தேவனுடைய நாமம் கனஈனம் பண்ணப்படுகிறதை காண்கிறவர்கள்; பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் உண்டான வித்தியாசங்களை உருவாக்கி, அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பித்து; பூர்வமுதல் பாழாய்க்கிடந்த பரிசுத்த ஓய்வு நாள் பிரமாணங்களின் பொருளை மறைக்காமல்; ஜனங்களுக்கு தெளிவாக வெளிப்படுத்துகிறபோது; தேவன் தேசத்தை அழிக்காதபடிக்குத் பாதாளம் மரணம் ஆகியவைகளின் திறப்பின் வாசலை அடைத்து, தேவனுடைய பிரமாணங்களுடைய எல்லைகள் உடைக்கப்பட்டதை அடைக்கிறார்கள்;-
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, நீ தேசத்தைப் பார்த்து: நீ சுத்தம் பண்ணப்படாத தேசம், கோபத்தின் காலத்தில் மழை பெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு. அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள். Eze 22:23-25
அதின் ஆசாரியர்கள் என் வேதத்துக்கு அநியாயஞ்செய்து, என் பரிசுத்த வஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணாமலும், அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பியாமலும் இருந்து, என் ஓய்வுநாட்களுக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள்; அவர்கள் நடுவிலே நான் கனஈனம்பண்ணப்படுகிறேன். Eze 22:26
அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாய்ப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தஞ்சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள். அதின் தீர்க்கதரிசிகள் அபத்தமானதைத் தரிசித்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, கர்த்தர் உரைக்காதிருந்தும், கர்த்தராகிய ஆண்டவர் உரைத்தாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள். Eze 22:27-28
தேசத்தின் ஜனங்கள் இடுக்கண் செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, அந்நியனை அநியாயமாய்த் துன்பப்படுத்துகிறார்கள். நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். ஆகையால், நான் அவர்கள்மேல் என் கோபத்தை ஊற்றி, என் மூர்க்கத்தின் அக்கினியால் அவர்களை நிர்மூலமாக்கி, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்றார். Eze 22:29-31
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். Eze 13:1-2
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!
இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை. Eze 13:3-5
கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள். Eze 13:6
நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா? ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். Eze 13:7-8
( Eze_22:30 ,) Eze_22:23-27 , Eze_22:28-31, (Eze_13:5,) Eze_13:1-5; Eze_13:6-10, Eze_13:11-15; Eze_13:16-19, Eze_13:20-23; Eze_34:1-5, Eze_34:6-10, Eze_34:11-15;Eze_34:16-20, Eze_34:21-25,
Eze_34:26-31; Jer_23:1-5, Jer_23:6-10, Jer_23:11-15;Jer_23:16-20; Jer_23:21-25, Jer_23:26-30,
தேவனுடைய பரிசுத்த நாளாகிய ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிப்பதற்கு தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை பெற்றுக்கொள்ளூகிறார்கள்:-
உலக சரித்திரங்களின் கடிகாரமாகிய இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்திரமடைந்து, எழுபது வருடங்களுக்கு பின்பு, நல்ல வளர்ச்சியடைகிற இந்தச் சந்ததியிலே; தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சி, இந்த பூமியில் சமீபித்திருக்கிறது என்று அத்திமரத்தின் உவமையினாலே கற்றுக்கொள்ளுங்கள். Mat_24:32-44, Mar_13:28-33; Luk_21:29-36;
இந்த ஜனத்தின்மேல் நீதியைச் சரிக்கட்டுவதற்காக, எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் கோபாக்கினையும் இந்தச் சந்ததியிலே; உண்டாகும். மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது. தேவனுடைய இராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம், பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
பரிசுத்த ஸ்தலமாகிய தேவனுடைய ஆலயத்தில் /இருதயத்தில் நிற்றுகொண்டிருக்கிற பாழாக்குகிற அருவருப்பைக்குறித்தும், நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக் கிரியைகளைக் கண்டு, கேட்டு நீதியுள்ள தங்களுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்டு, அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும், பெருமூச்சுவிட்டழுகிறவர்கள்:
கிழே குறிப்பிட்ட தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களையும், நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும், தங்ளுடைய நெற்றிகளில் / அறிவில் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
1 புறஜாதிகளின் எந்த முறைகளையும் பின்பற்றக்கூடாது.
2 பலிபீடத்தின் பிரமாணங்களை பின் பற்றி நடக்க வேண்டும்.
3 கர்த்தருடைய பஸ்கா விருத்தை புசிக்க வேண்டும்.
4 ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும்
5 மனச்சாட்சியின் பிரமாணத்திற்கு கீழ்படிய வேண்டும்
6 இயேசு கிறிஸ்துவின் சாட்சியை பின்பற்றி நடக்க வேண்டும்
7 பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கர்த்தருடைய சங்கார தூதனுடைய பட்டயமாகிய கொள்ளை நோய்: பூமியின் புல்லையும்/ நற்கிரியைகளை உடையவர்களையும், பசுமையான எந்தப் பூண்டையும்/ இருதயத்தின் நல்ல ஆலோசனைகளை உடையவர்களையும், எந்த மரத்தையும் / நல்ல கனிகளை உடையவர்களையும், சேதப்படுத்தாமல்,
தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷர்களுடைய இரட்சிப்பு மரணமடைந்தபடியால்; பாதாளத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு பெருஞ்சூளையின் புகையைப்போல கொள்ளை நோய் எழுத்தின்படியும்/ ஆவியின்படியும், அவர்களை மட்டும் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. Rev 9:1-11
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? 1Pe 4:17-18
தேவனுடைய ஏழு முத்திரை அடையாளங்களை தங்ளுடைய நெற்றிகளில் / அறிவில் ஏற்றுக்கொண்டு மனந்திரும்பாமல், அவைகளுக்கு விரோதமாகவோ / இனையாகவோ, சிந்தித்து செயல்பட முயற்சி செய்கிறபோது: அந்திக் கிறிஸ்துவின் முத்திரை அடையாளங்களை, தங்ளுடைய நெற்றியிலும், வலது கையிலும் / அறிவிலும் கிரியைகளிலும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்;
இவர்கள் வலுசர்ப்பத்தின் வாயிலும், மிருகத்தின் வாயிலும், கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து; புறப்படுகிற தவளைகளுக்கு ஒப்பான மூன்று பிசாசுகளின் அசுத்த ஆவிகளூக்கு அடிமைப்பட்டு, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும், வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.Rev 16:13-15
இவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டி சபையின் மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணி, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே பங்கடைவார்கள்.
Mat_6:16-18,Isa_40:1-8;( Isa_58:12; ) Isa_58:1-5; Isa_58:6-12; Isa_58:13-14; Rev_6:5-6; Mat_6:16-18,Psa_141:5, Mat_5:14-17;Luk_10:30-36; Luk_11:33-36, 2Ti_2:20-21; 2Ti_3:15-17; Mat_25:3-10;Isa_65:8-9 , Psa_23:1-6, Hos_4:11, Hos_9:2, Hag_1:10-11 , Zec_9:17;
Previousதேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (1 கொரிந்தியர் 2:6-7)