தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து | Scripture Feast Ministries

தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 22


தேவ ஆட்டுக்குட்டியானவர் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட சர்வசங்கமாகிய சபை

பொருளடக்கம் 7-0

7-0 தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது. 

Rom 9:11  பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, 

Rom 9:12  மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது. 

Rom 9:13  அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது. 

Rom 9:14  ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே. 

Rom 9:15  அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார். 

 

 

Eze_33:31-33; Mat_15:7-9; Isa_29:9-13,Rev_16:12-15; 2Th_2:9-12; 1Ti_4:1-3; 2Ti_3:1-7; 2Pe_2:1-3; 1Jo_4:1-3;Mat_13:14, Mat_15:7-9, Mar_7:6-8Rom_9:6-9; Gen_13:15-16,Gal_4:20-25, Gal_4:26-31;Gen_21:8-12, Isa_28:8-12;Isa_7:21-25;Isa_7:15; 1Pe_2:1-5;Heb_5:12-14;2Ti_2:15-19;1Co_3:1-5,  1Co_2:4-10; 1Co_2:11-16, 2Ti_4:3-4,Tit_1:9, Tit_1:13-14, Tit_2:1-2,1Ti_6:3-5; Rev_3:14-18, Rev_3:19-22,Isa_65:13-15, Isa_65:8-9, Pro_30:6; Mat_15:2-6; Mar_7:2-13;

7-1 யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தபடியால் . ரெபெக்காள்  யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள். யாக்கோபு தன் தாயின் சொல்லைமாத்திரம் கேட்டு, தன்னுடைய தகப்பனிடத்திருந்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொண்டு, தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்:- 

யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்ததுபோல குணசாலியுடைய நீதியின் கிரியைகளையுடையவர்களாக இருந்து: கூடாரவாசிகளைபோல பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசப் பிரமாணத்தின் மூலம் தங்களுக்கு  வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். 

யாக்கோபைபோல  குணசாலியும் கூடாரவாசியுமாக  இருக்கிறவர்கள் விசுவாசப்பிரமாணத்தின் மூலம் தங்களுக்கு  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளூவதற்காக,தேவன் தங்களுக்கு பகிர்ந்து கொடுத்த விசுவாச அளவுப்பிரமாணத்தின் ஊழிய அழைப்பின் ஆயுதங்களாகிய அம்பறாத்தூணியையும் வில்லையும் எடுத்துக்கொண்டு சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிந்து;

அன்னியர்களுடைய ஆவி, ஆத்துமாவை ஆதாயப்படுத்தி/ வேட்டையாடிக் கொண்டு வந்து   தேவனுக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள போஜனமாக புசிக்க கொடுக்காமல், தன்னுடைய ஆவி, ஆத்துமாவை ஆதாயப்படுத்தி கொண்டும், தங்களுடைய  சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தும், தேவனுடைய  சித்தத்தின்   கிரியையை செய்து நிறைவேற்றுகிறார்கள்.

தங்களூடைய ஆவி, ஆத்துமா,  சரீரங்களையே தேவனுக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள போஜனமாக தேவனிடத்தில்  ஒப்புக்கொடுக்கிறபடியால், தங்களுக்கு  வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளூகிறார்கள். 

இப்படி தங்களூடைய ஆவி, ஆத்துமா,  சரீரங்களையே தேவனுக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள போஜனமாக தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து,   யாக்கோபு  லாபானின் இரண்டு குமாரத்திகளூக்காக ஊழியம் செய்ததுபோல இருபது வருடங்கள் ஊழியம் செய்து; தங்களுக்கு  தேவனால் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளூகிறார்கள்.

லாபானின் இரண்டு குமாரத்திகளிள்  மூத்தவள்  லேயாள்  கூச்சப்பார்வை உள்ளவளாக பிறந்தாள். இளையவள் ராகேல் ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாக பிறந்தாள், இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த குமாரத்திகள் இரண்டு வெளிப்படுத்தின விசேஷங்கள். 

ஒன்று மூத்தவள் லேயாள்  கூச்சப்பார்வை உள்ளவளாக பிறந்தவள், புறஜாதிகளூக்கு  வெளிப்படுத்தின சுவிசேஷம், அது சபையின் உபதேசங்களின் மூலம் அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிறந்தவர்கள்/  மாம்சத்தின்படி பிறந்தவர்கள், அது சமாரியா என்றும், ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும். 

லாபானின் இரண்டு குமாரத்திகளிள் இளையவள் ராகேல் ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாக பிறந்தவள், யூதர்களுக்கு  வெளிப்படுத்தின சுவிசேஷம், அது கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசங்களின் மூலம் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவர்கள்/ வாக்குத்தத்தத்தின்படி பிறந்தவர்கள், அது எருசலேம்  என்றும், ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும். 

