் அனலினால் ஞானஸ்தானம் எடுத்து, தங்களுடைய ஆவி,ஆத்துமா,சரீரத்தை தினந்தோறும் ஒப்புரவாக்குகிறவர்களுக்கு, ஜனங்களை தேவனோடே ஒப்புரவாக்குவதற்கு ஊழிய அழைப்பின் வரங்கள்:-
5-1 தினந்தோறும் தங்கள் இருதயமாகிய பாதாள அக்கினியின் அனலினால் ஞானஸ்தானம் எடுத்து, தங்களுடைய ஆவி,ஆத்துமா,சரீரத்தை தினந்தோறும் ஒப்புரவாக்குகிறவர்களுக்கு, ஜனங்களை தேவனோடே ஒப்புரவாக்குவதற்கு ஊழிய அழைப்பின் வரங்கள்:-
கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவ நீதியின் கிரியைகளை பின்பற்றி தினந்தோறும்/ அனுதினமும் தங்கள் இருதயமாகிய பாதாளத்தில் இறங்கி சென்று, பாதாள அக்கினியில் அனலினால் ஞானஸ்தானம் எடுத்து, தங்களுடைய ஆவி,ஆத்துமா,சரீரத்தை தினந்தோறும் ஒப்புரவாக்கி,
தேவன் முன்பாக பிழைக்கும்படியாக, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை நிறைவேற்றுகிறவர்களுக்கு தேவன் ஒப்புரவாக்குதலின் உபதேசத்தையும், கிருபையினால் பகிர்ந்து கொடுத்த ஊழியர் அழைப்பின் வரங்களையும் ஒப்புக்கொடுக்கிறார். இவர்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, ஜனங்களை தேவனோடே ஒப்புரவாகும்படிக்கு , கிறிஸ்துவினிமித்தம் ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை தேவன் கிருபையினால் பகிர்ந்து கொடுத்த ஊழியர் அழைப்பின் வரங்களை, ஊழியர் அழைப்பின் அளவுபிரமாணத்துடன் நிறைவேற்றுகிறார்கள்.
Rom_5:10-11, Rom_11:15, 2Co_5:17-20,Col_1:19-21,Eph_4:7-13, Psa_68:18-23,Eph_4:14-19;
Psa 68:18 தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.
Eph 4:7 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.
Eph 4:8 ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
Eph 4:9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?
Eph 4:10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.
Eph 4:11 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்,
Eph 4:12 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
Eph 4:13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
Eph 4:14 நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,
Eph 4:15 அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
5-2 தினந்தோறும் தங்களுடைய ஆவி,ஆத்துமா,சரீரத்தை ஒப்புரவாக்கு கிறவர்களுடைய பாதாளமாகிய இருதயம், பரலோக இராஜ்ஜியமாக மாறியபடியால், ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண விருந்து:-
Rev 3:20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
Rev 3:21 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
Rev 3:22 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.
Rev 19:7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
Rev 19:8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
Rev 19:9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
பரிசுத்த ஆவியுடன் உடன்படிக்கை செய்து பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ளும்போது; பரிசுத்த ஆவியின் சத்திய வார்த்தைகளால் ஒருவன் மறுபடியும் பிறந்து அவன் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உள்ளே பிரவேசிக்கிறான், அல்லது அவனுக்குள்ளே தேவனுடைய இராஜ்ஜியம் இருக்கிறது. Mat_16:24-28, Joh_3:5, Mat_12:28, Luk_11:20, Jam_1:17-18, Tit_3:5, .Mat_3:11, Luk_3:16, Mar_1:8, Joh_1:31-34 , Act_1:4-5, Joh_14:16-18, Joh_14:26, Joh_15:26-27, Joh_16:7-14, Joh_17:17-23 Exo_13:21-22 , Exo_14:19-201Co_10:1-2, Neh_9:12, Neh_9:19-20, Psa_105:39, Psa_78:14, Exo_24:15-18, Exo_40:38, Deu_1:33 , Isa_4:2-6, Psa_143:10, Job_32:8, Pro_20:27,
5-3 தேவனுடைய அபிஷேகத்தின் ஆவியினால், முன்மாரி, பின்மாரி மழையின் ஊழியர் அழைப்பின் வரங்களுடன் , ஊழியர் அழைப்பின் அளவுபிரமாணத்தை சுதந்தரித்துக் கொள்ளூகிறவர்களின் அடையாளங்கள்:-
5-3-1 தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களின் மூலம் தினந்தோறும் ஆத்துமாவில் மறுரூபமடைந்து பலமான ஆகாரமாகிய தேவனுடைய நீதியின் வசனத்தில் பழக்கமுல்லவர்களாக இருக்கிறவர்கள்; தேவனுடைய வாக்கியங்களின் ஞானேந்திரியங்களை உடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களாக ஆத்துமாவில் மறுரூபமடைகிறார்கள்.
5-3-2 பாவ மாம்சத்தின் சரீரத்தை, பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக தினந்தோறும் ஒப்புக்கொடுக்கிறவர்கள்;ஆவியில் உயிர்ப்பிக்கபட்டு, தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, மனம் புதிதாகிறதினாலே ஆவியில் மறுரூபமடைகிறார்கள்.
5-3-3 சரீரத்தின் எஜமானாகிய ஆத்துமா, தினந்தோறும் தங்கள் இருதயமாகிய பாதாளத்தில் இறங்கி சென்று, தேவன் முன்பாக தங்கள் ஆவி பிழைக்கும்படியாக, சுவிசேஷம் அறிவித்து, மனந்திருப்பி தங்களுடைய ஆவி,ஆத்துமா,சரீரத்தை தினந்தோறும் ஒப்புரவாக்கி,
ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை நிறைவேற்றுகிறவர்களுக்கு தேவன் கிருபையினால் பகிர்ந்து கொடுத்த ஊழியர் அழைப்பின் வரங்களுடன் , ஊழியர் அழைப்பின் அளவுபிரமாணத்தை வெளிப்படுத்துறார்.
5-3-4 இவர்களுடைய ஆத்துமாவும் ஆவியும் , பரலோகராஜ்யத்தின் உவமைகளின் இரசியங்கள் மூலமாக, பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற உன்மையான நன்மைகளுக்குரிய நேரடியான பொருளாகிய சத்தியங்களின் மூலம்:
பரலோகராஜ்யத்தின் இரசியங்களாகிய தேவனுடைய சத்தியமான வசனங்களை தங்கள் இருதயத்தில் விருந்தாக புசித்தவர்கள்; அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்,
5-3-5 இவர்கள் அழிவுள்ளதாகிய மாயைக்குக் கீழ்ப்பட்டிருந்து, இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, இவர்கள் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், தனக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய், தனக்குத் தேவன் பகிர்ந்து கொடுத்த ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணத்தின்படி: தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி தேவனிட்த்தில் பிரதி பலனை பெற்றுக்கொள்ளூகிறார்கள்
தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)