இரட்சிப்பின் பாத்திரமாகிய உடன்படிக்கையில் நிலைத்திருந்து, தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக அன்றாட பலியை / எண்ணையாகிய கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொண்டு அலட்சியப்படுத்தாமல், எப்பொழுதும் ஆவி, ஆத்துமா,சரீரத்தில் மனந்திரும்பி, நற்கிரியைகளுக்கு முன்னேறுகிறவர்களூம்; தேவனுடைய பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளின் பிரமாணங்களை பின்பற்றுகிறவர்களூம், தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள் மேல் திறப்பானதை அடைத்து, குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறார்கள்;-
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி. தங்கள் தேவனுடைய நியாயத்தை விட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதிநியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள். Isa 58:1-2
நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள். இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள். Isa 58:3-4
மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்? அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும்,
சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். Isa 58:5-7
அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்.
நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும். Isa 58:8-10
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய். Isa 58:11-12
என் பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வு நாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று. Isa 58:13
கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 2Ti 3:15-17
தேவனுடைய பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிப்பதற்கு தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை பெற்றுக்கொள்ளூகிறார்கள்:-
உலக சரித்திரங்களின் கடிகாரமாகிய இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்திரமடைந்து, எழுபது வருடங்களுக்கு பின்பு, நல்ல வளர்ச்சியடைகிற இந்தச் சந்ததியிலே; தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சி, இந்த பூமியில் சமீபித்திருக்கிறது என்று அத்திமரத்தின் உவமையினாலே கற்றுக்கொள்ளுங்கள். Mat_24:32-44, Mar_13:28-33; Luk_21:29-36;
இந்த ஜனத்தின்மேல் நீதியைச் சரிக்கட்டுவதற்காக, எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் கோபாக்கினையும் இந்தச் சந்ததியிலே; உண்டாகும். மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது. தேவனுடைய இராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம், பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
பரிசுத்த ஸ்தலமாகிய தேவனுடைய ஆலயத்தில் /இருதயத்தில் நிற்றுகொண்டிருக்கிற பாழாக்குகிற அருவருப்பைக்குறித்தும், நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக் கிரியைகளைக் கண்டு, கேட்டு நீதியுள்ள தங்களுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்டு, அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும், பெருமூச்சுவிட்டழுகிறவர்கள்:
கிழே குறிப்பிட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களையும், நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும், தங்ளுடைய நெற்றிகளில் / அறிவில் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
1 புறஜாதிகளின் எந்த முறைகளையும் பின்பற்றக்கூடாது.
2 பலிபீடத்தின் பிரமாணங்களை பின் பற்றி நடக்க வேண்டும்.
3 கர்த்தருடைய பஸ்கா விருத்தை புசிக்க வேண்டும்.
4 ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும்
5 மனச்சாட்சியின் பிரமாணத்திற்கு கீழ்படிய வேண்டும்
6 இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றி நடக்க வேண்டும்
7 பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கர்த்தருடைய சங்கார தூதனுடைய பட்டயமாகிய கொள்ளை நோய்: பூமியின் புல்லையும்/ நற்கிரியைகளை உடையவர்களையும், பசுமையான எந்தப் பூண்டையும்/ இருதயத்தின் நல்ல ஆலோசனைகளை உடையவர்களையும், எந்த மரத்தையும் / நல்ல கனிகளை உடையவர்களையும், சேதப்படுத்தாமல்,
தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷர்களுடைய இரட்சிப்பு மரணமடைந்தபடியால்; பாதாளத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு பெருஞ்சூளையின் புகையைப்போல கொள்ளை நோய் எழுத்தின்படியும்/ ஆவியின்படியும், அவர்களை மட்டும் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. Rev 9:1-11
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? 1Pe 4:17-18
தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்ளுடைய நெற்றிகளில் / அறிவில் ஏற்றுக்கொண்டு மனந்திரும்பாமல், அவைகளுக்கு விரோதமாகவோ / இனையாகவோ, சிந்தித்து செயல்பட முயற்சி செய்கிறபோது: அந்திக் கிறிஸ்துவின் முத்திரை அடையாளங்களை, தங்ளுடைய நெற்றியிலும், வலது கையிலும் / அறிவிலும் கிரியைகளிலும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்;
இவர்கள் வலுசர்ப்பத்தின் வாயிலும், மிருகத்தின் வாயிலும், கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து; புறப்படுகிற தவளைகளுக்கு ஒப்பான மூன்று பிசாசுகளின் அசுத்த ஆவிகளூக்கு அடிமைப்பட்டு, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும், வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.Rev 16:13-15
இவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணி, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே பங்கடைவார்கள்.
Mat_6:16-18,Isa_40:1-8;( Isa_58:12; ) Isa_58:1-5; Isa_58:6-12; Isa_58:13-14; Rev_6:5-6; Mat_6:16-18,Psa_141:5, Mat_5:14-17;Luk_10:30-36; Luk_11:33-36, 2Ti_2:20-21; 2Ti_3:15-17; Mat_25:3-10;Isa_65:8-9 , Psa_23:1-6, Hos_4:11, Hos_9:2, Hag_1:10-11 , Zec_9:17;
Previousதேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)