தங்களூடைய ஆவி, ஆத்துமா,  சரீரங்களையே தேவனுக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள போஜனமாக தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து,  ராகேலைப்போல  ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாக பிறந்த யூதர்களுக்கு  வெளிப்படுத்தின சுவிசேஷத்தின் மேல் பிரியப்பட்டு ஊழியம் செய்து அதன்  பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றி நிறைவேறின பிறகு;

தங்களூடைய ஏழு வருட ஊழிய பிரதிஷ்டையின் நினைவு விழா  விருந்திற்கு  பிறகு, ராகேலைப்போல  ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாக பிறந்த யூதர்களுக்கு  வெளிப்படுத்தின சுவிசேஷத்தின் ஊழியத்தை பெற்றுக்கொள்ள முடியாமல், லேயாளை போல   கூச்சப்பார்வை உள்ளவளாக பிறந்த, புறஜாதிகளூக்கு  வெளிப்படுத்தின சுவிசேஷத்தின் ஊழியத்தையே பெற்றுக்கொள்ளூகிறார்கள்.    

யூதர்களுக்கு  வெளிப்படுத்தின ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாக பிறந்த வெளிப்படுத்தின சுவிசேஷத்தின் மேல் பிரியப்பட்டு, அந்த ஊழியத்தை  பெற்றுக்கொள்ளுவதற்காக ஆசைப்பட்டு, தங்களூடைய ஏழு வருட ஊழிய பிரதிஷ்டையின் நினைவு விழா  விருந்திற்கு  பிறகு, தங்களூடைய இச்சையினாலே வஞ்சிக்கப்பட்டு, தன்னைத்தான் ஏமாற்றிக்கொண்டதை உணர்ந்து கொண்டவர்கள்; மேலும் ஏழு வருஷங்கள்  யூதர்களுக்கு  வெளிப்படுத்தின சுவிசேஷத்தின் மேல் பிரியப்பட்டு, ஆடுகளை மேய்த்து ஊழியம் செய்தும், மற்றும் தொடர்ந்து ஆறு வருஷங்கள் ஊழியம் செய்தும், மொத்தம் இருபது வருஷங்கள் ஊழியத்தை நிறைவேற்றி, தங்களுக்கு  தேவனால் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளூகிறார்கள்.

 

Rom_9:10-14; Gen_25:21-25, Gen_25:26-31, Gen_27:1-5, Gen_27:6-10, Gen_27:11-15, Gen_27:16-20, Gen_27:21-25, Gen_27:26-30, Gen_27:31-35,    Gen_27:36-40, Gen_29:15-20, Gen_29:21-25, Gen_29:26-30, Gen_31:41; Gal_2:2;Eze_23:4,  Hos_12:1-5;  Hos_12:6-10; Hos_12:11-14; Isa_2:11-17, Isa_2:18-21;Joh_5:41-44,Joh_7:16-19

7-2 ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, இதோ, நான் இளைத்திருக்கிறேன் அதனால் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்று யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான். யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான். 

Heb 12:16  ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். 

Heb 12:17  ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். 

Php 3:16  ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக. 

Php 3:17  சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். 

Php 3:18  ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். 

Php 3:19  அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். 

இயேசு கிறிஸ்துவின்  நாமத்தினால் தேவனுடன் விசுவாச உடன்படிக்கை செய்த அநேகர் உலகத்தினாலுண்டானவைகளாகிய மாம்சத்தின் இச்சைக்கும், கண்களின் இச்சைக்கும், ஜீவனத்தின் பெருமையுமானவைகளுக்கும்: அடிமையாக்கப்பட்டார்கள். தங்களுடைய ஆவி,ஆத்துமாவின் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் செய்து  விற்றுப்போட்டவர்கள்; மாயக்காரர்கள் வேதபாரகர்கள்  பரிசேயர்கள்  ஆகிய இவர்களை   பின்தொடர்ந்து, ஒருவனை தங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிந்து; அந்நியரை நேசித்து, தங்களூடய ஆவி,ஆத்துமாவை நேசிக்காமல்  நஷ்டபடுத்துகிறார்கள் அக்கிறேன்;  

Jer 2:20  பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லையென்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய். 

Jer 2:21  நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன? 

Jer 2:22  நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 

Jer 2:23  நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ. 

Jer 2:24  வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள். 

Jer 2:25  உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால், நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய். 

Jer 2:26  திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப்பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள். 

Jer 2:27  அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள். 

Joh 7:16  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. 

Joh 7:17  அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். 

Joh 7:18  சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. 

Joh 7:19  மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார். 

Rom_9:10-14; Gen_25:21-25,Gen_25:32-34 , Mal_1:2-4;Act_13:41; Phi_3:16-19; Heb_12:16-17; Eze_35:1-5, Eze_35:6-10, Eze_35:11-15, Psa_137:1-9, Jer_2:20-25,  Isa_2:1-4, Isa_2:5-10;Joh_5:41-44,Joh_7:16-19, Joh_12:41-44,


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries