தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 21


உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவரின் சாட்சிகள்

பொருளடக்கம் 1-0

1-0 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: எந்த விதத்திலும்  தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில்; தன்னுடைய வார்த்தையாகிய கிறிஸ்துவை பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக , பரலோகத்தில் தன்னுடைய வலதுபாரிசத்தில் தேவனாக ஆனந்ததைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்

1-1 ஒன்றான மெய்த்தேவனாகிய நித்திய சத்தியமுள்ள பிதாவானவர் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்:-

1-2. ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: எந்த விதத்திலும்  தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில்; தன்னுடைய வார்த்தையாகிய கிறிஸ்துவை பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக , பரலோகத்தில் தன்னுடைய வலதுபாரிசத்தில் தேவனாக ஆனந்ததைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்

1-3 ஒன்றான மெய்த்தேவனாகிய நித்திய சத்தியமுள்ள பிதாவானவரை  ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக , பரலோகத்தில் பிதாவானவரின்  வலதுபாரிசத்தில் தேவனாக ஆனந்ததைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரேபேறான குமாரனாகிய கிறிஸ்துவே பிதாவை  வெளிப்படுத்தினார்.

1-4 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக,  கிறிஸ்து; உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராக பரலோகத்தில் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி,. உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக  தம்மைத்தாமே தாழ்த்தினார்:-

1-5 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு விரோதமாக வருகிற சத்துருக்களை பிதாவாகிய  உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், பரலோகத்தில் பிதாவாகிய நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கிறிஸ்து விண்ணப்பம்பண்ணினார்:-  

1-1 ஒன்றான மெய்த்தேவனாகிய நித்திய சத்தியமுள்ள பிதாவானவர் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்:-

Joh 4:19  அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.

Joh 4:20  எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.

Joh 4:21  அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

Joh 4:22  நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.

Joh 4:23  உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.

Joh 4:24  தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.

Joh 4:25  அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.

Joh 4:26  அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.

Isa 57:15  நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.

Isa 57:16  நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே.

Joh_4:19-26,Isa_57:15-16Joh_1:18, Joh_6:46;Exo_33:20; Deu_4:12;  Isa_66:1-2; Jer_23:23-24;  1Ti_6:13-16; Act_17:24-28; Psa_139:1-10; 1Ki_8:27; 2Ch_6:18;

Psa_11:4,Mat_5:34-35; Mat_23:21-22; Pro_30:4; 1Ch_29:11; Eph_1:3; Joh_20:17,

Isa_63:3-6; 1Co_15:20-28;1Ti_1:17; Deu_6:4; Isa_44:6; Mar_12:29-33; Joh_17:3; Rom_3:29-30, Rom_10:12; 1Co_8:6; Gal_3:20; Eph_4:6

1-2. ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியம்: எந்த விதத்திலும்  தீட்டுப்படாதபடிக்கு, தனக்கும் தன்னுடைய சர்வ சிருஷ்டிக்கும் மத்தியில்; தன்னுடைய ஒரேபேறான குமாரனாகிய கிறிஸ்துவே பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக , பரலோகத்தில் தன்னுடைய வலதுபாரிசத்தில் தேவனாக ஆனந்ததைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்:-

.Joh 1:1  ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

Joh 1:2  அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

Joh 1:3  சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

Joh 1:4  அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

Joh 1:5  அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.

Joh 1:14  அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

Psa 2:1  ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

Psa 2:2  கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

Psa 2:3  அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.

Psa 2:4  பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

Psa 2:5  அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.

Psa 2:6  நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணி வைத்தேன் என்றார்.

Psa 2:7  தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

Psa 2:8  என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

Psa 2:9  இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.

Psa 2:10  இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.

Psa 2:11  பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.

Psa 2:12  குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

Joh_1:1-8,Joh_1:9-14, Joh_1:18, Joh_6:46;Joh_16:28,Joh_17:3; Rom_3:29-30, Rom_10:12; 1Co_8:6; Gal_3:20; Eph_4:6,Psa_2:1-6, Psa_2:7-12, Pro_8:22-32 ;

Gen_1:1-4, Gen_1:26-28; Psa_33:6, Heb_11:3; 2Pe_3:5-6, Psa_102:25-26; Isa_45:12, Isa_45:18Col_1:12-16;Col_1:17-21Heb_1:1-6,Heb_1:7-14,

 Heb_3:1-4;Heb_11:27; Rev_4:11,Job_38:1-11; Job_38:12-22, Job_38:23-32,

Job_38:33-41,   Psa_104:1-10;Psa_104:11-20; Psa_104:21-30;Psa_104:31-35; Isa_40:1-8,Isa_40:9-15,Pro_30:4,

 1-3 ஒன்றான மெய்த்தேவனாகிய நித்திய சத்தியமுள்ள பிதாவானவரை  ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக , பரலோகத்தில் பிதாவானவரின்  வலதுபாரிசத்தில் தேவனாக ஆனந்ததைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரேபேறான குமாரனாகிய கிறிஸ்துவே பிதாவை  வெளிப்படுத்தினார்:-.

Joh 6:26  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Joh 6:27  அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.

Joh 6:28  அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

Joh 6:29  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.

Joh 6:30  அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்?

Joh 6:31  வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள்.

Joh 6:32  இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Joh 6:33  வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.

Joh 6:34  அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள்.

Joh 6:35  இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.

Joh 6:36  நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்.

Joh 6:37  பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.

Joh 6:38  என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.

Joh 6:39  அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.

Joh 6:40  குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

Joh 6:41  நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:

Joh 6:42  இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.

Joh 6:43  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.

Joh 6:44  என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

Joh 6:45  எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.

Joh 6:46  தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.

Joh 6:47  என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Joh 6:48  ஜீவ அப்பம் நானே.

Joh 6:49  உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்.

Joh 6:50  இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.

Joh 6:51  நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

Joh_1:18, Joh_6:26-34 ;Joh_6:35-42 ;Joh_6:43-50 ;Joh_6:51-58,  ;Joh_16:28,Pro_8:22-32; Rom_1:20; Exo_33:20; Deu_4:12; Mat_11:27; Luk_10:22;

1Jo_4:12, 1Jo_4:20,: Joh_5:37, Joh_8:19, Joh_14:9-10, Joh_15:24;     Joh_7:29, Joh_8:55; Mat_11:27; Luk_10:21-24, Joh_1:14-18, Joh_3:14-18; 1Jo_4:9,

   Gal_3:19-22 , 1Ti_2:4-7, Heb_8:4-8,   Heb_9:14-17, Heb_12:24,Rom_8:14; 2Co_6:17-18; Gal_3:26, Gal_4:6; 2Pe_1:4; 1Jo_3:1,Isa_8:13-18;Heb_2:10-16,

1-4 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்காக,  ஒரேபேறான குமாரனாகிய கிறிஸ்து; உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராக பரலோகத்தில் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி,. உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக  தம்மைத்தாமே தாழ்த்தினார்:-

 

Php 2:5  கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;

Php 2:6  அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

Php 2:7  தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

Php 2:8  அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

Php 2:9  ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

Php 2:10  இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

Php 2:11  பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

Col 1:12  ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,

Col 1:13  இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

Col 1:14  [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

Col 1:15  அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

Col 1:16  ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

Col 1:17  அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

Col 1:18  அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

Col 1:19  சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,

Col 1:20  அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

Rev_5:1-7, Rev_5:8-14, Phi_2:5-11; Heb_1:1-3,Col_1:12-16Col_1:17-20;Rev_5:9,  Rev_5:12, Rev_6:16, Rev_7:9-17, Rev_12:11, Rev_13:8, Rev_17:14, Rev_21:23,

Rev_22:1, Rev_22:3; Isa_53:7-8; Joh_1:29, Joh_1:36; Act_8:32; 1Pe_1:19-20

Pro_8:23; Mic_5:2Rom_16:25-26; Eph_1:4, Eph_3:9, Eph_3:112Ti_1:9-10; Tit_1:2-3; Rev_13:8

 1-5 ஒன்றான மெய்த்தேவனாகிய பிதாவின் நித்திய சத்தியத்தை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதற்கு விரோதமாக வருகிற சத்துருக்களை பிதாவாகிய  உமக்குப் பாதபடியாக்கிப் போடும் வரைக்கும், பரலோகத்தில் பிதாவாகிய நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கிறிஸ்து விண்ணப்பம்பண்ணினார்:- 

Psa 110:1  கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

Psa 110:2  கர்த்தர் சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும்.

Psa 110:3  உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யௌவன ஜனம் உமக்குப் பிறக்கும்.

Psa 110:4  நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்.

Psa 110:5  உம்முடைய வலதுபாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.

1Co 15:22  ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

1Co 15:23  அவனவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

1Co 15:24  அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.

1Co 15:25  எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது.

1Co 15:26  பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.

1Co 15:27  சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.

1Co 15:28  சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

Psa_110:1-5; Heb_1:1-3,Heb_1:13, Heb_10:10-17,Eph_1:17-24,Heb_8:1-5, Heb_12:1-2, 1Pe_3:15-22,   Mat_22:42-45;   Mar_12:35-37, Mar_14:60-62,    

Mar_16:19Luk_22:67-69Luk_20:41-44,1Co_15:22-28, Act_5:31,Act_7:53-56; Act_2:32-36 , , Rom_8:30-34Col_3:1-4,


Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries