தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 22


தேவ ஆட்டுக்குட்டியானவர் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட சர்வசங்கமாகிய சபை

பொருளடக்கம் 6-0

6-0 இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தாகிய சத்திய வசனத்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிற  சந்ததியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள்:-

Isa 10:20  அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள். 

Isa 10:21  மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள். 

Isa 10:22  இஸ்ரவேலே, உன் ஜனங்கள் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டு வரும். 

Isa 10:23  சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்துக்குள்ளெங்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார். Rom_9:27-33;Isa_10:20-23;

6-1 மேலான எருசலேமாகிய  சுயாதீனமுள்ள கர்த்தரின் வசனங்களின் மூலம் ஆவியின்படி பிறந்தவர்கள், வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரவாளியாயிருப்பதற்கு: தேவனுடைய சித்தத்தினால் பிறந்தவர்கள்:- 

மேலான எருசலேமாகிய  சுயாதீனமுள்ள கர்த்தரின் வசனங்களின் மூலம் ஆவியின்படி பிறந்தவர்கள்: தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களாகிய திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருந்து, பூரணமாக குடிக்கிறபோது;  வெண்ணெயையும் தேனையும்  சாப்பிடுகிறபடியால்  தீமையை வெறுத்து, நன்மையைத் தெரிந்துகொள்ளுகிற  பகுத்தறிவில் பூரண வயதை அடைகிறார்கள்.  

நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கு  பலமான ஆகாரமாகிய  நீதியின் வசனத்தை  நிதானமாய்ப் பகுத்துப் அறிந்து உணர்ந்து கொள்ளுவதில்  பழக்கமுல்லவர்களாக /தேறினவர்களாக மாறுகிறார்கள். 

பலமான ஆகாரமாகிய  நீதியின் வசனத்தை  நிதானமாய்ப் பகுத்துப் அறிந்து உணர்ந்து கொள்ளுவதில்  பழக்கமுல்லவர்களாக /தேறினவர்களாக மாறினவர்கள், தேவனுடைய வார்த்தைகளைக் கண்டு,கேட்டு, உணர்ந்துகொண்டபடியால்; பரலோக இராஜ்யத்தினுடைய உவமைகளில் உள்ள   இரகசியங்களின் நன்மை தீமைகளை பகுத்தறிவதின் மூலம் ஆவி,ஆத்துமாவில் மறுரூபமடைகிறார்கள். 

இவர்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, தங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடைந்து: தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த நீதியின் கிரியைகளை நிறைவேற்றுகிறதின் மூலம்,  சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரத்தை  தரித்துக்கொண்டு, தங்களை மணவாட்டியைபோல  ஆயத்தம் பண்ணுகிறார்கள்,  

மற்றும் தங்கள் விளக்குகள் / நீதியின் கிரியைகள்  எப்பொழுதும் எரிந்து கொண்டிருப்பதற்கு தினந்தோறும் எண்ணை ஊற்றுகிறதுபோல, கடிந்து கொள்ளுதலின் உபதேசத்தை தினந்தோறும் ஏற்றுக்கொண்டு தங்களை சீர்திருந்தி மனந்திரும்புறவர்கள்; தங்கள் எஜமானாகிய கிறிஸ்து   கலியாணத்திலிருந்து வந்து தங்கள் இருதய   வாசற்படியிலே நின்று தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிறார்கள்  

தங்கள் எஜமானாகிய கிறிஸ்து   கலியாணத்திலிருந்து வந்து அவனுக்கு மட்டும் தெரியும்படி அவனுடைய  இருதய   வாசற்படியிலே நின்று இரகசியமாக தட்டும்போது, அவன் எஜமானாகிய கிறிஸ்துவின்    சத்தத்தைக் கேட்டு, தன்னுடைய இருதயதின் கதவைத் திறந்தால், அவனிடத்தில் எஜமானாகிய கிறிஸ்து இருதயத்தில்  பிரவேசித்து, தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்தை  அவரவர்,புசிக்க ஏற்றபடி/ அவரவர் உட்கொள்ளும் அளவுக்கேற்றபடி/தன்மைக்கேற்றபடி போஜனம்பண்ணும்படி பகிர்ந்தளிக்கிறார் .

இயேசு கிறிஸ்துவின்   நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகர் இந்த விருந்தை  புசிக்க அபாத்திராக போனார்கள். ஆனால் தேவனால் முன் குறிக்கப்பட்டவர்களிள் ஒரு சிலர், இயேசு கிறிஸ்து இராஜாவாக முடிசூட்டப்படும் பட்டாபிஷேக விழாவில்/ ஆட்டுக்குட்டியானவருடைய கலியாண விருந்தில் கலந்து கொண்டு; இந்த தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை விருந்தாக புசிக்கிறார்கள்.

அதன் சுவைகளை உணர்ந்து கொண்டவர்கள்,ஆவி,ஆத்துமாவில், மறுரூபமடைந்து: தேவனுக்கு பிரியமான போஜனமாகிய  தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதின் மூலம் கிறிஸ்துவின் இராஜ்யத்தில் ஆட்சி அதிகாரங்களை பிரதிபலனாக பெற்றுக்கொள்ளுகிறார்கள். 

Rom_9:6-9; Gen_13:15-16,   Gen_15:4-6,Heb_11:11-12;Joh_1:12-14,Gal_4:20-25, Gal_4:26-31;Gen_21:8-12, Isa_28:8-12;Isa_7:21-25;Isa_7:15; 1Pe_2:1-5;Heb_6:1-2;Heb_5:12-14;2Ti_2:15-19; Rom_10:6-12;1Co_3:1-5,  1Co_2:4-10; 1Co_2:11-16,  Rom_12:1-3, 1Co_2:6-7, 1Co_14:20 Phi_3:14-15, Col_1:28, Col_4:12,   Jam_1:25, 1Ti_1:11, 2Ti_1:13, 2Ti_4:3-4, Tit_1:9, Tit_1:13-14, Tit_2:1-2,1Ti_6:3-5;Rev_19:7-10,Mat_22:1-5; Mat_22:6-10, Mat_22:11-14, Luk_12:34-40, Luk_14:7-11,Mat_25:1-10; Rev_3:14-18, Rev_3:19-22,Isa_65:13-15, Isa_65:8-9,

 

6-2 சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, மூலம் அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிறந்தவர்கள். மாம்சத்தின்படி பிறந்தவர்கள்: இவர்கள் இரத்தத்தினாலும்,  மாம்ச சித்தத்தினாலும்,  புருஷனுடைய சித்தத்தினாலும்,  பிறந்தபடியால் சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று வேதம் சொல்லுகிறது:- 

சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, மூலம் அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிறந்தவர்கள், பாவிகளூக்கு விதிக்கப்பட்ட  நியாயப்பிரமாணம்   தொடர்புடைய மனிதனுடைய கற்பனைகளின் மூல உபதேசங்களாகிய சபையின் கலப்படமுள்ள ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருந்து, பூரணமாக குடிக்கிறபோது; மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறபடியால்  ஆவிக்குரியவைகளில் பெலனில்லாதவர்களாயிருந்து,   தீமையை வெறுத்து, நன்மையைத் தெரிந்துகொள்ளுகிற  பகுத்தறிவில் பூரண வயதை அடையாமல் இருக்கிறார்கள்.  

காலத்தைப் பார்த்தால், நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களை யுடையவர்களாகிய பூரண வயதிற்கு முன்னேறி, பலமான ஆகாரமாகிய  நீதியின் வசனத்திற்கு வந்தடைய    வேண்டியவர்கள், மறுபடியும் மனிதனுடைய கற்பனைகளின் மூல உபதேசங்களாகிய சபையின் கலப்படமுள்ள ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருந்து, குழந்தையாயிருக்கிறபடியினாலே தேறினவர்களாக முன்னேற முடியாமல் இருக்கிறார்கள்.  .  

பலமான ஆகாரமாகிய  நீதியின் வசனத்தை  நிதானமாய்ப் பகுத்துப் அறிந்து உணர்ந்து கொள்ளுவதில்  பழக்கமில்லாதவர்களாக / தேறாதவர்களாக மாறினவர்கள், மனிதனுடைய கற்பனைகளின் மூல உபதேச வசனங்களை  கண்டு,கேட்டு, உணர்ந்துகொண்டபடியால்; பூலோக இராஜ்யத்தினுடைய    இரகசியங்களின் நன்மை தீமைகளை பகுத்தறிவதின் மூலம் தங்கள்   சரீரத்தில் மறுரூபத்தை உருவாக்கிக்கொள்ளுகிறார்கள். 

இவர்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரித்து , மனிதனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, தங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடைந்து: மனிதன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த நீதியின் கிரியைகளை நிறைவேற்றுகிறதற்கு,  தங்கள் விரும்புகிற  பிரகாசமுமான மெல்லிய வஸ்திரத்தை  தரித்துக்கொண்டு, நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் தேவனுடைய  கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள். 

மற்றும் தங்கள் விளக்குகள் / நீதியின் கிரியைகள்  எப்பொழுதும் எரிந்து கொண்டிருப்பதற்கு தினந்தோறும் எண்ணை ஊற்றுகிறதுபோல, கடிந்து கொள்ளுதலின் உபதேசத்தை தினந்தோறும் ஏற்றுக்கொண்டு தங்களை சீர்திருந்தி மனந்திரும்பாதவர்கள்; உலகத்தினாலுண்டானவைகளாகிய மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமானவைகள் தங்கள் இருதய   வாசற்படியிலே நின்று தட்டும்போது, உடனே அவைகளுக்குத் திறக்கும்படி எப்பொழுது கிடைக்கும்  என்று காத்திருக்கிறார்கள்.  

உலகத்தினாலுண்டானவைகளாகிய மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமானவைகள்: தங்கள் இருதய   வாசற்படியிலே நின்று தட்டும்போது, உடனே அவைகளுக்குத் திறக்கிறபோது, அவைகள் இருதயத்தில்  பிரவேசித்து,அவர்களை அடிமைப்படுத்தி அவர்கள் கிரியைகளின் மூலம் பாவத்தின் இச்சைகளை திருப்தி செய்வதற்கு அவர்களை ஆட்சிசெய்து ஆளுகைசெய்யும்.  

இயேசு கிறிஸ்துவின்  நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகர் உலகத்தினாலுண்டானவைகளாகிய மாம்சத்தின் இச்சைக்கும், கண்களின் இச்சைக்கும், ஜீவனத்தின் பெருமையுமானவைகளுக்கும்: அடிமையாக்கப்பட்டார்கள்.இவர்கள் வலுசர்ப்பம் / சாத்தான், மிருகம்/ அந்திக்கிறிஸ்து, கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலிருந்து புறப்பட்டுவருகிற தவளைகளுக்கு ஒப்பான மூன்று அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகளை மாயக்காரர்கள் வேதபாரகர்கள்  பரிசேயர்கள்  ஆகிய இவர்கள் பின்தொடர்ந்து, ஒருவனை தங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிந்து; தங்களுடைய மார்க்கத்தானானபோது அவனை தங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறார்கள். 


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries