தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.


புஸ்தகம் 20


முதலாம் உடன்படிக்கை V/S இரண்டாம் உடன்படிக்கை

பொருளடக்கம் 6-0

6-0 தேவனுடைய அபிஷேகத்தின் ஆவியினால், முன்மாரி, பின்மாரி மழையின் ஊழியர் அழைப்பின் வரங்களுடன் , ஊழியர் அழைப்பின் அளவுபிரமாணத்தை சுதந்தரித்துக் கொள்ளூகிறவர்கள் தேவனுடைய இரண்டு சாட்சிகளின் ஊழியர் அழைப்பை நிறைவேற்றுகிறார்கள்:-

6-1 முன்மாரி மழையாகிய பரிசுத்த ஆவியின் மூலம், தேவன் கிருபையினால் தமது சித்தப்படி ஊழியர் அழைப்பைத் தீர்மானிக்கிறார்.

6-2 முன்மாரி, பின்மாரி மழையாகிய அபிஷேக ஆவியின் மூலம், தேவன் கிருபையினாலும் சத்தியத்தினாலும்,  தமது சித்தப்படி ஊழியர் அழைப்பைத் தீர்மானிக்கிறார்.

6-1 முன்மாரி மழையாகிய பரிசுத்த ஆவியின் மூலம், தேவன் கிருபையினால் தமது சித்தப்படி ஊழியர் அழைப்பைத் தீர்மானிக்கிறார்.

பரிசுத்த ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப்பிர மாணம் / முன்மாரி மழையின் ஊழியங்களின் ஐந்து வகையான ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்கள்.

 Eph_4:11-13, 1Co_12:4-12, 1Co_12:27-31, 1Pe_4:10-11,

  1. அப்போஸ்தலர் 2 தீர்க்கதரிசி 3 போதகர் 4 மேய்ப்பர் 5 சுவிசேஷகர்; பரிசுத்த ஆவியினால் தேவன் பகிர்ந்து கொடுத்த, இந்த ஐந்து வகையான ஊழிய அழைப்பில் ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டவர்கள்: கிறிஸ்துவை மையமாகக் கொண்டு ஆயத்தம் என்னும் சமாதானத்தின் வலது, இடது பக்கத்தின் பாதரட்சை போல, தரித்துக்கொள்ள கூடிய இரண்டு அடிப்படையான நற்கிரியைகளை, தங்களுடைய ஊழிய அழைப்பில் நிறைவேற்றும்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பரிசுத்த ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணத்தினுடைய நற்கிரியைகள் ஒரு ஜோடியானவை கள்; கிறிஸ்துவை மையமாகக் கொண்டு, ஆயத்தம் என்னும் சமாதானத்தின் வலது, இடது பக்கத்தின் பாதரட்சை போல தரித்துக் கொள்ள கூடியவைகள்.

  1. பரிசுத்த ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழியத்தில் ஆயத்தம் என்னும் சமாதானத்தில் வலது பக்கத்தின் பாதரட்சை போல, தரித்துக் கொள்ள வேண்டிய நற்கிரியைகள் :-

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது: பக்தி விருத்தியடைந்து கட்டப்படுவதற்காக; ஒவ்வொரு நாளும் சபையின் ஒரு ஊழியராக இருந்து கொண்டு நற்கிரியைகளை ஊழியத்தில் நிறைவேற்றுவது.

  1. பரிசுத்த ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழியத்தில், ஆயத்தம் என்னும் சமாதானத்தின் இடது பக்கத்தின் பாதாரட்சை போல; தரித்துக் கொள்ள வேண்டிய நற்கிரியைகள்:-

ஒவ்வொரு நாளும், பரிசுத்தத்தில் சீர்பொருந்துவதற்காக, தன்னுடைய குறைகளை சீர்த்திருத்திக்கொண்டு; சபையின் ஒரு ஊழியராக இருப்பதற்காக பயிற்சியை எடுத்துக்கொள்வது.

Eph 4:12  For the perfecting of the saints, for the work of the ministry, for the edifying of the body of Christ: (King James Version)

Eph 4:12  For the training of the saints as servants in the church, for the building up of the body of Christ: (Bible in basic english 1965)

Eph 4:7  கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.

Eph 4:8  ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.

Eph 4:9  ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?

Eph 4:10  இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.

Eph 4:11  மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும்,

Eph 4:12  பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,

Eph 4:13  அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.

Eph 4:14  நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,

Eph 4:15  அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.

Eph 4:16  அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன் தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.

2Co 10:12  ஆகிலும் தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.

2Co 10:13  நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.

2Co 10:14  உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை; நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம் வரைக்கும் வந்தோமே.

2Co 10:15  எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மைபாராட்டமாட்டோம்.

2Co 10:16  ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்.

2Co 10:17  மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.

2Co 10:18  தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.

Rom_1:16, Rom_12:1-6, Hab_2:1-4, Rom_8:1-4;1Pe_3:16-21, 1Pe_4:1-6,Eph_4:7-13, 1Co_12:1-7,  Act_14:3,Act_20:24, Act_20:32, Rom_15:14-16,1Co_3:9-10, Rom_1:5-7, 1Co_15:9-10 , Gal_1:14-17,Gal_2:8-10, Eph_3:1-2,Eph_3:7-8 ,1Pe_4:10,Eph_4:30-32,2Co_11:12-15, 1Co_3:9-101Co_15:9-10; 2Co_6:1-3; Eph_3:6-8,   

6-2 முன்மாரி, பின்மாரி மழையாகிய அபிஷேக ஆவியின் மூலம்; தேவன் கிருபையினாலும் சத்தியத்தினாலும்,  தமது சித்தப்படி ஊழியர் அழைப்பைத் தீர்மானிக்கிறார்.

அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணம் / முன்மாரி, பின்மாரி மழை ஊழியங்களின் இரண்டு வகையான ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணங்கள்: இவைகள் கிறிஸ்துவை மையமாகக் கொண்டு, ஆயத்தம் என்னும் சமாதானத் தின்  வலது, இடது பக்கத்தின் பாதரட்சை போல தரித்துக் கொள்ளக் கூடிய, ஒரு ஜோடியான ஊழிய அழைப்பின் அளவுப்பிரமாணங்கள்.

  1. கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பு: தீர்க்கதரிசிகளான மோசே, எலியா இவர்களின் ஊழியங்கள்.
  2. கர்த்தருடைய வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணும் ஊழிய அழைப்பு: தீர்க்கதரிசிகளான மோசே, எலியா, எலிசா, யோவான், இவர்களின் ஊழியங்கள்; அபிஷேக ஆவியினுடைய ஊழிய அழைப்பின் அளவுப் பிரமாணத்தில், தேவன் ஒரு வகையான ஊழிய அழைப்பு மட்டும் தனியாக பிரித்து / பகிர்ந்து கொடுப் பதில்லை, இவைகள் ஒரு ஜோடியானவைகள், இவைகளை பிரிக்க முடியாதவைகள்.

  Zar_4:2, Zar_4:11-14, Rev_2:5, Rev_11:4, Mal_4:1-6, Mal_3:13-18, 1Ki_18:17-29, 1Ki_18:30-46,

அபிஷேக ஆவியினால், தேவன் பகிர்ந்து கொடுத்த ஒரு ஜோடியான ஊழிய அழைப்பை பெற்றுக்கொண்டவர்கள்: கீழே குறிப்பிட்ட ஒரு ஜோடியான நற்கிரியைகளையும் நிறைவேற்றும்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிறிஸ்துவை மையமாகக் கொண்டு ஆயத்தம் என்னும் சமாதானத்தின் வலது, இடது பக்கத்தின் பாதரட்சையை போல தரித்துக் கொள்ள கூடிய  இரண்டு அடிப்படையான நற்கிரியை களையும் தங்களுடைய ஒரு ஜோடியான ஊழிய அழைப்பின் ஊழியங்களில் நிறைவேற்றும்படி நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

  1. அபிஷேக ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழியத்தில், ஆயத்தம் என்னும் சமாதானத்தின் வலது பக்கத்தின் பாதரட்சை போல, தரித்துக் கொள்ள வேண்டிய நற்கிரியைகள்:- Rev_11:1-13,

கர்த்தரை ஆராதிக்கும்படி ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பையும் , கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தும் ஊழிய அழைப்பையும்,கலந்த   ஒரு ஜோடியான  ஊழிய அழைப்பின் தேவ சித் தத்தை; தேவனுடைய இராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்ட, நாற்பத்திரண்டு மாதங்களில் நிறைவேற்றுவது.

  1. அபிஷேக ஆவியினால் பெற்றுக்கொண்ட ஊழியத்தில் ஆயத்தம் என்னும் சமாதானத்தின் இடது பக்கத்தின் பாதரட்சையை போல, தரித்துக் கொள்ள வேண்டிய நற்கிரியைகள்:- Rev_11:1-13

தேவ வார்த்தையைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவின் சாட்சி யைக்குறித்தும், உள்ள தரிசனங்களைப் பின்பற்றி ஒரு ஜோடியான ஊழிய அழைப்பின் நற்கிரியைகளை செய்து; தேவனுடைய இராஜ்ஜி யம் ஸ்தாபிக்கப்பட, நாற்பத்திரண்டு மாதங்களில் தேவ சித்தத்தின் ஊழிய அழைப்பை நிறைவேற்றுவது.

Deu_11:13-17, Job_29:21-23, Pro_16:15, Jer_3:1-5, Jer_5:23-29, Hos_6:1-3, Joe_2:21-32, Zec_10:1-6


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries